Skip to main content

தம்பியுடையான்....!















தம்பிங்க பொறந்தப்ப எனக்கு ஆறு வயசு இருக்கும். காலையில எழுந்தப்ப உங்களுக்குத் தம்பி பாப்பா பொறந்து இருக்குன்னு எதிர்வீட்டு வைதேகி அக்கா சொன்னாங்க. அம்மா, அப்பா ரெண்டு பேரும் இல்லாம நானும் அக்காவும் படுத்து இருந்து இருக்கோம் துணைக்கு வைதேகி அக்கா இருந்து இருக்காங்க. ஒரு ஏழு மணி போல இருக்கும் அப்பா வந்தாங்க...டேய் உனக்குத் தம்பி பொறந்து இருக்காண்டான்னு சொன்னப்ப...எனக்கும் அக்காவுக்கும் ரொம்ப சந்தோசமாயிடுச்சு...! கடையில இருந்து அப்பா டீ வாங்கிட்டு வந்து கொடுத்தாங்க.. குடிச்சுட்டு...கிளம்பி.. நடக்குற தூரத்துல இருந்த கவர்மெண்ட் ஹாஸ்பிட்டலுக்கு  போனோம்.

வெள்ளை  பெயிண்ட்ல சுவர சுத்தி பச்சை கலர் பார்டர் அடிச்சு அது மேல சிவப்பு கலர்ல பார்டர் கொடுத்து ஆஸ்பத்திரி ஒரு மாதிரியா மிரட்சியாத்தான் இருக்கும் அப்போ எல்லாம். உள்ள நுழையும் போதே அடிக்கிற மருந்து வாசனைகளை எல்லாம் கடந்து உள்ள போகும் போதே வேற ஏதோ ஒரு உலகத்துக்குள்ள வந்து இருக்க மாதிரி தோணும். அதுவும் எனக்கு ஆஸ்பத்திரில இருக்க டாக்டர்ஸ விட நர்சுங்க, கம்பவுன்டர்கள கண்டா ரொம்பவே பயம்.  அதட்டிக்கிட்டு ஒரு  மாதிரி மிரட்டலாவே பேசுவாங்க எப்பவுமே..! நான் அந்த ஆஸ்பத்திரிக்கு இதுக்கு முன்னால ரெண்டு வாட்டி போயி இருக்கேன்னு நினைக்கிறேன். 

ரெண்டு வாட்டியும் அம்மாதான் மல்லுக்கட்டி அப்பா கூட சைக்கிள்ள அனுப்பி வச்சாங்க. வைத்துல பூச்சி இருக்குடா தம்பி ஆஸ்பத்திரிக்கு போனா சிரப்பு கொடுப்பாங்கன்னு, சிரப்பு ரொம்ப இனிப்பா இருக்கும்டான்னு அதை சாப்டா குண்டா ஆகலாம்னு அம்மா சொன்னத நம்பி நான் ஆஸ்பத்திரிக்குப் போனா அங்க இருந்த டாக்டர் கை நிறைய த/அ மாத்திரையையும் கொடுத்து அதையும் சாப்ட சொன்னாங்க. எனக்கு அடுத்தாப்ல வந்தவருக்கும் அதே த/அ மாத்திரைதான் கொடுத்தாரு டாக்டர் ஆனா அவருக்கு காது வலின்னு சொன்ன மாதிரி எனக்கு கேட்டுச்சு.  அப்போ எல்லாம் அம்புட்டு யோசிக்கறது இல்லை...என்னங்க டாக்டருக்கு தெரியாததையா நாம யோசிச்சுப்புட போறோம்...

ஆக்சுவலா பாத்தீங்கன்னா, வெள்ளை கலர், மஞ்சக் கலர், ரோஸ் கலர். இந்த மூணு வகையான மாத்திரைகளையும் ஒரு ட்ரம்மு நிறைய ஒரு மாதிரி கருஞ்சிவப்புக் கலர்ல இருக்க ஒரு சிரப்பையும் வச்சுக்கிட்டுதான் மொத்த ஆஸ்பத்திரியோட புற நோயாளிகளையும் சமாளிப்பாய்ங்க.. அடிகிடி பட்டு வந்தா இருக்கவே இருகு டிங்சர் ஆஃப் அயோடினும் பஞ்சும், பேண்டேஜும். அந்த ஒத்த ஆஸ்பத்திரியில ஊரு சனமே வந்து மருத்துவம் பாத்துக்கிட்டு அது சரியாவும் போயிரும்னா பாத்துகோங்களேன்..! இப்ப மாதிரியா அப்ப எல்லாம்...உடம்பு சரியா இல்லேன்னா சரியாப் போறதுக்கு சரியா மருந்து கொடுத்த காலம் அது. மருத்துவம் மருத்துவமா இருந்த நேரம். இப்போ மருத்துவம் வியாபாரமா போச்சுன்றது பத்தி இன்னொருக்கா பேசையில பேசுவோம்...

இப்போ தம்பிய பாக்க போலாம் வாங்க...

அப்பா கைய புடிச்சுக்கிட்டு ரொம்ப ஆர்வமா அம்மா இருந்த அறைக்குள்ள நுழைஞ்சோம். பெரிய அறைதான் அதுன்னு வச்சுகோங்களேன். நான் அம்மா கிட்ட படுத்து இருந்த தம்பிய போய் ஆசையா அந்த குட்டியோட பிஞ்சுக் கையில என் கைய வைச்சேன்... டபக்குன்னு புடிச்சுக்கிட்டான்...கொஞ்சம் தடிசாவே இருந்தான். என் தம்பி எனக்கு துணை அப்டீன்னு நான் நினைச்சு சந்தோசப்பட நிறையவே காரணம் இருக்கு.

எங்க ஊர்ல பட்டாணி ராவுத்தர்னு ஒருத்தர் இருந்தாரு அவருக்கு அஞ்சோ ஆறோ பசங்க...பகுருதீன் கிட்ட சண்டை போட்டா முஜிப்பு வருவான் ஏன்டா எங்க அண்ணன அடிச்சேன்னு..., முஜிப்பு கிட்ட தகராறுன்னா அவன் தம்பி கலந்தர் வருவான்...கலர்ந்தர் கிட்ட எதித்து பேசினோம்னா நஜீர் வருவான்... இப்டி மொத்தமா அண்ணன அடிச்சா தம்பி, தம்பிய அடிச்சா அண்ணேன்னு மாத்தி மாத்தி வருவாய்ங்க. பெரும்பாலுமே யார்ட்டயாச்சும் சண்டை போட்டா, அவன், அவன் நான் என் அண்ணன கூட்டிட்டு வருவேன் தம்பிய கூட்டிட்டு வருவேன்னுதான் சொல்லுவாய்ங்க எல்லா பயலுகளும், நான் மட்டுந்தான் எங்க அப்பாவ கூட்டிட்டு வருவேன்னு சொல்லுவேன்...

எங்க அப்பாவே ஒத்தப் பொறந்தாரு. அஞ்சு அக்கா தங்கச்சிக்கும் நடுவுல நாலாவதா பொறந்தவரு. நான் ஒத்தப் பொறந்தவனா இருக்கதால எல்லாத்துக்கும் யோசிச்சு யோசிச்சுதாண்டா காலை எடுத்து வைப்பேன். தனியா வளர்ந்தாலே கொஞ்சம் பயத்தோடதான் வாழ்க்கைய எதிர் கொள்ளணும்ன்னு அப்பா அடிக்கடி எங்கிட்ட சொல்லுவாங்க. எங்க அப்பத்தா கூட சுப்பையா ஒத்த பொறந்தவன் அவனை யாரும் எதுவும் சொல்லாதீங்கன்னு அடிக்கடி சொந்தக்காரங்க கிட்ட எல்லாம் சொல்றத கேட்டு இருக்கேன். எங்க அத்தைங்க எல்லாம் கூட ஒத்தப் பொறந்தவன்ப்பா ஒங்க அப்பன்...பதவுசதான் பேசணும் அவன்ங்கிட்டன்னு நான் காலேஜ் படிக்கிற வரைக்கும் என்கிட்ட சொல்லி இருக்காங்க...

அதனாலேயே அப்பாவுக்கு என்னைய ஒத்தப் பொறந்தவனா விட மனசு இல்ல போல இருக்கு. தம்பிய கைய பிடிச்சிக்கிட்டு ஆசையா அவன பாத்துட்டு இருந்தேன் கொளுக் கொளுக்னு எந்தம்பிய பாத்து  எப்படா தம்பி பெரியாளா வருவா...? எந்தம்பி வருவாண்டா என்னைய அடிச்சான்னு நானும் சொல்வேன்லன்னு சொல்லிப் பாத்துக்கிட்டு இருக்கையில எங்க அம்மாவுக்கு அந்தாண்ட சைட்ல இருந்து இன்னொரு அழுகைச் சத்தம் கேட்டுச்சு...அட.. என்னாட இவன் இங்கிட்டு கிடக்குறான் அங்கிட்டு இருந்து சத்தம் வருதுன்னு எட்டிப் பாத்தா.. அங்கிட்டு ஒருத்தன் அழுதுக்கிட்டு இருக்கான்.. அட என்னங்கடா இதுன்னு அப்பாவ நிமிந்து பாத்தேன்...

உனக்கு ரெண்டு தம்பிங்கடா.. அப்பா சந்தோசமா சொன்னாங்க. நானும் அக்காவும் ஒருத்தரை ஒருத்தர் சந்தோசமா பாத்துக்கிட்டோம். புது வரவு அவ்ளோ சந்தோசமா இருந்துச்சு. ரெண்டு பேரையும் எப்படா வீட்டுக்கு கூட்டிட்டுப் போவோம்,  எந்தம்பிங்க எப்படா வளர்வாங்கன்னு ஒரே ஆசை எனக்கு...

எனக்கு ரஜினி ரொம்ப பிடிக்கும். மூன்று முகம் படத்துல அருண் கேரக்டர்ல இருக்க ரஜினிய வில்லன் கோஷ்டி அடிச்சுட்டு இருக்கப்ப ஜான் கேரக்டர்ல இருக்க ரஜினி தம்பி புடி அப்டீன்னு சொல்லி ஒரு கட்டைய தூக்கிப் போட்டு ஹெல்ப் பண்ணுவாங்க. அடிக்கடி நான் மூன்று முகம் ரஜினி மாதிரி என்னைய என் தம்பிங்க ரெண்டு பேரையும் நினைச்சுப் பாத்துப்பேன். முதல்ல நான் கையத் தொட்ட தம்பி நல்லா புஷ்டியா இருப்பான். அம்மா இவனுக்கு பால் கொடுத்துட்டு, அடுத்தவனுக்கு பால் கொடுக்கறதா நினைச்சு சில நேரம் பை மிஸ்டேக்கா  இவனுக்கே மறுபடி கொடுத்துடுவாங்க அதையும் இவன் குடிச்சுடுவான். நாங்க இருந்த ஊர்ல பெரமையான்னு காவல் தெய்வம் இருக்கு. அத வேண்டிகிட்டு புஷ்டியா இருந்த தம்பிக்கு பிரேம் குமார்னு வச்சோம். கொஞ்சம் ஈசியா இருந்த தம்பிக்கு ராம்குமார்னு வச்சோம். ராம் பிறந்து கொஞ்சம் வினாடிகள்ள பிரேம் பொறந்ததா சொல்லுவாங்க...

எங்க வீட்ல இருக்க எல்லோரும் அவனுகள அடையாளம் கண்டு பிடிச்சுடுவோம் வெளில இருக்க ஆளுங்களுக்கு கொஞ்சம் இல்ல நல்லாவே கஷ்டம். நான் அவனுக தூங்கும் போது தொட்டி பிடிச்சு ஆட்டி இருக்கேன். அக்காவும் நானும் தம்பிங்க ரெண்டு பேரையும் அம்மா சமைக்கும் போது தூக்கி வச்சு இருந்து இருக்கோம். அக்கா என்னோட ஒரு வயசு கூட, சோ.. அக்கா.. அக்கான்ற ஒரு தூரம் இல்லாம ப்ரண்ட் மாதிரிதான் இருப்போம்.  ரெண்டு பேரும் எனக்காகவே பொறந்தவனுங்கன்னு அம்மாவும் அப்பாவும் அடிக்கடி சொல்லுவாங்க...

நான் இல்லாதப்ப தம்பிங்ககிட்ட,  டேய்....அவனுக்காகத்தாண்டா உங்கள் பெத்தேன்னு அடிக்கடி அப்பா சொல்லுவாங்களாம். என்கிட்ட தம்பிங்க ரெண்டு பேரையும் அனுசரிச்சு நல்ல படியா பாத்துக்கணும்பா நீன்னு சொல்லுவாங்க...

அப்பா இறக்கறதுக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி கூட.. தேவா. தம்பிங்க  ரெண்டு பேரும் உன் பிள்ளைங்க மாதிரி, கூட கொறச்சு இருந்தாலும் அட்ஜஸ்ட் பண்ணி போகனும்னு சொன்னது இப்பவும் காதுல கேட்டுகிட்டே இருக்கு...

அப்பா இறந்து 83 நாள் ஆச்சு.. இதோ அப்பா  இல்லாம என் தம்பிங்க ரெண்டு பேரும் 32வது பிறந்த நாள வலியோட எதிர் கொண்டுட்டு இருக்காங்க.  காலையில ராம்க்கு கால் பண்ணி விஷ் பண்ணீனேன்.. அடப் போண்ணே...அதையெல்லாம் மறந்துட்டேன், கலெக்டர் ஆபிசுல இருக்கேன் புது ரேசன் கார்டு வாங்க வந்தேன்னு விரக்தியா சொன்னான்....அப்புறம் பிரேம்க்கு போன் பண்ணினேன்...அம்மா கூட இருக்கேன் அண்ணே...பொறந்த நாள் கிடக்கு பொறந்த நாள்னு சொல்லிட்டு அம்மகிட்ட போன குடுத்துட்டான்...

அம்மாகிட்ட பேச முடியாம பேசினேன்.. அம்மா தம்பிங்களுக்குப் பொறந்த நாளும்மா...ஆசிர்வாதம் பண்ணுங்கம்மா....நீங்கதான்மா அப்பா.. நீங்கதான்மா அம்மா..தம்பிங்க பாவம்மா... இந்த நேரம் அப்பா இருந்தா எனக்கு போன் பண்ணி சொல்லி இருப்பாரும்மா.....டேய் தம்பிங்களுக்குப் பிறந்த நாள் இன்னிக்கு நீ பேசினியாடான்னு கேட்டு இருப்பாரும்மா...ன்னு சொல்லி முடிக்கும்  முன்னாடி அம்மா அழுதுட்டங்க...

14.08.2013 இன்னிக்கு இரண்டு பேரையும் கட்டிப் பிடிச்சு மானசீகமா வாழ்த்திட்டேன்......நூறு வயசுக்கு தீர்க்காயுசா செல்வ செழிப்போட அவனுங்க இருக்கணும்னு....

நாந்தானுங்களே இப்ப அப்பா கூட.....



தேவா சுப்பையா...




Comments

தம்பிகளுக்கு வாழ்த்துக்கள்.அப்பா ஆத்மா சாந்தியடைந்திருக்கும்.
தம்பிகள் இருவருக்கும் எனது வாழ்த்துக்கள் அண்ணா...

அப்பா இடத்தில் நீங்கள்... அம்மாவை அழுக விடாதீர்கள்... ஆறுதலாய் இருங்கள்... அப்பாவின் பிரிவு வலி ஆறாததுதான்... அம்மாவைத் தேற்றுங்கள் அண்ணா...
Robert said…
கடைசியில் பத்திகளில் மனதை கலங்கடித்து விட்டீர்கள். தங்கள் வாழ்த்து போல் சகோதரர்கள் சிறப்பாய் வாழ வாழ்த்துக்கள்...
தம்பிகள் இருவருக்கும் மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.....
Shankar M said…
ராமுக்கும் பிரேமுக்கும் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். நல்லா இருப்பாங்க... தந்தையுமானவனாய் தேவா...
dheva said…
நன்றி அமுதா கிருஷ்ணன்..

நன்றி குமார் தம்பி

நன்றி ராபர்ட்

நன்றி வெங்கட்..........

நன்றி சங்கர் அண்ணா...!
Unknown said…
Superb na...
my wishes tooo...
keep posting like this...
Become fan of urs.............
Unknown said…
ராம் அண்ட் பிரேம் அண்ணாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
தேவா அண்ணா கவலை படாதீங்க உங்களுக்கு நிறைய தம்பிகள் இருக்காங்க
என்னையும் சேர்த்து...

நலமுடன் நீண்ட ஆயுளுடன் வாழ எனது வேண்டுதலும் இருக்கும் .
பெரும்பாலும் ஒற்றைப்பிள்ளைகளை ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்றுதான் எல்லாரும் சொல்கின்றார்கள் . அது மிகப்பெரும் முரண் . உண்மையிலேயே நாங்கள் சபிக்கப்பட்டவர்கள் . ஒற்றைப்பிள்ளைகளின் வலி இங்கு யாராலும் புரிந்துகொள்ளப்படுவதே இல்லை ...! திரைப்படங்களிலோ , புத்தகங்களிலோ யாரேனும் அதன் வலியை ஆழமாக பதிவு செய்திருக்கின்றார்களா எனத்தெரியவில்லை ...!

கடைசியில் பத்திகளில் மனதை கலங்கடித்து விட்டீர்கள். தங்கள் வாழ்த்து போல் சகோதரர்கள் சிறப்பாய் வாழ வாழ்த்துக்கள்...

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த