பார்வைகளின் பரிணாம மாற்றத்தில்
பரிமாறிக் கொண்ட மின்சார
ஒத்தடங்களின் ஓரங்களில்
தேங்கி நின்ற காமம்...
உடைப்பட்ட கணத்தில்
தகிப்புகளுக்கிடையேயான...
முடிவுறா யுத்தங்களின்...
மூர்க்கத்தில்..கொடுத்து எடுத்து
எடுத்து கொடுத்து...
எல்லாம் தொலையும் உச்சத்தில்
கரைந்து போன நிமிடங்களில்
அழுந்தி தள்ளப்பட்ட...
காலமில்லா பெருவெளியில்
மிதந்து..மிதந்து போக்கிடம்
மறைந்து...பொய்மை அழிந்த
திருப்தியின் வேர்களில்
மெளனாமாய் மூழ்கி இருக்கையில்
ஆண் என்ன? பெண் என்ன?
ஜனித்ததெல்லாம் அறிந்த..
சூட்சுமத்தின் சுவடுகள்..
வேண்டுமென்றே ஒளிக்கப்பட்டு
புலன்கள் அறியா கோடுகளில்
பிரிந்து கொண்டு...இடும் சட்டங்களின்
பின்புலத்தில் கேளியாய் ஒளிந்திருக்கின்றன..
பொய்மையின் சித்திரங்கள்...
மெளனமாய் கோடுகளை அழிக்கும்
காமமோ பொழுதுகளை அழித்து விட்டு
பெரும்பாலும் மலர்கிறது...
அர்த்தமற்ற ஜாமங்களில்...!
விளக்கம் வேண்டுமென்று தோணவில்லை....ஒன்று மட்டும் சொல்லத் தோன்றுகிறது. ஆன்மாவில் ஆண் என்றும் பெண் என்றும் தனித் தனி இல்லை.
தேவா. S
Comments
ஹா...ஹா...ஹா!
நீங்க சொன்னதை இன்னும் உணரும் தருணம் வரலைங்க அண்ணா...வந்தததுக்கு அப்புறம் சொல்லுறேன் அண்ணா..
//கொடுத்து எடுத்து
எடுத்து கொடுத்து...
எல்லாம் தொலையும் உச்சத்தில்
கரைந்து போன நிமிடங்களில்
அழுந்தி தள்ளப்பட்ட...
காலமில்லா பெருவெளியில்
மிதந்து..மிதந்து போக்கிடம்
மறைந்து...பொய்மை அழிந்த
திருப்தியின் வேர்களில்
மெளனாமாய் மூழ்கி இருக்கையில்
ஆண் என்ன? பெண் என்ன?//
வார்த்தை எல்லாம் எங்க பிடிகிறீங்க அண்ணா. உணர்வுகளின் மெல்லிய சத்தத்தை கூட விடாம பிடிச்சு வந்து கட்டி போடுறீங்க அண்ணா உங்க பதிவுல...உங்கள் பதிவுகளில் சிக்குண்டு கதுருகிறது மெல்லிய உணர்வுகள் பாவமாய் ...
சூட்சுமத்தின் சுவடுகள்..
வேண்டுமென்றே ஒளிக்கப்பட்டு
தேவா வார்த்தை தெரிவு அழகு
வாழ்த்துக்களுடன்
சக்தி
பெரும்பாலும் மலர்கிறது...
அர்த்தமற்ற ஜாமங்களில்...!//
வரிகளில் உள்ள சத்தியங்கள் ஈர்கிறது! நன்று!
கட்டுரையை எழுதி அனுப்பி இருக்கின்றேன். படித்து பார்த்து பதில் எழுதுங்கள்!
பதிலுக்காக காத்திருக்கிறேன்
வசந்த்
---
அவ்வளவ்வு சீக்கிரம் அழியற்தா ego.. கஷ்டப்படும்..
மெளனமா போறதுதான் இந்த பதிவுக்கு நான் கொடுக்கற மரியாதை.. ஒன்னும் சொல்ல முடியல என்னால...
......தேவா, ஆழ்ந்த அர்த்தம் உள்ள கவிதைதான்.... நீங்கள் பின்னூட்டத்தில் சொல்லி இருக்கும் வரிகளையும், பதிவில் இணைத்து விடுங்கள்.... இந்த கருத்தும் நல்லா இருக்குதுங்க.
சா. கந்தசாமி "அம்மாவை தேடி" என்கிற தன் கதை ஒன்றில், வானம் சென்ற எல்லா மனிதர்களும் பாலின வேறுபாடின்றி குழந்தையாய் மாறி தேடிக்கொண்டிருக்கும்- தன் அம்மாவை. அங்கு அந்த ஆன்மாவிற்கு ஆண் பெண் அடையாளங்கள் இருக்காது.
நன்று... தேவா. தொடருங்கள்.
அன்புடன்.,
இரா.சா.
அதுல முதல்ல வர நாலு கமெண்டுக்கு மட்டும் பதில போட்டா போதுமுன்னு நினைக்கிறீங்களா..????
இல்ல ......!!!!!!!.......????
தினமும் எழுதப்படும் பதிவுகளில் மிகைப்பட்டது ஏற்கெனவே எழுதப்பட்டது...எப்போது தோணுகிறதோ அப்போது எல்லாம் கட்டுரைகளை எழுதுவது என் வழக்கம். சில நேரம் 3 நாட்களுக்கு கூட எதுவும் தோணாது......சரி....
மறு மொழி இடுவது பற்றி உங்களிடம் சொல்லத்தேவையில்லை....அமீரக வாழ்க்கையில் அவசரங்களை உங்களுக்கு நான் சொல்ல தேவையில்லை...மேலும் கேள்விகள் இருந்தால் கூடுமானவரை பதிலளிக்கிறேன்...
புரிதலுக்கு நன்றி.
அன்புடன் ஆர்.வி.எஸ்.
காமம் என்றில்லை எந்தவொரு பழக்கமும் நிறைவுற... நிறைவாக மனிதன் இருக்க வேண்டும். காமம்...ஒழிந்த பின்புதான் காதல் பிறக்கிறது. மாறத அன்புகு தேவைகள் இருப்பதில்லை..அது இருத்தலையே சார்ந்திருக்கிறது.
பின்னூட்டமிட்டங்களின் வாயிலாக புரிதல் கொண்ட அனைவருக்கும் நன்றிகள்....!
புரிதல் கடினம் - புரிந்தது சில - நல்வாழ்த்துகள் தேவா
நட்புடன் சீனா