Skip to main content

பொய்மை....!























பார்வைகளின் பரிணாம மாற்றத்தில்
பரிமாறிக் கொண்ட மின்சார
ஒத்தடங்களின் ஓரங்களில்
தேங்கி நின்ற காமம்...
உடைப்பட்ட கணத்தில்
தகிப்புகளுக்கிடையேயான...
முடிவுறா யுத்தங்களின்...
மூர்க்கத்தில்..கொடுத்து எடுத்து
எடுத்து கொடுத்து...
எல்லாம் தொலையும் உச்சத்தில்
கரைந்து போன நிமிடங்களில்
அழுந்தி தள்ளப்பட்ட...
காலமில்லா பெருவெளியில்
மிதந்து..மிதந்து போக்கிடம்
மறைந்து...பொய்மை அழிந்த
திருப்தியின் வேர்களில்
மெளனாமாய் மூழ்கி இருக்கையில்
ஆண் என்ன? பெண் என்ன?

ஜனித்ததெல்லாம் அறிந்த..
சூட்சுமத்தின் சுவடுகள்..
வேண்டுமென்றே ஒளிக்கப்பட்டு
புலன்கள் அறியா கோடுகளில்
பிரிந்து கொண்டு...இடும் சட்டங்களின்
பின்புலத்தில் கேளியாய் ஒளிந்திருக்கின்றன..
பொய்மையின் சித்திரங்கள்...
மெளனமாய் கோடுகளை அழிக்கும்
காமமோ பொழுதுகளை அழித்து விட்டு
பெரும்பாலும் மலர்கிறது...
அர்த்தமற்ற ஜாமங்களில்...!


விளக்கம் வேண்டுமென்று தோணவில்லை....ஒன்று மட்டும் சொல்லத் தோன்றுகிறது. ஆன்மாவில் ஆண் என்றும் பெண் என்றும் தனித் தனி இல்லை.



தேவா. S

Comments

Ramesh said…
அர்த்தம் பொதிந்ததாக இருக்கிறது கவிதை...நீங்கள் சொல்ல வருவது புரிகிறது..ஆனால் உணர்ந்ததில்லை... எனக்கும் திருமணத்திற்கு பின் இப்படி எல்லாம் தோன்றுமோ என்னவோ...அருமையாக எழுதி இருக்கிறீர்கள்...
Unknown said…
சூப்பரா எழுதியிருக்கீங்க தேவா..
dheva said…
ப்ரியமுடன் ரமேஷ்...@ ஈகோ அழியணும்னுதானே ...கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க... இதைத்தான் வைரமுத்து கர்வம் அழிந்ததடினு சொல்லியிருக்காரு.....

ஹா...ஹா...ஹா!
அழகான வரிகள்....
விஜய் said…
அண்ணா., எல்லா தலைப்பு பதிவுகளிலும் கலக்குறீங்க, மெட்ராஸ் பாசைல சொல்லனும்னா " இல்லா தலைப்புளையும் ரவுண்டு கட்டி அடிக்கிறீங்க'
நீங்க சொன்னதை இன்னும் உணரும் தருணம் வரலைங்க அண்ணா...வந்தததுக்கு அப்புறம் சொல்லுறேன் அண்ணா..

//கொடுத்து எடுத்து
எடுத்து கொடுத்து...
எல்லாம் தொலையும் உச்சத்தில்
கரைந்து போன நிமிடங்களில்
அழுந்தி தள்ளப்பட்ட...
காலமில்லா பெருவெளியில்
மிதந்து..மிதந்து போக்கிடம்
மறைந்து...பொய்மை அழிந்த
திருப்தியின் வேர்களில்
மெளனாமாய் மூழ்கி இருக்கையில்
ஆண் என்ன? பெண் என்ன?//

வார்த்தை எல்லாம் எங்க பிடிகிறீங்க அண்ணா. உணர்வுகளின் மெல்லிய சத்தத்தை கூட விடாம பிடிச்சு வந்து கட்டி போடுறீங்க அண்ணா உங்க பதிவுல...உங்கள் பதிவுகளில் சிக்குண்டு கதுருகிறது மெல்லிய உணர்வுகள் பாவமாய் ...
sakthi said…
ஜனித்ததெல்லாம் அறிந்த..
சூட்சுமத்தின் சுவடுகள்..
வேண்டுமென்றே ஒளிக்கப்பட்டு

தேவா வார்த்தை தெரிவு அழகு
வாழ்த்துக்களுடன்
சக்தி
பிரசண்ட் சொல்லிக்கிறேன்..........
dheva said…
ஜீவன் பென்னி..@ நான் என்ன அட்டெண்டன்சா எடுக்குறேன்... ஹலோ படிச்சா கருத்து சொல்லணும்...அட்டெண்டன்ஸ் கொடுக்கறதா இருந்த பக்கத்து தெரு நர்சரிக்கு போகணும்....என்னா வில்லத்தனம்...!
யெஸ் சார்...........
அண்ணா நீங்க எந்த பள்ளியில படிச்சீங்க... எனக்கு அங்கெ ஒரு அட்மிசன் கிடைக்குமான்னு கேட்டு சொல்லுங்க...
//காமமோ பொழுதுகளை அழித்து விட்டு
பெரும்பாலும் மலர்கிறது...
அர்த்தமற்ற ஜாமங்களில்...!//

வரிகளில் உள்ள சத்தியங்கள் ஈர்கிறது! நன்று!
தேவா! உங்கள் பார்வைக்கு மட்டும்!

கட்டுரையை எழுதி அனுப்பி இருக்கின்றேன். படித்து பார்த்து பதில் எழுதுங்கள்!

பதிலுக்காக காத்திருக்கிறேன்

வசந்த்
க ரா said…
ப்ரியமுடன் ரமேஷ்...@ ஈகோ அழியணும்னுதானே ...கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க... இதைத்தான் வைரமுத்து கர்வம் அழிந்ததடினு சொல்லியிருக்காரு....
---
அவ்வளவ்வு சீக்கிரம் அழியற்தா ego.. கஷ்டப்படும்..
மெளனமா போறதுதான் இந்த பதிவுக்கு நான் கொடுக்கற மரியாதை.. ஒன்னும் சொல்ல முடியல என்னால...
Chitra said…
ஈகோ அழியணும்னுதானே ...கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க... இதைத்தான் வைரமுத்து கர்வம் அழிந்ததடினு சொல்லியிருக்காரு.....

......தேவா, ஆழ்ந்த அர்த்தம் உள்ள கவிதைதான்.... நீங்கள் பின்னூட்டத்தில் சொல்லி இருக்கும் வரிகளையும், பதிவில் இணைத்து விடுங்கள்.... இந்த கருத்தும் நல்லா இருக்குதுங்க.
நமக்கு இங்க வேலையே கிடையாது
சாகித்திய அகாடமி பெற்ற எழுத்தாளர்
சா. கந்தசாமி "அம்மாவை தேடி" என்கிற தன் கதை ஒன்றில், வானம் சென்ற எல்லா மனிதர்களும் பாலின வேறுபாடின்றி குழந்தையாய் மாறி தேடிக்கொண்டிருக்கும்- தன் அம்மாவை. அங்கு அந்த ஆன்மாவிற்கு ஆண் பெண் அடையாளங்கள் இருக்காது.

நன்று... தேவா. தொடருங்கள்.

அன்புடன்.,

இரா.சா.
அருமையாய் இருக்கு மகன்ஸ்.
தினமும் ஒரு பதிவு போடறீங்க சரி ...
அதுல முதல்ல வர நாலு கமெண்டுக்கு மட்டும் பதில போட்டா போதுமுன்னு நினைக்கிறீங்களா..????

இல்ல ......!!!!!!!.......????
dheva said…
அன்பின் ஜெய்லானி....

தினமும் எழுதப்படும் பதிவுகளில் மிகைப்பட்டது ஏற்கெனவே எழுதப்பட்டது...எப்போது தோணுகிறதோ அப்போது எல்லாம் கட்டுரைகளை எழுதுவது என் வழக்கம். சில நேரம் 3 நாட்களுக்கு கூட எதுவும் தோணாது......சரி....

மறு மொழி இடுவது பற்றி உங்களிடம் சொல்லத்தேவையில்லை....அமீரக வாழ்க்கையில் அவசரங்களை உங்களுக்கு நான் சொல்ல தேவையில்லை...மேலும் கேள்விகள் இருந்தால் கூடுமானவரை பதிலளிக்கிறேன்...

புரிதலுக்கு நன்றி.
RVS said…
ஆம்.. ஆன்மாவிற்கு ஆணும் இல்லை பெண்ணும் இல்லை அழிவும் இல்லை.. நன்றாக இருக்கிறது தேவா...

அன்புடன் ஆர்.வி.எஸ்.
dheva said…
காமம் ஒளித்தால் காமம் ஒழியுமா....இல்லை திளைத்தால் காமம் ஒழியுமா இல்லை....அழித்தால் காமம் ஒழியுமா...?

காமம் என்றில்லை எந்தவொரு பழக்கமும் நிறைவுற... நிறைவாக மனிதன் இருக்க வேண்டும். காமம்...ஒழிந்த பின்புதான் காதல் பிறக்கிறது. மாறத அன்புகு தேவைகள் இருப்பதில்லை..அது இருத்தலையே சார்ந்திருக்கிறது.

பின்னூட்டமிட்டங்களின் வாயிலாக புரிதல் கொண்ட அனைவருக்கும் நன்றிகள்....!
அன்பின் தேவா

புரிதல் கடினம் - புரிந்தது சில - நல்வாழ்த்துகள் தேவா
நட்புடன் சீனா
அருமையாய் இருக்கு தேவா.
நல்லா அழிஞ்சுச்சு அகந்தை.

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...

பப்பு....!

காலையிலிருந்து பப்புவிற்கு தலை சுற்றியது, வயிறு குலைந்தது, மயக்கம் வந்தது, ஒரு மாதிரி...சுழற்றி, சுழற்றி அடித்தது....என்ன ஆச்சுன்னு கேக்குறீங்களா? மேலே படிங்க....பாஸ்.... பப்புவுக்கு தினம் ஒரு பதிவு எழுதி போஸ்ட் பண்ணனும் அப்படி இப்படி ஏதேதோ எழுதி போஸ்ட் பண்ணி ஓட்டிக்கிட்டிருந்த அவனுக்கு அன்னிக்கு என்ன எழுதறதுன்னு தெரியல.....ஏதாச்சும் எழுதியாகணுமேன்னு ஒரே டென்சன்.. என்னமோ இவன் கூவி உலகம் விடியப் போறாப்புல ஒரு நினைப்பு..... சொக்கா........பதிவு எழுத ஒரு வலி சொல்ல மாட்டியான்னு கத்தாத குறைதான்....! தூங்கி எழுந்த உடனே அடிக்கிற அலாரத்தை ஆஃப் பண்ணும் போதே நினைச்சான்....அலாரம் டைம்பிக்ஸ் பத்தி எழுதலாமா.....காலையில எப்படி தொந்தரவு கொடுக்குதுன்னு.....ம்ம்ம் சரியா அது பத்தி ஒண்ணும் மேட்டர் கிடைக்காததால அத ஸ்கிப் பண்ணிட்டான்... குளிக்க பாத்ரூம் போனான்...பைப்புல தண்ணி வந்த வேகத்துல நினைச்சான்... சரி தண்ணீர் சேமிப்பை பத்தி எழுதலாமான்னு,,ம்ம்ம்ஹீம்...அது பத்தியும் ஒண்ணும் சரியா தோணலை....! சாப்பிடும் போது நினைச்சான்... இட்லிக்கு தொட்டுக்க ஏத்த சட்னின்னு ஒரு சமையல் குறிப்பாச்சும் போடுவமான்னு ... உடனே அவ...