Skip to main content

தேடல்...01.06.2010!
















ஒரு புள்ளியில் நின்று கொண்டிருக்கிறது மனம். விரிந்து பரவ ஆசை இருந்தாலும் விருப்பமில்லை. இப்படியே இருப்பதில் ஒரு சுகம் இருக்கிறது. சுற்றி நிகழும் நிகழ்வுகளின் விசய குப்பைகளை எனக்குள் அள்ளிக் கொட்டிக்கொள்வதில் எனக்கு என்ன சந்தோசம் கிடைக்கப் போகிறது. எல்லாவிசயத்துகும் தன்னை முன்னிலைப்படுத்த மனிதன் எடுக்கும் பிராயத்தனங்களைப் பார்க்கும் போது குரங்காட்டி வித்தையில் ஆடும் குரங்குகளைப் போலத்தான் இருக்கிறது.

எப்போதும் கடந்தகாலத்தில் அல்லது எதிர்காலத்தில் நிற்கும் இந்த மனக்குரங்கை நம்பிதான் மனிதன் பல முடிவுகளை எடுத்து விடுகிறான். ஏதோ ஒரு அதிருஷ்டத்தில் சில நேரம் அது நல்ல முடிவாகவும் சில நேரங்களில் வேறு விதமாகவும் முடிகிறது. முழு விழிப்புணர்வு நிலையில் இருந்து முடிவெடுப்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.


நின்று நிதானிக்க ஒன்று மனிதனுக்கு தெரியவில்லை அல்லது புரியவில்லை. புறத்தில் நடக்கும் அவசரங்களுக்கு நாம் பொறுப்பேற்க முடியாது அது நியதியின் அடிப்படையில் எங்கோ ஓடிக்கொண்டிருக்கிறது. அகத்தில் ஏன் இத்தனை குழப்பங்கள், இத்தனை அவசரங்கள்? கலைத்துப் போட்ட வீடாய்....கலங்கிக் கிடக்கிறது மனிதர்களின் மனம். ஏதோ ஒன்று செய்யவேண்டும் என்ற எண்ணம், சாதித்து காட்டவேண்டும் என்ற வெறி என்று ஏதோ ஒன்றின் பின் ஓடிக் கொண்டே இருப்பது வாடிக்கையான நிகழ்வாகிவிட்டது. ஏன் ஓட வேண்டும் என்ற கேள்வி வரும் வரை ஓட்டம் நடந்து கொண்டே இருக்கும்.

கிளர்ச்சியாய் அவ்வப்போது தோன்றும் எண்ணங்களை வகைப்படுத்தி எழுத்துக்களாக்கி மீண்டும் படிக்கும் போது அதிலிருந்து எழுகின்றன ஒராயிரம் கேள்விகள். சில கேள்விகள் அர்த்தம் பொதிந்ததாய் அடுத்த நிலைக்கு அதுவே கூட்டிச் செல்லும். சில கேள்விகள் அந்த இடத்திலேயே நம்மை நிறுத்தி வைத்து மேலே முன்னேறவிடாமல் வழிமறித்து சடுகுடு ஆடும்.

அப்படிப்பட தொக்கி நின்ற கேள்விகள் ஒரு நாளில் சிதறிப் போய் கதறிக் கொண்டு தன்னை மறைத்துக் கொண்டு ஓடி ஒளிந்த கதைகளும் உண்டு. ஒரு நாள் இப்படி வழி மறித்த ஒரு கேள்வியை ஒருவரிடம் கேட்டுவிட்டு ஏண்டா கேட்டோம் என்ற நிலைக்கு வந்து விட்டேன். ஒவ்வொரு செயலுக்கும் எதிர்வினை உண்டுதானே? இது நான் கேட்ட கேள்வி. கேள்வி கேட்கப்பட்டவர் அறிவியலின் அடிப்படையில் தான் எல்லாவற்றையும் நம்புவார். அறிவியலின் அடிப்படையில் அவரும் பதிலளித்தார். நியூட்டனின் மூன்றாவது விதியை உதாரணமாக காட்டியவர் அடித்து சொன்னார் " ஒவ்வொரு செயலுக்கும் எதிர் வினை உண்டு" .

அவர் கடவுள் மறுப்பாளர் என்பது எனக்கு தெரியாது. எனக்கு பதில் வேண்டும் என்று கூடவே இன்னொரு கேள்வியும் கேட்டேன்....

" மனிதனாய் இந்த பூமியில் வாழ்ந்து இவ்வளவு செயல்கள் செய்கிறோமே.....இந்த செயலுக்கு எதிர் வினை உண்டா? அப்படி இருந்தால் அது எப்படி இருக்கும்? "

இல்லை என்று சொல்ல முடியாது இருக்கு என்றால் எப்படி இருக்கும் என்று கேட்டதற்கு மனிதன் இறந்தவுடன் ஒன்றுமில்லை என்று அவர் வாதிட்டு எனக்கு புரியாத ஏதேதோ தத்துவ விளக்கங்களை எல்லாம் சொன்னார். கார்ல்மார்க்ஸ், ஏங்கல்ஸ், பிளேட்டோ, சாக்ரடீஸ், ஐன்டீன், நீல்ஸ்போர்.... நாசா, இஸ்ரோ என்று எங்கெங்கோ போனார் ஆனால் நான் கேட்ட கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை.

கண்டிப்பாய் எந்த மதவாதிகளிடமும் இந்த கேள்வியை நான் கேட்கவில்லை ஏனென்றால் அவர்களுக்கு பதில் சொல்வது மிக எளிது. நல்லது செய்தால் சொர்க்கம் இல்லை என்றால் நரகம் என்று சொல்வார்கள் ஆனால் அதை அவர்களால் அறிவியல் ரீதியாக விளக்க முடியாது. தங்களது மதத்தில் உள்ள அதிசயங்களையும் ஆச்சர்யங்களையும் கூறி என்னையும் நம்புகள், நம்பித்தான் ஆகவேண்டும் என்று பயமுறுத்துவார்கள். அதானால் எந்த மதாவதியிடமும் நான் இந்த கேள்வியை முன் வைக்கவில்லை.

எனக்குள் சில பதில்கள் இருந்தாலும் நேர்மையான பதில் கிடைக்குமா என்று தேடிக் கொண்டுதான் இருக்கிறேன்! என்னங்க பண்றது....வாழ்க்கையே தேடலாயிடுச்சு......தேடலே வாழ்க்கையாயிடுச்சு.....!



தேவா. S

Comments

விஜய் said…
முற்றிலும் அழகான உண்மை அண்ணா இது ....அழகான வரிகள் உங்கள் முழு தொகுப்பையும் பயணிக்க வைக்கிறது..
என்தேடலும் உங்களுடன்...மௌனமாகவும்....
தெளிவான தேடல்... :-)
ஒவ்வொரு செயலுக்கும் எதிர்வினை உண்டுதானே?
ஆமாம் உண்டுதான்.
கடவுள் இல்லை - கடவுள் இருக்கு?
உதாரணத்துக்கு சில எதிர்வினை!!!

ராவணன் காத்த சீதையின் கற்பை,
தீயில் கருகி அழித்தான் ராமன்...

தேனீர்க் கடையில்
இரட்டைக் குவளை - அதே
கடையில் ஒரே
கல்லாப் பெட்டி..

வாழ்வில் வெளிச்சம்
மலர வேண்டும்
என பிரார்த்தித்தான்
கருவறை இருட்டில்
இருக்கும்
கடவுளைப் பார்த்து...

சொர்க்க வாயில் திறப்பு;
சொர்க்கம் புகுந்தனர்
மிதிபட்ட தம்பதியினர்!

பூசெய் அறையில்
கோடீசுவரி
களவு போனது கழுத்து நகை!

அய்ம்பொன் சிலையின் அடிப்பீடம் உடைப்பு
களவு போயின சிலையும் உண்டியலும்!

கேட்டவரம் தருவாள்
கருமாரியம்மன்
பிள்ளைவரம் கிடைத்தது
கன்னிப் பெண்ணுக்கு!

வெள்ளம் தாங்கி அம்மன்
குடிசைகளோடு சேர்ந்து
மூழ்கினாள் வெள்ளத்தில்!

மேலே இருப்பவன் பார்த்துக் கொள்வான்
மேலே இருப்பவனின் பார்வையில் பாலியல் கொடுமை!

பெருஞ்செலவில் குடமுழுக்கு!
பேரிடியால் குடம் உடைப்பு
பத்தர் கூட்டம் அலைக்கழிப்பு!
கருவறையில் அருச்சகனின் கற்பழிப்பு
தட்டுகளில் தட்சணைகள்!

தமிழ்மொழி தள்ளல்
தமிழன் பொருள் கொள்ளல்
இந்துக் கோயில்கள்!



தமிழினில் குடமுழுக்கு
தீட்டு ஆனதாய் அருச்சகன் பூட்டு
மானம் இல்லாத் தமிழன்!

என்ன தேவா இப்ப சொல்லுங்க ஒவ்வொரு செயலுக்கும் எதிர்வினை உண்டுதானே?
S Maharajan said…
//கிளர்ச்சியாய் அவ்வப்போது தோன்றும் எண்ணங்களை வகைப்படுத்தி எழுத்துக்களாக்கி மீண்டும் படிக்கும் போது அதிலிருந்து எழுகின்றன ஒராயிரம் கேள்விகள். சில கேள்விகள் அர்த்தம் பொதிந்ததாய் அடுத்த நிலைக்கு அதுவே கூட்டிச் செல்லும். சில கேள்விகள் அந்த இடத்திலேயே நம்மை நிறுத்தி வைத்து மேலே முன்னேறவிடாமல் வழிமறித்து சடுகுடு ஆடும்.//

உண்மை
நியூட்டனின் மூன்றாவது விதி சுருக்கமாக :

To every action there is always an equal and opposite reaction: or the forces of two bodies on each other are always equal and are directed in opposite directions.

நியுட்டனின் முதல் மற்றும் இரண்டாவது விதிகள் 'ஒரு' object ஐ அடிப்படையாகக் கொண்டவை. மூன்றாவது விதி இரண்டு objectகளை அடிப்படையாகக் கொண்டது. அது விசைகளைப் பற்றி (force) பேசுகிறது.

இன்னும் விளக்கமாக

To every action there is always opposed an equal reaction: or the mutual actions of two bodies upon each other are always equal, and directed to contrary parts. — Whatever draws or presses another is as much drawn or pressed by that other. If you press a stone with your finger, the finger is also pressed by the stone. If a horse draws a stone tied to a rope, the horse (if I may so say) will be equally drawn back towards the stone: for the distended rope, by the same endeavour to relax or unbend itself, will draw the horse as much towards the stone, as it does the stone towards the horse, and will obstruct the progress of the one as much as it advances that of the other. If a body impinges upon another, and by its force changes the motion of the other, that body also (because of the equality of the mutual pressure) will undergo an equal change, in its own motion, toward the contrary part. The changes made by these actions are equal, not in the velocities but in the motions of the bodies; that is to say, if the bodies are not hindered by any other impediments. For, as the motions are equally changed, the changes of the velocities made toward contrary parts are reciprocally proportional to the bodies

Newton's Laws of Motion என்பதை சிலர் Newton's Law of Everything என்று நினைத்துக்கொள்கிறார்கள். :-)
இந்த கேள்விக்கு பதில் அவரவர் மனசாட்சிக்கு மட்டுமே தெரியும். தப்போ சரியோ அதற்குண்டான எதிர்வினை நம் செயல்கள் மூலமோ, நம்முடன் தொடர்புடையவர்கள் மூலமோ அல்லது மூன்றவது நபர் மூலமோ நம்மை வந்து சேரும். இது இதற்கான் இதற்கான் எதிர்வினை என்று பிரித்துப்புரிந்து கொள்ளும் சக்தி மனிதனுக்கு இருக்குமா என்பது கேள்விக்குறிய ஒன்று? இது என் எண்ணம் அல்லது புரிதல்.
dheva said…
கும்மி & வீரா @ மறுபடிய்ம் குழப்புறாராங்களே....ஐயா...பாமரனுக்கு புரியுற மாதிரி சொல்லுங்க....? பட்டுன்னு எதிர் வினை இருக்கா இல்லையா? மரணிச்ச பின்ன என்ன ஆகும் இந்த செயல்களின் விளைவு?
வாழ்க்கையே தேடலாயிடுச்சு......தேடலே வாழ்க்கையாயிடுச்சு.....!////

அவ்ளோதான் பாஸ், வாழ்க்கை.
வழியில கிடைக்கிறவனோட நட்போட கைய குலுக்கிட்டு போயிட்டே இருக்க வேண்இயதுதான். :-)
புரியும்படி சொல்லனும் என்றால் கோனார் தமிழ் உரை வாங்கிதான் படிக்க சொல்லனும்...
dheva said…
வீரா @ நான் கேட்டது மரணித்ததுக்கு பிறகு என்ன ஆகும்னு கேட்டா....கோபப்படாமா அறிவியல் பூர்வமா இல்லேன்னா அறிவுப் பூர்வமா ஏதாச்சும் சொல்லுங்க...பாஸ்..! கோனார் நோட்ஸ் எல்லாம் வேண்டாம் பாஸ்!
\\பட்டுன்னு எதிர் வினை இருக்கா இல்லையா? மரணிச்ச பின்ன என்ன ஆகும் இந்த செயல்களின் விளைவு\\

இருக்கு...:))

மரணித்த பிறகு நம் வழித்தோன்றல்களும் சமுதாயமும் அவைகளைச் சந்திக்கும்.

பலவற்றை நாமே சந்திப்போம் ..

வாழ்த்துகள் நண்பரே
நம்ம செயல்களுக்கு எதிர் வினை சில நேரம் உடனே நடக்கும். சில நேரம் சில நாட்கள், சில மாதங்கள், வருடங்கள் கழித்து நடக்கும். மனித சமுதாயம் செய்யும் செயல்களுக்கு எதிர் வினையாக பூமி வெப்பமடைந்து விரைவில் நம்மை அழிக்கக் காத்திருக்கிறது. நாம் உயிருடன் இருக்கும்போதே எதிர் வினை நடந்துவிடுவதால் இறந்த பிறகு ஒன்றுமில்லை. புதைத்தால் மண்ணில் பாக்டீரியாக்களாக கலந்து வேறு உயிரினமாவோம். எரித்தால் காற்றில் கலப்போம். நமது உயிரணு ஏதோ ஒரு ரூபத்தில் பூமியில் இருக்கும். இது எனது புரிதல்.
திருமணம் முடிந்து மூன்று மாதங்கள் கழித்து, ஒரு பெண் கருவுறுகிறாள். குழந்தைக்கு தாயாகப் போகிறாள் என்கிற செய்தி, அவளை அதிக மகிழ்ச்சிக்கு உள்ளாக்குகிறது. அவளுடையதாயும் மகிழ்ச்சி அடைகிறாள்.கணவன், கணவனின் குடும்பம் என்று எல்லா உறவினர்களுக்கும் கருவுற்றுச் செய்தி சொல்லப்படுகிறது. குடும்பமே விழா எடுத்து குதூகலிக்கிறது.

இதே சம்பவத்தை கொஞ்சம் திருப்பிப் போட்டுப் பார்ப்போம்.திருமணத்திற்கு முன் அதே பெண் கருவுறுகிறாள். கருவுற்ற செய்தி,கருவுற்றப் அந்தப் பெண்ணையே திகலடைய வைக்கிறது. அவளுடைய தாய் அவமானத்தால் அலறுகிறாள். ஒட்டு மொத்த அந்தப் பெண்ணின் குடும்பமே பயந்துபோய் அந்தச் செய்தியை யாருக்கும் தெரியாமல் ரகசியமாய் பாதுகாக்கிறது. குடும்பத்தையே சொல்ல முடியாத சோகம் சூழ்கிறது.

சம்பவம் ஒன்றுதான்.

இவர்களின் உணர்வை எது தீர்மானிக்கிறது?
மனமா?
சமூகமா?
creativemani said…
"தீதும் நன்றும் பிறர் தர வாரா..., முற்பகல் செய்யின்.." போன்ற முன்னோர்களின் கூற்றுப் படி எதிர்வினைகள் நிச்சயம் இருக்கிறது என்றே எனக்கும் படுகிறது..

//நேர்மையான பதில் கிடைக்குமா என்று தேடிக் கொண்டுதான் இருக்கிறேன்//

நேர்மையான பதில் என்பதை விட.. உங்களால் ஒத்துக் கொள்ளக் கூடிய பதிலாகவும் இருக்க வேண்டும்.. காரணம்.. ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு புரிதல்கள், அனுபவங்கள் இருக்கக் கூடும்.. அவை மற்றோரால் முழுவதுமாகவோ/பகுதியாகவோ ஏற்றுக்கொள்ளவோ அல்லது நிராகரிக்கவோ படலாம்.. அனுபவங்களே நல்ல தீர்வைக் கொடுக்கின்றன.. எனவே, அறிவியலோ, ஆன்மீகமோ நமக்கான தேடல்களை நாமே முழுமூச்சுடன் இறங்கித் தேடினால் பதில்கள் கிடைக்கலாம்.. அடுத்தவரைக் கேட்பதினால் நம் தேடல் திசைதிரும்பவும் நேரிடலாம்..
நியூட்டனின் மூன்றாம் விதி பற்றி உங்களிடம் கூறியவர் தவறாக கூறியுள்ளார் என்று சுட்டிக்காட்ட அந்த விதி பற்றி மட்டுமே பேசினேன். உங்களுடைய தேடலுக்கும் அந்த விதிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அந்த விதி இயற்பியல் தொடர்பானது மட்டுமே; வாழ்வியல் தொடர்பானது அல்ல.

//பட்டுன்னு எதிர் வினை இருக்கா இல்லையா?//

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும் - வள்ளுவர்.

நினைக்கப்படும் என்பதற்கான விளக்கமே ஒவ்வொருக்குமான புரிதல்.
மரணம்,அதற்க்கு பின் இவற்றை பற்றி நானும் சில பதிவுகள் எழுதி உள்ளேன்..!

http://pirathipalippu.blogspot.com/2008/12/blog-post.html


http://pirathipalippu.blogspot.com/2009/08/blog-post_24.html
dheva said…
கும்மி @

1) //To every action there is always opposed an equal reaction; or, the mutual actions of two bodies upon each other are always equal, and directed to contrary parts.
- Newton's Third Law of Motion, translated from the Principia's Latin //


2) //இயற்பியல் அல்லது பௌதீகவியல் (Physics) என்பது அறிவியலின் ஓர் அடிப்படை இயல்பாகும். இயற்பியல் உலகின் இயல்பை, இயற்கையை நோக்கிய அறிவை தேடி நிற்கின்றது. வெவ்வேறான சூழ்நிலைகளில் இயற்கையில் உள்ள பருப்பொருட்களின் பண்புகளை முறையாக அறிந்து கொள்ளுதல் எனவும் இயற்பியலை வரையறுக்கலாம்.// (thanks wikipedia)



காமெடிதாங்க பண்றீங்க.....! நம்மையும் உள்ளடக்கியதுதான் இயற்பியல் பாஸ்! வாழ்வியல் அது இதுன்னு ஏன் மறுபடியும் குழப்புறீங்களே....

பாமரர்களுக்கு நேரிடையான பதில்கள்தாங்க போய் சேரும்....இதுவரைக்கு நேரான பதில் சொன்ன திருப்தி உங்களுக்கு இருக்கிறதா? தெரியாம தேடுறவங்கள மேலும் குழப்புறீங்களே.....!
dheva said…
வீரா @ வீரா சொல்றது கொஞ்சம் கூட புரியல....! நான் என்ன கேக்குறேன்... நீங்க என்ன சொல்றீங்க?
நியூட்டனின் மூன்றாம் விதி Laws of motion பற்றி பேசுவது. இரண்டு forceகளுக்கு இடையிலான தொடர்பை விளக்குவது. உங்கள் தேடலுக்கான பதில் அந்த விதியில் கிடையாது.

இன்னும் புரியவில்லை என்றால் இயற்பியலாளர் ஒருவரிடம் சென்று Gravitational Forceக்கு எதிர் வினை என்ன என்று கேளுங்கள். அப்பொழுது நியூட்டனின் மூன்றாம் விதியைப் பற்றி விரிவாக விளக்குவார்.

புரிந்தால் உங்கள் தேடல் வேறு திசை நோக்கிச் செல்லும்; இல்லாவிட்டால் இருட்டறையில் இல்லாத கறுப்புப் பூனையை தேடுவதாக இருக்கும்.
dheva said…
ஜெயந்தி...@ நீங்க சொல்றது அறிவியல் பூர்வமா உண்மை திடமா இருக்குற உடம்பு அப்படித்தான் ஆகும்.... கரெக்ட்! ஆனா சூட்சுமமா இருக்குற மனசு...? இறப்பதற்கு இரண்டு வருடத்துக்கு முன்னால ஏதேதோ நல்லதோ கெட்டதோ செய்றான் ஒருத்தன்...பணக்காரன வாழணும்னு நினைச்சு போராடி ஆகாமலேயே போய்ச் சேந்துடுறான் இன்னொருத்தன்.....வாழணும்னு ஆசையில சாகுற இன்னொருத்தன்....இவுங்க எல்லாமே மரணித்த பின் ஒண்ணும் இல்லேன்னா....வாழும் போது எப்படி வாழ்ந்தால் என்ன?

எங்கேயோ இடிக்குதுல்ல மேடம்...கொஞ்சம் கிட்ட வந்துட்டமா..இல்ல வந்துட்ட மாதிரி நினைக்கிறேனா தெரியல ஜெயந்தி....! ஆனா உங்க பதில் கொஞ்சம் என்னை நகர்த்தி விட்டு இருக்கு! நன்றிகள்!
dheva said…
தமிழ் அமுதன் @ அமுதன் தன் பதிவுகள்ள சொல்றது ஏதோ புரிஞ்ச மாதிரி இருக்கு.... கொஞ்சம் விரிவா சொன்னா ஒருவேள புரியுமோ! நன்றி அமுதன் நேரம் இருந்தா சொல்லுங்க!
dheva said…
மணி @ நேரிடையன பதில சொல்லிட்டார்.....! நீங்க தேடுங்க தேவான்னு.... இருந்தாலும் ஏதாவது ஒரு பதில் உந்து சக்தியா இருக்கும்னு ஒரு நம்பிக்கைதான் பாஸ்! நன்றிகள்!
dheva said…
முரளி குமார் @ முதல் வருகைக்கு நன்றி....! நடைமுறையில எதார்த்தாமா வாழ்ந்துட்டு போங்க....வர்றத அந்த நேரத்தில் பாத்துகலாம் என்று சொல்கிறீர்கள்....இது உங்களின் நேர்மையான பதில்...! கொஞ்சம் என்னை நகர்தி விட்டு இருக்கு! நன்றிகள்!
dheva said…
நிகழ் காலத்தில் @ பளிச்சுன்னு சொல்லியிருக்கீங்க... நாம் பண்றதுல்ல பகுதி நமது சந்ததியினரை பாதிக்கும் ஓ.கே...உண்மை இருக்கு! இருந்தாலும் செஞ்சவனுக்கு அப்போ ஒண்ண்ணுமில்லையா?


முதல் வருகைக்கும் பின்னூட்டதிற்கும் நன்றிகள் நண்பரே!
dheva said…
தம்பி விஜய்...
நண்பர் பாலசி
நண்பர் அகல் விளக்கு ராஜா
தம்பி ஜீவன் பென்னி
நண்பர் மகராஜன்..


அனைவரின் பின்னூட்டத்திற்கும் நன்றி....! நீங்களும் என்னைப் போலவே தேடலி இருக்கிறீர்கள்....பார்க்கலாம் பாஸ் ஏதாவது உபோயகமான கருத்து நம்ம தேடலை நகர்துதான்ன்னு!
dheva said…
கும்மி...@ ஓவ்வொரு வினைக்கும் அதற்கு சமமான எதிர்வினை உண்டு ; எந்த ஒரு விசையையும் செயல் படுத்தும் போது அது செயல் படுத்தப்படும் பொருளில் இருந்து சமமான எதிர்விசை வெளிப்படுகிறது.....இது தான் உலகம் அறிந்த தெரிந்த் நியூட்டனின்ன் 3ஆம்விதி.

"செயல் விசையும் எதிர்ச்செயல் விசையும் ஒரே பொருளின் மீது செலுத்தப்படுவது இல்லை; அவை செயலெதிர் செயலில் ஈடுபடும் இரு வெவ்வேறு பொருள்களின் மீது செலுத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டுக்கு -- தரையின் மீது நாம் நிற்கையில் நம் எடை தரையின் மீது செலுத்தப்படும் செயல் விசை; இதற்குச் சமமான எதிர்ச்செயல் விசை தரை நம் மீது செலுத்தும் செங்குத்துத் தாங்கு விசை. "

நான் கேட்பது...பூமியின் மீது உங்களின் விசை படர்ந்து அது எதிர் விசை கொடுக்கிறது. அது போல நீங்கள் செய்யும் மற்ற செயல்களின் விளைவு அல்லது எதிர்விசை என்ன என்றுதான்.....!

அடாஅடா...இவர்கிட்ட கேள்வி கேட்டா இவர் என்னை இயற்பியல் பாடம் நடத்தச்சொல்லுவார் போல இருக்கிறதே....!

பதில் சொல்லவந்தவர் மேலும் மெலும் குழம்பிக்கிட்டு இருக்காரே....ஒரு வேள பதில் கிடைக்கதோ...?
//அது போல நீங்கள் செய்யும் மற்ற செயல்களின் விளைவு அல்லது எதிர்விசை என்ன என்றுதான்.....//

செயலில் இடம்பெறும் இன்னொரு பொருளைப் பொறுத்து அது அமையும்.
dheva said…
கும்மி @ அப்பாடா.....செயலில் ஈடுபடும் இன்னொரு பொருளை வைத்து அதாவது நம்முடைய செயல்கள் எதை நோக்கி இருக்கிறதோ அந்த பொருளின் (அது, இது, அவன்,அவள்) என்று சுட்டி உணரபடும் ஒன்றின் தன்மையை பொறுத்து எதிர் வினை இருக்கும். நாம் மரணித்தாலும் உயிரோடு இருந்தாலும் அந்த எதிர்வினை இருக்கும்.....!


இந்த இடத்துக்கு கும்மிய கூட்டிட்டு வரவே இவ்ளோ பாடா போச்சே! ரொம்ப நன்றிங்க கும்மி....அடுத்து....உயிரோடு இருக்கும் போது அந்த எதிர்வினை நம்மள பாதிப்பதை உணரலாங்க....மரணித்த பிறகு .... அப்படிப்பட்ட எதிர்வினை யார பாதிக்குமுங்க...இல்லா எதிர் வினை இருக்காதா....இதுக்கும் பதில் சொல்லிட்டீங்கண்ணா...கொஞ்சம் தெளிவா இருக்கும்!
//.உயிரோடு இருக்கும் போது அந்த எதிர்வினை நம்மள பாதிப்பதை உணரலாங்க....மரணித்த பிறகு .... அப்படிப்பட்ட எதிர்வினை யார பாதிக்குமுங்க//

மரணித்தபிறகு 'இரண்டு' பொருள்கள் எங்கே என்று தேடுங்கள். இந்த விதி ஏன் பொருந்தாது என்று நான் கூறியது புரியும்.
உங்கள் தேடல் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

என் சின்ன மூளைக்கு இதெல்லாம் புரியலை
\\ நாம் பண்றதுல்ல பகுதி நமது சந்ததியினரை பாதிக்கும் ஓ.கே...உண்மை இருக்கு! இருந்தாலும் செஞ்சவனுக்கு அப்போ ஒண்ண்ணுமில்லையா\\

நிறைய இருக்கு :))

அது மிக நுணுக்கமான கணக்கீடுகளின் அடிப்படையில் எதிர்வினை/விளைவு வரும். அதை நாமும் அனுபவிக்க வேண்டி வரும். எது எப்போது என்பதுதான் செயல்விளைவுத் தத்துவம்,

அதற்கான காரணங்களே முன்னர் நாம் செய்த/முன்னோர் செய்த வினைகள் அனைத்தும்..

ஆகவே நம் வினை தெளிந்து ஆற்றுவோம். வருங்காலத்தை உருவாக்குவோம்

நன்றி தேவா. அவசியமான பகிர்வுக்கு நன்றி
அறிவு தேடல் தான் இருக்கவேண்டும்
சத்குரு ஜக்கி வாசு தேவ் தான் இப்படி குழப்புவார்
dheva said…
கும்மி ......@ ஒரு பொருளினால் செய்யப்பட்ட செயல் எதை நோக்கி செய்யப்பட்டதோ அந்த பொருளினி விளைவை சந்திக்கும்....அப்படிப்பட்ட சமயத்தில்....ஆதியில் செயல் புரிந்த பொருள் இல்லை என்றால் அந்த விளைவு என்ன ஆகும்...இதுதான் என் தேடலின் சாரம்....!


மீண்டும் அதே கேள்வியை வேறு விதமாக என்னை நோக்கி நீங்கள் கேட்டு தேடச்சொல்லுவது பதிலா இல்லை விதண்டாவாதமா?

இறந்த பின் விளைவு யாரையும் பாதிக்காது நியூட்டன் ஒரு முட்டாள் அதை படித்த நான் ஒரு முட்டாள் என்று சொல்லிவிட்டுப் போங்கள்....!


இல்லை என்றால் தெரியவில்லை என்று விட்டுப் போங்கள்....! உங்கள் குழப்பத்தை ஏன் சமுதாயத்தின் மீது திணிக்கிறீர்கள் ... நியூட்டனின் விதிக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லவதிலேயே....மும்முராமாயிருக்கிறீர்கள்...! இன்ன்னும் சொல்லப் போனால் நியூட்டன் விதியே.... பொய் என்று சொன்னாலும் ஆச்சர்யபடுவதற்கு ஒன்றுமில்லை...!


இறப்புக்கு பின் ஒன்றும் இல்லை என்பது உங்கள் வாதம் எனில் அதை ஒற்றை வரியில் சொல்லுங்கள்...அடுத்த கேள்வியைக் கேட்கிறேன்....!

வாழ்த்துக்கள்!
//இன்ன்னும் சொல்லப் போனால் நியூட்டன் விதியே.... பொய் என்று சொன்னாலும் ஆச்சர்யபடுவதற்கு ஒன்றுமில்லை...!//

சம்பந்தமே இல்லாத இடத்தில் நியூட்டனின் விதியை தொடர்புபடுத்த முனைந்ததால், அந்த விதி பற்றி பேச வந்தேன்.

உங்களுடைய புரிதல் வேறு வகையில் இருந்தால், அதற்கு மேல் பேச ஒன்றும் இல்லை.
dheva said…
ஏதாவது ஒரு பதில் சொல்லக்கூட உங்களின் சிந்தனா சக்தி அனுமதிக்காத போது...வேறு என்ன செய்ய முடியும்!
தேவா கும்மியை கும்மாதீர்கள் :))
உங்களுக்கு பலவிசயங்கள் தெரிந்துள்ளது, அதில் நூலிழை தேடல் உள்ளதாக நினைக்கிறேன்.

கேள்விகளை எனக்கு அனுப்பி வையுங்கள். இது குறித்து சிந்திக்க நானும் ஆர்வமாக இருக்கிறேன்.
arivhedeivam@gmail.com
//ஏதாவது ஒரு பதில் சொல்லக்கூட உங்களின் சிந்தனா சக்தி அனுமதிக்காத போது...வேறு என்ன செய்ய முடியும்! //

உங்களின் புரிதலை வெளிப்படுத்தியதற்கு நன்றி!
Mr. kummi.... நேரடிய ஒரு தெளிவான பதில் சொல்லுங்க... பிளீஸ்
dheva said…
கும்மி....@ கடைசிவரை மனுசன் பதிலே சொல்லாம எஸ்கேப் ஆகிட்டாரே.....!

நன்றி கும்மி!
dheva said…
நிகழ்காலத்தில்......@ ஹா ஹா ஹா! கும்மியும் நம்ம தோழர்தான்.. என்ன கொஞ்சம் பிடிவாதமான கொள்கை பிடிப்புல இருக்கார்!
dheva said…
நன்றி கார்த்திக் (L.K)
dheva said…
சவுந்தர்...@ கும்மி....சொல்லுவாருன்னு இன்னும் நம்புறீங்களா?
விஜய் said…
அண்ணா கும்மிக்கு, தெரியல போல அவர விட்ருங்க அண்ணா
dheva said…
விஜய் @ நான் கும்மிய ஒரு கேள்விதானங்க கேட்டேன்... வேற ஓண்னும் செய்யலயே.....தேடிக்கிட்டு இருக்குற என்ன....எல்லாரும் தேடுவீங்க போல இருக்கே....! ஹா ஹா ஹா!
@அனைத்து நண்பர்கள்.

தேவாவின் தேடலுக்கு விடை சொல்ல நான் இங்கு வரவில்லை. நியூட்டனின் விதி தவறான இடத்தில் பிரயோகிக்கப்பட்டு இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டவே வந்தேன்.

இன்னும் கூட, அந்த விதிதான் மரணத்திற்கு பின்னும் பொருந்தும் என்று கூறினால் :-)
dheva said…
கும்மி....@ இன்னும் கூட நியூட்டன் விதி பொருந்தாதுன்னு சொன்னா....மூணு காலுதான் முயலுக்குன்னு சொல்ற மாதிரி இருக்கு..... சரி அத விடுங்க....


சாதாரணமா.... நாம செத்துப் போனா பிறகு அல்லது ஒட்டு மொத்த உலகமும் அழிஞ்ச பிறகு மீதி என்ன இருக்கும்? ஆரோக்கியமான விவாதம்தான் நண்பரே பயப்படாமல் உங்களின் கருத்துக்களை சொல்லுங்கள்!
//மூணு காலுதான் முயலுக்குன்னு சொல்ற மாதிரி இருக்கு..//

Laws of Motionனை கொண்டு போய் laws of gravitationனில் பொருத்த முடியுமா? Newton's Third Law of Motion குறித்த உரையாடல் போதும் என்று நினைக்கின்றேன்.

//நாம செத்துப் போனா பிறகு அல்லது ஒட்டு மொத்த உலகமும் அழிஞ்ச பிறகு மீதி என்ன இருக்கும்?//

நாம் செத்தபிறகு, புதைத்தால் உடல் மக்கிப்போய் விடும். நீங்கள் மனம் குறித்து பேசுகிறீர்கள் என்றால், இறந்த பிறகு மனம் ஒன்று இருக்காது.

ஒட்டுமொத்த உலகமும் அழிந்த பின்பு என்ன நடக்கும் என்று மதவாதிகள்தான் ஏதேதோ சொல்லிக்கொண்டிருக்கின்றனர்.

அவர்களுக்கு வேண்டுமானால் அவை முக்கியமாய் இருக்கலாம். வாழும் வரை, சக மனிதனுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் வாழ்ந்தால் போதும் என்று நினைக்கின்றேன்.
எல்லாம் அழிந்த பிறகு என்ன இருக்கும் என்று யாருக்கும் தெரியாது நண்பரே! காரணம் யாருமேதான் இருக்க மாட்டார்களே? அப்பறம் எப்படி என்ன இருக்கு என்று சொல்ல முடியும்??
dheva said…
கும்மி @ எல்லம் அழிஞ்ச பின் ஏதோ ஒண்ணு இருக்குனு கூட உங்களின் வறட்டு சித்தாந்தம் சொல்ல விடாம இப்படி உங்கள அடச்சு வச்சு இருக்கு.... அது தான் ரொம்ப கவலையா இருக்கு!

சாதாரணமாக எந்த விசய ஞானமும் தெரியாதவர்கள் கூட சொல்லாக்கூடிய பதிலகளை தெரிஞ்சும் சொல்ல மாட்டேன்றீங்க....!

மதவாதிகள.... நான் எப்பவோ ஓரங்கட்டிடேன் அவங்கள விடுங்க...உங்கள மாதிரி பகுத்தறிவு சிந்தனை உள்ளவர்கள் சொல்லும் கருத்து எல்லோருக்கும் பயன்படும் என்ற மரியாதைதான் உங்களை கேட்கத்தூண்டுகிறது...!

இல்லை பகுத்தறிவாலும் சொல்ல இயலவில்லை என்றால்...உங்களுக்கும் தெரியவில்லை என்று ஒரு முத்திரை குத்திவிட்டு...தேடலை தொடர வேண்டியதுதான்....!
தேவா! அறிவுப்பூர்வமான கேள்விகளை கேளுங்கள்.

சாதாரணமா.... நாம செத்துப் போனா பிறகு அல்லது ஒட்டு மொத்த உலகமும் அழிஞ்ச பிறகு மீதி என்ன இருக்கும்?

இந்த கேள்வியால் யாருக்கு என்ன பயன்? பொழுது போகாத சில பேர் இதற்கு எதாவது சொல்லிக்கொண்டிருப்பார்கள்.நீங்கள் கேட்ட்கும் கேள்விகளினால் யாராவது ஒருவர் பயன் பெறும் அளவுக்கு இருக்கும் வேண்டும் என்பதே இந்த சிறியவனின் ஆசை...
நான் கிடைக்கும் நேரங்களை சில நல்ல செயல்களுக்காக பயன் படுத்துவோம். எதற்கு சொல்கிறேன் என்றால் இப்படி தேவை இல்லாத விவாதத்தினால் சில நல்ல நண்பர்களுக்கு பிரச்சனை வந்து பிரிய நேர்ந்து விடுகின்றது.
இது என் தனிப்பட்ட கருத்து இது உங்களையும் ,உங்கள் நண்பர்களையும் பாதிக்குமாயின் மன்னிக்கவும்...நன்றி..
dheva said…
வீரா.....@ வாழ்க்கை ஒரு அறிவு.....இந்த உலகம் ஒரு அறிவு....இந்த சிந்திக்கும் திறன் கண்டிப்பாய் மிகப்பெரிய புரிதலை நடைமுறை வாழ்க்கைக்கு கொடுக்கும் அதனால்...மனிதன் வாழ்வின் தாத்பரியங்கள் புரிந்து ஒருத்தரை ஒருத்தர் நேசித்து அன்பாக வாழ வேண்டும்....எந்த இடத்தில் அறிவுப்பூர்வம் இல்லை என்று சொல்லுங்கள்...?

வெறுமனே கடவுள் இல்லை அது பற்றி ஒன்றும் பேசமாட்டேன்... கடவுள் இருக்கு என்று சொல்பவர்களை விளாசு விளாசு என்று விளாசுவேன்.... என்பதில் என்ன அறிவு பூர்வம் இருக்கிறது....!

கடவுள் இருக்கிறது என்றால் எங்கே இருக்கிறது என்று காண்பியுங்கள்....என்று ஆணித்தரமாய் கேட்கிறீர்களே.... !

இப்போது நான் கேட்கிறேன்....

எல்லாம் அழிந்த பின் என்ன எஞ்சும் ....? சொல்லுங்கள் பார்க்கலாம்....! ஒன்றுமில்லாத ஒன்று எஞ்சும் என்று கூட உங்களுக்கு பயம்தானே....!
//எல்லம் அழிஞ்ச பின் ஏதோ ஒண்ணு இருக்குனு கூட உங்களின் வறட்டு சித்தாந்தம் சொல்ல விடாம இப்படி உங்கள அடச்சு வச்சு இருக்கு.... அது தான் ரொம்ப கவலையா இருக்கு!
//
எல்லாம் அழிந்தபின்பு Vacuum தானே நண்பரே இருக்கும்.!

மரணத்திற்கு பின்னான நிகழ்வுகளைப் பற்றியோ, உலக அழிவுகளுக்குப் பின்னானவற்றையோப் பற்றி சிந்திப்பதை விடுத்து, வாழும் காலத்தில் சமூகத்திற்கான நமது பங்களிப்பை வழங்க முயல்வோம்.
dheva said…
கும்மி @ vaccum நா... தமிழ்ல சொல்லுங்க கும்மி ....புரியல.....?
வெற்றிடம்
dheva said…
கும்மி....@ ஓ......அப்போன்னா.....அந்த வெற்றிடத்துக்குள்ள....அழிஞ்சு போன எல்லாம் துகள் துகளா இருக்க்கும்ல......?

நன்றி கும்மி கரெக்டா புரியுது.....மேல சொல்லுங்க பாஸ்....ப்ளீஸ்....!
இல்லை நண்பரே துகள்கள் இருந்தால் அது வெற்றிடம் இல்லை.
dheva said…
அப்போ.... இந்த பிரபஞ்சத்துல இருந்த... எல்லா திடப்பொருள்கள் மற்றும் சக்தி எல்லாம் அங்க... இருக்காதா....

" ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது; ஒரு வகை ஆற்றல் வேறு ஒரு ஆற்றலாத்தான் மாறும்" அப்படீன்னு இராபர் ஹூக் என்கிற அறிவியல் அறிஞர் சொன்னாருன்னு சொல்றாங்களே...அது உண்மையா?

உண்மையா இருக்கும் பட்சத்துல நீங்க சொல்ற வெற்றிடம் கான்செப்ட் உதைக்குதே..... பாஸ்..!
திரு. கும்மி விளக்க படம் தேவை....இது பத்தாது
சரியாக சொல்லி இருக்கிறீங்க கும்மி.
இல்லாதை ஒன்றை ஏன் தேடுகிறார்கள்.சில பேர் இல்லதை ஒன்றை தேடுவதிலேயே வாழ்க்கையை தொலைக்கிறார்கள். இருப்பவையை வைத்து சந்தோசப்படட்டும். எல்லாரும் போய் விட்ட பிறகு எதும் மிஞ்சினால் என்ன மிஞ்சாவிட்டால் என்ன?
இது தேவையற்ற விவாதமாகவே எனக்கு தோன்றுகிறது..
dheva said…
வீரா....@ என்ன இல்ல....? நீங்க.. இல்லையா? நான் இல்லையா? பூமி இல்லையா? ஆகாசம் இல்லையா? காற்று இல்லையா? நெருப்பு இல்லையா? பிரபஞ்சமும் பால்வீதிகளும் இல்லையா....

என்ன இல்லைன்னு தெளிவா சொல்லுங்கா..பாஸ்!
//" ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது; ஒரு வகை ஆற்றல் வேறு ஒரு ஆற்றலாத்தான் மாறும்" அப்படீன்னு இராபர் ஹூக் என்கிற அறிவியல் அறிஞர் சொன்னாருன்னு சொல்றாங்களே...அது உண்மையா?//

அந்த விதி Isolated System நிலையில் தானே நண்பரே. Black Holes அவற்றுக்கு உட்பட்டவை இல்லையே
@soundar

எதற்கு விளக்கப்படம் என்று கூறுங்கள் நண்பரே. நியூட்டன் விதிக்கா? வெற்றிடத்துக்கா?
dheva said…
கும்மி....@ சரி....ஆனா....இவ்ளோ சக்தியாஇருக்குற விசயங்கள் எல்லாம்...அந்த வெற்றிடத்தில் தானெ இருக்கும்......?
மரணத்திற்கு பிறகு என்னமோ நட்ந்துட்டு போகுது அதபத்தி எனக்கு எந்த கவலையோ இல்ல சிந்தனையோ கிடையாது. மரணம் கூட ஒரு வினைக்கான எதிர் வினையாக இருக்கலாம்.
@கும்மி நிங்கள் சொலும் விளக்கத்திற்கு தான் விளக்கப்படம் தேவை
VELU.G said…
//
இல்லை என்று சொல்ல முடியாது இருக்கு என்றால் எப்படி இருக்கும் என்று கேட்டதற்கு மனிதன் இறந்தவுடன் ஒன்றுமில்லை என்று அவர் வாதிட்டு எனக்கு புரியாத ஏதேதோ தத்துவ விளக்கங்களை எல்லாம் சொன்னார். கார்ல்மார்க்ஸ், ஏங்கல்ஸ், பிளேட்டோ, சாக்ரடீஸ், ஐன்டீன், நீல்ஸ்போர்.... நாசா, இஸ்ரோ என்று எங்கெங்கோ போனார் ஆனால் நான் கேட்ட கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை.
//

அன்பு நன்பரே, நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் இந்த வாழ்க்கை வேடிக்கை பார்க்க மட்டுமே

நிகழ்வதை புரிந்து கொள்ள முயற்சிக்கும் போதே மட்டுமே குழப்பம் வருகிறது.

பின்னர் மேலே நீங்கள் சொன்னது போல் நிறைய பேர் தோன்றி நிறைய விஷயங்களை சொல்லி மேலும் குழப்பி எதற்கு இத்தனை பிரச்சனை

இருப்பதை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள்

நமக்கு மேலுள்ள சக்தி கடவுளோ, இயற்கையோ ஏதோவொன்று அது மனித சக்தி புரிந்து கொள்ளும் நிலையில் வைக்கப்படவில்லை

அப்படி மனிதனால் புரிந்து கொள்ளமுடியுமெனில் அது கடவுளோ, இயற்கையோ அல்ல அதற்கு ஒரு தியரி வைத்து இது கடவுள் தியரி, இது இயற்கை தியரி என்று நம் எல்லைக்குள் கொண்டு வந்து விடுவோம்
விஜய் said…
அண்ணா ஆரோக்கியமான பகிர்வு, முடிவை எதிர்நோக்கி நிக்கிறோம்...
நம்பிக்கை ஒன்றே வாழ்க்கை. நம்பியவருக்கு. தான் நம்பிய அனைத்தும் நன்மையாகமுடியும்.

வானுக்கு கீழும் பூமிக்குமேலும் இடைப்பட்ட இடத்திலிருக்கும் நமக்கு.நம்மை படைத்த இறைவன்மேலே சந்தேகங்கள் எழுவதும். சாஷ்டாங்கமாய்விழுவதும் நம் நம்பிக்கையில்தானிருக்கு.

நம்க்கறியாமல். நம்மையறிந்த ஓதோ ஒன்று நம்மை இயக்குகிறதென்பது அனைவருக்கும் தெரியும் ஆனாலும் அதை சில மனம் ஏற்றுக்கொள்ளத்தவறும்.

ஆகவே நம் பிறக்கும் முன் எப்படியிருந்தோம் என்பதையும் நாமறியோம் இறந்தபின்பு எப்படியிருப்போம் என்பதையும் நாமறியோம்.

ஒன்றுமட்டும் உறுதி. நம்மையும் மீறிய ஒரு சக்தியிருக்கு என்றநம்பிக்கையோடு நன்மைசெய்தால் நல்லதே நடக்கும்..
நியூட்டனின் மூன்றாவது விதி விளக்க படம்

http://ia301528.us.archive.org/3/items/AP_Physics_C_Lesson_05/Container.html
வெற்றிடம் என்பது நீங்கள் நினைப்பது போலன்று.
dheva said…
கும்மி @ வெற்றிடம் என்பது எப்படிப்பட்டது? நான் எண்ண நினைத்த வெற்றிடம் உங்கள் கற்பனைக்கு வந்ததெப்படி?

நீங்கள் சொல்லும் வெற்றிடத்திற்கு கொஞ்சம் விளக்கெம் கொடுங்களேன்...புண்ணியாமா போகும்!
dheva said…
ஜீவன் பென்னி @ மரணம் எப்படிங்க...எதிர்வினையா இருக்கும்...எல்லாரும்தான் சாவுறாங்க...ஒரே மாதிரி எதிர்வினை எல்லோருக்கும் இருக்க சாத்தியம் இருக்குற மாதிரி தெரியலயே!
dheva said…
அன்புடன் மலிக்கா

//

ஒன்றுமட்டும் உறுதி. நம்மையும் மீறிய ஒரு சக்தியிருக்கு என்றநம்பிக்கையோடு நன்மைசெய்தால் நல்லதே நடக்கும்.. //

ஏதோ ஒரு நெருடலுடன் கூடிய பதிலின் பக்கத்து வீடு வரை வந்துட்டமாதிரி தெரியுது.... நல்லது செஞ்சா.. நல்லது நடக்கும்...கரெட்ங்க....! ஆதாரம் இல்லேன்னாலும் ஒரு லாஜிக் இருகு நீங்க சொல்றதுல!

பின்னூட்டத்திற்கு நன்றி மலிக்கா!
dheva said…
வேலு....


//நமக்கு மேலுள்ள சக்தி கடவுளோ, இயற்கையோ ஏதோவொன்று அது மனித சக்தி புரிந்து கொள்ளும் நிலையில் வைக்கப்படவில்லை

அப்படி மனிதனால் புரிந்து கொள்ளமுடியுமெனில் அது கடவுளோ, இயற்கையோ அல்ல அதற்கு ஒரு தியரி வைத்து இது கடவுள் தியரி, இது இயற்கை தியரி என்று நம் எல்லைக்குள் கொண்டு வந்து விடுவோம் //

மனித மூளையில் ஆராய்ச்சி செய்து விளங்க முடியாதது சில நிகழ்வுகள்...அது நாம் புரிந்து கொள்ளும் அளவிற்கு கப்பாசிட்டர் இல்ல.. என்று சொல்கிறார் வேலு....! அருமை....உண்மை நோக்கிய அடுத்த நகர்வு!


நன்றி வேலு!
dheva said…
சவுந்தர்.....@ அருமை தம்பி...அழகான விளக்கப்படம்...(கும்மி முடிந்தால் பாருங்கள்)
//ஜெயந்தி...@ நீங்க சொல்றது அறிவியல் பூர்வமா உண்மை திடமா இருக்குற உடம்பு அப்படித்தான் ஆகும்.... கரெக்ட்! ஆனா சூட்சுமமா இருக்குற மனசு...? இறப்பதற்கு இரண்டு வருடத்துக்கு முன்னால ஏதேதோ நல்லதோ கெட்டதோ செய்றான் ஒருத்தன்...பணக்காரன வாழணும்னு நினைச்சு போராடி ஆகாமலேயே போய்ச் சேந்துடுறான் இன்னொருத்தன்.....வாழணும்னு ஆசையில சாகுற இன்னொருத்தன்....இவுங்க எல்லாமே மரணித்த பின் ஒண்ணும் இல்லேன்னா....வாழும் போது எப்படி வாழ்ந்தால் என்ன? //

மரணித்தபின் பாவம் செய்தவனுக்கும் புண்ணியம் செய்தவனுக்கும் ஒன்றுமில்லைதான். ஆனால் வாழும்போது நன்மை செய்தால் அதன் எதிர்வினை நமக்கு நன்மை வந்து சேரும். தீமை செய்தால் நமக்கு தீமை வந்து சேரும். அதை அனுபவித்துத்தான் ஆகணும். நாம் வாழும்போது நல்லவர்களாக வாழுகிறோம் என்கிற மனநிறைவு இருக்கிறதே அதுதான் வாழ்க்கை. இறந்தபின் நாம் என்ன ஆனால் என்ன?
dheva said…
ஜெயந்தி....@

//மரணித்தபின் பாவம் செய்தவனுக்கும் புண்ணியம் செய்தவனுக்கும் ஒன்றுமில்லைதான். ஆனால் வாழும்போது நன்மை செய்தால் அதன் எதிர்வினை நமக்கு நன்மை வந்து சேரும். தீமை செய்தால் நமக்கு தீமை வந்து சேரும். அதை அனுபவித்துத்தான் ஆகணும். நாம் வாழும்போது நல்லவர்களாக வாழுகிறோம் என்கிற மனநிறைவு இருக்கிறதே அதுதான் வாழ்க்கை. இறந்தபின் நாம் என்ன ஆனால் என்ன? ///

எது எப்படி இருந்தாலும் வாழும் போது நிறைவா வாழ்ந்திடுவோம்... மத்த விசயம் எல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்...ஏன் இப்பவே போட்டு மண்டைய உடைக்கணும்....! எதார்த்தமான ஒரு ....இயல்பான கருத்து ஜெயந்தி.....கிரேட்...வாழ்த்துக்கள்! என் தேடலை நகர்த்தியிருக்கிருக்கிறீர்கள்! நன்றி!

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த