Skip to main content

Posts

Showing posts from September, 2011

உடையாரின் அதிர்வலைகள்...30.09.2011!

அதிர்வு I அதிர்வு II மனதைப் பிசைந்து கொண்டிருக்கிறது உடையார் நாவல் . விளையாட்டாய் நான் தொட்ட எல்லாமே ஏதோ ஒரு தளத்திற்கு என்னை தர தரவென்று இழுத்துச் சென்று மூர்ச்சையாக்கி வாழ்வின் அடுத்த பாகத்திற்கான புரிதலை என்னுள் திணித்து பிரமாண்ட மெளனத்தைக் கொடுத்து விட்டுச் செல்லும் . இங்கே கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விடயம் . ஒரு மெளனம் கடும் தடிமனாய் அடர்ந்தது என்று ஒவ்வொரு முறையும் எண்ணும் போதும் அதை விட அடர்த்தியாய் மீண்டுமொரு மெளனம் கிடைக்கும் . அப்படியான ஒரு தளத்திற்கு ஒவ்வொரு முறையும் பாலாவின் எழுத்து என்னை இழுத்துச் சென்று இருக்கிறது . இதோ உடையாரின் மூலம் மீண்டுமொரு மெளனம் . கதையை மட்டும் வாசிக்க எப்போதும் வெறும் புத்தகம் வாசிப்பவனல்ல நான் . மாறாக அதன் பின்னணியில் ஒளிந்து கிடக்கும் ஒரு மிகப்பிரமாண்ட வாழ்க்கையை ஒரு சக்கரவர்த்தியின் ஆசையினை , அவன் கோயில் செய்த பின்னணியினை அதை எழுத்தாக்கிய என் எழுத்துலக தகப்பன் அய்யா பாலகுமரனை மொத்தமாய் உள்வாங்கிக் கொண்டு பேச்சற்று கண்ணீரோடு கசிந்து உருகிக் கிடக்கிறேன் .

இல்லாதது...!

தொலைந்து போன ஒருவனின் எழுதப்படாத கவிதைகள் இல்லாத காதலிக்காய் காற்றில் கரைந்து கிடக்கலாம்; உணர்வற்ற உயிர் சுமக்கும் அணுத் திரட்சிகளில் அமிழ்ந்து கிடக்கும் வண்ணக் கனவுகளில் யாரேனும் ஒளிந்து கிடக்கலாம்; ஜனித்தலுக்கு முன்னான ஒரு கலைந்த நிலையில் நினைவுகளை எல்லாம் அலைகளாய் பரவவிட்டு திரட்சியாய் மறைந்து கிடக்கலாம்! உச்ச சப்தத்தில் வெடித்து சிதறிய அதிர்வுகள் நிசப்த்த தாதுக்களாய் பரவிக் கிடக்கையில் ஒன்றுமே அங்கே நிகழவில்லை என்று மெளனம் சாட்சியளிக்கலாம்.. யார் கண்டார் உருவற்றத்தின் சூட்சும திருவிளையாடலை? கேட்பதும் பேசுவதும் உணர்வதும் கடந்த உலகினை யோசிக்கும் வலுவற்று, உடலென்னும் பொதிக்குள் இதோ... அமிழ்ந்து கிடக்கிறேன்...! அழுத்தமாய் நான் என்ற உணர்வோடு திரிந்து நடக்கிறேன்....; புலன்கள் கடந்த வாழ்க்கை இல்லையென்று புனைந்து திரிகிறேன்... அதையே புரிதல் என்கிறேன்.. பின்னொரு நாள் மொத்தமாய் கரைந்து போகிறேன்...! தேவா. S

பயணம்....!

அது ஒரு பேருந்துப் பயணம் என்று ஒற்றை வரியில் நான் சொல்லி நிறுத்தி விடமுடியாது. இரவின் ஆளுமையோடான ஒரு பிரபஞ்சத்தின் வசீகர இராத்திரி அது. இரவு என்பதை விட இராத்திரி என்னும் வார்த்தைக்கு வசீகரம் கூடுதலாய் இருப்பதாக நான் உணர்ந்ததுண்டு. எங்கே செல்கிறேன்? ஏன் செல்கிறேன்? என்பதெல்லாம் சராசரி வாழ்வியல் கணக்குகளுக்கு வேண்டுமானால் உதவலாம் ஆனால் பயணத்தை கவனிப்பதில்தானே அலாதி சுகம்..! அப்படியான கவனத்திற்கு கருவாய் இருந்து விட்ட இந்த பேருந்து பயணத்தில் நான், குறைந்த எண்ணிக்கையிலிருந்த பயணிகள் நடத்துனர், ஓட்டுனர்... மற்றும் என் ஜன்னலோர இருக்கை, வெளுத்த வானத்தில் அழுத்தமாய் இருந்த நிலா.....! உலகம் உறக்கத்திற்கு செல்லும் பொழுதுகளில் பூமியின் ஒரு பகுதி பிரஞையோடு எப்போதும் விழித்துக் கொள்ளும். மனித மூளைகளின் அதிர்வுகள் எல்லாம் மயனா அமைதியில் நித்திரை என்னும் மயக்கத்தில் கிடக்கும் போது உரிமையாய் இயற்கையோடு காதல் கொண்டு களித்திருக்கும் இந்த பூமி. அது சுற்றிச் சுற்றி இரவினைத் தேடி ஓடுவதெல்லாம் இப்படியான காதலுக்குத்தானோ என்று நான் எண்ணி ஆச்சர்யப்படும் வகையில்தான் இருந்தது அந்த ரம்யமான இரவின் நகர்வு... காட்டு

தேடல்.....24.09.2011!

தெளிவான ஒரு விடயத்தை வழங்கிய புத்தனை இந்திய தேசம் தவற விட்டு விட்டது அல்லது தவற விடப்பட்டது என்று நினைக்கும் போது கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது. கடவுள் என்ற ஒன்றினை தகர்த்தெறிந்து தானே தன்னை உணர்தலை வாழ்க்கையாய் வாழ்ந்து விட்டுப் போன ஒரு புருசனை சிலை வடித்து வணங்கி அவரின் பெயர் சொல்லி புத்த மதம் என்றாலும் அதுவும் புத்தனுக்கு எதிரானதே...! புத்தர் என்ன தான் போதித்தார்? என்றுதானே கேட்கிறீர்கள், அவர் ஒன்றுமே போதிக்க வில்லை என்று நான் சொல்வது உங்களுக்கு முட்டாள்தனமாய் தெரியும் ஆனால் அதுதான் உண்மை. காலங்களாய் போதிக்கிறேன் போதிக்கிறேன் என்று நமக்குள் ஏற்றி வைத்த மூட்டைகளை எல்லாம் இறக்கி வைக்க ஒரு பாதையை அவர் காட்டியிருக்கிறார் என்று வேண்டுமானால் சொல்வேன். தேவை என்பது எப்போதும் துன்பத்தை தராது. ஆனால் ஆசை என்பது கட்டாயமாய் துன்பத்தை தரும் என்று அவர் கூறியதன் பின்புலத்தில் தேவை வேறு ஆசை வேறு என்று உணர்வதற்கே பல காத தூரம் சிந்தனையை செலுத்தி பின் அறுக்க வேண்டும். பசி என்பது தேவை ருசி என்பது ஆசை. காமம் என்பது தேவை குரோதம் என்பது ஆசை, உறக்கம் என்பது தேவை சோம்பல் என்பது ஆசை... இப்படியாக வகைப்பட

புவனா...!

என்ன மாஸ்டர் அமைதியா உட்கார்ந்து இருக்கீங்க? ஏதாச்சும் பேசுங்க மாஸ்டர் என்று நான் சொன்னதை மாஸ்டர் காதில் வாங்கிக் கொண்டு வாங்காததைப் போல அமர்ந்திருந்தார். மாஸ்டர் ஒருவர் தான் என்னை சரியாக புரிந்து வைத்திருக்கும் ஒரு மனிதராய் நான் இதுவரையில் நினைத்துக் கொண்டிருப்பது. அவருக்கும் புரியவில்லை எனில் அதுக்காக கவலைபடும் ஜென்மமா இந்த புவனா? ஏம்மா புவனா என்னை நீ ஏன் மாஸ்டர்னு கூப்பிடுற உனக்கும் எனக்கும் 7 அல்லது எட்டு வயசு வித்தியாசம்தான இருக்கும்..! ஒரு வேளை பேர் சொல்லி கூப்பிட பிடிக்கலேன்னா அண்ணானு கூப்பிடலாம்ல....மாஸ்டர் கேட்டார். அடா அடா என்ன மாஸ்டர் இப்படி ஒரு கேள்வி கேட்டுட்டீங்க? நான் எதுக்கு உங்கள அண்ணானு கூப்பிடணும்...! அண்ணானு கூப்பிடலாம் மாஸ்டர் ஆனா எனக்கு பிடிக்கலை...! அப்டி உண்மையா கூப்பிட நினைக்கிறவங்க கூப்பிடலாம் எனக்கு என்னமோ அப்டி தோணல... ஒரளவுக்கு நான் மதிக்கிற மனுசன் நீங்க எனக்கு வயசு 27 உங்களுக்கும் 34 அப்டீன்றதால அண்ணாவோ, சாரோ, மாமாவோன்னு முறை வச்சி கூப்பிட நான் எப்பவும் விரும்பியது இல்லை.... அப்போ, அப்போ ஏதோ நான் சொல்றதை புரிஞ்சுக்கிறீங்க எனக்கு சப்போர்ட் பண்றீங்க கத்தும்

சிலிர்ப்பு

ஏதோ இரையைக் கவ்விச் செல்கின்றன எறும்புகள் சாரை சாரையாக ஏதேதோ கனவுகளுடன்; கனவுகளோ,கற்பனைகளோ நிதர்சனமென்பது யாராலும் மிதிபடாதவரை... *** முடிவுகளில் பெரும்பாலும் ஒன்றுமில்லை என்பதே விதியாகிறது..., இருந்தாலும் எல்லாவற்றிலும் முடிவையே தேடியே... இடைப்பட்டதின் லயிப்பு சுகக்தை தொலைப்பதே வாடிக்கையாகிவிட்டது இவர்களுக்கு! *** பெருங்கனவொன்றில் நான் அந்த நதியாய் நடித்துக் கொண்டிருந்தேன் நதி நானாய் இயல்பிலிருந்தது! *** வண்ணத்துப் பூச்சிகள் எவ்வளவு உற்சாகமாய் சிறகடிக்கின்றன..., கடந்த காலங்கள் எல்லாம் அவற்றை ஒன்றும் செய்வதே இல்லை! *** சட சடவென்று வீசிய காற்றில் மட மட வென்று முறிந்தது நெடு நெடுவென்றிருந்த கனத்த மரம். *** தூண்டில் போட்டு காத்திருக்கிறான் வெகுநேரமாய்.... ஏதாவது கிடைக்கலாம் இல்லாமலும் போகலாம்! காத்திருந்த நினைவுகள் மட்டுமே... மிச்சம்! தேவா. S

மிருக ஆட்டம்...!

என்றேனும் ஒரு நாள் அச்சினை மாற்று ... ஏதேனும் கோள்களோடோ அல்லது சூரியனோடோ மோதிச் சாம்பலாய் உதிர்ந்தே போ பூமியே!!!!! எப்போதும் மெளனத்தை போதிக்காதீர்கள் மனிதர்களே சப்தங்களாய் திரிந்து செவிப்பறைகள் கிழிம் வரை கூச்சலிட்டு எமது குரல்வளைகள் கிழிந்தே போகட்டும் ஒரு நாள்...! உணர்வாய் நின்று ரெளத்ரத்தில் குளித்து இயல்பாய் எம்மை கோபங்கள் கொண்டு சீறிப்பாய எம்மை பணித்துப் போங்கள் கடவுளரே...! பூக்களை யாம் பூஜித்து வர்ணித்தெழுதிய வார்த்தைகளே... சற்றே எம்மை விட்டு... கலைந்தே போங்கள்..., கடும் பாறைகளை நான் தீரத் தீர காதலித்து... எம் கண்ணீராலவாது ஒரு கவிதை செய்ய வேண்டும்..! புல்வெளிப் பயணங்களை ஒத்தி வையுங்கள் எமது கால்களே.. நாம் பாலை வெயிலில் பாதங்கள் சூடேற நடந்து பயில வேண்டும், குளிரினை ரசித்து சுகத்தில் லயித்துக் கிடக்கும் எமது தோற்களில் சூரிய சூட்டினால் நிறைய தழும்புகள் வேண்டும்...! மன்னிப்புக் கொடுத்து கொடுத்து மரத்து போயிருக்கும் எம்மை கடவுளாக்கும் நினைவுகளை செதுக்கி எறிந்து விட்டு ரெளத்ரத்தால் தவறுகளை கொன்றழிக்கும் மிருக குணம் கொண்டு... ஜகத்தினை மிரட்டிப் புரட்டிப் போடும் ஒரு மிருக ஆட்டம்... நான் ஆ

மழை.....!

சப்தமாய் பெய்த ஜன்னலோர மழையில் மறந்தே போனது..என் பேருந்துப் பயணம்...! மனிதர்கள் சட சடவென்று கதவடைத்து மழையோடான உறவினை வேண்டாமென்று முறித்துக் கொண்டு பேருந்துக்குள் பதுங்கி ஏதேதோ மழைக் கதைகளை சப்தமாய் பேசி சிரிக்கையில் வெளியில் நிஜ மழை... மரம் செடிக் கொடிகளோடு.. சப்தமாய் பேசி சிரித்தது.. மனிதர்களை பற்றியாய் இருக்குமோ? கண்களை ஜன்னலின் வழியே பரவ விட்டு மழையின் சாரலை உடலில் வாங்கிக் கொண்டு மெல்ல எட்டி இரு கை மழை நீரை தீர்த்தமாய் பாவித்து என் முகம் துடைக்கையில் பக்கத்தில் அமர்ந்திருந்த என் சக பயணிக்கு...., ஒன்று நான் பைத்தியக்காரனாய் இருந்திருக்க வேண்டும் இல்லையேல் வேற்றுக் கிரக வாசியாய் தெரிந்திருக்க வேண்டும். ஏனென்றால் அவரின் பார்வை அப்படி...! சன்னலை இறக்கி விடப்பா... என்ற அவரின் குரலை பார்வையால் சாந்தப் படுத்தினேன். வார்த்தைகளின் பயன்பாடு பெரும்பாலும் பயனளிப்பதில்லை. எண்ணங்களை தொண்டைக்குள் வைத்து வழி மாற்றம் செய்து அதை சப்தமாக்கி பேச்சாக்காமல் பார்வையாக்கி கூட இருந்தவரின் விழிகளுக்குள் இறக்கி அவரைச் சப்தமின்றி சாந்தமாக்கினேன்..! எப்போதும் தானே பெய்கிறது மழை என்று கேட்பவர்களிடம் நான் ஒரு

கரைகிறேன்....!

இந்தக் கணத்தை பூரணமாய் ரசிக்கும் ஒரு மனிதன் நான். முக்காலமும் தெரிந்து கொள்வதில் எனக்கு விருப்பமில்லை. வார்த்தை அலங்காரங்களைக் கொண்டு என்னை எடுத்தியம்ப நான் விரும்புவதில்லை எல்லா அலங்காரச் சொற்களையும் தயவு செய்து என் வீட்டு வெளியே உங்களின் காலணிகளைக் கழட்டிப் போடுவதைப் போல கழற்றி எரிந்து விட்டு என்னிடம் வாருங்கள். ஆசைகள் அற்றவன் நான் என்று சொல்லி உங்களின் ஆச்சர்யத்தை பரிசாய்ப் பெற எந்த விதமான முட்டாள்தனமான செயல்களிலும் நான் ஈடுபடப்போவதில்லை. நான் இருக்கிறேன்....இதுதான் எனது சத்தியம். எனது உணர்வுகள் பரிசுத்தமானவையாக இருக்க ஒவ்வொரு நொடியிலும் தானியம் பொறுக்கும் ஒரு சிட்டுக் குருவியாய் என் நினைவுகளை நானே அலசுகிறேன் அவ்வளவே.... பசிக்கும் போது புசிக்கிறேன். புலால் உண்ணேன் என்று ஒரு கருத்தினை நான் உங்களிடம் பகிரேன். இன்று புலால் உண்கிறேன். நாளை உண்ணாமலும் இருப்பேன். அப்படி உண்ணாமல் இருக்க புலால் மீதான ஆசையே வரக்கூடாது என்பதற்காக விரும்பியே உண்கிறேன். வேண்டாம் என்று ஒதுங்கி நிற்கையில் ஒரு பொருளின் மீது ஆசை வந்தால், அதை திருட்டுத் தனமாய் நான் அடக்கிக் கொண்டு உங்களிடம் உத்தமன் என்று பெயரெடுக்க

வெற்றி...!

கொஞ்சம் நின்னு யோசிச்சுப் பாத்தா ஒவ்வொரு தடவை இங்க எழுதறதுக்கும் மன நிம்மதிக்கும், மன ஒருநிலைப்பாட்டுக்கும் ரொம்பவே நெருக்கம் இருக்கு. காரணம் எழுத்துக்களை தேடி வெளில ஓடுற இடம் இல்லை இது,எழுத்துக்களை எனக்குள்ள தேடுற இடம். நேராவே சிந்திச்சு நேராவே வாழ்றது எப்பவுமே ரொம்ப கஷ்டமான விசயம்னு சின்ன வயசுல இருந்து படிக்கும் போதும் சரி, வேற பெரியவங்க அதை சொல்லும் போதும் சரி அது கொஞ்சம் விளையாட்டாத்தான் தெரிஞ்சுச்சு, ஆனா சரிய சரின்னு சொல்லி, தப்ப தப்புன்னு சொல்லி, டக்கு டக்குன்னு நம்மள சத்தியத்தோட ஒத்துப் போக வச்சு வாழ்ற ஒரு வாழ்க்கை நமக்கு ஈசியா வேணா இருக்கலாம் ஆனா கூட வாழ்ற மனுசங்களுக்கு அது ரொம்ப தொந்தரவா இருக்கு. ஏதேதோ சொல்றோம், ஏதேதோ எழுதுறோம் ஆனா கனவுலயும் கூட அடுத்த மனுசன தொந்தரவு பண்ணக்கூடாதுன்னு ரொம்ப கவனமா போகும் போதே பளீச்னு தலையில அடிச்சு காலம் சொல்லிக் கொடுக்குது " டே.....மடையா....சத்தியத்த தான்டா சத்தியத்தால சந்திக்கணும். அநியாயத்த அட்டூழியத்த, வன்முறைய நீ அதே ரேஞ்ச்ல தாண்டா போயி ஃபேஸ் பண்ணனும்னு .... வாழ்க்கையில் எல்லாத்துக்கும் ஒரு விளைவு இருக்குங்க...! கட்டைய தொட்டாலோ, சுவத்

கனவிலாவது...?

நேற்றைய கனவும் உன்னால்தான் நிரம்பி வழிந்தது, வழக்கம் போல நெருக்கமாய் தூரத்தில்தான் அமர்ந்திருந்தாய், வழக்கம் போல காதலை மெளனத்திற்கு இரையாக இருவருமே போட்டுக் கொண்டிருந்தோம்! ஏதேனும் செய்திகளை உன் விழிகள் எனக்குப் பகிருமா? என்று உற்று நோக்கினேன் அது காதலைத் தவிர வேறொன்றும் பகிரேன் என்று பிடிவாதம் பிடித்தது...! என் மெளனத்துக்கு காரணத்தை நீயும் மெளனத்தால் தேடியது போலவே நானும் தேடியதில் குடி கொண்டிருந்த நிசப்தத்தில் பரவிக் கிடந்த அதிர்வுகளோடு சப்தங்களை அதிகமாக்கிக் கொண்டிருந்த நமது இதய துடிப்பும் அன்னிய தேசத்து எல்லையை கடந்து செல்லும் அவஸ்தையோடு தொண்டையை கடக்கும் அவ்வப்போது நாம் விழுங்கும் உமிழ்நீரும் சேர்ந்தேதான் காதலை கனப்படுத்தின...! நான் உன்னை காதலிக்கிறேன் என்று சொல்லப்போவதில்லை என்பதைப் போல... நீயும் சொல்லப்போவது இல்லை என்பதை உரக்க கட்டியம் கூறிக் கொண்டிருந்த மெளனத்தை உடைக்கும் முயற்சியில் முதலில் எட்டிப் பார்த்த உனது உதட்டோரப் புன்னகையில் நான் உடைந்தேதான் போனேன்..! ஏதாவது சொல் என்றேன்... போகவா என்றாய்....! சொல் என்றுதானே சொன்ன

கஜமுகன்....!

நிறைய பேருக்கு பிடித்த கடவுள் என்று சொன்னால் அது விநாயகர்தான். கணேசா, கணேசா என்று தலையில் குட்டிக் கொள்வதும், தோப்புக் கரணம் போட்டு வணங்குவதும் என்று என்னதான் செய்தாலும் விநாயகர் எல்லோருக்கும் செல்லப்பிள்ளைதான். எல்லா செயலுக்கும் முன்பு விநாயகப் பெருமானை வணங்கி விட்டுத்தான் வேலைகளை துவக்குகின்றனர். பூஜைகள் செய்யும் போது மஞ்சளால் பிடித்து சிறிய பிள்ளையாரை செய்து அதை வணங்கி எல்லாம் சரியாக நடக்க உதவவேண்டும் என்று வேண்டியும் கொள்கிறார்கள். இது மட்டுமல்ல மற்ற எல்லா கடவுள்களின் வடிவங்களையும் விட பிள்ளையாரின் வடிவம் கஜ முகத்தையும் மனித உடலையும் கொண்டிருப்பதால் கூடுதல் ஈர்ப்பு அனைவருக்கும்....ப்ரண்ட்லி காட் என்று கூட சொல்லலாம். புராணங்களில் விநாயகர் பற்றி நிறைய கூறியிருப்பார்கள். சரி...அது ஓ.கே.... அதையும் மைண்ட்ல வச்சுக்கோங்க நான் சொல்றதையும் கொஞ்சம் யோசிச்சுக்கோங்க...! அதாவது.... எதுவுமற்ற பூரணமான சூன்யத்திலிருந்து பிரபஞ்சம் என்ற ஒன்று ஜனிப்பதற்கு முன் வெளிப்பட்ட சப்தம் ஒங்காரம் என்றழைக்கப்படும் அ + உ +ம் என்ற மூன்றின் கூட்டான ஓம் என்னும் ந