Pages

Saturday, October 30, 2010

பதிப்பு...!

மறத்தலுக்கு சாத்தியமற்ற
முதலாய் அழுந்தப் பெற்ற
ஈரமேறிய அந்த
முத்த பதிப்பின் கிளர்ச்சி
நிமிடங்களை வடிக்க
ஏதேனும் மொழியிருக்கிறதா?

மெத்தென பற்றி
உயிர் பறித்த அந்த
கலப்பு நிமிடங்களில்
உந்தப் பட்ட காமத்தின்
வெம்மையில் ஜென்மங்களாய்
கற்க மறந்த பாடத்தின்
பக்கங்கள் மீண்டும் திறக்க...
பற்றுதலுக்காய் துவளும்...
கொடி போல.. கிறங்கிக்
கிடந்த நிமிடங்களின்
சாயலில்தான் சொர்க்கம்
என்ற சூத்திரத்தின்
மூலம் பிறந்திருக்குமோ...!

வசீகர பரிமாற்றத்தின்
அழுத்தமான பற்றியிழுப்பு
முன் பின்னாய்...கலைத்துப் போட்ட
அந்த முதல் நாளின்...
தனித்த இரவில்
பிறழ்ந்து போன உறக்கத்தில்
ஏக்கமாய் என்னுள் நிறைந்த
சூட்சும காதல் இட்ட முடிச்சுகள்
கடத்திசெல்கின்றன ..
மீண்டும் மீண்டும்
அந்த முத்த நிமிடங்களுக்கு...!


தேவா. S

20 comments:

THOPPITHOPPI said...

கலப்பு நிமிடங்களில்
உந்தப் பட்ட காமத்தின்
வெம்மையில் ஜென்மங்களாய்.

****************************
அருமையான வரிகள்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//சாயலில்தான் சொர்க்கம்
என்ற சூத்திரத்தின்
மூலம் பிறந்திருக்குமோ.//

nono (a+b)^2=a^2+b^2+2ab

இந்த சூத்திரம்தான். சூத்திரம்னா பார்முலா தான?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//சூட்சும காதல் இட்ட முடிச்சுகள்
கடத்திசெல்கின்றன ..//

கடத்திட்டு போய் எவ்ளோ டிமாண்ட் பண்ணுச்சு

அஹ‌ம‌து இர்ஷாத் said...

Nice Lines..good

வெறும்பய said...

ரொம்ப நல்லாயிருக்கு அண்ணா..

ராஜகோபால் said...

//முன் பின்னாய்...கலைத்துப் போட்ட
அந்த முதல் நாளின்...//


அது என்ன சீட்டு கட்டுங்கலானா...

சௌந்தர் said...

சூட்சும காதல் இட்ட முடிச்சுகள்
கடத்திசெல்கின்றன/////

எதுக்கு கடத்தி சென்றாகள் என்ன வேண்டும் கேக்குறாங்க சிரிப்பு போலீஸ் சீக்கிரம் கண்டு பிடியுங்க

இம்சைஅரசன் பாபு.. said...

ஒருவேளை ரமேஷ் என் பதிவில் போட்ட புஸ்வானம் மாதிரியோ ..............

dheva said...

செளந்தர்..@ தம்பி உன் ஆதங்கம் புரியுது... அதுக்காக போய் சிரிப்பு போலிச போய் கூப்டுறியே....

அவன் தொலஞ்சே ஆறு மாசம் ஆச்சு.. அவனாலயே கண்டுபிடிக்க முடியல எங்க இருக்கான்னு....!

dheva said...

ராஜா கோபால்..@ வாங்க.. வாங்க...வாங்க... ஏற்கனெவே ஆளுக கம்மியா இருக்காங்க.. வந்து சிரிப்பு போலிஸ் கிட்ட அப்ளிகேசன் வாங்கி ஜாயின் பண்ணிக்கோங்க...!

dheva said...

இம்சை....@ அந்த டைம் பாம் என்னாச்சு..?????

Ananthi said...

///மறத்தலுக்கு சாத்தியமற்ற
முதலாய் அழுந்தப் பெற்ற
ஈரமேறிய அந்த
முத்த பதிப்பின் கிளர்ச்சி
நிமிடங்களை வடிக்க
ஏதேனும் மொழியிருக்கிறதா?///

ஹ்ம்ம் கும்ம்... ஏற்கனவே இவரு எழுதுறதுல பாதிக்கு மேல, புரியறதுக்கு அவர் தான் கோனார் உரை அனுப்பனும்... அதுலயும் புரியாம, ஸ்பெஷல் கிளாஸ் போகோணும்......!! :-)))
இதுல வேற மொழி ஏதும் இருக்காவா??? அது சரி...!!! :D :D :D

சரி விடுங்க... மொழி தானே??? இவ்ளோ பழகிட்டு நீங்க கேட்டு சொல்லலன்னா நல்லா இருக்காது...!

ஹ்ம்ம்ம்... அதுல பாருங்க.. தேவா...அது இருக்கு 1008 மொழி... (நம்ம நாட்டுல மொழிக்கா பஞ்சம்?? )
ஆனா.. உங்களுக்கு எது, வசதின்னு தான் இப்ப பாக்கணும்...
சரி ரைட்ட்டு... ஒண்ணு பண்ணுங்க.. முதல்ல டெஸ்டிங் உங்க தாய் மொழியாம் தமிழில்....
பின்னே குறைச்சு மலையாளத்துல..... பிர் ஹிந்தி மேங்.... தர்வாதா தெலுகுலோ..... இதுல எது வசதி???? :-)))))

மேல கமெண்ட் போட்டது நா இல்லிங்கோ.......!!! :-)))
அப்போ நா வர்ர்ட்டாங்க ....!! :D

(பி.கு.: தேவா.. படம் வரலங்க..... நைஸ் சாங்....)

சே.குமார் said...

ரொம்ப நல்லாயிருக்கு அண்ணா.

அன்பரசன் said...

//சூட்சும காதல் இட்ட முடிச்சுகள்
கடத்திசெல்கின்றன ..
மீண்டும் மீண்டும்
அந்த முத்த நிமிடங்களுக்கு...!//

நல்ல வரிங்க.

Chitra said...

ரொம்ப அருமையாய் எழுதி இருக்கீங்க, தேவா!

கே.ஆர்.பி.செந்தில் said...

வெகு நேரம் உங்கள் கவிதையில் நிறைக்கிறது மனது ..

அற்புதம் தேவா.. பாராட்டுக்கள் ...

ஜோதிஜி said...

கவிதையைப் போலவே ஒலிக்கும் பாடலும் ரொம்பவே ரசித்தேன்.

Ananthi said...

தேவா... உங்கள் கவிதையும், படமும், பாடலும்....அருமை..!!

ரோஸ்விக் said...

சின்னப்புள்ளைங்க உலவுகிற இடமாத் தெரியிது. கெடுத்துடாதீங்க தேவா! :-))

ப.செல்வக்குமார் said...

எனக்கு எதுக்கு இந்த வீண் முயற்சி எல்லாம் ..
இரண்டு தடவ படிச்சேன் .. ஆனா கொஞ்சம் புரியாம இருக்கு ..
அதனால கிளம்புறேன் ..இதெல்லாம் புரியரக்கு நான் இன்னும் வளரணும்னு நினைக்கிறேன் ..