Skip to main content

புள்ளையாரப்பா....!






















காரைக்குடிக்கு இதுக்கு முன்னாடி நீங்க வந்திருக்கிறீயளா.. என்னனு எனக்குத் தெரியாது. காரைக்குடி பழைய பஸ் ஸ்டாண்ட் தாண்டி நேரா போற கட வீதிக்கு பர்ஸ்ட் பீட்டுன்னு பேரு. பர்ஸ்ட் பீட்டுக்கு அங்கிட்டு காப்பித்தூள் வாசனையோட கடைத் தெருவ நீங்க தாண்டி போகும் போதே நாலு ரோடு பிரியும். லெப்ட்ல திரும்பி போனியனாக்கும் பெரியார் சிலை வரும் அது நாடிக்கே போனியன்னா புது பஸ்ஸ்டாண்டு அத விட்டுத்தள்ளுங்க ....,

நீங்க ரைட் சைட்லயும் போக வேணாம், என் கூட ஸ்ட்ரெய்ட்டா வாங்க. நடு செண்ட்டர்ல கொடைக்குள்ள நிக்கிற போலிஸ்காரவுகள கண்டுக்காம, ரைட் சைட்ல டாக்ஸிக் காரப்பயலுக நிப்பாய்ங்க அவிங்களயும் பாக்காம என் பொறத்தாடியே வாங்க.. டாக்சிக்காரய்ங்கள ஏன் பாக்க வேணாம்னு சொன்னே தெரியுமா? அப்புறம் வண்டி வேணுமாண்ணேனு கேட்டுக்கிட்டே வந்து ஒரண்டை இழுத்தாலும் இழுப்பாய்ங்க...அதுக்குத்தேன்...

இந்த முக்குல திரும்புனியன்னா ரைட் சைட்ல வர்றதுதேன் கொப்புடையம்மன் கோயிலு, இந்த கோயில்ல சாமி கும்பிட வந்தப்ப என்னிய புடிச்ச, என் காலேஸ்ல படிக்கிற சனியனத்தான் இப்ப பாக்கப் போறோம். எங்க வீடு இருக்கறது மானகிரில நான் படிக்கிறது அழகப்பா காலேஷ்ல எம்பேரு சிவராமன்...சரியா? கேக்குறதுக்கு முன்னாடியே கொடுப்பமுள்ள டீட்டெய்லு...

என்னிய நம்பி கதைய கேட்டுகிட்டு இம்புட்டு தூரம் நீங்க வந்திட்டிய ஆனா..., என்னிய ஒரு ரெண்டு வருசமா லவ் பண்றேன்னு சொல்லிப்புட்டு இப்ப மாட்டேங்கிறாங்க இவ..!!! இப்ப நான் இவன்னு சொன்னது கவிதாலத்தேன்....கவிதா கவிதான்னு கூப்புட்டு கூப்புட்டு எம்புட்டு கவித எழுதியிருப்பேன்.. இப்ப நொடிச்சிகிட்டு மாட்டேங்குது லூசுப்பயவுள்ள...

அந்தா, அந்த அங்கு விலாஸ் ஓட்டல்லதேன் அவ எனக்காண்டி வெயிட் பண்ணிட்டு இருக்காளாம். போய்ட்டு பாத்துட்டு வந்திர்றேன்...நீங்க புறத்தாடியே வந்து ஏதாச்சும் ஒரு டேபிள்ள ஒக்காந்து வேடிக்க மட்டும் பாருங்கப்பு.... நம்மள தெரிஞ்ச மாதிரி காட்டிகிறாதிய...

அங்குவிலாஸ் ஓட்டலுக்குள்ள வந்து கல்லாப்பெட்டில இருந்த ஒனரையும் அவரு நெத்தியில இருந்த துண்ணூத்து பட்டையையும், கல்லாப்பொட்டிக்கு பொறத்தாடி இருந்த முருகன், கணேசரு, காமட்சி, சிவன், பெரிய கருப்பன், சின்ன கருப்பன் எல்லா சாமியவும் தாண்டி ஓட்டலுக்குள்ள இருந்து வந்த பூரிக் கிழங்கு வாசனை ஆளத்தூக்கி சாப்பிடத்தேன் செஞ்சுச்சு.....

4 மணிக்கு பக்கோடா போட்ருவாய்ங்க, சூடா தோச கொடுப்பாய்ங்க அதுக்கு காரச்சட்டினி, கொத்த மல்லி சட்டினி, புதினா சட்டினி, தக்காளி சட்டினி, சாம்பாருன்னு அலப்பறைய கூட்டுவாய்ங்க... செட்டி நாடுல்லப்பு....சாப்பாட்டு சவட்றனைக்கு ஒரு கொறச்சலும் இருக்காது....

கவிதாலக் காணமேன்னு தேடிக்கிட்டு இருந்தப்ப, உள்ளுக்கு இருந்த இருவத்தஞ்சு டேபிள்ள கடைசி டேபிள்ள ஒடுங்கிகிட்டு ஒக்காந்து இருந்துச்சு பயவுள்ள. பட்டணத்து புள்ளக் குட்டிய மாதிரி அம்புட்டு தெகிரியமா எல்லாம் நாங்க லவ் பண்ண முடியாதுப்பு. எவனாச்சும் மாமேன், மச்சினன், அங்காளி, பங்காளின்னு பாத்துப் புட்டாய்ஙக்ன்னா ஊருக்குள்ள ஏழரைய கூட்டிப் புடுவாய்ங்க..ஆமா!

எனக்கும் பயந்தேன்.. கெதக்கு கெதக்குனு இருந்துச்சு.. என்ன செய்ய? காதலிச்சு தொலைச்சாசுல்ல...! நேர போயி கவிதாலுக்கு எதித்தாப்ல உக்காந்தேன்...

இஞ்சருல்ல ....! என்ன தலைய குனிஞ்சு கிட்டு ஒக்காந்திருக்க...? என்ன சாப்புடுற சொல்லுன்னு வீராப்பா சொல்லிப்புட்டு மணி பர்சுல இருந்த 200 ரூவாய நினைச்சுகிட்டேன்...அப்புடியே மணி பர்ச தொட்டும் பாத்திக்கிட்டேன். லேசா ஒரு டவுட்டு காச வச்சமா பர்சுலன்னு...இருக்கும் இருக்கும் எங்க போயிறப்போகுது கழுத...

அப்புறமும் ஒரு டவுட்டு.. இவ என்ன 200ரூவாய்கு மேலயா தின்டு புடப் போறா...ன்னு யோசிச்சுக்கிட்டே... ஏய்.. என்னலே கேட்டுகிட்டே இருக்கேன்..ஒம் பாட்டுக்கு பேசாம இருக்க....பேசுல....கொஞ்சம் பெலக்கா பேசினேன்...!

இல்ல செவராமா..., நம்ம ரெண்டு பேரும் கட்டிக்கிற முடியாதுடா. எங்கய்யா, எங்க அய்த்த மயனுக்குத்தேன் என்னிய கட்டிக் கொடுப்பேன்னு சொல்லிப்புட்டாருடா....! நான் மாட்டேன்னு சொல்லி...கெடந்து கதறி அழுது பாத்துடேன்டா... ! ஏண்டி எடுபட்ட செறுக்கி யாரையும் லவ்வு கிவ்வு பண்ணுறியா? ஒன்னிய காலேசுக்கு அனுப்பிச்சதுதேன் நாஞ்செஞ்ச தப்பு.. தலைக்கு பூவ வச்சிகிட்டு கண்ணாடி முன்னாடி ஒரு மணி நேரம் நின்னப்பவே நெனச்சேன்னு சொல்லிக்கிட்டு எங்கம்மாவும் வெளக்கமாத்த எடுத்து அடிச்சு புடிச்சுடா...

எங்கய்யா.....சொல்லுறாக...." ஏத்தா அப்புடி காதல் கீதல்னு என்னமாச்சும் இருந்த சொல்லிருத்தா...அது எல்லாம் நமக்கு சரிபட்டு வராது அப்பறம் நான் நாண்டு கிட்டே செத்துப் போவேன்" னு சொல்லிகிட்டு நெஞ்சுல அடிச்சுகிட்டு அழுகுறாருடா....

ஏண்டி என்னமாச்சும் ஆக்கெட்ட (ஆக்ட்) கொடுத்த வக்காலி கொண்டே புறுவேன்னு எங்கண்ணே ஈசங்காட்டு கொறப் பய மாறிக்கி கத்துறான்...

வேண்டாம் செவராமா...! என்னிய மறந்துட்டு நீ வேற யாரயச்சும் கட்டிக்கடா, என்னால ஒன்னிய மறக்க முடியாது இருந்தாலும் அவிங்கெளுக்கு சேதி தெரிஞ்சு போச்சுன்னா கொண்டே புடுவாய்ங்க....

அவ பாட்டுக்கு பட படன்னு சொல்லிபுட்டு கேவி கேவி அழுகுறத பக்கத்துல இருந்த சப்ளையர் வேடிக்க பாத்துக்கிட்டு வேற நிக்குறான்...! எப்பே.....என்ன குறு குறுன்னுன்னு பாத்துகிட்டு இங்க நிக்கிறிய, ரெண்டு காப்பி வெரசா கொண்டாங்கன்னு அவன பத்தி விட்டுட்டு மணிய பாத்தேன்...சாயங்காலம் 4:30 ஆயிப்போச்சு....என்னம்மாச்சும் சாப்டுகிட்டே பேசுற மாறி சேதியா சொல்லிருக்கா இவ..ம்ஹூம் எல்லாம் எங்கெரகம்...பர்ஸிலிருந்த 200 ரூவா மெல்ல என்னிய பாத்து சிரிச்சதுதேன் மிச்சம்.

இவளுக்கு என்ன பதில நாஞ்சொல்லுறது....எனக்கு வேற கண்ணுல தண்ணி வந்துடுச்சு...! ஏய் இஞ்சருல்ல கவிதா ... தலைய நிமிரு புள்ள..., உன்னியத்தேன் உசுருக்கு உசுரா நான் லவ் பண்றேன்னு ஒனக்கே தெரியும்ல. வேற யாரையும் நிமிந்த்து கூட பாத்தது இல்லயில நானு..! இன்னும் ஒரு வருசம் நம்ம காலேஸ் முடியிற வரைக்கிம் இழுத்து வைய்யி அதுக்கப்பறம் நானே உன்ன கூட்டிட்டு போயி கல்யாணம் பண்ணிறேன். அம்ம படிப்பு முடிஞ்சுருச்சுன்னா எங்கப்பாருகிட்ட சொல்லி நான் கூட்டியாந்து ஒனக்கு தாலி கட்டுறேன்.. செத்த பொறுல....

கெஞ்சி கேட்டுட்டு அவ மொகத்த பாத்தேன். கவிதா அழகுதேன்....! துறு துறுன்னு அங்கிட்டும் இங்கிட்டும் பாக்குற கண்ணு, எடுப்பான மூக்கு, கண் மைன்னு ரொம்ப லெட்சணமானவதேன்... தலை முடி கொஞ்சம் கொறவுதேன்...ஆனா பாவட தாவணி கட்டிகிட்டு அவ நடந்து வந்தான்னா.. கொப்புடையம்மன் கோயிலு தெப்பத் திருவிழா தேரு வர்ற மாதிரி அப்படி ஒரு அழகு. காலேஸ்ல பயலுக எல்லாம் ரூட்டு விட்டு பாத்தாய்ங்க.. அது என்னவோ நம்ம கையில வந்து நின்னுருச்சு....

கவிதா கண்ண தொடச்சிகிட்டு மறுவடிக்கும் பேச ஆரம்பிச்சா..."அது இல்ல செவராமா அய்த்த மயன கட்டலேன்னா கூட பரவாயில்லயாம்டா, வேற எவன பாத்து எங்கய்யாவும் அம்மாவும் சொல்றாகளோ அவுகளதேன் கட்டணுமாம்....எனக்கு வேற வழி தெரியலடா செவராமா. நீ படிச்சி நல்ல புள்ளையா பத்து கட்டிக்க இந்த சிறுக்கி மவளுக்கு நீ கொடுத்து வைக்கலேன்னு நெனைச்சுக்கிறேன்னு தேம்பிகிட்டே சொன்னிச்சு கவிதா.

காப்பிய வச்சிட்டு அங்கனகுள்ளயே நின்னுக்கிட்டுருந்த சர்வர மொறச்சு பாக்கவும் அவன் அங்கிட்டு போனான். திரியுறாய்ங்கப்பா ஊரு ஒலகத்துல எவன் என்ன பண்றான்னு பாக்க மெல்ல முனகிகிட்டே.. கவிதால பாத்தேன். இஞ்சருலே காப்பிய குடில மொதல்ல.... அது எப்டில பொசுக்குன்னு சொல்லிப்புட்ட நீ வேற யாரயாச்சும் கட்டிக்கண்னு... பயலுகன்னா என்ன ஒனக்கு அம்புட்டு எளக்காரமா? ஒரு காதல் தாண்டியேய்....!!!! உன்னையவே நினைச்சுகிட்டு மீதி வாழ்க்கையை ஓட்டிபுட்டு போயிருவேன்....

உங்கய்யாகிட்ட சொல்லி அழுது கிழுது கொஞ்சம் டைத்த இழுத்துப் போடு பொறவு பாத்துகிருவோம். ஒம் மேல சத்தியமா சொல்லுறேன் ஒன்னிய விட்டுட்டு வேறு பொம்பள புள்ளைய நான் ஏறடுத்து கூட பாத்தது கிடையாது ஆமா...! சரி நேரம் ஆயிப்போச்சு பொம்பளப்புள்ள காணோம்னு தேடப் போறாய்ங்க...நீ கெளம்புல அதட்டலாய் சொன்னேன்.

செவராமா என்னிய மறந்துரு செவராமான்னு சொல்ல முடியல என்னாலா, ஆனா இந்த கட்டை வேகுற வரைக்கும் உன்னியத்தான் நெனைக்கும். முதல்ல மாறி நான் போன் பேச முடியாது செவராமா, உன்ன பாத்து பேசுறதும் கஷ்டம்தேன்.... உன்னையவே நெனச்சுகிட்டு இருப்பேன்...எங்கன இருந்தாலும்...

கவிதா குடிச்ச காப்பி டம்ளர் காலிய எம் முன்னால கெடக்கு. அவ அழுத, அழுக என் ஈரக் கொலைய புடிச்சிகிட்டு இருக்கு....கவிதா போய்ட்டா.... ! எல்லாத்தையும் கொட கொடன்னு கொட்டுபுட்டு போய்ட்டா...! ச்சே என்ன வாழ்க்கையிடா.... ? சரி மனசு சரியில்ல புள்ளையார் பட்டி கோயிலுக்கு போயிட்டாச்சும் வருவம்னு நெனச்சுக்கிட்டு...

கல்லாவில் காசு கொடுத்துட்டு மறுக்கா நடந்தேன்.... பர்ஸ்ட் பீட், காபித்தூள் வாசம், பழைய பஸ் ஸ்டாண்ட்....! அட ஷ்யாம் பஸ் வருது... காலேஸுக்கு மத்தியானம் நான் போகலை. இந்த காலேஸ் முடிஞ்சு வர்ற பஸ்தேன்...! பிள்ளையார் பட்டி வழியா திருப்பத்தூரு போற வண்டி...! எங்க காலேஸ் புள்ளைக, பயலுக எல்லாம் இதுலத்தேன் போவாய்ங்க...

ஷ்யாமில் ஏறி முன்னாடி படிகட்டு ஓரமா நின்னுகிட்டேன். செக்கர் அண்ணே.. நல்லாயிருக்கியளானு கேட்டுகிட்டே கண்டக்கடர பாத்து வணக்கம் பாசுன்னு ஒரு சல்யூட்ட போட்டுகிட்டு இருக்கயிலயே...

இரண்டாவது சீட்ல இருந்த மஞ்சக் கலர் தாவணிய எதார்த்தமா பாத்தா.. அதுவும் என்னியதான் பாக்குது...ஏய் இது பர்ஸ்ட் இயர் சுவாலஜில சேந்திருக்கிற கீதவுள்ள!!!! ஆமா புள்ளையார் பட்டின்னு பையலுக சொன்னாய்ங்க...ன்னு யோசிச்சுக் கிட்டு இருகையிலயே.. அது என்னைய பாத்து சிரிச்சுருச்சு..அட... இதுல பேக் ரவுண்டல பாட்டு வேற பஸ்ல..." அடடா மழைடா அடை மழைடா..."ன்னு .. நானும் சிரிச்சு வச்சேன். நான் சிரிச்ச உடனேயே கைய நீட்டி என் பொஸ்தகத்த கேட்டுச்சு நானும் வேகமா கொடுத்தேன்....

அப்புறமென்ன புள்ளையார் பட்டி போற வரைக்கிம், நான் தலைய கையால கோதிகிட்டே கீதால பாக்க, கீதா என்னஉஅ பாக்க....படக்குன்னு புள்ளியார் பட்டி வந்துருச்சு...! " எங்க இங்குட்டு வந்திருகீக ஐயான்னு" அது என்னத்தேன் கேட்டுச்சுன்னு தெரியாம பொஸ்தகத்த வாங்கிகிட்டு தேங்க்ஸ்ங்கன்னு சொன்னேன்...

என்ன இங்கிட்டுன்னு கேட்டேன்னு மறுக்கா கேட்ட உடனேதான் கோயிலுக்கு வந்தேன்னு தத்து பித்துன்னு ஒளறி வச்சேன்....என்ன என்னமோ அது பேச...நான் கேட்டுகிட்டே கோயிலு பக்கமா போக கூடவே கீதாலும் வந்துச்சு...

நான் யார்கிட்டயும் இது வரைக்கும் இவ்ளோ க்ளோசா பேசுனது இல்ல சிவராமன் சார்னு கீதா சொன்னப்ப.. ரொம்ப சந்தோசமாத்தேன் இருத்துச்சு....பதிலுக்கு நானும் தான் யார் கிட்டயும் பேசுனது இல்லன்னு சொல்லி முடிக்கையில கவிதா நெனப்பு மெல்ல எட்டிப் பாத்துச்சு மனசுக்குள்ள....! தெப்பக் குளத்து முக்கு வரைக்கு வந்துட்டு லெப்ட்ல திரும்பி வீட்டுக்கு போயிருச்சு கீதா....

போறதுக்கு முன்னாடி அடிக்கடி பேசுவோம்னு வேற சொல்லிட்டு போயிருச்சு...! நான் கோயில பாக்க போய்கிட்டு இருந்தேன்.. புள்ளையாரப்பா... என்ன இது... இப்ப மனசு பூர கீதா, கீதா கீதான்னு பொலம்புதேன்னு யோசிச்சுகிட்டே கோயில் வாசல்ல செருப்ப விடும் போது

" ஏய் இஞ்சருல்ல கவிதா ... தலைய நிமிரு புள்ள..., உன்னியத்தேன் உசுருக்கு உசுரா நான் லவ் பண்ணிகிட்டு இருக்கேன்னு ஒனக்கே தெரியும். வேற யாரையும் ஏறெடுத்தும் பாத்தது இல்ல புள்ள..! " கவிதா கிட்ட சொன்னது பெலக்கா மனசுக்குள்ள கேட்டிச்சு...

இருந்தாலும் கீதா கிட்ட பேசிகிட்டு வந்ததும் நல்லாத்தேன் இருந்துச்சு....

அட...என்னப்பு நீங்க மொறைக்கிறீக...?

அங்கு விலாசு ஓட்டல்ல, ஒரு ஓரமாத்தேன் ஒங்கள ஒக்காரச் சொன்னேன்..பிள்ளையார் பட்டி வரைக்கும் ஆரு ஒங்கள வந்து வேவு பாக்கச் சொன்னாக....? போங்கப்பு போயி வேற சோலி இருந்தா பாருங்க...நாங்க கோயிலுக்கு சாமி கும்பிட போறமாக்கும்....

புள்ளையாரப்பா...........எல்லாத்தையும் காப்பாத்து சாமீமீமீ......!!!!! பஸ்ல கவிதா போய்கிட்டு இருக்கும்.. கீதாவும் வீட்டுக்கு போயிருக்கும்ல..யோசனை பண்ணிகிட்டே...

கோயிலுக்குள் நுழைந்தே விட்டேன்...!


தேவா. S



Comments

என்ன கொடும சரவணா இது.... ஒரு பஸ் ஏறி இறங்கரதுக்குள்ள.. அடுத்த புள்ளைய பாத்து.. தலைய கோதுது... இத நம்பி.. அந்த கவிதா பிள்ள வீட்ல அடி வாங்கி ஒரு வருஷம் தள்ளிப் போடனுமாக்கும்??? விளங்கிரும்..!

யாத்தா... கவிதா... ஒழுங்கா படிச்சி ஆத்தா.. அப்பன் சொல்ற பயல கட்டிட்டு போ தாயி...! இந்த பயபுள்ள.. பஸ் லயும், கோவில்-லயும் லந்து பண்ணிக்கிட்டு திரியுது..!! ஏதோ.. தோணுச்சி சொல்லிப்புட்டேன்.. பாத்து சூதானமா இருந்துக்க ஆத்தா...!

அந்த புள்ளையாரப்பன் உன்னிய காக்கட்டும்!!!! :)))

(செம போஸ்ட் போங்க... பின்னிட்டீங்க! )
சிறப்பான போஸ்ட்டுக்கு மிகவும் அருமையாக COMMENT செய்த ஆனந்திக்கு என் பாராட்டு.
அண்ணே... கொப்புடையம்மன் கோவிலுக்கிட்ட நாகு விலாஸ் சர்பத் வாங்கி குடிச்சிருக்கேன்... பிரசிடெண்ட்ல எல்லாச் சட்னியோடவும் தோசை சாப்பிட்டிருக்கேன். அங்கு விலாஸ் பாக்கலையே...

கவிதாவுக்கு அம்புட்டு அட்வைஸ் பண்ணிட்டு காத்திருத்தான்னு சொல்லிட்டு காலவாற கீதாவை பஸ்ஸூல விட்டுட்டிங்களே..

புள்ளையாரப்பா இந்த செவராமனுக்கு நல்ல புத்தி கொடுக்குறியோ இல்லையே அந்தப்புள்ள கவிதாவுக்கு அயித்த மவன கொடுத்துடு... ஆமா சொல்லிப்புட்டேன்.

அப்படியே நம்ம பக்கத்து பேச்சு வழக்கு அண்ணா. வாழ்த்துக்கள்.
dheva said…
சே. குமர் @ அங்கு விலாஸ் ஓட்டல் வச்சிருந்தது நம்ம அய்த்தான் தேன்... கடைய வித்துப்புட்டு மலேசியா போயி செட்டிலாயிட்டாக...

ஒரு வேளை இப்ப அங்குவிலாசு பிரசிடென்ட்டா மாறிருச்சு போல அப்பு...!

நன்னாரி சர்பத்த ஐஸ் தூக்கலா போட்டு ந்
//சிறப்பான போஸ்ட்டுக்கு மிகவும் அருமையாக COMMENT செய்த ஆனந்திக்கு என் பாராட்டு.//

...பாராட்டிற்கு நன்றி!
வைகை said…
@ தேவா

சொன்னா நம்புவீங்களான்னு தெரியாது.. நான் டெய்லி அங்க போவேன் ஆனா நான் கொப்புடையம்மன் கோவிலுக்குள் ஒரே ஒரு முறைதான் போயிருக்கேன்... அந்த இடம் கல்லுக்கட்டி அம்மன் சன்னதின்னு சொல்லிருந்தா இன்னும் நெருக்கமா இருக்கும்... நான் இடத்த மட்டும்தான் சொல்றேன் ( கவிதாவ இல்லை ). அப்பறம் அந்த நரசுஸ் காப்பி வாசம் இன்னும் இருக்கு... நாங்க படிக்கும் போது அந்த இடத்துல சன்னா ஹோட்டல்தான் பெருசு.. இப்ப அது பாத்திரக்கடை! ஒவ்வொரு முறை ஊருக்கு போகும்போதும் காரைக்குடிய சுத்தி மாற்றங்கள் இருந்தாலும் அந்த கல்லுக்கட்டி, கண்ணன் பஜார், இதெல்லாம் அப்பிடியே மனதுக்கு நெருக்கமாத்தான் இன்னும் இருக்கு! ( கீதாவும் இல்லை ) நம்புங்க :))
dheva said…
சன்னா ஹோட்டல் பாத்திரக்கடையா ரொம்ப நாள் முன்னாடியே ஆயிடுச்சு வைகை...!

யெஸ்... நரசுஸ் காபி ஸ்மெல்...அந்த இடத்தை கடக்கும் போதே அடிக்கும்...!

கவிதாவும், கீதாவும் கற்பனை கதாபாத்திரங்கள்னு சொன்னா நம்பவா போறீங்க...ஹா ஹா ஹா!

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த