
மழை நின்று
போயிருந்த ஒரு...
மாலையில் தூரலாய்
பெய்யத் தொடங்கியிருந்தது
உன் நினைவுகள்!
கனவுகளை நிஜமாக்கியவன்
நிஜமாய் கனவாகிப் போன
ஆச்சர்யத்தை செரிக்க முடியாத
எண்ணங்கள் ஒரு கவிதையாய்
என்னுள் ஊற்றெடுக்க
கலைந்து சென்ற மேகமாய்
நகர்ந்து கொண்டிருந்த
நினைவுகளை எட்டிப் பிடிக்க
முயன்று முயன்று..
தோற்றுக் கொண்டிருந்தன
என் முயற்சிகள்!!!!
தொலைதலில் ஜெயித்துப் போன
என் காதலின் படிமங்கள்
காதோரம் ஏதேதோ கிசு கிசுக்க
உடல் தழுவிச் செல்லும்
காற்று உன்னை நினைவுபடுத்தியதை
மறக்க முயற்சித்து மறக்காமல்
காத்திருக்கிறேன் நான்..!
***
திக்குகளும் திக்குகளின்
தெரிவுகளும் மறந்து
ஆதியும் அந்தமும் அறியா
மூலத்தின் சாயலில்
வழியற்று நிற்கிறேன் நான்!
சுற்றிச் சுழலும்
பாதைகளில் பயணிக்கும்
கால் தடங்களின்
போதனைகளின் அருவெறுப்புகளில்
விலகி நின்று
தெருவோர குப்பைகளோடு
கரைந்து கிடக்கிறது மனம்..!
தொடராத பயணமாய்
தடைப்பட்டிருக்கும் என்
தருணங்களில் தீக்குச்சியாய்
உன் நினைவுகளைக்
கிழித்துப் போட்டு விட்டு
மெளனமெனும் வேடமிட்டு
சப்தமாய் சிரிக்கிறது காலம்!
தேவா. S
பின் குறிப்பு: இரண்டு கவிதையும் பெண்ணின் பார்வையிலிருந்து.......
Comments
...ஹ்ம்ம்ம்ம்ம்ம்
தலைப்புக்கே தங்க மெடல் குடுக்கலாமேங்க :))
காற்று உன்னை நினைவுபடுத்தியதை
மறக்க முயற்சித்து மறக்காமல்
காத்திருக்கிறேன் நான்..!//
...இது தான் காதல் என்பதா? மறக்க முயற்சிக்கும் எதுவும், விஸ்வரூபம் எடுத்து.. நம்மை மயக்க வைக்கும் ஆயுதம். :))
...ஹ்ம்ம்ம்ம்ம்ம்
தலைப்புக்கே தங்க மெடல் குடுக்கலாமேங்க :))//
தேவா,
கோரிய மொழி எழுத்தாளர்/கவிஞர் ,
துபாய் பஸ்டாண்டுக்கு பின்னாடி,
மொட்டை மாடி,
துபாய்...
இந்த முகவரிக்கு தங்க மெடல் அனுப்பிடுங்க
கோரிய மொழி எழுத்தாளர்/கவிஞர் ,
துபாய் பஸ்டாண்டுக்கு பின்னாடி,
மொட்டை மாடி,
துபாய்...
இந்த முகவரிக்கு தங்க மெடல் அனுப்பிடுங்க//
...ஹா ஹா ஹா. சரி ஓகே.. :))
ரொம்ப வயசானவர் போல....!!!
தந்த படமும் சிறப்பே
வலைப்பூ வழியே சந்திப்போம்-இனம்
வாழ வழியும் சிந்திப்போம்
வற்றிப் போக கண்ணீரும்-அழுது
வடித்த நீரும் வென்னீராம்
பற்றி எரியுது அடிவயிரே-பக்சே
பாவியே பிரியும் உன்னுயிரே
மீண்டும் சந்திப்போம்
புலவர் சா இராமாநுசம்