Pages

Saturday, January 14, 2012

ஈழம் என்னும் கனவு...!மீண்டும் சில காணொளிகளை இரத்தக் கறைகளை விழிகளில் தேக்கியபடி காண நேரிட்டது.. ஈழத்தில் நடை பெற்றது போர் என்று உலக நாடுகளோடு சேர்ந்து அரக்கன் ராஜபக்சே வேண்டுமானால் கூறலாம் ஆனால் ஈழத்தில் நடந்தது போர் அல்ல.. அது திட்டமிடப்பட்ட பெரும் இன அழிப்பு...

தனியொரு படையாக இலங்கையின் பேரினவாத அரச படைகள் எம்மவரை நோக்கிச் சென்றிருக்குமெனில் காலம் இந்நேரம் அவர்களைச் செரித்துப் போட்ட இடத்தில் தமிழீழக் கொடி பட்டொளி வீசி பறந்து இருக்கும். ஒரு முறை அல்ல ஓராயிரம் முறை இலங்கை இராணுவத்தை அழித்தொழிக்கும் வல்லமையை தமீழீழ விடுதலைப் புலிகள் கொண்டிருந்தார்கள் என்பதை நாம் வார்த்தைகளைக் கொண்டு விளக்க வேண்டிய அவசியமே இல்லை.

உலக நாடுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து சண்டையிட்டால்தான் வெல்ல முடியும் என்ற ரீதில் எங்கும் நகர்தல் சாத்தியமில்லாமல் விடுதலை புலிகளின் கைகளும் தொடர்புகளும் கட்டப்பட்டுதான் போர் எனப்படும் மிருக வெறியாட்டம் ஈழத்தில் நடந்தேறியது. இப்போது சொல்லுங்கள் எப்பேர் பட்ட இராணுவத்தை அண்ணன் பிரபாகரன் கட்டியெழுப்பி இருப்பார் என்று...? அதன் வல்லமை என்னவென்று சற்றே கண் மூடி யோசித்துப் பாருங்கள் உலகத்தீரே.....

விடுதலைப் புலிகள் தனி நாடு கேட்டார்கள், ஈழத்து மக்கள் இலங்கையைப் பிரித்துக் கேட்டார்கள் என்று இனியும் பொய்ச்செய்திகளைப் பரப்பாதீர்கள் மனிதர்களே...குறிப்பாய் தமிழ் பேசும் தமிழர்களே....!

ஈழப்போர் நிகழ்த்தப் பெற்றது தம் தேசத்தை அடையும் நோக்கில், தாய் தமிழரின் மண்ணில் சுதந்திரமாய் வாழ முடியாமல் அடிமைகளாய் சிங்களவனிடம் உரிமைகளைப் பலி கொடுத்து விட்டு திணறிப் நின்று கொண்டிருந்த மக்கள் எடுத்த எடுப்பிலேயே ஆயுதமேந்திப் போராடவில்லை என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

காந்திய வழியில் அறப்போராட்டத்தை நம் உறவுகள் முன்னேடுத்தப் போது வன்முறையைக் கொண்டு மிருகமாய் அவர்களை அடக்க முற்பட்ட வெறி பிடித்த சிங்களவன் வன்முறையாளன் இல்லையா? தமிழன் தொடைக்கறி இங்கே கிடைக்கும் தமிழச்சியின் முலைக் கறி இங்கு கிடைக்கும் என்று தமிழர்களை கொன்று கிழித்து அவன் ஆடிய வெறியாட்டங்களை எல்லாம் எப்படி நாம் மறந்து போவது...?

அற வழியில் போராடி, போராடி ஓய்ந்து போய் இனி சிங்களவனோடு ஒத்து வாழ முடியாது என்ற முடிவுக்கு தந்தை செல்வா போன்ற பெரியவர்கள் எல்லாம் வந்து 1976ல் வட்டுக்கோட்டை தீர்மானத்தில் தமிழர்களுக்கு தமிழ் ஈழம் ஒன்றே தீர்வு என்று தீர்மானித்தார்கள்...! 

தனித் தமிழ் ஈழம் என்று குறிப்பிட்ட பகுதியை மீட்டெடுக்க களமாடினாலும் வரலாற்றின் எந்தப் பக்கத்தைப் புரட்டிப் பார்த்தாலும், பழம் பெரும் தமிழ் இலக்கியங்களை வாசித்தாலும் அங்கே ஈழம் என்ற ஒற்றை வார்த்தைதான் இருக்கிறதே அன்றி இலங்கை என்ற ஒரு வார்த்தையே இல்லை என்பதை நாம் அறிய முடியும்...!

மொத்த ஈழத்தையும் சிங்களவனிடம் கொடுத்து விட்ட தமிழர்கள் தான் வாழ தன் நாட்டில் சிறு நிலப்பரப்பை அதுவும் உரிமைகள் மறுக்கப்பட்டு, அடித்து நொறுக்கப்பட்டும் அடிமைகளைப் போல ஆள நினைத்தவனிடம் கேட்டுப் போராடியதுதான் இந்தியா போன்ற நாடுகளுக்குத் தீவிரவாதமாய்ப் போய்விட்டது...!

தீவிரவாதம் என்ற வார்த்தையை ஈழப் போரட்டத்தை சுட்டிக் காட்டப் பயன்படுத்திய கயவன் சிங்களவன் செய்ததுதான் தீவிரவாதம்.  விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் என்றால், ஈழத்தில் அமைதிப் படை என்ற பெயரில் இராணுவத்தை அனுப்பி கிட்டத்தட்ட 70,000 தமிழர்களைக் கொன்று குவித்த தேசத்தை என்னவென்று அழைப்பீர்கள் தோழர்களே....?

ஒவ்வொரு தமிழனின் ஆழ்மனதிலும் தனித் தமிழ் ஈழம் என்பது அணையாத நெருப்பாய் எரிந்து கொண்டே இருக்க வேண்டும். வெவ்வேறு நாட்டில் இருந்தாலும் எந்த வித மாற்று அடையாளங்களும் இன்றி தமிழன் என்ற ஒரு அடைப்புக்குள் தமிழர்கள் ஒன்று இணைய வேண்டும் என்பதுதான் காலம் நம் முன் வைத்திருக்கும் மிகப்பெரிய வேண்டுகோள்.

தமிழர் திருநாளாய் அடையாளம் காணப்படும் பொங்கல் திருநாளை நீங்கள் தமிழ்ப் புத்தாண்டு என்று கொண்டடிக் கொள்ளுங்கள் அல்லது உழவர் திருநாள் என்று கொண்டாடிக் கொள்ளுங்கள்....இதுவல்ல நமது தலையாய பிரச்சினை,

ஆனால் ஒவ்வொரு முறையும் தமிழன்  என்று நாம் உரைக்கும் போதெல்லாம் நம் இனத்திற்கு நடந்த பெரும் வஞ்சிப்பினையும் பேரழிவினையும் மறந்து விடாமல்...

எழுத்தாய், பேச்சாய், செயலாய் இந்த இன உணர்வு என்னும் நெருப்பினைப் பரவச் செய்யுங்கள். மீண்டும், மீண்டும் காணும் ஈழப் போர்க்குற்ற காணொளிகளும், புகைப்படங்களும் நம் நெஞ்சை கருக்கிப் போடத்தான் செய்கின்றன. நம்மைச் சுற்றியிருக்கும் ஆயிரம் பிரச்சினைகளில் ஈழம் என்ற ஒரு பெரும் துரோகத்தை மறந்து விடாதீர்கள்....

தமிழர் திருநாளை நாம் கொண்டாடும் இவ்வேளையில் ஈழத்தில் இருக்கும் தமிழர்களையும், உறவுகளை எல்லாம் இழந்து விட்டு சிங்களவனின் அதிகாரத்தின் கீழ் அவர்கள் மன ஊனத்தோடு வாழ்வதையும் மறந்து போகாதீர்கள்...!

தமிழர்கள் எல்லாம் சுபிட்சமாய் தனி ஈழம் அமையப் பெற்று சுதந்திர ஈழக்காற்றை சுவாசுக்கும் பொழுதில்தான்....

தமிழர் திருநாட்களை நாம் கொண்டாடுவதிலும் வாழ்த்துக்கள் கூறுவதிலும் ஒரு அர்த்தமும் நியாயமும் இருக்கும் என்ற வலியினைப் பதிவு செய்வதோடு கட்டுரை வாய் மூடிக்கொள்கிறது தற்காலிகமாய்...!


தேவா. S

7 comments:

Xyz said...

//தமிழர்கள் எல்லாம் சுபிட்சமாய் தனி ஈழம் அமையப் பெற்று சுதந்திர ஈழக்காற்றை சுவாசுக்கும் பொழுதில்தான்..//

அப்துல் கலாம் கனவு கானச்சொன்னதுக்காக இப்படி கண்டதுக்கெல்லாம் கனவு கான்பது நல்லாவா இருக்கு..அதுவும் இனிமேல் சாத்தியப்படாத ஒன்றுக்காக..

இலங்கைத்தமிழனே ஈழமும் வேணாம் மண்ணாங்கட்டியும் வேனாம் அமைதியா வாழ்ந்தா போதும்னு இருக்கும் போது, இந்தியர்களாகிய உங்கள் உணர்வுகளை பார்த்தா சிரிப்பாத்தான் வருது..

இலங்கை அரசாங்கம் எப்போதும் முட்டாளாகவே இருக்கப்போவதில்லை நண்பரே..(மன்னிக்கவும் உணர்வுகள் புன்படுத்தியிருந்தால்)

இலங்கைத்தமிழன்..

dheva said...

//அப்துல் கலாம் கனவு கானச்சொன்னதுக்காக இப்படி கண்டதுக்கெல்லாம் கனவு கான்பது நல்லாவா இருக்கு..அதுவும் இனிமேல் சாத்தியப்படாத ஒன்றுக்காக..//

சாத்தியப் படப்போகும் ஒன்றா சாத்தியப் படாமல் போகும் ஒன்றா என்பதை காலம் தீர்மானிக்கும் தோழர் காத்திருப்போம்.

காயங்களோடு களைப்பில் இருக்கும் மக்கள், ஓய்ந்து விட்டார்கள் என்று கூறமுடியாது. வலிகள் மறைந்தாலும் வடுக்களாய் எப்போதும் அது புத்தியில் இருக்கத்தான் செய்யும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்!

ராஜ நடராஜன் said...

கிறுக்கு நியுஸ் இலங்கைத் தமிழனுக்கு!

அடிமைத்தனம சுகமானதுதான்.

சுதந்திரம் இன்னும் சுகமானது.

துரைடேனியல் said...

Manam Kanakkirathu. Enna solvathu enre theriyavillai. Enru theerum intha adimaiyin mogam enra Maha Kavi yin varigal than ninaivukku varukirathu Sago.

Anonymous said...

yes it will happen when only our TAMIL BROTHERS unite leaving behind the past / vengense.
THE VERY BIG QUESTION IS ,WILL IT HAPPEN? NO, NO,--------------infinite

ஹேமா said...

எதிர்க்கும் மனம் இருந்தாலும் எதிர்க்கும் சக்தி இல்லை.
ஆளுமையினால் அடக்கப்பட்டு போரினால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்கள் சிலர் இதைத்தான் சொல்கிறார்கள்.எதிர்காலம் பற்றி யோசிக்காமல் தற்சமய அடிமை வாழ்வை மிகவும் சந்தோஷமாய் அனுபவிக்கிறார்கள்.அவர்களிலும் தப்பில்லை.30 வருட காலமாக இரத்தமும்,போரும் என்று சந்தோஷங்களை,வயதின் பருவங்களை இழந்தவர்கள்.
ஆனாலும் நிச்சயம் காலம் போகப் போகத் தெரியும்.சொல்லும் இவர்களே எங்களுக்கென்று ஒர் கனவு வேணும் என்று வேண்டிக் கொள்வார்கள் பாருங்களேன் !

இனிய பொங்கல் வாழ்த்துகள் தேவா !

Bibiliobibuli said...

ம்ம்ம்... எண்ணங்களை, வலிகளை பகிர்கிறது கட்டுரை.

.

விடுதலைப் போராட்டம் என்பது பல வடிவங்களில் சுழற்சி முறையில் மாறிக்கொண்டே இருக்கும், அதன் இலக்கை அடையும் வரை.