Skip to main content

நுனி....!



















எல்லாம் ஒழித்து
நான் ஒளிந்து கொள்ள
செய்யும் முயற்சிகள் எல்லாம்
தெளிவாய் காட்டிக்கொடுக்கின்றன...
என் இருப்பின் அடர்த்தியை...!

விரட்டும் வாழ்க்கையில்
மிகைத்திருக்கும் பொய்களின்
ஆட்டங்கள் சொல்லாமல்
சொல்கின்றன...இருத்தலில்
இருக்கும் இல்லாமை நிறங்களை!

ஜனித்த நாளின் பின்னணியில்
எப்போதும் ஒலிக்கும்
என் தாயின் பிரசவ வேதனையில்
அறுக்கப்பட்ட தொப்புள் கொடியோடு
தொலைந்து போன ஆதியின்..
கதகதப்பு சூட்டை தேடி
ஓடும் ஓட்டத்தின் இடையில்
வயதாய் கணக்கு கொள்கிறது காலம்!

இருண்ட அறையில்.....
இருந்த காலங்கள் மீண்டும் மீண்டும்
முட்டி மோத அடிக்கடி அமரும்
தியானங்களில் எப்போதாவது
தொடமுடிகிறது கருவறை வாசத்துக்கு
முன்னான....இருப்பின் நுனியை...!


தேவா. S

Comments

இன்னிக்கு வடை எனக்கே .!!
//கதகதப்பு சூட்டையும் தேடி
ஓடும் ஓட்டத்தின் இடையில்
வயதாய் கணக்கு கொள்கிறது காலம்!//

உண்மைலேயே இந்த வரிகள் கலக்கலா இருக்கு அண்ணா ..!!எனக்கு எப்படி கமெண்ட் போடுறதுன்னு கூட தெரியல ..!!
யாராவது தமிழ்மணம்ல விழுந்த மைனஸ் ஓட்ட எப்படி மாத்துறது அப்படின்னு சொல்லுங்க ., தேவா அண்ணன் போஸ்டுக்கு ஓட்டுப் போடும்போது டேபிள் ஆடினதால மாத்தி விழுந்துடுச்சு ..!
Anonymous said…
//தொடமுடிகிறது கருவறை வாசத்துக்கு
முன்னான....இருப்பின் நுனியை...!//

அண்ணா! கொஞ்சம் விளக்கம் கொடுக்க முடியுமா!
அது "இருப்பின் நுனி"யா இல்ல "இருந்ததின் நுனி"யா?..

என்னோட புரிதல் என்னன்னா, தியானத்துல தன்னையே காண முடியும் அப்படின்னு கேள்விப் பட்டிருக்கேன் நீங்க ஒரு படி மேல போய் கருவறையில் உயிராய் ஜனிக்கும் முன் அரூபமாய் அலையும் ஆத்மாவின் இருப்பை உணர்ந்துட்டீங்க அப்படின்னு..
என்னோட புரிதல் சரியா அண்ணா?
கவிதை நல்லாயிருக்கு.
எனக்கும் இந்த மாதம்தான் பிறந்த நாள். உங்களைவிட 13 வயது பெரியவள் நான்.
ப.செல்வக்குமார் said...
இன்னிக்கு வடை எனக்கே .!////

செல்வா இங்க என்ன இட்லி கடைய வைத்து இருக்காங்க
சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!
@தேவா

//அண்ணா! கொஞ்சம் விளக்கம் கொடுக்க முடியுமா!
அது "இருப்பின் நுனி"யா இல்ல "இருந்ததின் நுனி"யா?..//

தேவா என்ற மானஸ்தனை காணவில்லை.... மாப்ஸ் வாசகர் சந்தேகம் கேக்கறாரு இல்ல... வந்த் விளக்கம் கொடுங்க... இதை மாதிரி யாராவது சிக்கினா விட கூடாது... கப்புனு அமுக்கிடனும்... :)))
//செல்வா இங்க என்ன இட்லி கடைய வைத்து இருக்காங்க//

இட்லி கடை இல்லையா ..? அடடா வடை போச்சா ..?
அப்பாட எனக்கு புரிஞ்சிடுச்சு.

தேவா. S இது உங்க பேருதான. எப்பூடி...
க ரா said…
இருண்ட அறையில்.....
இருந்த காலங்கள் மீண்டும் மீண்டும்
முட்டி மோத அடிக்கடி அமரும்
தியானங்களில் எப்போதாவது
தொடமுடிகிறது கருவறை வாசத்துக்கு
முன்னான....இருப்பின் நுனியை...!

---
முடிந்ததா உங்களால் :)
க ரா said…
யாருண்ணே அது இங்க வந்து மைனஸ் ஒட்டுல்லாம் குத்துறது :)
dheva said…
பாலஜி சரவணா..@ தம்பி...

இருந்தது என்பது மனித உடம்புகளுக்குள் இருந்து சொல்லும் ஒரு மட்டுப்பட்ட நிலை.....


காலமற்ற பெருவெளியில் இறந்த காலம் இல்லை...அது இருப்பு....அங்கே.... அதை உணரும் இடத்தில்....இருந்த என்று வராது.....இருப்பு என்றூதான் வரும்.
dheva said…
செல்வா...@ மைனஸ் ஓட்டா ஆன இப்ப என்னப்பா? ஹா ஹா..ஹா..அது கிடந்துட்டு போது...


பதிவு பற்றிய உன்னோட கருத்துல இருக்க நேர்மை எனக்கு பிடிச்சு இருக்குப்பா...!
dheva said…
சிரிப்பு போலிஸ் தம்பி....@ சீக்கிரமே உன்ன பத்தி ஆர்டிக்கிள் வருதுடி...தம்பி....இரு இரு...

ஆன் த வே ல இருக்கு மேட்டர்....!
dheva said…
அன்பின் ஜெயந்தி அக்கா....@

உங்கள் பிறந்த நாளுக்கும் எனது அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
dheva said…
டெரர்...@ மாப்ஸ்....இதோ வந்துட்டேன் மாப்ஸ்.... நீ சொல்லி நான் என்னிக்கு கேக்காம இருந்திருக்கேன் மாப்பு.!
நுனியை தொட்ட ஞானி ஆயிட்டிங்களா..?
ரெண்டு நாள் கரெக்ட் அ புருயிர மாதிரி எழுதுனீங்க பழைய படி புரியாத மாதிரி எழுத ஆரம்பிச்சா.எந்த மொழில இருந்து transalte பண்ணுனீங்க தேவ அண்ணா .நம்ம டேர்றோர் கேட்ட கேலிக்கு முதல் பதில் போடுங்க .பய புள்ள ரொம்ப கோவமா இருக்கான்
Anonymous said…
விளக்கத்திற்கு ரொம்ப நன்றி அண்ணா :)
//காலமற்ற பெருவெளியில் இறந்த காலம் இல்லை...அது இருப்பு....அங்கே.... அதை உணரும் இடத்தில்....இருந்த என்று வராது.....இருப்பு என்றூதான் வரும். //
அருமை..
Riyas said…
நல்லாயிருக்கு தேவா..

http://riyasdreams.blogspot.com/2010/10/blog-post_08.html
\\இருண்ட அறையில்.....
இருந்த காலங்கள் மீண்டும் மீண்டும்
முட்டி மோத அடிக்கடி அமரும்
தியானங்களில் எப்போதாவது
தொடமுடிகிறது கருவறை வாசத்துக்கு
முன்னான....இருப்பின் நுனியை..\\
ரொம்ப வித்யாசமாய் சிந்திக்கிறீங்க. நல்லாயிருக்கு.
வயதுக் கணக்கும்., இருப்பின் நுனியும் அருமை தேவா
Unknown said…
ஞானி தேவா .....
n.d. shan said…
எல்லாம் ஒழித்து...கெட்ட விசயமா? நல்ல விசயமா? சொல்லு தேவா....
///இருண்ட அறையில்.....
இருந்த காலங்கள் மீண்டும் மீண்டும்
முட்டி மோத அடிக்கடி அமரும்
தியானங்களில் எப்போதாவது
தொடமுடிகிறது கருவறை வாசத்துக்கு
முன்னான....இருப்பின் நுனியை...!///

கவிதையின் ஆழம்....
உங்கள் கருத்தை
எங்களுக்கு அளிக்கும் பாலம்..!!

Very niceely done.. :-))
அட்லீஸ்ட் எப்பவாச்சும் தொட முடியுதேன்னு சந்தோசப் படவேண்டியது தான்..

ஒரு டவுட்..( ஏகாந்த வெளிப் பயணத்தில் இருக்கும் போது..இப்படி பீல் பண்ணிங்களா..?? )
Unknown said…
Nice one in your own style...
Unknown said…
அப்புறம்...சொல்ல மறந்துட்டேன். படம் மிக அருமை.
அருமையான வரிகள் ...

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த