Skip to main content

இறை....!























ஒரு மெளனத்தின்....உச்சத்தில்
எல்லாம் உடைந்து...
எல்லைகள் கரைந்து...
விடையற்ற கேள்விகளின் மரித்தலில்
ஜனிக்கும் பதில்களில்... நான் இருப்பேன்...!

நகர்ந்து நகர்ந்து...
தூரமாய் இடைவெளி...பெருகும்
பொழுதுகளில்.. நான் மறைந்துவிட்டேன்
என்று எண்ணும் நினைவுகளின்
ஓரத்தில் மறையாமல் மறைந்திருக்கும்
உருவமற்ற எனது இயல்புகள்...!

இழத்தலின் அருகாமையிலிருக்கும்
பெறுதலின் வீச்சுக்களில்...
கரைந்து போன நினைவுகளை
ஒன்று கூட்டி ஆராய்ந்ததின்
எச்சத்தின் எல்லா பக்கத்திலும் நான்..!

இருத்தலும் இல்லாமையும்...
சேர்ந்து ஆடும் நாடகத்தின் உச்சத்தில்
நான் நீ அது இதுவென்று
எதுவுமில்லா உருவத்தில்
எல்லா நினைவுகளும் சங்கமிக்கும்
நிமிடத்தில் தோன்றும் அருவத்தில்
அழிந்து போகும் வஸ்துகளில்
அழியாமல் கரைந்திருப்பேன் நான்!

கட்டிய வேசங்களின்...
அரிதார பூச்சுக்களின் தடிமனுக்குள்...
தவித்து தவித்து என்னின் சுயம் காணும்
முயற்சிகளில் தோற்று தோற்று...
ஜெயிக்கும் ஜென்மாந்திர கனவுகளில்
மீண்டும் மீண்டும் ஜனிப்பித்தலில்
சூன்யத்தை தழுவும் ஆசைகளின்
விளிம்புகளில் ஏகந்த கனவுளில்
ஒளிந்திருப்பேன் நான்..!

உணரமுடியா மர்மங்களின்...
ஆதி முடிச்சிலும்...,
கற்பனைக்குள் எட்டா காரியங்களின்
கருவிலும், விளங்க முடியா விந்தைகளிலும்
பிணைந்திருக்கும் பருமனில்
புகுந்திருப்பது நானின்றி வேறு யார்?
ஒன்றுமில்லா காலத்தில் எல்லாமாய்
விரிந்திருந்து மாயைக்குள் விழுந்து
மாயமாய் மறைந்திருப்பது
எனையன்றி வேறு யார்?

காலச்சக்கரத்தின் சுழற்சி ஓட்டத்தில்
ஒயாமால் ஓடி; ஒடாமல்.... நின்று...
மேல், கீழ், வலம் இடம், எல்லாம் நிறைந்து
நிற்காமல் நடக்கும் சக்தி ஓட்டத்தின்
சூத்திரங்கள் விளங்கும் கணங்களில்
தோன்றாமால் தோன்றுவேன் ... நான்...!

சில பூக்கள் செடியிலேயே இருப்பது நல்லது. விரும்பியவர்கள் தேடி வந்து ரசிப்பார்கள். ரசிக்காவிட்டாலும் செடிக்கோ பூவிற்கோ....இழப்பில்லை.


தேவா. S

Comments

பத்மா said…
quantum mechanics இன் கரு கவிதையாய் ...
அழகாய்
//சில பூக்கள் செடியிலேயே இருப்பது நல்லது. விரும்பியவர்கள் தேடி வந்து ரசிப்பார்கள். ரசிக்காவிட்டாலும் செடிக்கோ பூவிற்கோ....இழப்பில்லை.//


சூப்பர் ...எங்கையோஓஓஓஓஓஓஒ போய்ட்டீங்க பாஸ்.
Mohamed Faaique said…
""சில பூக்கள் செடியிலேயே இருப்பது நல்லது. விரும்பியவர்கள் தேடி வந்து ரசிப்பார்கள். ரசிக்காவிட்டாலும் செடிக்கோ பூவிற்கோ....இழப்பில்லை.""

mm. nallayirukku...
Chitra said…
இழத்தலின் அருகாமையிலிருக்கும்
பெறுதலின் வீச்சுக்களில்...
கரைந்து போன நினைவுகளை
ஒன்று கூட்டி ஆராய்ந்ததின்
எச்சத்தின் எல்லா பக்கத்திலும் நான்..!


.... very true.... அதை யோசித்து பார்ப்பவர்கள் அதிகம் இல்லை.
Chitra said…
சில பூக்கள் செடியிலேயே இருப்பது நல்லது. விரும்பியவர்கள் தேடி வந்து ரசிப்பார்கள். ரசிக்காவிட்டாலும் செடிக்கோ பூவிற்கோ....இழப்பில்லை.

...... Correct!
S Maharajan said…
//இருத்தலும் இல்லாமையும்...
சேர்ந்து ஆடும் நாடகத்தின் உச்சத்தில்
நான் நீ அது இதுவென்று
எதுவுமில்லா உருவத்தில்
எல்லா நினைவுகளும் சங்கமிக்கும்
நிமிடத்தில் தோன்றும் அருவத்தில்
அழிந்து போகும் வஸ்துகளில்
அழியாமல் கரைந்திருப்பேன் நான்!//

அருமை நண்பரே!
dheva said…
பத்மா....@ மூல உண்மையை விளங்கியமைக்கு நன்றி!
Jey said…
ஜெய்லானி said...
//சில பூக்கள் செடியிலேயே இருப்பது நல்லது. விரும்பியவர்கள் தேடி வந்து ரசிப்பார்கள். ரசிக்காவிட்டாலும் செடிக்கோ பூவிற்கோ....இழப்பில்லை.//


சூப்பர் ...எங்கையோஓஓஓஓஓஓஒ போய்ட்டீங்க பாஸ்.///

ரிப்பீட்டோய்ய்ய்ய்ய்( ஜெய்லானிக்கு எனது நன்றிகள்)
Anonymous said…
சில பூக்கள் செடியிலேயே இருப்பது நல்லது. விரும்பியவர்கள் தேடி வந்து ரசிப்பார்கள். ரசிக்காவிட்டாலும் செடிக்கோ பூவிற்கோ....இழப்பில்லை.
migavum sari unglai pola ippidillam ninaichu paarkara vere oruvarai naan paarthatahi ille ..thanks for sharing
சில பூக்கள் செடியிலேயே இருப்பது நல்லது. விரும்பியவர்கள் தேடி வந்து ரசிப்பார்கள். ரசிக்காவிட்டாலும் செடிக்கோ பூவிற்கோ....இழப்பில்லை.///

சில பூக்கள் நமக்கு புடிக்கும் ஆனால் அந்த பூக்களை எடுக்க முடியாது ஒரு சில காரணம் இருக்கும்
//காலச்சக்கரத்தின் சுழற்சி ஓட்டத்தில்
ஒயாமால் ஓடி; ஒடாமல்.... நின்று...
மேல், கீழ், வலம் இடம், எல்லாம் நிறைந்து
நிற்காமல் நடக்கும் சக்தி ஓட்டத்தின்
சூத்திரங்கள் விளங்கும் கணங்களில்
தோன்றாமால் தோன்றுவேன் ... நான்...!//
எல்லாமுமாகிய இறை.
//Jey said...

ஜெய்லானி said...
//சில பூக்கள் செடியிலேயே இருப்பது நல்லது. விரும்பியவர்கள் தேடி வந்து ரசிப்பார்கள். ரசிக்காவிட்டாலும் செடிக்கோ பூவிற்கோ....இழப்பில்லை.//


சூப்பர் ...எங்கையோஓஓஓஓஓஓஒ போய்ட்டீங்க பாஸ்.///

ரிப்பீட்டோய்ய்ய்ய்ய்( ஜெய்லானிக்கு எனது நன்றிகள்) //

மறுபடி ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே
Anonymous said…
//சில பூக்கள் செடியிலேயே இருப்பது நல்லது. விரும்பியவர்கள் தேடி வந்து ரசிப்பார்கள். ரசிக்காவிட்டாலும் செடிக்கோ பூவிற்கோ....இழப்பில்லை.//

Fantastic Anna!
Jey said…
அருண் பிரசாத் said...//

சொந்தமா கமென்ஸ் போடனும்...காபியடிச்சா, அதுக்கு நன்றி சொல்லனும்...மேனர்ஸுனா என்னானு தெரியாதா அருண் உங்களுக்கு..., என்னாதிது சின்னப் பிள்ளைத்தனமாருக்கு ராஸ்கல்..
கடைசி வரிகள் அற்புதம் சார்! வாழ்த்துக்கள்!
சில பூக்கள் செடியிலேயே இருப்பது நல்லது. விரும்பியவர்கள் தேடி வந்து ரசிப்பார்கள். ரசிக்காவிட்டாலும் செடிக்கோ பூவிற்கோ....இழப்பில்லை.

///

அண்ணா சூப்பர் ..
Jey said...

அருண் பிரசாத் said...//

சொந்தமா கமென்ஸ் போடனும்...காபியடிச்சா, அதுக்கு நன்றி சொல்லனும்...மேனர்ஸுனா என்னானு தெரியாதா அருண் உங்களுக்கு..., என்னாதிது சின்னப் பிள்ளைத்தனமாருக்கு ராஸ்கல்..

//

அண்ணே உங்க வருத்தம் எனக்கு புரியுது..நாமளே காப்பியடிசிருகோம்.. நம்மகிட்டயே காப்பியடிச்சா
VELU.G said…
//
உணரமுடியா மர்மங்களின்...
ஆதி முடிச்சிலும்...,
கற்பனைக்குள் எட்டா காரியங்களின்
கருவிலும், விளங்க முடியா விந்தைகளிலும்
பிணைந்திருக்கும் பருமனில்
புகுந்திருப்பது நானின்றி வேறு யார்?
ஒன்றுமில்லா காலத்தில் எல்லாமாய்
விரிந்திருந்து மாயைக்குள் விழுந்து
மாயமாய் மறைந்திருப்பது
எனையன்றி வேறு யார்?
//

அங்கிகெனாதபடி எங்கும் நிறைந்த ஆதி
Unknown said…
நான் இல்லாத இடத்தில் கடவுள் இருப்பார் - சுவாமி ஓம்கார் ..
VELU.G said…
அற்புதமான கவிதை தேவா
//அண்ணே உங்க வருத்தம் எனக்கு புரியுது..நாமளே காப்பியடிசிருகோம்.. நம்மகிட்டயே காப்பியடிச்சா //

த்தோடா...நானே இன்னைக்கு (இன்னைக்கு மட்டும் ) நல்ல புள்ளையா கமெண்ட் போட்டாலும் விட மாட்டேங்கிறாங்கப்பா...கொசு த்தொல்லை தாங்க முடியலடா சாமீஈஈஈஈஈஈஈஈ
உங்கள் எழுத்து லேசில் புரிபட மாட்டெங்குதே! எனக்கு தான் அப்படியா என்று பார்த்தால், மற்ற வாசக நண்பர்களுக்கும் அதே நிலை தான் என்று புரிகிறது!

பெரும்பான்மையினர், நன்றாக புரிந்த அந்த கடைசி இரண்டு வரிகள்

///சில பூக்கள் செடியிலேயே இருப்பது நல்லது. விரும்பியவர்கள் தேடி வந்து ரசிப்பார்கள். ரசிக்காவிட்டாலும் செடிக்கோ பூவிற்கோ....இழப்பில்லை.///

இதை பற்றி மட்டும் தான் பேசி சென்று இருக்கின்றனர். உங்கள் எழுத்தை நாங்கள் புரிந்து கொள்ள என்ன செய்ய வேண்டும்? ஒன்று, நாங்கள் உங்கள் நிலைக்கு மேலே ஏறி வரவேண்டும். இல்லையென்றால், நீங்கள், எங்கள் நிலைக்கு கீழே இறங்கி வரவேண்டும்.

உங்களின் கருத்தை அறிய ஆவல்!
உங்கள் எழுத்து லேசில் புரிபட மாட்டெங்குதே! எனக்கு தான் அப்படியா என்று பார்த்தால், மற்ற வாசக நண்பர்களுக்கும் அதே நிலை தான் என்று புரிகிறது!

பெரும்பான்மையினர், நன்றாக புரிந்த அந்த கடைசி இரண்டு வரிகள்

///சில பூக்கள் செடியிலேயே இருப்பது நல்லது. விரும்பியவர்கள் தேடி வந்து ரசிப்பார்கள். ரசிக்காவிட்டாலும் செடிக்கோ பூவிற்கோ....இழப்பில்லை.///

இதை பற்றி மட்டும் தான் பேசி சென்று இருக்கின்றனர். உங்கள் எழுத்தை நாங்கள் புரிந்து கொள்ள என்ன செய்ய வேண்டும்? ஒன்று, நாங்கள் உங்கள் நிலைக்கு மேலே ஏறி வரவேண்டும். இல்லையென்றால், நீங்கள், எங்கள் நிலைக்கு கீழே இறங்கி வரவேண்டும்.

உங்களின் கருத்தை அறிய ஆவல்
இதற்கு மேல் இறையை எப்படி புரியவைப்பது என் நண்பா? ரசிக்காதவருக்குத்தான் இழப்பு என்ற முத்தாய்ப்பு மிகவும் அருமை!
அருமையான வரிகள் அற்புதமான சிந்தனை, பாராட்டுகள் :-)
Vijay said…
என்ன சொல்றது அண்ணா,

இவ்வளவு அழகா எழுத்துகள ஒண்ணா சேர்த்த முடியுமான்னு கேள்விகளை இட்ட மனதிற்கு, விடையாய் உங்களது எழத்துக்கள் நிஜமாய்.தமிழ் எழுத்துக்கள் ஒன்று தான் அனைவருக்கும், அழகாய் என் தமிழை படிக்கும், பிடிக்கும் விதங்களில் அழகு சேர்ப்பது நம் தமிழ் மட்டுமே என உரக்க கூறுவதில் உங்களது படைப்பிற்கும் பங்கு இருக்கு அண்ணா..

மிக அருமையானா, கட்டிபோட்ட வார்த்தைகள் ...
Anonymous said…
//கரைந்து போன நினைவுகளை
ஒன்று கூட்டி ஆராய்ந்ததின்
எச்சத்தின் எல்லா பக்கத்திலும் நான்//

ஆம் எச்சத்தின் எல்லா பக்கத்திலும் 'அவன்'


Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த