Pages

Thursday, February 14, 2013

நீ காத்திருக்கலாம்..!



நீ காத்திருக்கலாம்..
கடைசி பேருந்துக்காய்..
பின்னிரவில் காத்திருக்கும்....
ஒரு பயணியைப் போல
இதுவரையில் நான் எழுதாத
உனக்கான கவிதைக்காக...;
நானும் உனக்காக ஒரு கவிதையை
எழுதி அனுப்பிவிட்டு
என் காதலை உறுதிப்படுத்தவும் கூட...
செய்யலாம்...,
ஆனால்...
எதுவமற்று இருக்கையில்
எதிர்ப்பார்ப்புகளோடு
நகரும் இந்த கனத்த நிமிடங்களை...
யார்தான் மீட்டெடுத்துக் கொடுக்க முடியும்..?


தேவா. S



3 comments:

s suresh said...

எதுவுமற்று நிற்கையில் எதிர்பார்ப்புக்களோடு கனத்த நிமிடங்கள்! அருமையான வார்த்தை பிரயோகம்! சிறப்பான படைப்பு! நன்றி!

சுபத்ரா said...

Nice pic too..

Easy (EZ) Editorial Calendar said...

ரொம்ப நல்லா இருக்கு.....நாங்களும் காத்திருக்கிறோம் உங்களின் அடுத்த கவிதைக்கு.....பகிர்வுக்கு மிக்க நன்றி......

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)