Pages

Friday, May 14, 2010

சந்தியா குட்டியின் பிறந்த நாளும்... நம்ம ஊர் நினைவுகளும்...!

துபாயிலிருந்து அபுதாபிக்கு சென்று கொண்டிருக்கிறேன்....பாலைவனத்துக்கு நடுவே.... எப்படி இந்த சாலைகளை தரமானதாக உருவாக்கிஅதை பராமரிக்கிறார்கள் என்று வியந்து கொண்டே வண்டியை ஓட்டிக் கொண்டிருக்கிறேன்.....உச்சி நேரத்தில் பயணம் செய்ய வேண்டும் வழியில் நமது ஊர் உணவுகள் கிடைக்காது என்பதால் துபாயில் இருந்தே...சரவண பவனில் தயிர் சாதமும், சாம்பார் சாதமும் வாங்கிக் கொண்டு சென்றோம்.

நல்ல உச்சி வெயில் எங்காவது வண்டியை நிறுத்திவிட்டு மதிய உணவை முடிக்கலாம்.....என்று நிறுத்த நிழல் கூட இல்லையே என்று எண்ணிக்கொண்டு இருக்கும் போது சரலென்று...மனம் ஊரை நோக்கி பறந்ததது... நம்ம ஊரில் எல்லாம் ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு செல்லும் வழி நெடுகிலும் எத்தனை மரங்கள் இருக்கும்....சாலையே தெரியாத அளவிற்கு....எவ்வளவு நிழல் இருக்கும்.....சாலை அப்படி இப்படி இருந்தாலும்.....ஒரு உயிர்ப்பை நமது ஊரில் பார்க்க முடியும்....

ஊர் என்றால் ஒரு கண்மாய்க்கரை ஓர மரமாக வண்டியை நிறுத்திவிட்டு....உணவை முடித்துவிட்டு.....கண்மாய் தண்ணீரில் பாத்திரம் கை எல்லாம் கழுவி விட்டு...எவ்வளவு வெயிலாய் இருந்தாலும் குளு குளு காற்று வீசும் மரத்தினடியில் கொஞ்ச நேரம் ஆழ்ந்து சுவாசித்தால் எவ்வளவு ஆசுவாசமாயிருக்கும்....

வழி நெடுகிலும் கிராமங்களும்....மனிதர்களும்...வாழ்க்கைமுறைகளும் நாம் வேடிக்கையாக பார்த்துக் கொண்டே செல்லலாம்....பள்ளி செல்லும் குழந்தைகளும்....குறுக்கே வரும் மாட்டு வண்டியும்....ஒவ்வொரு சிற்றூரையும் கடந்து செல்லும் போது காணும் டீக்கடைகள்...வாசலிலும் சுற்றிலும் நிற்கும் மனிதர்கள்...முரட்டு மீசையும்... நரைத்த முடியும்....சட்டையில்ல உடம்பில் கம்னியூஸ்ட் சிவப்பு துண்டும் அணிந்த பெரிசுகளும்...மொத்தத்தில்....ஒரு பால்காரரின் மணி ஓசையும், ரோட்டில் யாரோ யாரிடம் சண்டை போடுவதையும் நாம் தவிர்க்காமல் நாம் காணமுடியும்.....

எங்கும் மனிதர்கள்...வெற்றிலை குதப்பிய ஆண்கள் பெண்கள்...காக்கா..குருவி...ஆடு...மாடு.......பாங்க்......பாங்க்....பாங்க்..........ஏதோ ஒரு ஹாரன் ஒலி...என்னை திரும்ப...துபாய் டு அபுதாபி சாலைக்கு மீண்டும் கொண்டுவர......ஏக்கம் கலையாமல் சாலை ஓரமாக இருந்த வண்டியை டபுள் பார்க்கிங்க் இட்டு விட்டு.....வெயில் உள்ளே வராமல் ஏ.சி. யை கூடுதலாக வைத்துவிட்டு....வாங்கி வந்த தயிர் சாதத்தை....காலி பண்ணி விட்டு...மீண்டும் வண்டியை உசுப்பேற்றி அபுதாபி நோக்கி வண்டியை சீர விட்டேன்...

அச்சச்சோ.....எதுக்கு அபுதாபி போறேன்னு சொல்லவே இல்லையே...... நம்ம ராமராஜ் அண்ணன் (குடும்ப நண்பர்) பொண்ணு சந்தியாகுட்டிக்கு பிறந்த நாள்ங்க....15.05.2010 அன்னைக்கு 8 வயது ஆகிறது இந்த பட்டாம் பூச்சிக்கு.....வாழ்த்த போறேங்க.....


குட்டிப்பெண் சந்தியாவை .....என்னோடு சேர்ந்து.... நீங்களும் வாழ்த்துங்களேன்.....!

7 comments:

soundar said...

குட்டி சந்தியா விற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

சிவராஜன் said...

Biranthanaal valthukal santhiya , athellam ok , thayir sathatha thaniya oru alava sapidanna ,

அனு said...

சந்தியா குட்டிக்கு முதல் வாழ்த்து என்னிடம் இருந்து.. :)

தமிழ் அமுதன் (ஜீவன்) said...

சந்தியாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...!

விடுத‌லைவீரா said...

வாழ்க்கையெனும் சோலையிலே
வசந்த மலர்கள் வாசம் வீச
விலையில்லா அன்புடனும்
நிலைகொண்ட புகழுடனும்
இன்று போல் என்றும்
சந்தோசமாய் வாழ
சந்தியாவை நானும்
வாழ்த்துகிறேன்...

Anonymous said...

belated happy birth day to sandhyakutty...

Ananthi said...

சங்கீதமாய் சிரிக்கும் சந்தியாவிற்கு...
சகலமும் இறையருளால் கிடைக்க
வாழ்த்துக்கள்.. :)