Skip to main content

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் II















கண்ணா வாழ்கையில ஒரு விசியத்த..கண்டிப்பா தெரிஞ்சுக்கணும் எப்பவுமே ஒரே ரூட்ல நாம போனா ரெடிமேடா நமக்கு ஒரு பேர வச்சி....ஓரங்கட்டிடுவாங்க...லைஃப்ப எப்பவுமே...லைவா வச்சிக்கணும்....சரி...இப்போ...ஸ்ட்ரெய்ட்டா..மேட்ட்ருக்கு வர்ர்ட்டா....

இதுவரை....

பாகம் I - http://maruthupaandi.blogspot.com/2010/05/blog-post_02.html

இனி...

என் வீட்டுக்கு ரெண்டு வீடு முன்னாலயே...பாபுவோட வீடு இருக்கு... வந்த போஸ்ட் மேன் முதல்ல பாபுகிட்ட போய் அவனுக்கு கார்டு எல்லாம் கொடுத்துட்டு எங்க வீட்டு வாசலுக்கு வந்து என் கையில ஒரு 21 கார்டு கொடுத்தாரு....5 ரஜினி படம்...ஒரு பிள்ளையார் படம்..3 முருகன் பாக்கி எல்லம் இயற்கை காட்சிகல், பொங்கல் ..பானைன்னு...கொடுமையா...! அடப்பாவிகளா....இப்படி ஏமாத்திட்டீங்களேன்னு....மனசுல நினைச்சிகிட்டு..பாபு கிட்ட போயி மெல்ல கேட்டேன் ..உனக்கு பொங்கல் வாழ்த்து என்ன படம்டா வந்து இருக்குன்னு....அவ்ளோதான்...

அவன்...டொட்டடாயியியியியியியிங்ங்ங்ங்ங்ங்ங்ன்னு மியூசிக் கோட எடுத்து ஒண்ணு ஒண்ணா என் முன்னால போடுறான் ஒண்ணு..ரெண்டு...மூணு......மொத்தமா 17 ரஜினி படம்...ஒண்ணு ஒன்ணும் ஒரு ஸ்டைலா....என்னோடா...ரஜினி அவன் கையில நிறைய நிறைய இருந்தத பாத்துட்டு அழுகையே வந்துடுச்சு...அதவிட இந்த பாபு காட்டின பிலிம் இப்போ நினைச்சாலும் எனக்கு அழுகையும் ஆத்திரமுமா இருக்கு...ஓட்டப்பந்தயத்துல கடைசில ஓடிவந்த பையன் மாதிரி நின்னேன்....!

நேரே அனுப்பிச்ச ஓவ்வொருத்தரா போய் கேள்வி கேக்க ஆரம்பிச்சேன்...மணிரத்தனம் படம் மாதிரி...ஏன்க்கா...ஏண்ணே... ஏன்...ஏன்..ஏன்?எனக்கு மட்டும் ஏன் ஓரவஞ்சனைனு கேட்டேன்...எல்லோரும் சிரிச்சுட்டு சொன்ன பதில் எங்க அப்பாவ எனக்கு வில்லனா ரெண்டு செகன்ட்ல மாத்திடுச்சு....ஏன் தெரியுமா...ரஜினி வாழ்த்து அட்டையை அனுப்பிச்சா எங்க அப்பாவிற்கு பிடிக்காதாம்.....! இன்னைக்கு ராத்திரி...அப்பா வரட்டும்.. நேருக்கு நேரா...அவர்கிட்ட...கேட்டுட வேண்டியதுதான்...ஆஃபிஸ் முடிஞ்சு வரட்டும்....யூனியன் ஆஃபிஸ்ல அக்கவுண்டென்ட்னா என்ன கொம்பா?னு நினைச்சேன்....

வீட்டுக்குள்ள நுழையும் போதே ஸ்டைலா ரஜினி மாதிரி ஸ்பீடா போனேன்(அப்படீன்னுதான்... நானா நினைச்சுக்கிறேன்....விட்டுறங்களேப்பா..)அம்மாகிட்ட...போய் அப்பா எப்போமா வருவர்னு கேட்டேன்...அம்மா முறைச்சு பாத்து...என்ன இது அதட்டலா கேக்குற..எப்பவும் வர்ற மாதிரிதான் வருவாரு...ஏண்டா....?அப்படின்னு கேட்டாங்க... நான் அம்மாவோட...செல்லம்..அதனால அதே திமிரோட.....சொன்னேன்...அத எல்லம் உன்கிட்ட சொல்லிட்டு இருக்க முடியாதுன்னு சொல்லிட்டு ஹாலுக்கு போனேன் அங்க என் அக்கா வேற எப்ப பாத்தாலும் புக்க எடுத்து வச்சுட்டு படிச்சிட்டே இருக்கறதால.... நானும் படிச்சே ஆகணும் (என்ன கொடுமை சார்....இது ஒரு ரஜினி ரசிகனப் போய் படி படின்னு சொல்றாங்களே....)ஒப்புக்கு நானும் ஒரு புக்க (வரலாறுன்னு நினைக்கிறேன்...அதுலதான கதை இருக்கும்) எடுத்து வச்சு படிச்சேன்...இல்ல... இல்ல படிக்கிற மாதிரி நடிச்சேன்....!

இரவு மணி 7 வாசல்ல பைக் சத்தம் ...ம்ம்ம்ம்....அப்பாதான்...வரட்டும் வரட்டும்.....ரஜினி பிடிக்காதம்ல....உங்களால எனக்கு எவ்ளோ அவமானம்...கேட் திறக்கும் சத்தம்....ம்ம்ம்ம் பயப்படக்கூடாது..... நான் யாரு....ரஜினி...(ரசிகன் இல்ல...ரஜினியேதான்)...சும்மா விடமாட்டேன்...அநியாயத்தை தட்டிக் கேப்பேன்...செருப்பு கழட்டும் சத்தம்...வாங்க....வாங்க....உங்களுக்காகத்தான் காத்திட்டு இருக்கேன் (எவ்ளோ ரஜினி படம் மைன்ட்ல மனப்பாடமா இருக்கு)....


அப்பா வீட்டுக்குள்ள வந்திட்டார்......அப்போ.....


(தொடர்ந்து வருவான் ரஜினி ரசிகன்....)


தேவா. S


பின் குறிப்பு: விசில் எல்லாம் எடுத்து ரெடியா வச்சுக்குங்க.....

Comments

சூப்பரு தம்பி
///யூனியன் ஆஃபிஸ்ல அக்கவுண்டென்ட்னா என்ன கொம்பா?னு நினைச்சேன்....///


ஹா..ஹா.. நல்ல வேளை யூனியன் ஆஃபிஸ் குள்ள புகுந்து ரகளை பண்ணாம விட்டீங்களே...!
Chitra said…
கோபமும், ஆதங்கமும், தத்துவங்களும் நிரம்பி வழியும் உங்கள் இடுகைகளின் (they are good too) நடுவில், உற்சாகமும் குதூகலமும் கலகலப்பும் பொங்கி வழிய செய்யும் இந்த இடுகைகள் - அட, தேவாவுக்குள் ஒரு குட்டி எரிமலை மட்டும் அல்ல - ஒரு குட்டி அண்ணாமலையும் (ரஜினியும்) உண்டு என்று காட்டுகிறது. கூல்!
Chitra said…
இது எப்படி இருக்கு?
dheva said…
சூப்பர்....விசிலோட வெயிட் பண்றீங்க....போல..... சித்ரா....!
dheva said…
தமிழ்.....யூனியன் ஆபிஸ் தப்பிச்சிடுச்சுன்னு சந்தோசப்படுறீங்களா? ஹா.....ஹா....ஹா....!
dheva said…
சுனில் ... ரொம்ப நன்றிங்கண்ணா....!
இருங்க விசில் வாங்கிட்டு வந்துடுறேன்..
dheva said…
என்னது....3வது பாகம் எழுதணுமா...இருங்க சார் புலிகேசி விசில் வாங்கிட்டு வந்துரட்டும்....!
சஸ்பென்ஸ் தாங்க முடியல!!! விசில் வாங்கிக்கிட்டு வந்து வாயிலேயே எவ்ளோ நேரம்தான் வச்சிருக்கிறது.... சீக்கிரமா அடுத்த பதிவ எழுதுங்கோ!!! விசில் சத்தத்துல பக்கத்து வீட்டுக்காரன் காது கிழியனும். ஹிஹிஹி
( அடடா.. இது ஆனாலும் ரொம்பவே லேட்டோ.. நா கொஞ்சம் இப்படி தான்... அட்ஜஸ்ட் ப்ளீஸ்.. :D :D )

சரி சரி.. மேட்டர்க்கு வரேன்.. திரும்பவும் முக்கியமான கட்டத்தில இடைவேளையா?
இப்படியா பிளான் பண்ணி பியூஸ் பிடுங்கி விடறது..

ஆனா, எனக்கு கவலை இல்லையே..
அடுத்த பாகம் போட்டுட்டீங்களே..
அதா போயி இப்ப படிசிருவனே.. :P

சூப்பர் தேவா.. :)

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...

பப்பு....!

காலையிலிருந்து பப்புவிற்கு தலை சுற்றியது, வயிறு குலைந்தது, மயக்கம் வந்தது, ஒரு மாதிரி...சுழற்றி, சுழற்றி அடித்தது....என்ன ஆச்சுன்னு கேக்குறீங்களா? மேலே படிங்க....பாஸ்.... பப்புவுக்கு தினம் ஒரு பதிவு எழுதி போஸ்ட் பண்ணனும் அப்படி இப்படி ஏதேதோ எழுதி போஸ்ட் பண்ணி ஓட்டிக்கிட்டிருந்த அவனுக்கு அன்னிக்கு என்ன எழுதறதுன்னு தெரியல.....ஏதாச்சும் எழுதியாகணுமேன்னு ஒரே டென்சன்.. என்னமோ இவன் கூவி உலகம் விடியப் போறாப்புல ஒரு நினைப்பு..... சொக்கா........பதிவு எழுத ஒரு வலி சொல்ல மாட்டியான்னு கத்தாத குறைதான்....! தூங்கி எழுந்த உடனே அடிக்கிற அலாரத்தை ஆஃப் பண்ணும் போதே நினைச்சான்....அலாரம் டைம்பிக்ஸ் பத்தி எழுதலாமா.....காலையில எப்படி தொந்தரவு கொடுக்குதுன்னு.....ம்ம்ம் சரியா அது பத்தி ஒண்ணும் மேட்டர் கிடைக்காததால அத ஸ்கிப் பண்ணிட்டான்... குளிக்க பாத்ரூம் போனான்...பைப்புல தண்ணி வந்த வேகத்துல நினைச்சான்... சரி தண்ணீர் சேமிப்பை பத்தி எழுதலாமான்னு,,ம்ம்ம்ஹீம்...அது பத்தியும் ஒண்ணும் சரியா தோணலை....! சாப்பிடும் போது நினைச்சான்... இட்லிக்கு தொட்டுக்க ஏத்த சட்னின்னு ஒரு சமையல் குறிப்பாச்சும் போடுவமான்னு ... உடனே அவ...