Skip to main content

துப்பாக்கி... A REAL GUN!!!!

















துப்பாக்கி படம் நல்லா இருக்கு பாஸ். இளைய தளபதி ரொம்பவே சார்மிங்கா அழகா, கொடுத்திருக்கிற வேலைய கனகச்சிதமா செஞ்சு முடிச்சு இருக்கார். ஒரு பெரிய மாஸ் என்டெர்டெயினர் பாஸ்... துப்பாக்கி படம். வத்திக்குச்சிய கிழிச்சா மாதிரி கோர்வையான காட்சிகளும், செம த்ரில்லா நம்ம கைய பிடிச்சுக் கூட்டிக்கிட்டே ஓடுறமாதிரியான ஸ்கிரீன் ப்ளேன்னு ...எல்லாமெ ஜிவு ஜிவுன்னு அட்டகாசமா இருக்கு...

முருகதாஸ் மாதிரி ஆளுங்களுக்குத்தான் மொக்கை கதைகளை எப்படி செதுக்கி எடுத்து அதை சாறாப் புழிஞ்சு,  ஸ்ரிஞ்ல ஏத்தி கிளு கிளு போதை ஊசியா மாத்தி, அதை படம் பாக்குற ஆடியன்ஸ்க்கு எல்லாம் போட்டு விடலாம்ன்ற வித்தை தெரியுது. ஒரு படைப்பாளியா அவரோட திறமைய நாம பாராட்டித்தான் ஆகணும். அதே மாதிரி எவ்வளவுதான் எதிர்ப்பு இருந்தாலும் ரஜினிக்கு அப்புறமா  சின்னக் குழந்தைகள்ள இருந்து வயசானவங்க வரைக்கும் பிடிக்கிற ஒரு சூப்பர் ஹீரோவா விஜய் வளர்ந்து இருக்கார்ன்றதையும் நாம ஒத்துகிடத்தான் வேணும்.

லாஜிக் இல்லாம நிறையப் பண்றாரேன்னு கிண்டல் பண்ணிட்டு இருக்கவங்களையும் சேர்த்தேதான் விஜய் தன்னோட கிரேட் அட்ராக்சனால கரெக்ட் பண்ணி வச்சு இருக்கார். இந்த துப்பாக்கி படம் முழுதும் ரொம்ப அசால்ட்டாவே அட்டகாசமா நடிச்சு தன் ரசிகர்களுக்கு தீனி போட்டு இருக்கார். அதுவும் அந்த பன்னெண்டு தீவிரவாதிகள கொல்ற சீன் தமிழ்  திரையுலக ரசிகர்களை எல்லாம் சீட்டின் நுனிக்கே கொண்டு வந்துடுது. யாரோ ஒர் இராணுவ வீரரை எதிரி நாட்டு முகாம்ல கொடுமைப் படுத்தி கொன்னதுக்கு  பிறகு பதினாலே நாள்ள அவரோட தம்பி "ஆர்மில வந்து சேந்துட்டான்டா..." ன்னு விஜய்  சோ கால்ட் தீவிரவாதிகிட்ட எக்ஸ்ப்ளெய்ன் பண்ற இடத்துல அவரோட டயலாக் டெலிவரி செம.. செம செமன்னு காலர நாம தூக்கி விட்டுக்க கூட செய்யலாம்...

ஒத்த ஆளா நின்னு எதிரிகள துவம்சம் பண்ணிட்டு  போட்ல திரும்பி வர்ற அசாகாய சூரர் விஜய், தமிழ் சினிமா ரசிகன் ரஜினிக்கு அப்புறம கண்டு பிடிச்ச ஒரு சூப்பர்  ஹீரோவேதான்னு சூடம் கொளுத்தி சத்தியமே கூட நாம பண்ணலாம்....

படம் பாத்தாச்சா.. ஓ.கே....டன்... !!!!

ஒன் செகண்ட் ப்ளீஸ்....

முருகதாஸும் விஜய் சாரும் நம்மள நோக்கி பிடிச்ச துப்பாக்கிய கொஞ்சம் இப்போ நாம அவுங்க பக்கம் திருப்பிப் பிடிப்போமா...???!!!!!



வண்டில இருக்க பிள்ளைங்களையும் சேத்து கொல்ற அளவுக்கு தீவிரவாதிகளுக்கு என்ன மாதிரியான உக்கிரம் இருக்கும்னு நாம லாஜிக்கோட யோசிக்கிற மொன்னை யோசனைகளை எல்லாம் ஒரு ஓரமா தூக்கி வச்சுடுவோம்..., 

ஒரு தரப்பு நியாயத்தையும் அதை தட்டிக்கேக்குற ஹீரோவையும் மட்டுமே காட்டி படத்தை ஹிட் பண்ணிக்கிட்ட முருகதாஸ் மாதிரி டைரக்டரஸ்...., தீவிரவாதிங்க ஏன் உருவாகுறாங்கன்னு சொல்லி விளக்கி கூட படம் எடுக்கக் கூடத் தேவையில்லை...,

குண்டு வைக்கிறவன வெறுமனே ஒரு தீவிரவாதின்னு எந்த ஒரு மதத்தையும் அடையாளப்படுத்தாம காட்ற ஒரு ஜெண்டில் மேனா கூட முருகதாஸ் இருந்திருக்க வேண்டாம்....

ஆனா...

குறைந்த பட்சம் வெளிநாட்டை சேர்ந்த தீவிரவாதிகள்னு வழக்கப்படி அரைக்கிற மாவையாவது அரைச்சு தொலைச்சுட்டுப் போயிருக்கலாம் இல்லையா....?

இந்தியாவில் வெடிக்கும் ஒவ்வொரு குண்டுக்கும் ஒரு முஸ்லீம்தான் காரணமா இருக்க முடியும் அப்டீன்ற ஒரு பொது புத்திய இந்தியர்கள் (தமிழர்கள்) மீது திணிக்க முயன்றிருக்கும் ஒரு வன்முறையாத்தான் என்னால இந்தப்படத்த பார்க்க முடியுது. ஒவ்வொரு படத்திலயும் வில்லன்களைப் பார்த்தா கோபம் வரும் நமக்கு, அடப்பாவின்னு ஒரு எரிச்சல் வரும் ,ஆனா இந்தப்படத்துல காட்டி இருக்குற சோ கால்ட் தீவிரவதிங்களப் பாத்தா எனக்குப் வருத்தமாத்தான் இருந்துச்சு....

ஸ்லீப்பர் ஷெல்ஸ் ஏன் உருவாகுதுன்னு......? தில்லா படம் எடுக்குற அசாகாய சூரப்புலிகள் யாராச்சும் நம்ம நாட்ல இருக்காங்களா என்ன? அப்படி எடுத்தாலும் வெளியிட்ற முடியுமா என்ன?  ஆனாலும் இந்த மாதிரி ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவங்கள நேரடியாவே பாயிண்டவுட்  பண்ணி எடுக்குற படங்களை மதச்சார்பில்லாத ஒரு நாட்டோட மதச்சார்பில்லாத சென்சார் போர்டு எப்படி அனுமதிக்குதுன்னுதான் தெரியலை...!

சினிமா வாழ்க்கையை பிரதிபலிக்கிறது. வாழ்க்கையும் சினிமாவைப் பிரதிபலிக்கிறது. துப்பாக்கின்ற பேர்ல நீங்க காட்டுன சினிமா பக்கத்து வீட்டுக்காரனையும், எதித்த வீட்டுக்காரனையும் ஸ்லீப்பர்செல்லா இருப்பானோன்னு சந்தேகிக்க வைக்கிற ஒரு கொடும் விசத்தை மனுசங்ககிட்ட பரப்பிக்கிட்டு இருக்குன்ற பயங்கரம் உங்களுத் தெரியுமா? 

பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இருக்குற அங்காளி, பங்காளி சண்டையில இந்தியாவை வஞ்சம் தீர்க்க நினைக்கிற பாகிஸ்தான்ல இருக்க முஸ்லீமும், இந்தியாவுல வாழ்ந்துகிட்டு இந்தியாவையே உயிர்மூச்சா நினைச்சுக்கிட்டு வாழுற கோடாணு கோடி முஸ்லீம்களும் ஒண்ணு இல்லைன்னு எந்த புண்ணியவான் வந்து படமா எடுத்து சொல்லுவானோ தெரியலை...?!!!!

இந்திய அரசியலை சின்னாபின்னமாக்கிக்கிட்டு இருக்குற அரசியல் ஓநாய்களின் முகத்திரையைக் கிழிக்கிற மாதிரி படம் எடுக்கத் திரணியற்ற இயக்குனர்கள் முஸ்லீம் தீவிரவாதம் அப்டீன்ற கேவலமான விசயத்தை சினிமாவுல விதம் விதமா அரங்கேற்றி காசு பாக்குற கொடுமைய சமகாலத்து அறிவிற் சிறந்தவர்கள் புரிஞ்சுக்கிடணும். ஒரு படத்துல ஹீரோவ நியாயப்படுத்த வில்லன கெட்டவனா காட்றது சகஜம்தான்னு வச்சுக்கிட்டாலும்......

இந்திய தேசப்பற்றை ஊட்ட இஸ்லாமியர்களை தீவிரவாதிகளா காட்ற அதுவும் இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்தும் வகையில் வெளி வர்ற சினிமாக்கள்......மதச்சார்பில்லாத நாட்டில் வாழும் மானமுள்ள மனிதர்களுக்கு கொடுக்கப்படும் சாட்டையடிகள்ன்ற உண்மையை நாம வெளங்கிக்கிடணும்.....!

இஸ்ரேல் பாலஸ்தீனத்துல பண்ணி வச்சு இருக்குற அட்டூழியத்தையும், அசிங்கத்தையும் காஸாவுல செத்துப் போன பச்சை பிள்ளைங்களையும் பத்தியும் படம் எடுக்கத் துணிச்சல் இருக்குமா என் இந்திய(தமிழ்) சினிமாவுக்கு...?

ஈராக் மீது போர் தொடுக்க காரணங்கள் சொன்ன அமெரிக்க  ஏகாதிபத்தியம் அந்தப் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு சதாம் தூக்கிலிடப்பட்டு இத்தனை ஆண்டுகள் ஆகியும் ஈராக்கில் இருந்த ஆபத்தான அணு ஆயுதங்களை காட்சிப்படுத்த முடியாமையை விளக்கி படம் எடுக்க யார் இருக்கிறார் அகில உலகில்...?

காஷ்மீர் மக்கள் ஏன் போராடுகிறார்கள் என்பதின் அடிப்படையை விளங்கிக் கொள்ள முடியாத என் மக்கள்....எது நீதி? யார் தீவிரவாதிகள்?ன்னு எப்டி சார் தெரிஞ்சுக்குவாங்க...? 

ஈழத்தில் நிகழ்த்தப் பெற்ற மிகப்பெரிய தீவிரவாதத்தையும் அதன் கொடுமைகளையும் வெறும் காட்சிகளாய், செய்திகளாய்  கடந்து விட்ட நாம்...

நாளைக்கே கூடங்குளம் அணு உலையை எதிர்த்துப் போராடுற மக்களின் போராட்டத்தையும் தீவிரவாதம்னு   சித்தரித்து எடுக்கப்படும் சினிமாக்களுக்கும் விசில் அடித்து கைதட்டி கொண்டாடும் ஒரு ஈன சாதியாய்த்தான்இருப்போம். ஏன்னா நமக்கு பொழுது போக்கு ரொம்ப ரொம்ப முக்கியம்...அதுவும் விறு விறுப்பான  சீன்ஸ்டோட நம்ம ஆதர்சன ஹீரோவும்...அட்டகாசமான ஹீரோயினும், செம கிக்கா பாட்டும் இருந்துட்ட போதாதா என்ன நமக்கு...?

சக மனிதர்களை ஆதாரமில்லாமல் வர்த்தகத்திற்காய் தவறாய் சித்தரித்து வரும் எந்த ஒரு சினிமாவும் பொழுது போக்கு அல்ல...அவை நம் சமூகத்தின் மீது சுமத்தப்பட்டிருக்கும் சாபக் கேடுகள். விதி விலக்குகள் எல்லா இடத்திலும் இருக்கலாம் என்னும் உண்மையை நாம் ஏற்றுக் கொண்டு நகரும் அதே நேரத்தில் விதிவிலக்குகளையே இவர்கள் மிகைப்படுத்தி அதுவும் ஒரு சாராரையே குறிவைத்துச் செய்கிறார்கள் என்பதையும் உணரவேண்டும்..!

திரைக்கதையை வசீகரப்படுத்தி மாஸ் ஹீரோவை வைத்து  துப்பாக்கி இப்போது வென்றிருக்கலாம்......

விஜய் இன்னொரு படத்தில் இஸ்லாமியராய் நடித்து  இதைச் சரிக்கட்டி விடுவார் என்பன போன்ற தாமதமான சால்ஜாப்புக்கள் கூறி சமாதானமும் கூட சொல்லிக் கொள்ளலாம்...

ஆனால்...சத்தியத்தின் கையில் இருக்கும் துப்பாக்கி அதர்மத்தின் குரல்வளைகளை தயவு தாட்சண்யமின்றி சுட்டுத்தள்ளும் என்பது மட்டும் உறுதி...!!!!!


" யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத
அப்யுத்தானமதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யகம்
"


தேவா. S


Comments

vadakaraithariq said…

ஸ்லீப்பர் ஷெல்ஸ் ஏன் உருவாகுதுன்னு......? தில்லா படம் எடுக்குற அசாகாய சூரப்புலிகள் யாராச்சும் நம்ம நாட்ல இருக்காங்களா என்ன? அப்படி எடுத்தாலும் வெளியிட்ற முடியுமா என்ன? ஆனாலும் இந்த மாதிரி ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவங்கள நேரடியாவே பாயிண்டவுட் பண்ணி எடுக்குற படங்களை மதச்சார்பில்லாத ஒரு நாட்டோட மதச்சார்பில்லாத சென்சார் போர்டு எப்படி அனுமதிக்குதுன்னுதான் தெரியலை...!

Thanks brother
எப்படியோ அப்படி இப்படி சொல்லி படத்தை மேலும் ஹிட் செய்து விட்டார்கள்...

இந்தக் கொடுமைகள் எல்லாம் என்று தீருமோ...?

நன்றி...
tm5
ஆமினா said…
நடுநிலையான பார்வை! சபாஷ்

சலாம் வாரியர்,
ஆணித்தரமான பதிவு...
அசத்தியத்தை
அஞ்ச வைக்கும் கேள்விகள்...
கொஞ்சமாவது மனசாட்சி இருப்பவர்களுகாக
நெஞ்சை சுடும் கேள்விகள்...
மிக்க நன்றி சகோ..!
/பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இருக்குற அங்காளி, பங்காளி சண்டையில இந்தியாவை வஞ்சம் தீர்க்க நினைக்கிற பாகிஸ்தான்ல இருக்க முஸ்லீமும், இந்தியாவுல வாழ்ந்துகிட்டு இந்தியாவையே உயிர்மூச்சா நினைச்சுக்கிட்டு வாழுற கோடாணு கோடி முஸ்லீம்களும் ஒண்ணு இல்லைன்னு எந்த புண்ணியவான் வந்து படமா எடுத்து சொல்லுவானோ தெரியலை...?!!!!
//// ஒவ்வொரு இந்திய முஸ்லிமிற்கும் இருந்த மனக்குமுறலை அழகான வரிகளில் படம் பிடித்து காட்டி இருக்கிறீர்கள்..!!

நடுநிலையான உங்கள் பதிவிற்கு நன்றிகள் சகோ... ! :)
Unknown said…
Very Good Post. Thanks and Hats Off
INDIAN said…
நடுநிலையான உங்கள் பதிவிற்கு நன்றிகள் சகோ... ! :) Thanks....................
உதயம் said…
போற்றப்பட வேண்டிய அருமையான புரிதல். பாராட்டுக்கள் தோழரே.
ANVICTER said…
அருமை,,,,,,,,

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த