Skip to main content

காவியம்...!























புழுதி கிளப்பும் புரவிகளின்
குளம்படிச் சப்தங்களின்
பின்னணியில் ஒளிந்திருக்கும்
யுத்தத்தில் லயித்திருக்கும்
மனதில் அவ்வப்போது
வந்து செல்லும் நினைவுகளில்
ஒட்டியிருக்கும் ஒரு புன்னகை
என் உடலின் இரணங்களையும்
கடந்து கிளர்த்தெழச் செய்கிறது
விவரிக்க முடியாத உணர்வுகளை!

தலைகள் உருளும் களத்தில்
கையில் வாளும் நெஞ்சில்
காதலும் கொண்டு முன்னேறிச்
செல்லும் என் புரவியின்
பிடரியில் அடர்ந்திருக்கும்
ரோமங்களின் கலைதலோடு
சேர்ந்தே என் மனசு கலைக்கிறது
உன்னோடு கூடியிருந்த..
போருக்கு முந்தைய அந்த
கெட்டியான இரவு...!

வீசும் வாள்களில் தாழ விழும்
தலைகளில் வெல்லப்போவது
நானென்று அறிந்த வீரம்
என் உயிர் சேமிக்கும்
வேகத்துடன் தீரம் காட்டும்
போர்களின் பிரமாண்ட
வெற்றிகளுக்குப் பின்
சப்தமின்றி ஒளிந்திருக்கிறது...
ஒரு காவியக் காதல்...!


தேவா. S

Comments

ஓஹ இது காவியக் காதலா அப்போ சரி எதனை வருசம்
வினோ said…
அவள் முகம் காணும் நேரம் உணர்வு வெல்லும் பல போர்கள்...

காதல், நிகிழ்வு அண்ணே...
dheva said…
செளந்தர்..@ பிரபஞ்சம் தோன்றியதில் இருந்துப்பா... எப்போ தோன்றியதுன்னு தெரியல.. எப்போ முடியும்னு தெரியல.. போய்ட்டே இருக்கு.....!
//என் உயிர் சேமிக்கும்
வேகத்துடன்
பின்
சப்தமின்றி ஒளிந்திருக்கிறது...
ஒரு காவியக் காதல்...!//

ஒரு வீரனோட காதல ரொம்ப அழகா சொல்லி இருக்கிங்க மாப்ஸ்...
Jey said…
கவிதையின் ஒவ்வொரு வரியும் அருமை....:)
dheva said…
வினோ..@ கவிதையில் மிகப்பெரிய பொருள் இல்லாத மாதிரி தோற்றம் இருந்தாலும்..... மிகைப்பட்ட விசையங்களை இந்த பிரபஞ்சத்தில் இழுத்துப் பிடித்து வைத்து இருப்பது காதலும் காதல் சார் விசயங்களும்தான்....

நம் கவிதையின் நாயகனின் உயிர்பயத்தின் பின்னணியில் தன் காதலியின் நேசமும், காதலும், காமமும் சேர்த்து இழுத்துப்பிடித்து நிற்க.... அதில் இருந்து கிளைக்கிறது வீரம்......அதாவது... வாழ வேண்டும் என்ற ஆசையின் ஆழத்தில் காமமும் காதலும் பிணைந்தே இருக்கிறது.............

உணர்வுகளின் வெளிப்பாட்டை விளங்க.. சுழலுக்குள் நுழைந்தால் சுகமாய் சொல்லும் ஓராயிரம் செய்திகள்...பா....!

நன்றி தம்பி...!
Anonymous said…
செம கவிதை அண்ணா!
//பிடரியில் அடர்ந்திருக்கும்
ரோமங்களின் கலைதலோடு
சேர்ந்தே என் மனசு கலைக்கிறது
உன்னோடு கூடியிருந்த..
போருக்கு முந்தைய அந்த
கெட்டியான இரவு...!//

நிகழ்வில் ஒரு பிளாஷ் பேக் மின்னலென! ம் ம்.. கிளப்புறீங்க! :)
தேவா சார் , முரட்டுத்தனமான காதலரா இருப்பிங்க போல ? நல்லா இருக்கு (டே, மங்கு இவுங்கல்லாம் எப்படித்தான் இப்படி யோசிக்கிறாங்களோ , நமக்குமட்டும் இந்த கவிதை வரவே மாட்டேங்குது )
@மங்குனி
//டே, மங்கு இவுங்கல்லாம் எப்படித்தான் இப்படி யோசிக்கிறாங்களோ , நமக்குமட்டும் இந்த கவிதை வரவே மாட்டேங்குது //

ஆமாம் மங்கு. இது மான பிரச்சனை நம்ம இரண்டு பேரும் கவிதை எழுதி ஒரே நாள்ள பதிவு போடறேம்.
இது...இப்படி எழுதுனா புரியும்... காவியமோ ஓவியமோ... கவிதை சூப்பர்

அதை விட்டுட்டு புரிதல், விவரித்தல்னு குழப்பிகிட்டு....

அண்ணே! டீ இன்னும் வரல... சாரி, போன கவிதைக்கு விளக்கம் இன்னும் வரல
வினோ said…
உண்மை தான் அண்ணே.. காதலே இந்த உலகம்... ஒவ்வொரு அசைவுக்கும் பின்னால் காதல் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது...

வரிகளின் ஆழத்தில் அதன் உணர்வு புரியும்...
மாப்ஸ் உங்க கவிதை இன்னைக்கு First மார்க்ல பாஸ் பண்ணி இருக்கு... பாருங்க எல்லாரும் புரிஞ்சி பாராட்டரோம்.... :)
dheva said…
அதுதான் எனக்கு புரியல டெரரு......

எப்படி குழப்பி எழுதினாலும் காதல்னு வந்தா அருணுக்கும் உனக்கும் நச்சுனு புரிஞ்சுடுது....?

அருணு... @ எப்படி இருந்தாலும் அதுக்கு ஒரு தனி போஸ்ட்டு போடாம விடமாட்டேன்...!
dheva said…
மங்குனி..@ ரொம்ப பீல் பண்ணாத நைனா.. நீ எத்த வேணா எழுது... நம்ம ட்ரூப்போட வர்றோம்...!
TERROR-PANDIYAN(VAS) said...
மாப்ஸ் உங்க கவிதை இன்னைக்கு First மார்க்ல பாஸ் பண்ணி இருக்கு... பாருங்க எல்லாரும் புரிஞ்சி பாராட்டரோம்.... :)////
@@@trorre
உங்களுக்கு என்ன புரிந்தது terror நீங்க விளக்கம் சொல்லுங்க
dheva said…
டெரர்.@ அப்பாடா இவங்க கிட்டா பாஸ் பண்றது.... ராம ராஜன் படத்த சில்வர் ஜுப்ளி ஆக்குற மாதிரி இல்ல இருக்கு.....!
dheva said…
ஜெய்,. @ நீங்களும் முரட்டுத்தனமா காதலரோ?
dheva said…
பாலாஜி சரவணா....@ YES!!!! YES!!! YES!!!
அருண் உங்களுக்கு என்ன புரியுது அதை கொஞ்சம் சொல்லுங்கள்
Chitra said…
இப்பொழுதுதான், தளபதியில் வரும் - "சுந்தரி, கண்ணால் ஒரு செய்தி...." பாடல் பார்த்தேன்... உங்கள் கவிதை வாசிக்கும் போது, அந்த பாடல் மீண்டும் ஒலிக்கிறது..... சூப்பர்!
dheva said…
செளந்தர்....@ இதுல புரிய என்னப்பா இருக்கு..................OH MY GODDDDDDDDDD!
TERROR-PANDIYAN(VAS) said...

@மங்குனி
//டே, மங்கு இவுங்கல்லாம் எப்படித்தான் இப்படி யோசிக்கிறாங்களோ , நமக்குமட்டும் இந்த கவிதை வரவே மாட்டேங்குது //

ஆமாம் மங்கு. இது மான பிரச்சனை நம்ம இரண்டு பேரும் கவிதை எழுதி ஒரே நாள்ள பதிவு போடறேம்.
////

டீல் ஓகே டெர்ரர் , போட்டு பொளந்து கட்டுறோம் , தக்காளி அதுக்கு அப்புறம் இங்க ஒரு பயலும் கவிதை எளுத்தக்கூடாது ,
காதல்... யுத்தம்... கவிதை... சிறப்பு.
dheva said…
சித்ரா............@ ஆமாம் எழுதி முடிச்ச உடனே... எனக்கும் அந்த பாட்டு நினைவுக்கு வந்துச்சு.........

அதே தான்.. அந்த தளபதியோட ஃபீல்னு வச்சுக்கோங்களேன்...ஹா.. ஹா..ஹா..!
dheva said…
மங்குனி..& டெரர்..@ ஏய்யா தீர்மானம் எல்லாம் என் பிளாக்ல தான் எடுப்பீங்களா...ஹா..ஹா..ஹா.?
dheva said…
தமிழ் உதயம்@ கமெண்டே கவிதையா இருக்கு சார்.. !
செளந்தர்,

உனக்கு அம்மா இங்கே வா வா சொன்னாதான் புரியுமோ?
dheva said…
அருணு..@ அம்மா இங்கே வான்னா அந்த ரைம்ஸா...

" அம்மா இங்கே வா... வா.. ஆசை முத்தம் தா தா.... " இதையா சொல்றா?????
Kousalya Raj said…
வீரனின் வீரத்திற்கு அதிக தூண்டுகோலாக காதல் தான் இருக்கிறது என்பது போல் இருக்கிறது கவிதை....!! ஆக்ரோசமான காதல்தான்...கவிதை நல்லா இருக்கிறது...
எப்பாடி இந்த கவிதை எனக்கு புரிஞ்சிடுச்சு ..
ஒருத்தர் போருக்குப் போறார் ,
அதாவது ஒரு வீரர் போருக்குப் போறார் ஆனாலும் அவருக்குள்ளும் காதல் இருக்கு , அந்த காதலை வர்ணிச்சிருக்கார்.. வெல்லப்போவது இவர் தான் அப்படின்னு தெரிகிறது அப்புறம் ரொம்ப ஆக்ரோசமா அடுத்தவன கொல்லுரக்கு போறார் , அவ்வளவு கொடூரமான யுத்த காலத்திலும் ஒரு காதல் இருக்கு அப்படின்னு முடிக்கிறார் ..!!

நீதி : நான் கோனார் தமிழ் உரை எழுதலாம்னு இருக்கேன்
அருண் பிரசாத் said...
செளந்தர்,

உனக்கு அம்மா இங்கே வா வா சொன்னாதான் புரியுமோ////

@@@அருண்
நான் புரியலை சொன்னேன்னா உங்களுக்கு புரிந்தது
@தேவா
அண்ணலும் நோக்கினான்-கருப்பு கண்ணாடி போட்டு
அவளும் நோக்கினாள்-எங்க நோகுறது உங்க கவிதையை படித்து கண்ணு அவிஞ்சு போச்சே
விழிகள் கலந்தன - எதுக்கு கலந்தது? காலம் முழுவதும் அடி வாங்க தான் கலந்தது

என்ப terror அடுத்தது என்னது
terror chat ல தன இருகார் .இருங்க கேட்டுட்டு வரேன்

எங்களுக்கும் கவிதை உரைநடை எல்லாம் எழுத தெரியும்
/வீரனின் வீரத்திற்கு அதிக தூண்டுகோலாக காதல் தான் இருக்கிறது என்பது போல் இருக்கிறது கவிதை...//

ஆமா பின இல்லையாக்கும் .இப்பவே போய் அங்க சண்டை போட்டு வீர தழும்புகள் பட்டு உடம்பு மறுத்து போனால் தானே .வீட்டில் வந்து பூரி கடையல் அடி வாங்கும் பொழுது வலிக்காது
ஆமா நானும் இத படிச்சிட்டேன். மீ தி பர்ஸ்ட்
dheva said...
அருணு..@ அம்மா இங்கே வான்னா அந்த ரைம்ஸா...

" அம்மா இங்கே வா... வா.. ஆசை முத்தம் தா தா.... " இதையா சொல்றா?????////
@@@@அருண்& dheva
என்ன ஒரு சந்தோசம் இவர்களுக்கு குழந்தைகளிடம் அடி வாங்குபவர்களிடம் நாங்க பேசுறது இல்லை
sakthi said…
வித்தியாசமாக உள்ளது பாஸ் இந்த காவியக்காதல்

வாழ்த்துக்கள் மின்னல் வேக பதிவிற்கு
sakthi said…
புழுதி கிளப்பும் புரவிகளின்
குளம்படிச் சப்தங்களின்
பின்னணியில் ஒளிந்திருக்கும்
யுத்தத்தில் லயித்திருக்கும்

எதுகை மோனை!!!
@சௌந்தர்

//உங்களுக்கு என்ன புரிந்தது terror நீங்க விளக்கம் சொல்லுங்க//

சாலைல பயணம் செய்யர குதிரைக்கும் போர்களத்துல இருக்க குதிரை கால் அடி ஓசைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். அந்த சத்தமே சொல்லுதாம் அவர் போர்களத்துல இருக்காரு அப்படினு. மனதை ஒருமுகபடுத்தி சண்டை போடர அந்த நேரத்துலகூட அப்போ அப்போ வந்து போகின்ற அவன் காதலி நினைவு அவர் முகத்துல ஒரு புன்னகை வர வைக்குது. அந்த நினைவுகள் அவர் உடலில் உள்ள காயங்கள்ள இருந்து உண்டாகர வலியை தாண்டு ஒரு விவரிக்க முடியாத உணர்ச்சி உண்டாக்குது.

கையில் வாள் பிடித்து, நெஞ்சில் காதலுடன் தலைகளை வெட்டி சாய்த்து முன்னேறி கொண்டு இருக்கும் தலைவன் மனதை அவன் குதிரை பிடரியில் உள்ள முடி கலைகின்ற மாதிரி போருக்கு முன் நாள் தலைவியுடன் கழித்த இரவின் நினைவுகள் கலைக்கிறது.

அவன் வாள் வீச்சில் சரிந்து விழும் தலைகள் அவன் வென்றுவிடுவான் என்று அவன் வீரத்தை உணர்த்தினாலும் அவன் அநத போர்களத்தில் தன் உயிரை இழந்துவிடாமல் வீரத்துடன் போராடி பெரும் வெற்றிகளுக்கு அவனுடைய் காவிய காதல் ஒரு காரணம்.

(@தேவா... மாப்ஸ் எனக்கு தெரிஞ்சவரை விளக்கி இருக்கேன்.. தவறா இருந்தா திருத்துங்க..)
dheva said…
//கையில் வாள் பிடித்து, நெஞ்சில் காதலுடன் தலைகளை வெட்டி சாய்த்து முன்னேறி கொண்டு இருக்கும் தலைவன் மனதை அவன் குதிரை பிடரியில் உள்ள முடி கலைகின்ற மாதிரி போருக்கு முன் நாள் தலைவியுடன் கழித்த இரவின் நினைவுகள் கலைக்கிறது.//


டெரர்...@

இதில் மட்டும் ஒரு சின்ன திருத்தம் மாப்ஸ்... குதிரையின் பிடறி முறை கலைதலை பார்த்த அவனின் மனது போர்க்களத்தை விட்டு கலைந்து.... அழகான குதிரையின் பிடறிகலைதலில் இருந்த ஒரு கவிதைக்காட்சியை ஒத்த அவன் காதலியுடனான அடர்த்தியான அந்த கூடல் அவன் நினைவுக்கு வருகிறது........!

கலைந்தது போரின் காட்சிகள் நினைவில் வந்தது கூடல்....மாப்ஸ்... !

லவ்லி... மாப்ஸ் உன்னோட புரிதல்!
//@@@அருண்
நான் புரியலை சொன்னேன்னா உங்களுக்கு புரிந்தது //

@ செளந்தர்

ஏதாவது புரியற மாதிரி பேசுப்பா... இன்னும் போன கவிதைலயே இருக்காத இன்னைக்கு கவிதைக்கு வாப்பா....
vinthaimanithan said…
//புழுதி கிளப்பும் புரவிகளின்
குளம்படிச் சப்தங்களின்
பின்னணியில் ஒளிந்திருக்கும்
யுத்தத்தில் லயித்திருக்கும்
மனதில் அவ்வப்போது
வந்து செல்லும் நினைவுகளில்
ஒட்டியிருக்கும் ஒரு புன்னகை
என் உடலின் இரணங்களையும்
கடந்து கிளர்த்தெழச் செய்கிறது
விவரிக்க முடியாத உணர்வுகளை!

தலைகள் உருளும் களத்தில்
கையில் வாளும் நெஞ்சில்
காதலும் கொண்டு முன்னேறிச்
செல்லும் என் புரவியின்
பிடரியில் அடர்ந்திருக்கும்
ரோமங்களின் கலைதலோடு
சேர்ந்தே என் மனசு கலைக்கிறது
உன்னோடு கூடியிருந்த..
போருக்கு முந்தைய அந்த
கெட்டியான இரவு...!

வீசும் வாள்களில் தாழ விழும்
தலைகளில் வெல்லப்போவது
நானென்று அறிந்த வீரம்
என் உயிர் சேமிக்கும்
வேகத்துடன் தீரம் காட்டும்
போர்களின் பிரமாண்ட
வெற்றிகளுக்குப் பின்
சப்தமின்றி ஒளிந்திருக்கிறது...
ஒரு காவியக் காதல்...!//

.... என வழுக்கிக்கொண்டே ஓடும் வரிகளில்
என் காதல் சொல்ல நினைத்தும் தடுக்கிறது
சடங்குகளுள் புதைந்து கிடக்கும் என் சுற்றங்களின்
வீச்சரிவாள்களும் வார்த்தைகளும்... எனினும்
ஓடிக்கொண்டே இருக்கிறேன் வாள்களும், புரவிகளுமற்ற களத்தில்
எதிர்கால இருப்பிற்கும், இன்றைய உணவுக்கும், உன் வரவுக்குமாய்....
யார் அந்த அனார்கலி...!!!!ஹி..ஹி..
dheva said…
விந்தை மனிதன்...@ தம்பி வாழ்க்கைப் போரையும் உவமையாக்கலாம்... நன்றி தம்பி!
dheva said…
ஜெய்லானி..@ யாரு பங்காளி உன்னை வலைச்சர ஆபிஸ்ல இருந்து வெளில விட்டது? ஒரு வாரம் வெளில வரமாட்ட நிம்மதிய இருப்போம்னு பாத்தா..என்னது இது?
S Maharajan said…
//ஒரு புன்னகை
என் உடலின் இரணங்களையும்
கடந்து கிளர்த்தெழச் செய்கிறது
விவரிக்க முடியாத உணர்வுகளை!//

Excellent Deva
callezee said…
வீசும் வாள்களில் தாழ விழும்
தலைகளில் வெல்லப்போவது
நானென்று அறிந்த வீரம்
என் உயிர் சேமிக்கும்
வேகத்துடன் தீரம் காட்டும்
போர்களின் பிரமாண்ட
வெற்றிகளுக்குப் பின்
சப்தமின்றி ஒளிந்திருக்கிறது...
ஒரு காவியக் காதல்...!

powerful lines never beat it..
Unknown said…
கவிதை அற்புதம்..
அருமையான காவியக்காதல்!!
:)
அண்ணா நீங்க சொன்ன மாதிரி terror& அருண் கேள்வி கேட்டுட்டேன் இப்போ போதுமா
ஹேமா said…
ஒரு வீரனின் வெற்றி காதலிலும் தங்கியிருக்கும் என்பார்கள்.கவிதை சொல்கிறது அதை !
//நம் கவிதையின் நாயகனின் உயிர்பயத்தின் பின்னணியில் தன் காதலியின் நேசமும், காதலும், காமமும் சேர்த்து இழுத்துப்பிடித்து நிற்க.... அதில் இருந்து கிளைக்கிறது வீரம்......அதாவது... வாழ வேண்டும் என்ற ஆசையின் ஆழத்தில் காமமும் காதலும் பிணைந்தே இருக்கிறது.............

உணர்வுகளின் வெளிப்பாட்டை விளங்க.. சுழலுக்குள் நுழைந்தால் சுகமாய் சொல்லும் ஓராயிரம் செய்திகள்...பா....!///

உண்மையில்.. இந்த விளக்கம் சூப்பர்.. தேவா.. :-)

உயிர்க் காதலியை பார்க்கும் ஆவலில்....
உயிரைப் பணயம் வைத்து போரில் வாள் வீச்சு...!!

நெஜமா... கண்முன்னே வரைபடம் போல் விரிகின்ற உங்க கவிதை அருமை... :-))
//செளந்தர்..@ பிரபஞ்சம் தோன்றியதில் இருந்துப்பா... எப்போ தோன்றியதுன்னு தெரியல.. எப்போ முடியும்னு தெரியல.. போய்ட்டே இருக்கு.....! //

அப்போ சரி... ரைட்ட்டு.....
நானும் இதே கேள்வி கேக்க இருந்தேன்..
யாரு கேட்டா என்னங்க..?? பதில் கிடைச்சா சரி தானே..!! :-))
ஒரு வீரனோட காதல ரொம்ப அழகா சொல்லி இருக்கிங்க...

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...

பப்பு....!

காலையிலிருந்து பப்புவிற்கு தலை சுற்றியது, வயிறு குலைந்தது, மயக்கம் வந்தது, ஒரு மாதிரி...சுழற்றி, சுழற்றி அடித்தது....என்ன ஆச்சுன்னு கேக்குறீங்களா? மேலே படிங்க....பாஸ்.... பப்புவுக்கு தினம் ஒரு பதிவு எழுதி போஸ்ட் பண்ணனும் அப்படி இப்படி ஏதேதோ எழுதி போஸ்ட் பண்ணி ஓட்டிக்கிட்டிருந்த அவனுக்கு அன்னிக்கு என்ன எழுதறதுன்னு தெரியல.....ஏதாச்சும் எழுதியாகணுமேன்னு ஒரே டென்சன்.. என்னமோ இவன் கூவி உலகம் விடியப் போறாப்புல ஒரு நினைப்பு..... சொக்கா........பதிவு எழுத ஒரு வலி சொல்ல மாட்டியான்னு கத்தாத குறைதான்....! தூங்கி எழுந்த உடனே அடிக்கிற அலாரத்தை ஆஃப் பண்ணும் போதே நினைச்சான்....அலாரம் டைம்பிக்ஸ் பத்தி எழுதலாமா.....காலையில எப்படி தொந்தரவு கொடுக்குதுன்னு.....ம்ம்ம் சரியா அது பத்தி ஒண்ணும் மேட்டர் கிடைக்காததால அத ஸ்கிப் பண்ணிட்டான்... குளிக்க பாத்ரூம் போனான்...பைப்புல தண்ணி வந்த வேகத்துல நினைச்சான்... சரி தண்ணீர் சேமிப்பை பத்தி எழுதலாமான்னு,,ம்ம்ம்ஹீம்...அது பத்தியும் ஒண்ணும் சரியா தோணலை....! சாப்பிடும் போது நினைச்சான்... இட்லிக்கு தொட்டுக்க ஏத்த சட்னின்னு ஒரு சமையல் குறிப்பாச்சும் போடுவமான்னு ... உடனே அவ...