Skip to main content

ஹாய்....10.01.2012!



















அயற்சி வருவதற்கு காரணம் தொடர் வேலைகள் மற்றும் திரும்ப திரும்ப செய்யும் ஒரே மாதிரியான வேலைகள். எழுதுவதற்கு காரணமாய் புறத்தாக்கமோ அல்லது அகத்தாக்கமோ இல்லாமல் போய் விட்டால் எழுத்து நீர்த்துதான் போய் விடுகிறது. அனுபவத்தை, லயிப்பின் சுகத்தை அல்லது வலியை எழுதும் போது அதன் சுவாரஸ்யம் எப்போதுமே அலாதியானதுதான்...

ஆனால், பதிவுகள், அல்லது பதிவுலகம் என்ற ஒரு வட்டத்திற்குள் வந்து ஒரு வாரம் அல்லது மாததிற்கு இத்தனை பதிவுகள் இடவேண்டும் என்ற ஒரு மாயா இலக்குக்குள் சிக்கி அதை நோக்கி ஓடும் போது ஒரு படைப்பாளி மரித்துதான் போய் விடுகிறான். இதற்கு மாறாக இன்னொரு விசயம் ஒன்றும் இருக்கிறது, எழுதுவது தனது ஆத்ம திருப்திக்காக என்ற ஒரு வரையறை தாண்டி வாசகர்கள் பொழுது போக்கும் விதமாக எழுதுவதுதான் அது....

கமர்சியல் ரைட்டிங் எனப்படும் வெகுஜன ரசனையை மையப்படுத்தி வார்த்தைகளை நகர்த்துவது ஒரு தனித்திறமை. எனக்குத் தெரிந்து இந்த பதிவுலகில் மிகச்சிலரே அதைச் செய்து வருகின்றனர். இன்றைய தேதிக்கு வாசகனின் தேவை என்ன என்று யோசித்து தனது படைப்பாற்றலை கொண்டு பளீச் என்று சொல்வதும் ஒரு திறமை. இலக்கியவாதிகள் என்ற வட்டம் தாண்டிய பாமரனை ஒரு எழுத்து சென்று சேரும் போது அங்கே படைப்பாளி கண்டிப்பாய் வெற்றி பெறத்தான் செய்கிறான்.

ஆத்ம திருப்திக்காக எழுதும் போது எழுத்து குறிப்பிட்ட வட்டத்திற்குள் சுருண்டு கொள்கிறது. பயன்பாடுகளின் விகிதமும் குறிப்பிட்ட எல்லையில் நின்றும் விடுகிறது. மிகச் சிறந்த கருத்துக்களை போகிற போக்கில் விதைத்து பொழுதுபோக்காய் மனிதர்களிடம் கொண்டு சேர்க்க நான் இதுவரையில் நினைத்தது கிடையாது. இதற்கு தனிப்பட்ட காரணம் என்று எதுவும் இல்லை என்றாலும் சூழலும், அனுபவமுமே மனிதனின் முதிர்ச்சியை நிர்ணயிக்கின்றன.

ஆன்மீகம் பற்றி நிறைய பேசி இருக்கிறேன் என்றாலும் ஆன்மீகத்தையும் அதன் புரிதலையும் பொட்டலம் போட்டு வியாபாரம் செய்ய முடியாது. அது வாங்கும் தன்மையோடு தொடர்புடையது. சூட்சுமத்தை பேசும் போது உருவத்தை காட்ட முடியாது. உருவத்தை காட்டினால் அது பொய் அல்லது போலி. ஆன்மீகத்தின் சாரங்களும் நுட்பங்களும் விளங்க முடியாதவை அவற்ற உணரத்தான் முடியும்.

நிறைய கட்டுரைகளை ஆன்மீகத்தின் மையம் தொட்டு எழுதியிருப்பதால் வெகுஜன தொடர்பற்றுப் போய் தேடுபவனின் பார்வைகளுக்கு மட்டும் பொருளை தெரிவித்து விட்டு ஓரமாய் ஒதுங்கிக் கொண்டன எனது மிகைப்பட்ட கட்டுரைகள். இது இப்படித்தான்....இதை மாற்றி கூற முடியாது. இதற்கு படம் வரைதல் கடினம், இடம் சுட்டிப் பொருள் விளக்குதல் கடினம்.

எழுதி நிறைய பேரிடம் கொண்டு சேர்ப்பதை விட எழுதி, எழுதி பார்ப்பதில் ஒரு விதமான சுகம் எனக்கு கிடைத்து விட்டது. எழுதும் போது வந்து விழும் வார்த்தைகளை மீண்டும் வாசித்து வாசித்து ஒரு வாசகனாய் என்னை நெறிப்படுத்திக் கொள்ள முடிந்தது. வாசிக்கையில் எழுத்தினை விட்டு நான் வெகு தூரம் இருப்பதும் எனக்கு புலப்பட்டது. கற்றுக் கொடுக்க என்னிடம் எதுவில்லாமல் கற்றுக் கொள்ள எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.

அந்த ஆசையிலேயே நிறைய எழுதவேண்டும் என்று ஸ்பூரித்து, எழுதி எழுதி படித்துக் கொண்டிருக்கிறேன். கட்டுரையின் நீளம் கூடுதல் என்றோ அல்லது புரியவில்லை என்று சிலர் என்னிடம் கூறும் போது எனக்கு என்னை மாற்றிக் கொள்ள வேண்டும் அல்லது நிறைய பேர்கள் விரும்பும் வகையில் கரம், மசாலா பொடி தூவி வாசனையாய் எழுத எனக்கு தோன்றவில்லை.

காரணம்...,எழுதி எழுதி நான் திருப்தி கொண்டேன் என்பதுதான் உண்மை. இது ஒரு மாதிரியான சுகம். இது அடுத்தவர் சாரா திருப்தி. விளக்க முடியாத ஒரு அற்புதம்.

ஆன்மீக அடிப்படையிலான கதை, கட்டுரை மற்றும் கவிதைகள் செய்து கொண்டிருக்கையில் காமமும் ஆன்மீகத்தின் மறுக்க முடியாத பாகம்தானே என்ற எண்ணம் தோன்றியது. காமம் பற்றி மருத்துவ ரீதியாக, விஞ்ஞான ரீதியாகத்தான் நிறைய பேர் எழுதுகிறார்கள். சிலர் வக்கிரத்தை தூண்டும் படி படம் போட்டு எழுதி விட்டு காமம் என்றும் கூறுகிறார்கள்.

காமத்தின் சரியான பார்வைகளை ஆன்ம ரீதியில் எழுதினால் என்ன? என்று ஒரு கேள்வி எழுந்தது. விளைவு காமத்தை சரியான விகிதத்தில் ஆன்மப்புரிதலாய் உடல்கடந்த ஒரு உணர்வாய் எழுதலாம் என்று தீர்மானிக்கவும் செய்தேன். காமத்தை விரசமில்லாமல் வாசிப்பாளன் முகம் சுழிக்காமல் எழுதி அது உள்நோக்கிய பார்வையை கூர்மையாக்கி தெளிவுகளை கொடுக்கும் வகையில் எழுதவேண்டும் என்பது கயிற்றில் நடப்பது.... போல...

நடந்து பார்க்கலாம்..!

இவையெல்லாம் கடந்து...., மேலே நான் சொன்னது போல பொழுது போக்காய் வாசிப்பாளனின் நாடி பிடித்துப் பார்த்து...என்ன செளக்கியமா? என்று கேட்கும் கமர்சியல் கட்டுரைகளையும் எழுதினால்தான் ஏதோ ஒரு வட்டம் எனக்குள் பூர்த்தியாகும் போல தோன்றுகிறது.

பார்க்கலாம்...காலமும், சூழலும் எப்படி நம்மை வழி நடத்துகின்றன என்று.....!

வேற என்னங்க.... இப்டி.. அப்டி ட்ராக் மாறி மாறி நிறைய பேசிட்டேன்...! உங்களுக்கும், வீட்டிலுள்ள அத்தனை உறவுகளுக்கும் எனது அன்பான நன்றிகள் + வாழ்த்துக்கள்...!


அப்போ........வர்ர்ர்ர்ட்ட்டா...!!!!!


தேவா. S


Comments

வேற என்னங்க.... இப்டி.. அப்டி ட்ராக் மாறி மாறி நிறைய பேசிட்டேன்...! உங்களுக்கும், வீட்டிலுள்ள அத்தனை உறவுகளுக்கும் எனது அன்பான நன்றிகள் + வாழ்த்துக்கள்...!///

யாருக்கு வாழ்த்து...???
Admin said…
உங்கள் எழுத்துகளின் நேர்த்தி என்னைக் கவர்ந்தது.சொல்ல வருவதை அழகாக ரசிக்கும்படி சொல்கிறீர்கள்.. வார்த்தைகளை வரிகளாக வார்க்கும் விதம் அருமை..
ஆமாம்..எழுதியதை எழுதியவன் முதலில் நான்கைந்து முறை வாசித்தாலே அடுத்து எழுதுவது இன்னும் சிறப்பாக இருக்கும்..அதுபோல உங்களுக்கு நீங்களே முதல் வாசகனாக இருந்ததால்தான் உங்களின் படைப்பாற்றல் மேம்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன்..

பார்க்கலாம்...காலமும், சூழலும் எப்படி நம்மை வழி நடத்துகின்றன என்று.....!பார்க்கலாம்..

வந்தேன்..வாசித்தேன்..வாக்களித்தேன்..
ஓய்வாயிருந்தால் சில நிமிடங்கள் எனக்காய் செலவளியுங்கள்..

சந்தேகம்
பார்க்கலாம்...காலமும், சூழலும் எப்படி நம்மை வழி நடத்துகின்றன என்று
யதார்த்தமான வார்த்தைகளை கொண்டும் கவர முடியும் என்பதை உங்கள் பதிவு விளக்குகிறது வார்த்தை ஜாலம் அருமை

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...