
ஒரு காற்றின் வீச்சில்
கலைத்தலுக்கு
உடன்பட்டு பறக்கிறது
யாரோ இட்ட மாக்கோலம்...!
சருகாய் மாறிய பின்
சலனமின்றி மண்ணை
நோக்கிப் பாய்கிறது
முன்னாள் பசும் இலை!
வேரறுந்த பின்னால்
வெட்கம் ஏதுமின்றி
மண்ணில் சாய்ந்து
மட்கிப் போகிறது
ஒரு விருட்சம்!
இரத்தமும் சதையும்
கொடுக்கும் உன்மத்தத்தில்
ஏதோ ஒரு நினைவோடு
உடல் விட்டுப் போகின்றன
ஐந்தறிவு....உயிர்கள்...!
நிகழ்வுகளின்
தொடர்ச்சியில் அற்றுப்போகும்
இறுதிகளில் எப்போதும்
இருப்பதில்லை கண்ணீரும்
கதறல்களும்..!
வகுக்கப்பட்ட
வரைமுறைகளிலிருந்து
கிளைக்கும் இறுக்கமான
கதறல்களோடு துக்கம்..
என்ற பொய்மையில்
எப்போதும் அறிவிழந்து
நிற்கின்றன ஆறறிவு ஜீவன்கள்...!
தேவா. S
Comments
என்ற பொய்மையில்
எப்போதும் அறிவிழந்து
நிற்கின்றன ஆறறவு ஜீவன்கள்...!//
:)
கொடுக்கும் உம்மத்தத்தில்
ஏதோ ஒரு நினைவோடு
உடல் விட்டுப் போகின்றன
ஐந்தறிவு....உயிர்கள்...!//
அருமை பங்காளி!
தொடர்ச்சியில் அற்றுப்போகும்
இறுதிகளில் எப்போதும்
இருப்பதில்லை கண்ணீரும்
கதறல்களும்..!//
ஆறறிவு இருப்பதால் தானோ என்னவோ இந்த கதறலும் கண்ணீரும்.....!! இந்த பொய்மையில் அறிவிழந்து நின்றாலும் நன்றாக தானே இருக்கிறது....இருந்துவிட்டு தான் போகட்டுமே....
முரண்பட்டாலும் முரண் அருமை....!
பங்காளிக்காக வந்து நின்ன பங்காளி வசந்துக்கும்
ம்ம்ம் கண்ணுல தண்ணி வந்துடுச்சு.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
ஓவரான பில்டப் என்று சொல்லக்கூடிய திங்கிங்கால...ஹா..ஹா..ஹா...!
ஜனித்தலும் மடிதலும்.. இயற்கையின் இயக்கம்....!
சிரிப்பு போலிஸ்..@ என்ன ஸ்கூல நடத்துறேன்.... ஏன்டா தம்பி.. ! நேத்துதான் ஆயுத பூஜை முடிஞ்சு இருக்கு ஆயுதத்த எடுக்க வச்சுறாத...ஹா.. ஹா..ஹா..!
வாக்கியங்களை
வாழ்க்கயாக்கி .......
அருமையான பதிவு
unmai
இருப்பதில்லை கண்ணீரும்
கதறல்களும்..! /
:)
http://denimmohan.blogspot.com/
தொடர்ச்சியில் அற்றுப்போகும்
இறுதிகளில் எப்போதும்
இருப்பதில்லை கண்ணீரும்
கதறல்களும்..!//
சூப்பர் அண்ணா!
இப்போதுதான் முதல் முறையாக உங்கள் வலைப்பக்கம் வருகிறேன். வாழ்த்துக்கள்.!
http://erodethangadurai.blogspot.com/
எப்படிங்க இப்படி தின்க் பண்றீங்கோ...??
இதுவும் மொட்டை மாடி, வெட்ட வெளி உபயமா...?? :-)))
முரண் முற்றிலும் அருமை...!!
கொஞ்சம் புரியல ..!!
இத புரிஞ்சிக்கரக்கு நான் இன்னும் வளரனுமோ ..?!?