Skip to main content

முரண்...!

















ஒரு காற்றின் வீச்சில்
கலைத்தலுக்கு
உடன்பட்டு பறக்கிறது
யாரோ இட்ட மாக்கோலம்...!

சருகாய் மாறிய பின்
சலனமின்றி மண்ணை
நோக்கிப் பாய்கிறது
முன்னாள் பசும் இலை!

வேரறுந்த பின்னால்
வெட்கம் ஏதுமின்றி
மண்ணில் சாய்ந்து
மட்கிப் போகிறது
ஒரு விருட்சம்!

இரத்தமும் சதையும்
கொடுக்கும் உன்மத்தத்தில்
ஏதோ ஒரு நினைவோடு
உடல் விட்டுப் போகின்றன
ஐந்தறிவு....உயிர்கள்...!

நிகழ்வுகளின்
தொடர்ச்சியில் அற்றுப்போகும்
இறுதிகளில் எப்போதும்
இருப்பதில்லை கண்ணீரும்
கதறல்களும்..!

வகுக்கப்பட்ட
வரைமுறைகளிலிருந்து
கிளைக்கும் இறுக்கமான
கதறல்களோடு துக்கம்..
என்ற பொய்மையில்
எப்போதும் அறிவிழந்து
நிற்கின்றன ஆறறிவு ஜீவன்கள்...!


தேவா. S

Comments

அருமை தேவா
vinthaimanithan said…
நெடுநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்திவ் வுலகு
//கதறல்களோடு துக்கம்..
என்ற பொய்மையில்
எப்போதும் அறிவிழந்து
நிற்கின்றன ஆறறவு ஜீவன்கள்...!//

:)
//இரத்தமும் சதையும்
கொடுக்கும் உம்மத்தத்தில்
ஏதோ ஒரு நினைவோடு
உடல் விட்டுப் போகின்றன
ஐந்தறிவு....உயிர்கள்...!//

அருமை பங்காளி!
Kousalya Raj said…
//நிகழ்வுகளின்
தொடர்ச்சியில் அற்றுப்போகும்
இறுதிகளில் எப்போதும்
இருப்பதில்லை கண்ணீரும்
கதறல்களும்..!//

ஆறறிவு இருப்பதால் தானோ என்னவோ இந்த கதறலும் கண்ணீரும்.....!! இந்த பொய்மையில் அறிவிழந்து நின்றாலும் நன்றாக தானே இருக்கிறது....இருந்துவிட்டு தான் போகட்டுமே....

முரண்பட்டாலும் முரண் அருமை....!
dheva said…
பொறுமையா இருக்க என் தம்பி சிரிப்பு போலிசுக்கும்...


பங்காளிக்காக வந்து நின்ன பங்காளி வசந்துக்கும்

ம்ம்ம் கண்ணுல தண்ணி வந்துடுச்சு.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
dheva said…
எல்.கே... @ நன்றி...
dheva said…
கெளசல்யா.. @ மனிதன் முரண்பட்டுப் போனது...

ஓவரான பில்டப் என்று சொல்லக்கூடிய திங்கிங்கால...ஹா..ஹா..ஹா...!

ஜனித்தலும் மடிதலும்.. இயற்கையின் இயக்கம்....!
dheva said…
ஸ்மைலிய கஷ்டப்பட்டு போட்ட மாப்ஸ் டெரர இன்னிக்கு நைட் வெட்றதா முடிவு பண்ணியிருக்கேன்...!
dheva said…
//Present sir //



சிரிப்பு போலிஸ்..@ என்ன ஸ்கூல நடத்துறேன்.... ஏன்டா தம்பி.. ! நேத்துதான் ஆயுத பூஜை முடிஞ்சு இருக்கு ஆயுதத்த எடுக்க வச்சுறாத...ஹா.. ஹா..ஹா..!
வரிகள் பேசுகின்றன
வாக்கியங்களை
வாழ்க்கயாக்கி .......

அருமையான பதிவு
//ஜனித்தலும் மடிதலும்.. இயற்கையின் இயக்கம்....//

unmai
வினோ said…
/ இறுதிகளில் எப்போதும்
இருப்பதில்லை கண்ணீரும்
கதறல்களும்..! /

:)
Unknown said…
நல்ல பதிவு நண்பரே

http://denimmohan.blogspot.com/
Anonymous said…
//நிகழ்வுகளின்
தொடர்ச்சியில் அற்றுப்போகும்
இறுதிகளில் எப்போதும்
இருப்பதில்லை கண்ணீரும்
கதறல்களும்..!//
சூப்பர் அண்ணா!
முரண் பட்டாலும் இயற்கை... இயற்கை... தான்
க ரா said…
அண்ணா நிதர்சனம் :)
கவிதை வரிகள் அருமை ..!
இப்போதுதான் முதல் முறையாக உங்கள் வலைப்பக்கம் வருகிறேன். வாழ்த்துக்கள்.!

http://erodethangadurai.blogspot.com/
நல்ல கவிதை.சற்றே அடர்த்தியாய்.
உங்கள் கவிதைகள் உணர்த்தும் விசயங்கள் பல. சில சமயம் தெளிவாக புரியாவிட்டாலும் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்துவது உண்மை. உங்கள் எழுத்துக்கு என் வணக்கங்கள்.
யாரோ இட்ட மாக்கோலம், முன்னாள் பசும் இல்லை.....

எப்படிங்க இப்படி தின்க் பண்றீங்கோ...??
இதுவும் மொட்டை மாடி, வெட்ட வெளி உபயமா...?? :-)))

முரண் முற்றிலும் அருமை...!!
எனக்கு வழக்கம்போல தான் ..!
கொஞ்சம் புரியல ..!!
இத புரிஞ்சிக்கரக்கு நான் இன்னும் வளரனுமோ ..?!?
ஆமா. மற்ற எந்த உயிருக்கும் இல்லாத உணர்வு நமக்கு மட்டுமே இருக்கா? இல்லை அதுக்கெல்லாம் இருந்து நாம் அறிவதில்லையா?

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த