புழுதி கிளப்பும் புரவிகளின்
குளம்படிச் சப்தங்களின்
பின்னணியில் ஒளிந்திருக்கும்
யுத்தத்தில் லயித்திருக்கும்
மனதில் அவ்வப்போது
வந்து செல்லும் நினைவுகளில்
ஒட்டியிருக்கும் ஒரு புன்னகை
என் உடலின் இரணங்களையும்
கடந்து கிளர்த்தெழச் செய்கிறது
விவரிக்க முடியாத உணர்வுகளை!
தலைகள் உருளும் களத்தில்
கையில் வாளும் நெஞ்சில்
காதலும் கொண்டு முன்னேறிச்
செல்லும் என் புரவியின்
பிடரியில் அடர்ந்திருக்கும்
ரோமங்களின் கலைதலோடு
சேர்ந்தே என் மனசு கலைக்கிறது
உன்னோடு கூடியிருந்த..
போருக்கு முந்தைய அந்த
கெட்டியான இரவு...!
வீசும் வாள்களில் தாழ விழும்
தலைகளில் வெல்லப்போவது
நானென்று அறிந்த வீரம்
என் உயிர் சேமிக்கும்
வேகத்துடன் தீரம் காட்டும்
போர்களின் பிரமாண்ட
வெற்றிகளுக்குப் பின்
சப்தமின்றி ஒளிந்திருக்கிறது...
ஒரு காவியக் காதல்...!
தேவா. S
Comments
காதல், நிகிழ்வு அண்ணே...
வேகத்துடன்
பின்
சப்தமின்றி ஒளிந்திருக்கிறது...
ஒரு காவியக் காதல்...!//
ஒரு வீரனோட காதல ரொம்ப அழகா சொல்லி இருக்கிங்க மாப்ஸ்...
நம் கவிதையின் நாயகனின் உயிர்பயத்தின் பின்னணியில் தன் காதலியின் நேசமும், காதலும், காமமும் சேர்த்து இழுத்துப்பிடித்து நிற்க.... அதில் இருந்து கிளைக்கிறது வீரம்......அதாவது... வாழ வேண்டும் என்ற ஆசையின் ஆழத்தில் காமமும் காதலும் பிணைந்தே இருக்கிறது.............
உணர்வுகளின் வெளிப்பாட்டை விளங்க.. சுழலுக்குள் நுழைந்தால் சுகமாய் சொல்லும் ஓராயிரம் செய்திகள்...பா....!
நன்றி தம்பி...!
//பிடரியில் அடர்ந்திருக்கும்
ரோமங்களின் கலைதலோடு
சேர்ந்தே என் மனசு கலைக்கிறது
உன்னோடு கூடியிருந்த..
போருக்கு முந்தைய அந்த
கெட்டியான இரவு...!//
நிகழ்வில் ஒரு பிளாஷ் பேக் மின்னலென! ம் ம்.. கிளப்புறீங்க! :)
//டே, மங்கு இவுங்கல்லாம் எப்படித்தான் இப்படி யோசிக்கிறாங்களோ , நமக்குமட்டும் இந்த கவிதை வரவே மாட்டேங்குது //
ஆமாம் மங்கு. இது மான பிரச்சனை நம்ம இரண்டு பேரும் கவிதை எழுதி ஒரே நாள்ள பதிவு போடறேம்.
அதை விட்டுட்டு புரிதல், விவரித்தல்னு குழப்பிகிட்டு....
அண்ணே! டீ இன்னும் வரல... சாரி, போன கவிதைக்கு விளக்கம் இன்னும் வரல
வரிகளின் ஆழத்தில் அதன் உணர்வு புரியும்...
எப்படி குழப்பி எழுதினாலும் காதல்னு வந்தா அருணுக்கும் உனக்கும் நச்சுனு புரிஞ்சுடுது....?
அருணு... @ எப்படி இருந்தாலும் அதுக்கு ஒரு தனி போஸ்ட்டு போடாம விடமாட்டேன்...!
மாப்ஸ் உங்க கவிதை இன்னைக்கு First மார்க்ல பாஸ் பண்ணி இருக்கு... பாருங்க எல்லாரும் புரிஞ்சி பாராட்டரோம்.... :)////
@@@trorre
உங்களுக்கு என்ன புரிந்தது terror நீங்க விளக்கம் சொல்லுங்க
@மங்குனி
//டே, மங்கு இவுங்கல்லாம் எப்படித்தான் இப்படி யோசிக்கிறாங்களோ , நமக்குமட்டும் இந்த கவிதை வரவே மாட்டேங்குது //
ஆமாம் மங்கு. இது மான பிரச்சனை நம்ம இரண்டு பேரும் கவிதை எழுதி ஒரே நாள்ள பதிவு போடறேம்.
////
டீல் ஓகே டெர்ரர் , போட்டு பொளந்து கட்டுறோம் , தக்காளி அதுக்கு அப்புறம் இங்க ஒரு பயலும் கவிதை எளுத்தக்கூடாது ,
அதே தான்.. அந்த தளபதியோட ஃபீல்னு வச்சுக்கோங்களேன்...ஹா.. ஹா..ஹா..!
உனக்கு அம்மா இங்கே வா வா சொன்னாதான் புரியுமோ?
" அம்மா இங்கே வா... வா.. ஆசை முத்தம் தா தா.... " இதையா சொல்றா?????
ஒருத்தர் போருக்குப் போறார் ,
அதாவது ஒரு வீரர் போருக்குப் போறார் ஆனாலும் அவருக்குள்ளும் காதல் இருக்கு , அந்த காதலை வர்ணிச்சிருக்கார்.. வெல்லப்போவது இவர் தான் அப்படின்னு தெரிகிறது அப்புறம் ரொம்ப ஆக்ரோசமா அடுத்தவன கொல்லுரக்கு போறார் , அவ்வளவு கொடூரமான யுத்த காலத்திலும் ஒரு காதல் இருக்கு அப்படின்னு முடிக்கிறார் ..!!
நீதி : நான் கோனார் தமிழ் உரை எழுதலாம்னு இருக்கேன்
செளந்தர்,
உனக்கு அம்மா இங்கே வா வா சொன்னாதான் புரியுமோ////
@@@அருண்
நான் புரியலை சொன்னேன்னா உங்களுக்கு புரிந்தது
அண்ணலும் நோக்கினான்-கருப்பு கண்ணாடி போட்டு
அவளும் நோக்கினாள்-எங்க நோகுறது உங்க கவிதையை படித்து கண்ணு அவிஞ்சு போச்சே
விழிகள் கலந்தன - எதுக்கு கலந்தது? காலம் முழுவதும் அடி வாங்க தான் கலந்தது
என்ப terror அடுத்தது என்னது
terror chat ல தன இருகார் .இருங்க கேட்டுட்டு வரேன்
எங்களுக்கும் கவிதை உரைநடை எல்லாம் எழுத தெரியும்
ஆமா பின இல்லையாக்கும் .இப்பவே போய் அங்க சண்டை போட்டு வீர தழும்புகள் பட்டு உடம்பு மறுத்து போனால் தானே .வீட்டில் வந்து பூரி கடையல் அடி வாங்கும் பொழுது வலிக்காது
அருணு..@ அம்மா இங்கே வான்னா அந்த ரைம்ஸா...
" அம்மா இங்கே வா... வா.. ஆசை முத்தம் தா தா.... " இதையா சொல்றா?????////
@@@@அருண்& dheva
என்ன ஒரு சந்தோசம் இவர்களுக்கு குழந்தைகளிடம் அடி வாங்குபவர்களிடம் நாங்க பேசுறது இல்லை
வாழ்த்துக்கள் மின்னல் வேக பதிவிற்கு
குளம்படிச் சப்தங்களின்
பின்னணியில் ஒளிந்திருக்கும்
யுத்தத்தில் லயித்திருக்கும்
எதுகை மோனை!!!
//உங்களுக்கு என்ன புரிந்தது terror நீங்க விளக்கம் சொல்லுங்க//
சாலைல பயணம் செய்யர குதிரைக்கும் போர்களத்துல இருக்க குதிரை கால் அடி ஓசைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். அந்த சத்தமே சொல்லுதாம் அவர் போர்களத்துல இருக்காரு அப்படினு. மனதை ஒருமுகபடுத்தி சண்டை போடர அந்த நேரத்துலகூட அப்போ அப்போ வந்து போகின்ற அவன் காதலி நினைவு அவர் முகத்துல ஒரு புன்னகை வர வைக்குது. அந்த நினைவுகள் அவர் உடலில் உள்ள காயங்கள்ள இருந்து உண்டாகர வலியை தாண்டு ஒரு விவரிக்க முடியாத உணர்ச்சி உண்டாக்குது.
கையில் வாள் பிடித்து, நெஞ்சில் காதலுடன் தலைகளை வெட்டி சாய்த்து முன்னேறி கொண்டு இருக்கும் தலைவன் மனதை அவன் குதிரை பிடரியில் உள்ள முடி கலைகின்ற மாதிரி போருக்கு முன் நாள் தலைவியுடன் கழித்த இரவின் நினைவுகள் கலைக்கிறது.
அவன் வாள் வீச்சில் சரிந்து விழும் தலைகள் அவன் வென்றுவிடுவான் என்று அவன் வீரத்தை உணர்த்தினாலும் அவன் அநத போர்களத்தில் தன் உயிரை இழந்துவிடாமல் வீரத்துடன் போராடி பெரும் வெற்றிகளுக்கு அவனுடைய் காவிய காதல் ஒரு காரணம்.
(@தேவா... மாப்ஸ் எனக்கு தெரிஞ்சவரை விளக்கி இருக்கேன்.. தவறா இருந்தா திருத்துங்க..)
டெரர்...@
இதில் மட்டும் ஒரு சின்ன திருத்தம் மாப்ஸ்... குதிரையின் பிடறி முறை கலைதலை பார்த்த அவனின் மனது போர்க்களத்தை விட்டு கலைந்து.... அழகான குதிரையின் பிடறிகலைதலில் இருந்த ஒரு கவிதைக்காட்சியை ஒத்த அவன் காதலியுடனான அடர்த்தியான அந்த கூடல் அவன் நினைவுக்கு வருகிறது........!
கலைந்தது போரின் காட்சிகள் நினைவில் வந்தது கூடல்....மாப்ஸ்... !
லவ்லி... மாப்ஸ் உன்னோட புரிதல்!
நான் புரியலை சொன்னேன்னா உங்களுக்கு புரிந்தது //
@ செளந்தர்
ஏதாவது புரியற மாதிரி பேசுப்பா... இன்னும் போன கவிதைலயே இருக்காத இன்னைக்கு கவிதைக்கு வாப்பா....
குளம்படிச் சப்தங்களின்
பின்னணியில் ஒளிந்திருக்கும்
யுத்தத்தில் லயித்திருக்கும்
மனதில் அவ்வப்போது
வந்து செல்லும் நினைவுகளில்
ஒட்டியிருக்கும் ஒரு புன்னகை
என் உடலின் இரணங்களையும்
கடந்து கிளர்த்தெழச் செய்கிறது
விவரிக்க முடியாத உணர்வுகளை!
தலைகள் உருளும் களத்தில்
கையில் வாளும் நெஞ்சில்
காதலும் கொண்டு முன்னேறிச்
செல்லும் என் புரவியின்
பிடரியில் அடர்ந்திருக்கும்
ரோமங்களின் கலைதலோடு
சேர்ந்தே என் மனசு கலைக்கிறது
உன்னோடு கூடியிருந்த..
போருக்கு முந்தைய அந்த
கெட்டியான இரவு...!
வீசும் வாள்களில் தாழ விழும்
தலைகளில் வெல்லப்போவது
நானென்று அறிந்த வீரம்
என் உயிர் சேமிக்கும்
வேகத்துடன் தீரம் காட்டும்
போர்களின் பிரமாண்ட
வெற்றிகளுக்குப் பின்
சப்தமின்றி ஒளிந்திருக்கிறது...
ஒரு காவியக் காதல்...!//
.... என வழுக்கிக்கொண்டே ஓடும் வரிகளில்
என் காதல் சொல்ல நினைத்தும் தடுக்கிறது
சடங்குகளுள் புதைந்து கிடக்கும் என் சுற்றங்களின்
வீச்சரிவாள்களும் வார்த்தைகளும்... எனினும்
ஓடிக்கொண்டே இருக்கிறேன் வாள்களும், புரவிகளுமற்ற களத்தில்
எதிர்கால இருப்பிற்கும், இன்றைய உணவுக்கும், உன் வரவுக்குமாய்....
என் உடலின் இரணங்களையும்
கடந்து கிளர்த்தெழச் செய்கிறது
விவரிக்க முடியாத உணர்வுகளை!//
Excellent Deva
தலைகளில் வெல்லப்போவது
நானென்று அறிந்த வீரம்
என் உயிர் சேமிக்கும்
வேகத்துடன் தீரம் காட்டும்
போர்களின் பிரமாண்ட
வெற்றிகளுக்குப் பின்
சப்தமின்றி ஒளிந்திருக்கிறது...
ஒரு காவியக் காதல்...!
powerful lines never beat it..
:)
உணர்வுகளின் வெளிப்பாட்டை விளங்க.. சுழலுக்குள் நுழைந்தால் சுகமாய் சொல்லும் ஓராயிரம் செய்திகள்...பா....!///
உண்மையில்.. இந்த விளக்கம் சூப்பர்.. தேவா.. :-)
உயிர்க் காதலியை பார்க்கும் ஆவலில்....
உயிரைப் பணயம் வைத்து போரில் வாள் வீச்சு...!!
நெஜமா... கண்முன்னே வரைபடம் போல் விரிகின்ற உங்க கவிதை அருமை... :-))
அப்போ சரி... ரைட்ட்டு.....
நானும் இதே கேள்வி கேக்க இருந்தேன்..
யாரு கேட்டா என்னங்க..?? பதில் கிடைச்சா சரி தானே..!! :-))