Skip to main content

ஆன்மாவின்....பயணம்! பதிவுத் தொடர் பாகம் III





















PREVIEW





சராசரியான நிகழ்வுகளில் மிக திருப்தியான ஒருவன்....எல்லாவற்றையும் விட்டு விலகி இருக்க ஆசைப்பட்டு... ஒரு பத்து நாட்கள் வீட்டை விட்டு வெளியேற திட்டமிட்டு கடிதம் எழுதிவைத்து விட்டு வெளியேறுகிறான். அதற்கப்புறமான அவனின் மனோநிலை.. உலகம் பற்றிய பார்வை....இவனைப்பற்றிய உலகத்தின் பார்வை...இப்படியாக நகரும்....கதை.....இந்த மூன்றாவது பாகத்திலும் தொடர்கிறது...

திருப்புமுனைகளோடு கூடிய கதை எதிர்ப்பார்த்து படிக்க விரும்புவர்கள்....எனது பதிவுகளை தவிர்த்து விடல் நலம். ஏனென்றால் என் பதிவுகள் முழுக்க முழுக்க என்டர்டெயின்மென்டை நிச்சயமாய் கொடுக்காது.


உங்களின் நேரம் அனுமதிக்கும் பொழுது இதற்கு முன் பாகங்களையும் படித்துக் கொள்ளுங்கள்....!

பாகம் I

பாகம் II


இனி...


உலுக்கி எழுப்பியவர்...யாரென்று திரும்பி பார்த்தேன்...." எங்கேயா போகணும்...? பஸ்ல ஏறினா தூங்கிட வேண்டியது.... டிக்கட் எடுய்யா என்று கேட்டவரை அமைதியாய் பார்த்தேன்...! யோவ் டிக்கட் எடுய்யா உறுமிய கண்டக்டரை உற்று நோக்கினேன்....எங்க போகணும் சொல்லு? அவர் என்னை கேள்வி கேட்டார்.....? எங்க போறீங்க நீங்க.. நான் திருப்பி கேட்டேன்...?

யாருய்யா நீ ? காலங்காத்தால உசுர எடுக்குற....என்னிய பாத்து எங்க போறன்னு கேட்ட மொத ஆளு நீதான்யா..கண்டக்டர் தலையிடித்துக் கொண்டு சிரித்தார்....! இல்லங்க.. பஸ் எங்க போகுது.....? திண்டுக்கல்....போகுது அவர் சொன்னார்.... நானும் திண்டுக்கல் தான் போறேன்....டிக்கட் வாங்கி பாக்கெட்டில் வைத்துக் கொள்ளவும் ஒரு வினோத ஜந்துவைப் போல என்னைப் பார்த்துக்கொண்டு கண்டக்டர் நகரவும் சரியாக இருந்தது.

மீண்டும் ஜன்னல் வழியே பார்வையையை வீசிவிட்டு புறம் அறுக்கத்தொடங்கினேன்....!

என்னுடைய கேள்வி நடத்துனரை நிச்சயாமாய் அதிர்வுறத்தான் செய்திருக்கும்.. எங்கே போக வேண்டும் என்ற இலக்கு இல்லாமல் பயணிக்கும் ஒரு மனிதனிடம் கேட்ட கேள்வி என்பது அவருக்கு தெரியாது.....பேருந்து நகர்ந்து கொண்டிருந்தது..... எங்கே போகிறேன்.. ? தெரியாது...ஆனால் போகிறேன்...

வாழ்வின் எல்லாபக்கங்களையும் தீர்மானித்து தீர்மானித்து அந்த தீர்மானித்தல்களிலும் திட்டங்களிலும் ஒரு அலுப்பு தட்டி போயிருந்தது.. ஆனால் இன்றைய நகர்வில் ஒரு புத்துணர்ச்சி இருந்தது. கிராமாம் கிராமமாக, சிற்றூர் சிற்றூராக பேருந்து நிற்பதும், மனிதர்கள் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தார்கள்.

ஒவ்வொருவரும் ஒரு தேவையின் பொருட்டு பயணிக்கிறார்கள்....இன்னும் சொல்லப்போனால் ஒவ்வொருவரும் ஒரு சூழ்நிலைக்குள் சிறைப்பட்டு இருக்கிறார்கள். மற்ற மனிதர்களை பார்க்கும் போது தமது சூழ்நிலையின் பாதிப்போடுதான் பார்க்கிறார்கள். இப்படிப்பட்ட பார்வையாளாயே.. எதிராளியினை எடைபோடும் அல்லது மனோ நிலையை உணரும் சக்தியை இழக்கிறார்கள்.

எல்லா சூழ்நிலைகளையும் மனதிற்கு அப்பாற்படுத்திவிட்டு மனிதர்களை பார்ப்பது ஒரு வித்தை. அப்படிப்பட்ட பார்வையில் எதிராளியின் உணர்வுகளும், குழப்பங்களும், பயமும் நமக்கு எளிதாக தெரிந்து விடுகின்றன. எல்லா சூழ்நிலையையும் புறம் தள்ளிவிட்டு வந்திருந்த எனக்கு... எந்த கற்பனைகளும், காட்சி சார்ந்த விவரிப்புகளும் இல்லாததனால் என் மனம் வெறுமனே மற்றவர்களை ஆராய்ந்து கொண்டிருந்தது.

மனம் ஒன்று நம்மை பற்றிய சிந்தனைகளை விவரித்துக் கொண்டே இருக்கும்.. அது இல்லையென்றால்.. புறம் நோக்கி பாயும்.. .! மனம் எப்போதும் நிலையானது அல்ல அது இயங்கிக் கொண்டே இருப்பது... இப்பொது வெவ்வேறு மனிதர்களின் மனதுக்குள் புகுந்து ஆராயத்தொடங்கியது....காட்சிகளின் வழியே மனம் எனக்குள் விவரிப்பை நடத்தியது...

வழியில் ஒரு சிற்றூரில் பேருந்து நிறுத்தப்பட்டது... காலை 9 மணி உணவுக்காக....! எல்லோரும் இறங்க.. ஜன்னலின் வழியே வெளியில் தட்டுப்பட்ட ஒரு டீக்கடையை கவனித்தது மனது. ஒர் பெரியவர் நரைத்த முரட்டு மீசை, தோலில் ஒரு துண்டு, சட்டை இல்லாமல் அமர்ந்து பேப்பர் படித்துக்கொண்டிருந்தார். பழுப்பேறியிருந்த வேட்டியும், கலைந்த கேசமும் அலட்சியமான விழிகளும் வாழ்க்கையை படித்து வந்தவன் நான் என்று கட்டியம் கூறின.....

நான் இப்போது இலக்கில்லாமல் பயணிக்கும் தீர்மானத்தோடு வீடு விட்டு எங்கோ போய்க் கொண்டிருக்கிறேன்....ஏதோ ஒரு அனுபவத்திற்காக...! சரி.. ஒரு வேளை நான் அந்த பெரியவராய் இருந்தால் எனது அடுத்த நகர்வு என்ன? எனது சந்தோசம் என்ன? எனது நாளைய விடியலில் நோக்கம் என்ன? எது என்னை சந்தோசப்படுத்தும்?எது என்னை கோபப்படுத்தும்? ஒரு சட்டையை எடுத்து பார்த்து பார்த்து போட்டு ...மடிப்பு கலையாமல் அணிந்து, தலைவாரி அலங்காரமாய்..அடுத்தவர் நம்மை பார்ப்பார்கள் என்று கவனம் கொண்டு செல்லும் உலகத்தின் மத்தியில்....

சட்டையில்லாமல் ஒரு ஒற்றைத்துண்டோடு, கலைந்த கேசத்தோடு,அந்த பேப்பரை வாசிப்பதிலும் சுற்றியிருப்பவர்களிடம் பேசுவதிலும்....கையிலிருக்கும் அந்த டீயை உறிஞ்சி குடிப்பதில் எத்தனை ஒரு சந்தோசம்.... அவருக்கு....! அவருக்கு எது சொல்லியது... அடச்சே.. போங்கப்பா.... நான் எப்படி இருந்தா என்ன..? என்று....

கடந்து வந்த அனுபவமா? இல்லை வாழ்க்கை பற்றிய அலட்சியமா? இல்லை.... வெயிலில் கறுத்த தேகம் தந்த வைராக்கியமா....? டீ குடித்து முடித்து பற்ற வைத்த சுருட்டை.... அனாசயமாய் ஊதிக் கொண்டே... எழுந்து போய்க் கொண்டிருந்தார்....அந்த பெரியவர்...! 60 வதுகளை கடந்திருப்பார்....உறுதியான அவரின் உடல் சொன்னது அவர் கடும் உழைப்பாளி என்று.....

நான் அவராய் இருந்தால்...அடுத்து என்ன செய்வேன்? ஆசைகள் என்ன? என் மனம் அதற்கு மேல் நகர பக்குவப்படவில்லை.....ஆனால் பேருந்து மீண்டும் நகரத்தொடங்கியது.....! மனிதர்கள்.....மனிதர்கள்... மனிதர்கள்... சுற்றிலும்...ஒவ்வொரு ஆசைகள், ஒவ்வொரு பயணங்கள்..... ஓ...... ஆனால் ஒன்று பொதுவானது... ஒவ்வொரு மனிதனும் தனது..... உள் முனைப்பை...தனது ஆத்மாவை சீராட்டிக்கொண்டிருக்கிறான்...!

என்னதான் தியாகியாயிருந்தாலும்... நான், தான் என்பதை எப்போதும் விட்டுக் கொடுக்காது ஆன்மா...எல்லாம் உதறியவர்களுக்கு மட்டும் ஒருவேளை அந்த உள் முனைப்பு இல்லாமல் இருக்கலாம்..ஆனால் பரவலான ஒரு விசயம் தன்னை முன்னிலைப்படுத்தி மனிதன் நகரும் நகர்வு......பேருந்து வேகமாய் சென்று கொண்டிருந்த அதே வேளையில்....

முழுதாய் விழித்திருந்த அவனின் வீடு.... அவனை காணாமல்.. அவன் எழுதிய கடிதத்தைப் படித்து விட்டு அல்லோலகல்லோலப் பட்டுக்கொண்டிருந்தது......


(பயணம் தொடரும்...)


தேவா. S

Comments

எங்க போகணும் சொல்லு? அவர் என்னை கேள்வி கேட்டார்.....? எங்க போறீங்க நீங்க.. நான் திருப்பி கேட்டேன்...?////

அண்ண் எவ்வளவு உஷ்ரா இருக்கார் கண்டக்டர் டிக்கெட் எடுக்கவில்லை தெரிந்து கேட்டு இருக்கார்
Anonymous said…
//ஒவ்வொருவரும் ஒரு தேவையின் பொருட்டு பயணிக்கிறார்கள்....இன்னும்சொல்லப்போனால் ஒவ்வொருவரும் ஒரு சூழ்நிலைக்குள் சிறைப்பட்டுஇருக்கிறார்கள். மற்ற மனிதர்களை பார்க்கும் போது தமது சூழ்நிலையின்பாதிப்போடுதான் பார்க்கிறார்கள். //

போற போக்குல எவ்வளவு பெரிய உண்மைய சொல்லிட்டுப் போறீங்க.. :)

//எல்லா சூழ்நிலைகளையும் மனதிற்கு அப்பாற்படுத்திவிட்டு மனிதர்களை பார்ப்பதுஒரு வித்தை. அப்படிப்பட்ட பார்வையில் எதிராளியின் உணர்வுகளும், குழப்பங்களும்,பயமும் நமக்கு எளிதாக தெரிந்து விடுகின்றன//

அது அவ்வளவு சீக்கிரம் வசப்படுவதில்லையே அண்ணா..
வாழ்க்கைப் பாடத்தை கவனமாகப் படித்தால்தானே அதை அடைய முடியும்?!
//இன்னும் சொல்லப்போனால் ஒவ்வொருவரும் ஒரு சூழ்நிலைக்குள் சிறைப்பட்டு இருக்கிறார்கள். மற்ற மனிதர்களை பார்க்கும் போது தமது சூழ்நிலையின் பாதிப்போடுதான் பார்க்கிறார்கள். இப்படிப்பட்ட பார்வையாளாயே..//

இது முற்றிலும் உண்மை அண்ணா ..!! நம்மல வைத்தேன் பெரும்பாலும் அடுத்தவர்களை எடைபோடுகிறோம் .. காரணம் நம்மைப் போன்றவன் தானே அவனும் என்ற எண்ணம் ..
VELU.G said…
நல்லாயிருக்கு தேவா

பயணம் தொடரட்டும்
// பழுப்பேறியிருந்த வேட்டியும், கலைந்த கேசமும் அலட்சியமான விழிகளும் வாழ்க்கையை படித்து வந்தவன் நான் என்று கட்டியம் கூறின....//

ஆனா அப்படியே அழகா வர்ணிக்குரீங்க .. படிக்க படிக்க நல்லா இருக்கு ..
(அட ச்சே , நானும் நல்லா கமெண்ட் போட்டு பழகிட்டேனே , கோமாளிக்கு இது நல்லது இல்லையே ..!)
//முழுதாய் விழித்திருந்த அவனின் வீடு.... அவனை காணாமல்.. அவன் எழுதிய கடிதத்தைப் படித்து விட்டு அல்லோலகல்லோலப் பட்டுக்கொண்டிருந்தது......//

அடடா , ரொம்ப பீல் பண்ணுற மாதிரி இருக்கே .. சரி அடுத்த பதிவுல பாப்போம் ..
மீண்டும் ஜன்னல் வழியே பார்வையையை வீசிவிட்டு புறம் அறுக்கத்தொடங்கினேன்....!/////

நாங்க எல்லாம் ஜன்னலை முடிவிட்டு தூங்கி விடுவோம்
நீங்க மட்டும் தான் எல்லா விசயங்களையும் வித்தியாசமா யோசிக்கிறிங்க
dheva said…
செளந்தர்... @ அப்படியா தம்பி!!!???
ஆமா அண்ணா நாங்க டீ குடிக்க போன டீ குடித்து விட்டு வந்து விடுவோம் நீங்க அங்க நடக்கும் விசயங்கள் உங்களுக்கு நடந்தால் எப்படி இருக்கும் கற்பனை எல்லாம் செய்து பார்க்குரிங்க
//நீங்க அங்க நடக்கும் விசயங்கள் உங்களுக்கு நடந்தால் எப்படி இருக்கும் கற்பனை எல்லாம் செய்து பார்க்குரிங்க/

@ சௌந்தர்
நானும் யோசிச்சுப் பார்ப்பேன்.. ஆனா எனக்கு அங்க இருக்குற ஈ ஏன் பறக்குது , கொசுவுக்கு ஏன் கொம்பு இருக்குது அப்படின்னுதான் வருது ..?!
அட! அட! ஆன்மீகத் தொடரா! இப்போது தான் 3 பாகத்தையும் படிச்சேன். கதையின் நாயகன், ஒரு தேடுதலோடு ஏதோ ஒரு அனுபவம் பெருவதற்காக பயணப்படுகின்றான்.

ஆனால் அவன் என்ன தேடுவான்? அவனுக்கு வெற்றிக் கிட்டுமா? அவன் தேடுதலின் என்ன கண்டு எடுக்கப் போகிறான்? இந்த கேள்விகளுக்கு எனக்கு பதில் தெரியும் தேவா!

உங்கள் பதில்கள் என்னோடு பதில்களோடு ஒத்துப் போகிறதா என்று பார்க்கப்போகிறேன்.
@தேவா

மாப்ஸ்! இதுக்கு என்ன கமெண்ட் போட?? மூனு பகுதியும் படிச்சிடேன்.. நல்லா இருக்கு. யதார்த்தமா இருக்கு. இத மாதிரி நானும் ஒரு நாள் போய் இருக்கேன். இலக்கில்லாமல் பயணம் செய்யும் பொழுது தினம் நாம் கடந்து போன, கவணிக்க தவறிய பல விஷயங்கள் நமக்கு புது இடத்துல பார்க்கும்பொழுது புதுசா தெரியும். வெட்றிடத்தி காற்று வேகமா பரவுகின்ற மாதிரி பாக்கறா எல்லா விஷயத்தையும் மனசு ரசிக்கும்...
dheva said…
செளந்தர்..@ ஆமாம் தம்பி....எல்லா மனிதர்களுக்கு உள்ளேயும் ஒரு நியாயம் இருக்குதுப்பா...! நாம எல்லோருடைய நியாங்களையும் பார்த்து நடக்க ஆரம்பிச்சுட்டா..குறைந்த பட்சம் புரிதல் இருக்கும் பா...

கூர்ந்து கவனித்து படிச்சு இருக்க கட்டுரையா... தம்பி..... ! நன்றிப்பா!
dheva said…
//வெட்றிடத்தி காற்று வேகமா பரவுகின்ற மாதிரி பாக்கறா எல்லா விஷயத்தையும் மனசு ரசிக்கும்... //

டெரரு....@ மாப்ஸ் நீ எப்படி உன்னை மொக்கைனு சொல்லிகிறா... I think someone under estimated you.......... u have....some kind of....fire maps...(honestly)
@செல்வா
//நானும் யோசிச்சுப் பார்ப்பேன்.. ஆனா எனக்கு அங்க இருக்குற ஈ ஏன் பறக்குது , கொசுவுக்கு ஏன் கொம்பு இருக்குது அப்படின்னுதான் வருது ..?!//

துதூ.... பாருடா இப்பொ கீழ துப்பினேன்.. அடுத்து (உன்கூட சேர்ந்த பாவத்துக்கு) என் மேல நானே துப்பிபேன்.. நீ மட்டும் எப்படிடா இப்படி மொக்கையா யோசிக்கிற??.... :))
dheva said…
என்னது நானு யாரா @ சரிங்க பங்காளி பொறுத்திருந்து பார்ப்போம்...ஆனா நீங்க நினைக்கிற அளவு ஒண்ணும் பெரிசா இருக்காதுங்க..சராசரியான விசயமாதன் இருக்கும்....
dheva said…
//நானும் யோசிச்சுப் பார்ப்பேன்.. ஆனா எனக்கு அங்க இருக்குற ஈ ஏன் பறக்குது , கொசுவுக்கு ஏன் கொம்பு இருக்குது அப்படின்னுதான் வருது ..?! //

You have different software pa..! still that too good instead sitting and not doing anything..!
dheva said…
வேலு...@ நீங்க பூஸ்ட் பண்றீங்க.. நான் எழுதுறேன்.. உங்களுக்கு நன்றி சொல்லணும் வேலு!
dheva said…
பாலாஜி சரவணா....@ தம்பி...........பழக்கத்தின் அடிப்படையில் எல்லாமே எளிமையானதாக மாறூம்...!
@தேவா
//u have....some kind of....fire maps...(honestly)//

மாப்ஸ்!! எப்படி கண்டு பிடிச்ச?? எதிர்காலத்துல தம் அடிக்க ஆரம்பிச்சா உதவும் சொல்லி நேத்து தான் ஒரு புது லைட்டர் வங்கினேன்... கில்லாடி மாப்ஸ் நீ!!

(மாப்ஸ்!! பாருக்கு போனா குடிக்கனும்... பள்ளிகூடம் வந்தா படிக்கனும்... இதான் என் பதிவுலக வாழ்க்கை..)
///You have different software pa..! still that too good instead sitting and not doing anything..!//

ஆனா ஏன் எனக்கு மட்டும் அப்படி மொக்க சாப்ட்டு வேர் போட்டாங்க .. உங்களுக்கு எல்லாம் நல்ல சாப்ட்டுவேர் .. எனக்கு மட்டும் இப்படி ..? சரி விடுங்க ..
dheva said…
//(மாப்ஸ்!! பாருக்கு போனா குடிக்கனும்... பள்ளிகூடம் வந்தா படிக்கனும்... இதான் என் பதிவுலக வாழ்க்கை..) //


டெரரு....@ மாப்ஸ்.. தத்துவத்தை இரண்டே வரில சொல்லிட்ட....!
//ஆமாம் தம்பி....எல்லா மனிதர்களுக்கு உள்ளேயும் ஒரு நியாயம் இருக்குதுப்பா...! நாம எல்லோருடைய நியாங்களையும் பார்த்து நடக்க ஆரம்பிச்சுட்டா..குறைந்த பட்சம் புரிதல் இருக்கும் பா...//

நியாங்கள்,புரிதல் ரெண்டும் நமக்கு வந்துரும் அண்ணா.ஆனால் இந்த உலகம் இப்படியும் சொல்லும்
இளிச்சவாயன் என்றும் சொல்லும் .இதுவும் அனுபவமே .எதை கேட்க்கும் பொழுது நியாயங்களும் வேண்டாம் புரிதலும் வேண்டாம் என்றே தோன்றுகிறது
@terror

//மாப்ஸ்!! பாருக்கு போனா குடிக்கனும்... பள்ளிகூடம் வந்தா படிக்கனும்... இதான் என் பதிவுலக வாழ்க்கை//


பாத்ரூம் போன குளிக்கணும் ...........பல் தேய்ச்சா வாய கழுவனும் ........
கம்பு எடுத்து உன்ன உதைக்கணும்
@இம்சை
//பாத்ரூம் போன குளிக்கணும் //

என்னாது குளிக்கனுமா?? சளி பிடிக்கும்.

//பல் தேய்ச்சா வாய கழுவனும் ..//

பல் தேய்ச்சா பல்ல கழுவு ஏன் வாய கழுவனும்??

//கம்பு எடுத்து உன்ன உதைக்கணும்//

அப்போ கேழ்வரகு எடுத்தா??
@செல்வா
//ஆனா ஏன் எனக்கு மட்டும் அப்படி மொக்க சாப்ட்டு வேர் போட்டாங்க .. உங்களுக்கு எல்லாம் நல்ல சாப்ட்டுவேர் .. எனக்கு மட்டும் இப்படி ..? சரி விடுங்க ..//

செல்வா!! ஒரு விஷயத்த சரியா யோசிக்கிறது நல்ல சாப்ட்வேர், தப்பா யோசிக்கிறது எரர் சாப்ட்வேர், ஒரு புது கோனத்துல பாக்கரது அட்வான்ஸ் சாப்ட்வேர். உன் சாப்ட்டுவேர் அட்வான்ஸ் சாப்ட்டுவேர்... இங்கிலிபிஷ்ல சொன்னா Creative thinking.... :))
Unknown said…
ILAKKILLAMA SUTHURATHE ORU THANI SUGAMNE. NAAN SUTHI IRUKKEN. NINAIKKURA EDATHULA ERANGUVEN NINAICHA BUSLA ERUVEN KIDAIKKURA EDATHULA THUNGINEN. ATHU ORU NALLA ANUBAVAM. IPPUDI PORAPPA KANNULA PADURA ELLAM VISAYAMUM VERA PARVAIYA NAMAKKU KODUKKUM.
வினோ said…
இப்படி தான் அனைவரும் தமக்கு எது வேணுமுன்னு தெரியாமே இலகில்லாமே அலையிறோம்.. ஒன்றை தேடி அங்க போனா, அது இல்லை வேறு ஏதோன்னு திரும்பவும் தேடுகிறோம்.. இதுக்கு முடிவே இல்லை தானே?
ஹேமா said…
ஒவ்வொரு மனிதனும் தனது..... உள் முனைப்பை...தனது ஆத்மாவை சீராட்டிக்கொண்டிருக்கிறான்...!

உங்கள் பயணத்தின் கருவே இதற்குள் அடங்கும் தேவா !
அங்கங்கே நகைச்சுவையும் தெளித்து.. ஆன்மாவின் பயணம் அழகாய் பயணிக்கிறது..
அடுத்த தொடரில் சந்திப்போம் :-)))
தேவா அண்ணா, இது போல நானும் பல முறை உணர்ந்து இருக்கிறேன். பெரும்பாலும் தனியாக பயணம் செய்யும் போது, பார்க்கும் மனிதர்கள், இடம், விலங்குகள் இப்படி பலவற்றை பார்த்து அவர்கள் உணர்வுகள் எப்படி இருக்கும், என்ன பேசு கிறார்கள். நான் அவர்களுள் ஒருவனாக இருந்தால் எப்படி இருக்கும் என.

ஆனால், பயணம் முடிந்ததும் அனைத்தும் மறந்துவிடும் ;)

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த