
சிவம் என்பது உள்ளமை. எப்போதும் உள்ளுக்குள் இருக்கும் அசையாத தன்மை. அது கருவுக்குள் இருக்கும் போதும் ஆடாமல் அசையாமல் இருந்தது. கருவில் இருப்பதற்கு முன்னான அதிர்வு நிலையையே கருவிலிருக்கும் அது கைக்கொண்டிருக்கிறது. அது ஒரு தவ நிலை. தவம் என்பது சலனமற்று இருப்பது. சலனமற்று இருக்க எண்ணங்கள் அற்று இருக்க வேண்டும். எண்ணங்களற்று இருப்பதற்கு முன் அனுமானங்களும், கருத்துப் படிமங்களும் மூளையில் குடியேறி இருக்கவே கூடாது. அர்த்தங்கள் எடுத்துக் கொண்டு ஏற்படுத்திக் கொள்ளும் கற்பிதங்களை எல்லாம் கழித்து நிற்கும் பேறு நிலை... முழுமை. புத்திக்குள் கருத்துக்கள் ஏற ஏற அதன் விஸ்தரிப்புகள் மனம் என்னும் இல்லாத ஒரு வஸ்துவை உருவாக்கிக் கொள்கின்றன. நிகழ்வுகளின் கூட்டு அல்லது செயலின் கூட்டு மனமாகிறது. தனித்து இதுதான் மனமென்று யாராலும் சுட்டிக் காட்ட இயலாது.
அனுபவங்களின் தொகுப்பு எண்ணமாகிறது. எண்ணங்களின் தொகுப்பு மனம். நாம் நம்மை மனம் என்றே நினைத்துக் கொள்கிறோம். கருவில் இருக்கும் போது என்ன அனுபவம் இருக்க முடியும்? என்ன தேவை இருக்க முடியும்..? எதுவுமற்ற இயற்கையின் போக்கில் மிதந்து கிடக்கும் நிலை. யாரோ உட்கொள்ள நமது பசி அடங்கிப் போகிறது. யாரோ சுவாசிக்க பிராணனை வாங்கிக் கொண்டு உடல் வளர்ந்து கொள்கிறது. தாங்கும் சக்தியை கருப்பை என்னும் சவ்வு கொண்டிருக்கும் காலத்தை யாரும் நிர்ணயம் செய்வது இல்லை. 36 வாரங்களுக்கு முன்னும் பின்னும் அதன் தாங்கு தன்மை இருப்பது யாரோ நிர்ணயம் செய்தது அல்ல. அதன் வலு அவ்வளவுதான். அதன் பின் சிசுவாய் வெளித் தள்ளப்பட்ட முதற் கணத்தில் தன்னிச்சையாய் பிராணனை சுவாசிக்க ஆரம்பிப்பது மூளையில் இருக்கும் ஏதோ ஒரு நியாபகத்தின் தொடர்ச்சி அல்லது வேறு வழி இல்லை சுவாசிப்பதற்கு என்றும் கொள்ளலாம்... தொப்புள் கொடி அறுபட்ட கணத்தில், தானே தன்னை நிறுவிக் கொண்டு உடல் வளர்க்கும் சுப நிகழ்வு அல்லது அசுப நிகழ்வு நிகழ்ந்து விடுகிறது.
வயிறு ஏதோ செய்ய அந்த அவஸ்தையை வெளிக்காட்ட சப்தம் எழுப்ப வயிற்றுப் பசி தீர்க்கப்படும் அரசியலை குழந்தையாய் நாம் கற்றுக் கொண்டு இன்னமும் எது எதற்கோ அழுது கொண்டிருக்கிறோம். தொடர்ச்சியாய் பசி தீர்க்கப்பட்டுக் கொண்டேதானிருக்கிறது. எதற்குப் பசி தீர்க்கப்பட வேண்டும் அல்லது ஏன் பசிக்க வேண்டும்? என்ற கேள்வியை எழுப்பிய போதுதான் ஏதேதோ திறப்புகளை வாழ்க்கை திறந்து கொடுத்தது எனக்கு.
சூன்யமே மூலம்... அந்த மூலத்தை நோக்கிய பெரும் சுழற்சியின் சிறு துகள்தான் நான் என்றறிந்த போது சுற்றி நடக்கும் ஓராயிரம் நாடகங்களின் அபத்தங்களை விளங்கிக் கொள்ள முடிந்தது. மனம் தடிக்க, தடிக்க அகங்காரம் கூடிப் போகும் அசிங்கம் விளங்கியது. நீங்களோ நானோ தனித்து இங்கு எதுவும் செய்யவில்லை. செய்யவும் முடியாது. எல்லாமே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நீங்கள் மழை வேண்டும் என்று நிறைய தடவை நினைத்திருப்பீர்கள். ஏதோ ஒரு தடவை நீங்கள் நினைத்த அன்று எதேச்சையாய் மழை பெய்ய நான் நினைத்தேன் பெய்தது என்று சந்தோசப்பட்டுக் கொள்வீர்கள்.
இங்கே எல்லோரும் எல்லாருமாக முடியாது. யார் யார்க்கு என்ன சூழலோ, எது எது ஜீன்களில் நிறைந்து கிடக்கிறதோ அதுதான் உங்களையும் என்னையும் தீர்மானிக்கிறது. புறச்சூழல் நம்மை தீர்மானிக்க முடியும் என்றாலும் புறச்சூழலை தீர்மானிப்பது பெரும்பாலும் நமது பிறப்பாகிப் போகிறது. 100 கிலோ மீட்டர் வேகத்தில் உங்களாலும் என்னாலும் ஓட முடியும் என்றாலும் நமக்கு முன்னால் ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கும் ஒருவனால் மணிக்கு 10 கிலோ மீட்டர்தான் ஓட முடியுமென்றாலும் அவனை நாம் அடைய சில காலம் ஆகும். சில காலம் என்று நான் சொல்வது சில, பல பிறப்புகள்... தூரம் என்று நான் சொல்வது பொருள் பலம் அல்ல. ஆன்ம பலம். ஆன்ம புரிதல்.
தயவு செய்து பொருள் பலத்தை ஆன்மீகத்தின் பக்கத்திலே கூட கொண்டு வராதீர்கள். சாதாரண விசயங்களை எப்போதும் அசாதாரணமான விசயங்களோடு கோர்த்து விடாதீர்கள். தெருவோரங்களில் படுத்து உறங்கி பிச்சை எடுத்து உண்ணும் ஒரு பிச்சைக்காரனின் நிம்மதி மெர்ஸிடிஸ் பென்ஸ் காரில் செல்லும் பணக்காரனிடம் இருக்காது என்னும் உண்மை உங்களுக்குத் தெரியும்தானே..? மேலை நாட்டு கலாச்சாரம் நமது பாரத தேசத்திற்குள் எப்போது எட்டிப்பார்த்ததோ அப்போதுதான் வர்க்க பேதம் என்று ஒன்று இருக்கிறது என்று நாம் அறிந்து கொண்டோம். சாதி பேதம் என்னும் பாகுபாடுகள், மற்றும் அடக்கு முறைகள் மெல்ல மெல்ல எட்டிப்பார்க்க ஆரம்பித்ததே கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்கு பிற்பாடுதானே..?
ஏழை, பணக்காரன், முதலாளி, தொழிலாளி என்பதெல்லாம் நமக்குத் தெரியவே தெரியாது. இதை நான் சொல்வதாலேயே.... ஏதோ சமீபத்திய காலத்தை நான் சொல்கிறேன் என்று பகுத்தறிவு ஞானிகள் என்னிடம் தர்க்கம் செய்ய வரவேண்டாம். உங்களின் வரலாற்று அறிவுக்கு முன்பும் இந்த தேசம் இருந்தது. சித்த புருஷர்களும் முனிவர்களும் ஆன்ம தெளிவு பெற்றவர்களும் நிறைந்து கிடந்த காலம் அது. அரசனாயிருந்தாலும், அறிஞனாயிருந்தாலும், குடியானவனாய் இருந்தாலும் முக்தி என்னும் விடுதலையை நோக்கி தங்களை நகர்த்துவதே பெரும் பேறு என்று எண்ணி வாழ்ந்த காலம் அது. முக்தி என்பது விடுதலை. சுதந்திரம். ஏதோ ஒரு கடவுளையும், மதத்தையும் அமைப்பையும் உடைத்து பகுத்தறிவோடு எழுந்து நிற்கும் ஒரு வீரியம்.
முக்தி அடைந்தவர்களை யாரும் கட்டுப்படுத்த இயலாது. 18 சித்தர்களும் பகுத்தறிவுவாதிகளே..! அவர்கள் எந்த மூட நம்பிக்கையும் விதைக்கவில்லை. அவர்கள் இந்த பேருண்மையை வாழ்க்கையை மறுத்து உணரவில்லை. வாழ்க்கையை ஏற்று உணர்ந்தவர்கள். இருப்பதின் வீரியம் அறிந்து, காரணம் அறிந்து, சக்தியை உணர்ந்து மூடநம்பிக்கைகளை உடைத்துப் போட்டு சீறிப்பாய்ந்த புலிகள் இவர்கள். வாழ்க்கையை ஏற்று நகர்தல் வேறு, மறுத்து நகர்தல் வேறு. முதலாவது பாஸிட்டிவ் எனர்ஜி, இரண்டாமாவது நெகட்டிவ் எனர்ஜி.
பணம் இருந்தால் எல்லாம் அப்போது மரியாதை இல்லை. தெளிவு, புரிதல், நிம்மதி இருப்பவனை தேடி எல்லாமே வந்தது. அப்படி வரும் போது அதை எல்லாம் நிராகரித்து இயற்கையோடு இயைந்து அவர்கள் வாழ்ந்த காலங்கள் அவை. நீங்கள் வசதி என்று எதை எதை எல்லாம் சொல்கிறீர்களோ அது எல்லாம் நவீனம் நமது மூளையில் சுமத்தி வைத்திருக்கும் பொய்கள்.
குளிர் சாதன அறைக்குள் இருப்பதை வசதி என்று சொல்வதற்கு முன்னால், குளிராய் காற்றும், மரங்களும் இல்லாமல் வெயிலில் வெந்து செத்த ஒருவனின் மூளையில் இருந்து தன்னைக் காத்துக் கொள்ள உருவானது அது என்று உணருங்கள். அது வசதி இல்லை. குறைபாடுகள் கொண்ட சூழல்கள் கொண்டவன் தன்னைக் காத்துக் கொள்ள கண்டு பிடித்த ஒரு அறிவியல் சாதனம். நீங்களும் நானும் எல்லா மரத்தையும் வெட்டி சுற்றுப்புற சூழலுக்கு கேடு விளைவித்து விட்டு, இயற்கையின் வளங்களை எல்லாம் அழித்து விட்டு....திட்டமிடல் இல்லாமல் இன்று சீரழிந்து கொண்டிருக்கிறோம்.
ஆன்மீகம் பொருளோடு தொடர்புடையது அல்ல. அது அகத்தோடு தொடர்புடையது. மனிதர்களுக்குள்ளேயே பிரிந்து நின்று கொண்டு அதிகாரம் செய்து கொண்டு தங்களை ஏக போக ராஜாக்களாய் காட்டிக் கொள்கிறார்கள். கோபப்படுகிறார்கள், அதிகாரம் இருப்பதாலேயே..மீசை முறுக்கி கொக்கரிக்கிறார்கள்... புள்ளி விபரங்களை புத்திக்குள் பதுக்கிக் கொண்டு தேவைப்பட்ட போது வார்த்தை ஜாலங்கள் செய்து தங்களை அறிவாளிகளாக காட்டிக் கொள்கிறார்கள்...
பூமி மெலிதாய் ஒரு நடுக்கம் காட்டி...அதட்டும் போது ஒடுங்கிக் கொள்கிறார்கள். நிலையாமை பற்றி பேசுகிறார்கள். மரணம் என்ற ஒன்று தன்னை நெருங்கும் போது இவர்களுக்கு கடவுள் சிந்தனை வருகிறது. அடுத்து என்ன நிகழும் என்று தெரியாத போது புத்தி பித்து பிடித்துப் போகிறது. வாழ்க்கை எல்லாமுமாக இருக்கிறது. எதுவும் எவராலும் இங்கு நிகழவில்லை என்பதை பின்பு மறந்து போகிறார்கள். வெள்ளைச் சட்டைகளும், வேட்டிகளும் கோட் சூட்களும் மண்ணோடு மட்கிப் போக உடலை மண் தின்னப் போகும் காலத்தை இவர்கள் நினைத்துக் கூட பார்க்க விரும்புவதில்லை.
இது சுழற்சி...இயற்கையின் தாண்டவம்!
உங்களுக்கும் எனக்கும் ஏதோ ஒன்று நிகழ்வதற்கு பலவிதமான சூழல்களும் மனிதர்களுமே காரணமாகிறார்கள். என்னால் ஆனது....நான் செய்தேன்.... என்னால் மட்டுமே முடியும்.. நான் யார் தெரியுமா... என்று சொல்லிக் கொள்ளும் வார்த்தைகளுக்குப் பின் இருக்கும் பேதைமையை உணராமலேயே இருக்கிறோம்.
மனமற்று இருக்கையில்
நானும் நீங்களும்
யாருமற்றுப் போக
செயல்களின் விளைவுகள்
ஏதேதோ நிகழ்த்த நிகழ்த்த
நித்தம் நடக்கிறது
இங்கே ஒரு ருத்ர தாண்டவம்!!!!
தேவா. S
Comments
இது சுழற்சி...இயற்கையின் தாண்டவம்!
அருமை அண்ணா...
தாண்டவம் இது ருத்ர தாண்டவம் அண்ணா...
1. தமிழக அரசு முத்திரையில் உள்ள கோபுரம் – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோபுரம்
2. தமிழகத்தின் நுழைவாயில் - தூத்துக்குடி
3. தமிழகத்தின் மான்செஸ்டர் - கோயம்புத்தூர்
4. மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம் - கோயம்பத்தூர்
5. மக்கள் தொகை குறைந்த மாவட்டம் - பெரம்பலூர்
6. மிக உயரமான தேசியக்கொடி மரம் - புனித ஜார்ஜ் கோட்டை (150 அடி)
7. மிகப் பெரிய பாலம் - பாம்பன் பாலம் ( ராமேஸ்வரம் )
8. மிகப் பெரிய தேர் - திருவாரூர் தேர்
9. மிகப்பெரிய அணைக்கட்டு - மேட்டுர் அணை
10. மிகப் பழமையான அணைக்கட்டு - கல்லணை
11. மிகப்பெரிய திரையரங்கு - தங்கம் (மதுரை – 2563 இருக்கைகள்)
12. மிகப்பெரிய கோயில் - தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்
13. மிகப்பெரிய கோயில் பிரகாரம் - ராமேஸ்வரம் கோயில் பிரகாரம்
14. மிகப்பெரிய கோபுரம் - ஸ்ரீ ரெங்கநாதர் கோயில் கோபுரம் (திருச்சி)
15. மிகப்பெரிய தொலைநோக்கி - காவலூர் வைணுபாப்பு (700 m)
16. மிக உயர்ந்த சிகரம் - தொட்டபெட்டா [ 2,636 m (8,648 ft) ]
17. (உலகின்) மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (14 km )
18. மிக நீளமான ஆறு - காவிரி (760 km)
19. மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மாவட்டம் - சென்னை (25937/km2)
20. மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள மாவட்டம் - சிவகங்கை (286/km2)
21. மலைவாசல் தலங்களின் ராணி - உதகமண்டலம்
22. கோயில் நகரம் – மதுரை
23. தமிழ்நாட்டின் ஹாலந்து - திண்டுக்கல் (மலர் உற்பத்தி)
24. (ஆசியாவில்) மிகப்பெரிய பேருந்து நிலையம் – கோயம்பேடு பேருந்து நிலையம்
25. மிகப்பெரிய சிலை - திருவள்ளுவர் சிலை (133 அடி)
26 முதன்முதலில் தமிழர்களுக்கு சாம்பார் வைக்க சொல்லித் தந்த ஊர் சாம்பல்காடு கந்தர்வ கோட்டை.
27.பண்றிகளே இல்லாத ஊர் புதுக்கோட்டை.
28. சாமியார்கள் வெள்ளை உடை மட்டுமே உடுத்துவது திருச்செங்கோட்டில் மட்டுமே. அதானாலே திருச்செங்கோட்டில் தாயாரிக்கப்படும் வேஷ்டிகள் விலை கூடுதலாக விற்கப்படுகிறது.
29.காபித்தூளை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தியவர் பெயர் நரசிம்ம நாயுடு இவர் சேலத்தைச் சேர்ந்தவர்.
30. சித்த வைத்தியம் புலம் பெயர்ந்த தமிழ்ர்கள் மூலம் ரெங்கோன் சென்று சிறு மாறுதல்களுடன் பர்மீய மருத்துவம் என் அறியப் படுகிறது.
31. இருட்டுக் கடை அல்வா குழுமத்துக்கு நெல்லையில் விசாக ஸ்வீட்ஸ் என்று ஒரு கடையும் உண்டு.