Skip to main content

ஏக்கம்...!



















மாமிசமும் இரத்தமுமில்லா
ஒரு இடம் தேடிய எனது
ஓட்டத்தில் எப்போதும்
தூக்கிச் செல்லும்...
தோல்பை கொடுக்கும்
கனத்தில்...தடைப்பட்டுப்
போகிறது எனது நகர்தல்...!

என்னுள் இருந்து
ஏதேதோ சிந்திக்கும்
குழைவான திடப்பொருள்தான்
நானென்று சொல்லும்
சித்தாந்தங்களை எல்லாம்..
செதுக்கி எறிந்துவிட்டு...
கூடு விட்டு பறக்கத் துடிக்கிறது
என் ஆத்மா...!

எல்லாம் கடந்து.....
எங்கேயோ நான் இருந்து......
காற்றைப் போல பரவி
கட்டில்லாமல் சிதறி
ஓசைகள் தாண்டிய..
சப்த இறக்கங்களில்
நான் சரிந்து கொண்டே போய்....
நிசப்த பள்ளத்தாக்கில்
நிரந்தரமாய் வசிக்கும்....
ஆசையெல்லாம்...பெருமூச்சுகளில்...
வெளிப்படுகிறது எப்போதும்...
ஏக்கங்களின் வெளிப்பாடாய்....!


தேவா. S

Comments

///என்னுள் இருந்து
ஏதேதோ சிந்திக்கும்
குழைவான திடப்பொருள்தான்
நானென்று சொல்லும்
சித்தாந்தங்களை எல்லாம்..
செதுக்கி எறிந்துவிட்டு...
கூடு விட்டு பறக்கத் துடிக்கிறது
என் ஆத்மா...!//

உண்மைதான் நாம் நமது உடலைத்தானே நான் என்று நினைத்துக்கொள்கிறோம் ..!!
யாரவது வாங்களேன் ..!! நான் மட்டும் இங்க இருக்கேன் ..
ஆசைகள் ஏக்கமாக மாறிடுச்சோ!
@தேவா
//நிசப்த பள்ளத்தாக்கில்
நிரந்தரமாய் வசிக்கும்....
ஆசையெல்லாம்...//

அது எல்லாம் வேண்டாம் மாப்ஸ்!! நாம இந்த கும்மி சத்தத்துல வசிப்போம்... :))
Anonymous said…
//கட்டில்லாமல் சிதறி
ஓசைகள் தாண்டிய..
சப்த இறக்கங்களில்
நான் சரிந்து கொண்டே போய்....//
மலைச் சரிவில் குதித்தோடும் அருவியாகிப் போகிறது இவ்வரிகள்.. தூள்!
எங்கேயோ நான் இருந்து......
காற்றைப் போல பரவி
கட்டில்லாமல் சிதறி
ஓசைகள் தாண்டிய..
சப்த இறக்கங்களில்
நான் சரிந்து கொண்டே போய்....
நிசப்த பள்ளத்தாக்கில்
நிரந்தரமாய் வசிக்கும்....
ஆசையெல்லாம்...பெருமூச்சுகளில்...
வெளிப்படுகிறது /////

இப்படி ஒரு ஏக்கமா
கவிதை அருமையாக இருக்கிறது தேவா! நேயர்களின் விருப்பத்தை இப்போ நல்லா புரிஞ்சிக்கிட்டீங்க போல இருக்கே.

கவிதை, அருமை + எளிமை = வளமை.

வாழ்த்துக்களுடன் பாராட்டுக்களும் தேவா. இதேப்போலவே எழுத வேண்டும் என்று எல்லோர் சார்பாகவும் கேட்டுக்கிறேன்.
வினோ said…
அண்ணே கவிதை அருமை.. இதை பற்றி பேசுவோம்
VELU.G said…
நல்ல கவிதை தேவா
vinthaimanithan said…
சாமீஈஈஈய்! நா வரலப்பா இந்த செத்து செத்து வெள்ளாடுற ஆட்டத்துக்கு! எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்
//வாழ்த்துக்களுடன் பாராட்டுக்களும் தேவா. இதேப்போலவே எழுத வேண்டும் என்று எல்லோர் சார்பாகவும் கேட்டுக்கிறேன்//

உங்க ஆசை மண் விளனும்ன்னு எல்லோர் சார்பாக நான் ஆண்டவனிடம் வேண்டி கொள்கிறேன்
@இம்சைஅரசன் பாபு

//உங்க ஆசை மண் விளனும்ன்னு எல்லோர் சார்பாக நான் ஆண்டவனிடம் வேண்டி கொள்கிறேன்//

ஏன்..ஏன்.. ஏன் இந்த கொலை வெறி? அப்புறம் யாருக்குமே புரியாத மாதிரி கவிதை எழுதி அதுக்கு புரியாத மாதிரி ஒரு விளக்கம் எழுதி....

இது தேவையா இம்சை? நீங்களே சொல்லுங்க!
@என்னது நானு யாரா?

இதுவே எனக்கு ஒன்னும் புரியல இதுல இன்னும் புரியாம என்ன எழுதுவதற்கு இருக்கு
@இம்சைஅரசன் பாபு

//இதுவே எனக்கு ஒன்னும் புரியல இதுல இன்னும் புரியாம என்ன எழுதுவதற்கு இருக்கு//

அப்போ எந்த கற்பனையோட தேவாவோட ப்ளாக்கிற்கு வர்றீங்க? இதுக்கு மேல சுலபமா எழுதுவாருன்னு எனக்கு தோனல
@என்னது நானு யாரா?

எதாவது ரஜினி பற்றி எழுதுவார், சிறுகதை எழுதுவார்ன்னு வந்தேன்
இந்த மாதிரி சமஸ்கிரததுல உள்ளத அப்படியே தமிழ் அ எழுதினா யாருக்கு புரியும் .உங்களுக்கு சமஸ்கிருதம் தெரியுமா ?
@இம்சைஅரசன் பாபு:

//இந்த மாதிரி சமஸ்கிரததுல உள்ளத அப்படியே தமிழ் அ எழுதினா யாருக்கு புரியும் .உங்களுக்கு சமஸ்கிருதம் தெரியுமா ?//

தேவாவோட கவிதையை படிச்சிப் புரிஞ்சிக்கிற அளவுக்கு சமஸ்கிருதம் தெரியும்
//தேவாவோட கவிதையை படிச்சிப் புரிஞ்சிக்கிற அளவுக்கு சமஸ்கிருதம் தெரியும் //
அதுதான் நீங்க தேவா பத்தி புகழ்ந்து சொல்லுறீங்க ......
நான் எல்லாம் மக்கு பய புள்ள
உள்ள தமிழ் அ நாலு வட்டி எழுதி பாஸ் akirukkom .இதுல்ல வேற சமஸ்கிருதம் எழுதினா எப்படி புரியும் .........
@இம்சைஅரசன் பாபு:

//நான் எல்லாம் மக்கு பய புள்ள
உள்ள தமிழ் அ நாலு வட்டி எழுதி பாஸ் akirukkom .இதுல்ல வேற சமஸ்கிருதம் எழுதினா எப்படி புரியும்//

அப்போ ஒன்னும் செய்ய முடியாது. பேசாம, அவரு சிறுகதை எழுதும் போது மட்டும் அவரோட ப்ளாக்கை எட்டிப் பாருங்க. வேற என்ன வழி இருக்கு?
//super. Excellent. Wonderful. Dont forget 500USD. haahaaa //
உள்ள தமிழ் அ ஒழுங்கா படிக்க தெரியாது வந்துட்டான்.
பய புள்ள ஹிந்தி எதோ கேட்டிருக்கான் பரு தேவா அண்ணா
//அப்போ ஒன்னும் செய்ய முடியாது. பேசாம, அவரு சிறுகதை எழுதும் போது மட்டும் அவரோட ப்ளாக்கை எட்டிப் பாருங்க. வேற என்ன வழி இருக்கு?//

வேற வழி அவர் சொன்ன மாதிரி குழி விழுந்து போய் சேர வேண்டியது தான்
///நானென்று சொல்லும்
சித்தாந்தங்களை எல்லாம்..
செதுக்கி எறிந்துவிட்டு...
கூடு விட்டு பறக்கத் துடிக்கிறது
என் ஆத்மா...!///

ஹ்ம்ம்ம்.. ரொம்ப அழகா உங்க ஏக்கம் சொல்லிட்டீங்க...!!
நல்லா இருக்கு தேவா.. :-))
//இம்சைஅரசன் பாபு.. said...

//super. Excellent. Wonderful. Dont forget 500USD. haahaaa //
உள்ள தமிழ் அ ஒழுங்கா படிக்க தெரியாது வந்துட்டான்.
பய புள்ள ஹிந்தி எதோ கேட்டிருக்கான் பரு தேவா அண்ணா//
நீயும் டெரரும் ஒரு நாள் தமிழ்ல பதிவு எழுதுங்க பாக்கலாம்.
//தோல்பை கொடுக்கும்
கனத்தில்...தடைப்பட்டுப்
போகிறது எனது நகர்தல்...!//

உங்கள் நகர்தல் தடை பட்டு போகும் அளவுக்கு என்ன கனமான பொருளை உள்ளே வைத்திருந்தீர்கள் அந்த தோல்பையில் .........
பெரிய பாறங்கல்லா தேவா அண்ணா
//ஹ்ம்ம்ம்.. ரொம்ப அழகா உங்க ஏக்கம் சொல்லிட்டீங்க...!!
நல்லா இருக்கு தேவா.. //

இப்படி உசுபேத்தி உசுபேத்தி அவருக்கு கூடிய சீக்கிரம் ஒரு காவி வேஷ்டியும் ,கையில் ஒரு கமண்டலமும் கொடுத்தருவீங்க போல இருக்கு
அட ஏம்பா இப்படி சித்த மருத்துவரை கும்முறிங்க
நீயும் டெரரும் ஒரு நாள் தமிழ்ல பதிவு எழுதுங்க பாக்கலாம்//
அத தானே சொன்னேன் பய புள்ள உனக்கு ஒழுங்கா தமிழ் தெரியாது இதுல வேற ஹிந்தி யான்னு
இந்த கும்மி தொல்லை தாங்கமா தான் இவர் இப்படி கவிதை எழுதினார்
//அட ஏம்பா இப்படி சித்த மருத்துவரை கும்முறிங்க //

அடப்பாவிகளா ஒருத்தரு சித்தர் அப்படி சொல்லுறாரு ,இன்னொருத்தர் சித்த மருத்துவர் அப்படி சொல்லுறாரு என்னனு கேளுங்க தேவா அண்ணா
////இப்படி உசுபேத்தி உசுபேத்தி அவருக்கு கூடிய சீக்கிரம் ஒரு காவி வேஷ்டியும் ,கையில் ஒரு கமண்டலமும் கொடுத்தருவீங்க போல இருக்கு ///

ஹா ஹா ஹா.. எனக்கு அப்படி ஏதும் ஐடியா இல்லங்க..:-)
மாமிசமும் இரத்தமுமில்லா
ஒரு இடம் தேடிய எனது
ஓட்டத்தில் எப்போதும்
தூக்கிச் செல்லும்...
தோல்பை கொடுக்கும்
கனத்தில்...தடைப்பட்டுப்
போகிறது எனது நகர்தல்...!

நல்ல வரிகள்
முதல்ல இப்ப இருக்கறத அனுபவிங்க. அப்பறம் தேடிப்போய் அடையலாம்.
////ஓசைகள் தாண்டிய..
சப்த இறக்கங்களில்
நான் சரிந்து கொண்டே போய் //////


நிசப்த்தம் குடிக்கும் சத்தம் வார்த்தைகளில் !

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த