
என்ன நிகழ்த்தியிருக்கிறாயடா நாயே.....! ராஜ பக்சே பேயே...!!!!
என்ன தீங்கு செய்தது என் இனம்....! தொடர்ந்து ஓடும் சானல் 4ன் வீடியோவை என்னால் காண முடியவில்லையே...!!! அவலத்தை அரங்கேற்றி விட்டு அரியாசனத்தில் வீற்றிருக்கும் பேய்களை ஒழிக்க மானம் கெட்ட காலமே உனக்கு ஒரு நேரமில்லையா...!
குற்றுயிரும் குலை உயிருமாய் எம் உறவுகள் கதறும் வேதனைக் காட்சிகளை காணவே சகிக்கவில்லையே.. எம்மக்களே எப்படி சகித்தீர்...! அடிப்படை வசதிகளற்ற ஏழ்மை குடி கொண்ட மருத்துவ மனைகளில் கிடைத்த மருந்தை வைத்து உடல் பிழைக்க போராடிய மனிதர்கள் மீது குண்டு வீசி கொல்ல, அந்த மருத்துவ மனையைச் சிதைக்க எப்படியாடா மனம் வந்தது மானங்கெட்ட மனிதனே...!
நீ பெற்றது வெற்றியா? த்தூ...வெட்கங்கெட்ட வெறி கொண்ட பிச்சைக்கார நாய்க்கு
ஊரிலில்லுள்ள ஓநாய்கள் போட்ட பிச்சையில் எம் குலத்தை குதறிய நீ பெற்றது வெற்றியா?உனக்கு உணவு கொடுத்தோர், ஆயுதம் கொடுத்தோர், பொருள் கொடுத்தோர் வாழ்க்கையில் எல்லாம் அழிவுகள் வந்து வீழாதோ?
இந்திய தேசத்திலிருந்து ஆயுதங்களும் உதவிகளும் எம் சொந்தங்களை அழிக்க சென்றிருக்கின்றன என்றென்னும் போது.....அதன் பின்னனியில் இருந்த கொடும் பாவிகளின் குரல்வளைகளை இழுத்துப் பிடித்து கடித்து கடித்து இரத்தம் குடிக்கவேண்டும் என்றே தோன்றுகிறது. என்ன குற்றம் செய்தனர்? உரிமைகள் மறுக்கப்பட்ட தேசத்தில்ட் தமது உரிமைகள் வேண்டி போராடிய கூட்டம் குற்றமுள்ளதா?
வல்லரசுக்கனவில் திருவோட்டை உலநாடுகளிடம் ஏந்தி இன்னமும் பிச்சை எடுக்கும் ஒரு தேசமாய் எம் தேசத்த்தை மாற்றியதாகட்டும், ஒரு அன்னிய தேசத்தின் பிரச்சினையை தீர்க்க சட்டாம்பிள்ளையாய் அமைதிப்படை என்று ஒன்றை அனுப்பி எம்மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டு அதன் விளைவுகளை சந்தித்து அதற்கு வஞ்சம் தீர்க்க நரித்தனமாய் இலங்கை இராணுவத்துக்கு உதவிய வகையிலாகட்டும்.......
காங்கிரஸ் என்னும் கட்சியும் அதன் தலைவர்களும் இன்று இல்லாமல் போகலாம், நாளை இல்லாமல் போகலாம் ஆனால் சர்வ நிச்சயமாய் நம் காலத்திலேயே சிதறுண்டு சின்னா பின்னமாகி, கொடுமையை நிகழ்த்த உதவி செய்த மூளைகள் எல்லாம் குழம்பி தெருத் தெருவாய் திரிவர் இல்லையேல் வேறு ஏதேனும் ஒரு அரக்கனின் வாயில் அகப்பட்டு இறப்பர்....!
அத்தனை கொடுமைகளையும் நிகழ்த்தி விட்டு சமத்துவத்தைப் பற்றி பேசி காந்தி தேசம் இது இதை நாங்கள் ஆள்கிறோமென்று வெட்கம் கெட்டுப் போய் ஓட்டுபிச்சை எடுக்கும் பிச்சைகார காங்கிரசே.....உனது முடிவு அதி பயங்கரமாயிருக்கும் என்பதை இக்கணமே அறுதியிடுகிறோம். சம பலம் இல்லாத ஒரு சண்டை....அங்கே நீ சட்டாம் பிள்ளை. வெட்கமாயில்லை உனக்கு, ஒரு பக்கம் உலக நாடுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து நிற்க மறுபுறம் என் இனம் மட்டும் தனித்து நின்று போராட.....
நீ பெற்றது வெற்றியா????? பிச்சைக்கார ராஜ பக்ஸே....! காறி உன் முகத்தில் உமிழ எமக்கொரு வாய்ப்பில்லாததால் இக்கட்டுரையை உன் முகத்தில் காறி உமிழும் ஒரு நிகழ்வைப் போல் கருதிக் கொள்கிறோம். பொது மக்கள், குழந்தைகள், முதியவர் என்று மட்டுமில்லாமல், பள்ளிக்கூடம், மருத்துவமனை என்று பாரபட்சம் இல்லாமல் யுத்த மரபினை மீறிய அரக்கனை என்ன செய்யவேண்டும் என்று இந்த சர்வ தேச சமுதாயத்திற்கு தெரியாதா? ஆளும் இத்தாலிய காங்கிரசுக்குத் தெரியாதா?
வஞ்சம் தீர்க்க நினைத்த இந்தியாவின் ஆசை என்னும் நெருப்பை மூட்டி எரித்து குளிர்காயும் அரக்கன் ராஜ பக்சேக்கும் எம் மக்களின், எம் குழந்தைகளின் கூக்குரல் எல்லாம் ஒன்றும் செய்து விடாது என்ற தைரியமிருக்கலாம்....ஆனால் உனது முடிவையும் இந்த உலகம் காணும். என் இனம் காணும் அந்த முடிவினில் அநீதிகளுக்கு எல்லாம் மொத்தமாய் பகிரப்பட்ட ஒரு பதிலும் ஒளிந்திருக்கும்.
எல்லா அவலங்களுக்கும் பின்னால் வேறு வழியின்றி பொது மக்களை கேடயமாக பயன்படுத்திய விடுதலைப்புலிகளின் பங்கும் சேர்ந்துதான் ஏராளமான உயிர்களை இழப்பதற்கு காரணமாயிருந்தாலும், இலங்கை இராணுவம் யுத்த மரபுகளை மீறியிருப்பது தெள்ளத் தெளிவாக எல்லோரும் அறிந்த ஒரு விடயமாகும். யுத்தத்தில் கைப்பற்றப்பட்ட எதிரிகளாய் இருந்தாலும் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தகுந்த விசாரணைகள் நடத்தி அதன் பின் குற்றத்திற்கான தண்டனைகள் கொடுக்கப்பட்ட வேண்டும்.
ஆனால்....
என்ன செய்திருக்கிறது தெரியுமா இந்த அரக்கனின் படைகள். ஒவ்வொரு மனிதனின் கண்கள் கட்டப்பட்டு, கைகள் கட்டப்பட்டு, மண்டியிட வைக்கப்பட்டு அசிங்க வார்த்தைகளை அவர்கள் காதுபட பேசி அங்கே சுடவா இங்கே சுடவா என்று கேலி பேசி தெரு நாய்களை சுட்டுக் கொல்வது போல சுட்டுக் கொன்றுருக்கிறார்கள்.
அகில உலக சட்டத்தின் முன்னால் இவையெல்லாம் கடும் குற்றங்கள்....! இவற்றையெல்லாம் மறைக்கத்தான் உலகத்தின் மீடியாக்களை யுத்தப்பகுதிகளுக்கு அனுமதிக்காமல் பேடித்தனம் காட்டினான் ராஜ பக்சே...!
தமிழ்ப் பெண்களின் உடைகள் உருவப்பட்டு....அத்தனை கொடுமைகளும் செய்யப்பட்டு இறுதியில் துப்பாக்கியால் சல்லடை சல்லடையாக துளைத்து எடுத்து நிர்வாணத்தோடு அவர்களை எல்லாம் கேவலமா இழுத்து குழிக்குள் தள்ளியிருக்கிறது மிருங்களின் படை. இசைப்பிரியா மற்றும் பல சகோதரிகளின் உடல்களை நிர்வாணமாக்கி அத்தனை கொடுமைகளும் செய்து பின் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள்.
இறுதி யுத்தத்திற்கு சில தினங்கள் முன்பு இந்தியாவிலிருந்த மத்திய அரசின் முக்கிய தலைகளிடம் பேசி, ராஜ பக்சேயின் ஒப்புதலோடு நிபந்தனையற்ற சரணடைய வந்த விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர்களை எல்லாம் குருவியைச் சுடுவதைப் போல சுட்டுக் கொன்றிருக்கிறான் நயவஞ்சக ராஜபக்ஸே...!
யுத்தம் முடிந்து இன்று அமைதி திரும்பிவிட்டதாக அறிவிப்புகள் செய்யும் இலங்கையாகட்டும் அதற்கு சப்பை கட்டு கட்டும் இந்தியாவாகட்டும்... இவர்கள் கட்டவிழ்த்து விடுவது எல்லாம் கட்டுக் கட்டாய் பொய்களைத்தான். எல்லா தமிழர் வாழ் இடங்களையும் சிங்களவர்கள் ஆக்கிரமித்துக் கொள்ள இன்னமும் தமிழர்கள் டெண்ட்களில்தான் வசித்து வருகிறார்கள்.
இன்னமும் பரந்து விரிந்த இந்த உலக சமுதாயம்.. கண்டும் காணமால் போனால்... ஆங்காங்கே இது போன்ற ராஜபக்சேக்களோடு அரக்கர்கள் கூட்டம் ஒன்று சேர்ந்து மனித சமுதாயத்திற்கே பெரும் சவாலாய் போகும் ஆபத்துக்கள் நிறைய இருக்கின்றன. மனித நேயம் என்றால் என்ன என்று நாம் வசிக்கும் ஒரு இடத்திற்கு பக்கத்திலிருக்கும் ஒரு தேசத்து மனிதர்களுக்கு தெரியாமல் இருப்பது மட்டுமல்லாமல் நாம் வசிக்கும் தேசமும் இதற்கு உடந்தையாயிருந்திருக்கிறது என்று எண்ணும் போது உள்ளம் நடு நடுங்குகிறது.
இந்திய ஊடகங்கள் தமது கபட நாடகங்களை அன்னா ஹசரே போன்ற செல்வாக்கு படைத்த மனிதர்களின் உண்ணா விரத போராட்டங்களிலும், செல்வ செழிப்பான சாமியார்களின் மேடைப் பேச்சுக்களை கவரேஜ் செய்து பெரும் புரட்சி தேசத்தில் ஏற்பட்டு விட்டதைப் போல ஒரு மாயையை எம் தேசத்து மக்களின் மனதில் விதைத்து தமது வியாபரத்தை பெருக்கிகொள்கின்றன.
இன்னும் சொல்லப் போனால் இந்தியாவில் வசிக்கும் அத்தனை இந்தியர்களின் கண்களையும் இன்று காங்கிரஸ் ஏகாதிபத்திய அரசின் ஊடகங்கள் மறைத்துதான் வைத்திருக்கின்றன. நாம் செழிப்பாயிருக்கிறோம் என்றும் வல்லரசு ஆகிவிட்டோம் என்றும் நியாத்தின் தேசம் நாம் என்றும் ஏதேதோ சொல்லி மக்களை மூளைச் சலவை செய்து வைத்திருக்கிறார்கள்.
ஜனநாயக நாடாக தன்னை அறிவித்துக் கொண்டிருக்கும் இந்தியாவின் ஊடகங்களின் கைகள் கட்டப்பட்டிருக்கின்றன. அதனால்தான்.. சேனல் 4 போன்ற இந்தியர் அல்லாத வெளிநாட்டு ஊடகங்கள் சீறிப்பாய்ந்து உண்மைகளை வெளிக் கொண்டு வரும் போது அதையும் கூட நமது நாட்டு டிவிக்களில் ஒளிபரப்ப எல்லாம் தனியார் தொலைக்காட்சிகளும் பயப்படுகின்றன.
உப்பு தின்றவன் தண்ணீர் குடித்துதான் ஆகவேண்டும். எம் மக்களை கொன்று குவித்த, எமது சகோதரிகளின் கற்பழித்த, எமது பிள்ளைகளின் உயிர் குடித்த எல்லா செயல்களையும்ச் எய்த ராஜபக்சேவும் அந்த அரக்கனுக்கு உடன் போன மிருகங்களும் அதற்கான பதிலை சொல்லும் வரை இந்த இயற்கை விடாது.. !!!!
அதுவரையில் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட....எம்மக்களின் ஆன்மா சாந்தியடையாது....!
(சேனல் 4 எல்லா வீடியோவையும் பார்த்து விட்டேன்......என்னால் உண்ண முடியவில்லை...உறக்கமும் வரவில்லை......!!!! திக் பிரமை பிடித்து அமர்ந்திருக்கிறேன்!)
தேவா. S
Comments
கைகளைக் கட்டி வெற்றுடம்புடன் இருத்தி சுட்டது, ஏறி மிதித்தது, பார்த்த நடுக்கம் இன்னும் போகவில்லை. கடைசியில் நாட்டிற்காகப் போராடப் போனவர்களின் நிலை இப்படியா முடியவேண்டும். ஐயோ, வயிறு எரிகிறதே.
வீடியோக்களை பார்க்க சத்தியமாக எனக்கு மன தைரியம் இல்லை...பார்க்கவும் இல்லை.
ஆனால் இங்கே நீங்கள் வெளிபடுத்தி இருக்கும் கோப கனலை பார்க்கும் போது உள்ளமும் உடலும் நடுங்குகிறது...
அனாமிக்காவின் பின்னூட்டம் :((
ஆத்திரம் வருகிறது...ஏன் ஏன் இப்படி ? இந்த கொடிய அரக்கர்களை ஒழிக்க போவது யார் ?? எப்போ ???
இன்று பார்த்து நாளை மறந்துவிடக் கூடியவைகளா இவை...?!!
உங்கள் கட்டுரை பலருக்கும் அவசியம் போய் சேரவேண்டுமே...!!
இதற்கான விலைய அவரவர் கொடுத்தே ஆகவேண்டும்...!!
மனித உயிர்களின் மதிப்பு இவ்வளவு தானா?? :(((
பேயா !!!!!!! ஹி ஹி ஹி அது நாய் சொறி புடிச்ச மொன்ன நாய் ..,இந்த ராஜபக்க்ஷே ..,திருடனுக்கு பிறந்த அற்ப பதர் அவன் ..,
வெற்றி ??????? அது இந்த யுகத்தில் வராது இந்த சிங்கள காடையங்களுக்கு ...,எச்சி மலம் தின்று , அதைய மீண்டும் தின்று வாழ்வான் சிங்களவன்