Skip to main content

அதுவா....?
























ஒரு முறை என்னைப் பார்
என்னை உன் விழிகளால் விழுங்கு
மெளனத்தால் அரவணை
காதுகளுக்குள் கிசு கிசுப்பாய்
காதல் மொழி பேசு...
சில முத்தங்கள் மூலம் எனக்குள்
காதலை பரவ விடு...
சப்தமில்லாமல் சிரி...
உனகானவன் நான் தான்
என்ற உரிமையில்..என்னை
முழுதுமாய் உடைத்துப் போடு!

பற்றிப் பரவும் கொடியின்
காதலில் லயித்துக் கிடக்கும்
ஒரு மரம் போல ...
உன் மொத்தக் காதலும்
என்னை மூர்ச்சையாக்கிப் போனதில்
உணர்வுகளின் சங்கமித்தில்
இசைக்கும் கீதம்... என் உயிரின்
மூலம் தொட்டு தடவுகிறது....!

என் பெயர் சொல்லி
ஓராயிரம் முறை அழைத்து
உன் காதலை என் மீது தெளிக்கிறாய்..
நானோ பார்வைகள் தொலைத்து
சப்தங்கள் இழந்து...சுவாசத்தினூடே
உன் நினைவுகளை என்னுள் பரவவிட்டு
மழை வாங்கும் நிலமாய்...
மெளனித்துக் கிடக்கிறேன்..!

காமத்தின் வேர்கள் அறுக்கப்பட்டதில்
கிளைந்தெழுந்த விருட்சமாய்
வெகுண்டெழுந்த அவதாரமாய்
சுற்றுச் சூழல் மறந்து விசுவரூபத்தில்
வியாபித்து நிற்கிறதே.. ஒன்று....
அதுதானே உன் விழிகளால்
என் விழிகளுக்குள் நீ விதைத்துப் போட்ட
பிரமாண்டக் காதல்..?


தேவா. S

Comments

என் பெயர் சொல்லி
ஓராயிரம் முறை அழைத்து
உன் காதலை என் மீது தெளிக்கிறாய்.///

அவங்க வாசல் தெளித்து கோலம் போட்டு இருப்பாங்க அதானே...?
என் விழிகளுக்குள் நீ விதைத்துப் போட்ட
பிரமாண்டக் காதல்..?///

ஷங்கர் படம்...
உனகானவன் நான் தான்
என்ற உரிமையில்..என்னை
முழுதுமாய் உடைத்துப் போடு///

நேத்து பேசும் போது வீட்டில் ஏதோ உடைக்கிற சப்தம் கேட்டுது அது இது தானா...
உன் நினைவுகளை என்னுள் பரவவிட்டு
மழை வாங்கும் நிலமாய்...
மெளனித்துக் கிடக்கிறேன்..!///

இந்த வரி ரொம்ப சூப்பர் அண்ணா....!
karthikkumar said…
உன் விழிகளால்
என் விழிகளுக்குள் நீ விதைத்துப் போட்ட
பிரமாண்டக் காதல்..//
:))
காதலின் பிரமாண்டத்தை சொல்கிறது,, இந்த பிரமாண்டமான வரிகள்..
உன் விழிகளால்
என் விழிகளுக்குள் நீ விதைத்துப் போட்ட
பிரமாண்டக் காதல்..?

::)))))))))
//உனகானவன் நான் தான்
என்ற உரிமையில்..என்னை
முழுதுமாய் உடைத்துப் போடு!//

உடைத்துப் போட உரிமை கொடுக்கும் காதல் ஒரு உன்னதக் காதல்!

//பற்றிப் பரவும் கொடியின்
காதலில் லயித்துக் கிடக்கும்
ஒரு மரம் போல ...//

கொடி, மரத்தைக் காதல் செய்கிறது என்பதே அற்புதமான கற்பனை. அதற்கும் அதிகமாக அந்தக் கொடி கொண்ட காதலில் லயித்துக் கிடக்கும் மரம்னு எழுதி....... செம தேவா :)

//மழை வாங்கும் நிலமாய்...
மெளனித்துக் கிடக்கிறேன்..!//

காதலை ஏற்றுக்கொண்டதைச் சொல்வதற்கு இதற்குமேல் வேறு வார்த்தைகள் இருக்கமுடியாது தேவா.

கடைசிப்பத்தியில் தெரிகிறது காமம் அற்ற....சாரி., காமம் கடந்த ஒரு காவியக் காதல்!!!

உணர்வுகளை வார்த்தைகளில் வடிப்பது சுலபம் இல்லை. எல்லோருக்கும் சாத்தியப்படுவதில்லை தேவா. WELL DONE!! :) AWAITING MORE SUCH POEMS FROM YOU..
கலக்கல்...

(ஏம்பா இப்படித்தான போடனும்)
Unknown said…
அசத்தல்...
//என் பெயர் சொல்லி
ஓராயிரம் முறை அழைத்து
உன் காதலை என் மீது தெளிக்கிறாய்..
நானோ பார்வைகள் தொலைத்து
சப்தங்கள் இழந்து...சுவாசத்தினூடே
உன் நினைவுகளை என்னுள் பரவவிட்டு
மழை வாங்கும் நிலமாய்...
மெளனித்துக் கிடக்கிறேன்..!//

அசத்தல்.

கலக்கல்.
//கே.ஆர்.பி.செந்தில் said...

அசத்தல்...///

This is sathyaraaj film
உணர்வ மட்டும் அப்படியே பிய்த்து எடுத்து வார்த்தைகளால் எங்களுக்குள்ளும் செலுத்திடுறீங்களே.......
//என் பெயர் சொல்லி
ஓராயிரம் முறை அழைத்து
உன் காதலை என் மீது தெளிக்கிறாய்..
நானோ பார்வைகள் தொலைத்து
சப்தங்கள் இழந்து...சுவாசத்தினூடே
உன் நினைவுகளை என்னுள் பரவவிட்டு
மழை வாங்கும் நிலமாய்...
மெளனித்துக் கிடக்கிறேன்..!
//

சூப்பர் அண்ணா ..!! இந்த வரிகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ..!
//அதுதானே உன் விழிகளால்
என் விழிகளுக்குள் நீ விதைத்துப் போட்ட
பிரமாண்டக் காதல்..?
//

இதுவும் கலக்கல் ..!!
nis said…
அசத்தல்
super
அழகான கவிதை! அருமை!
//மழை வாங்கும் நிலமாய்...
மெளனித்துக் கிடக்கிறேன்..!.......அசத்தல்.
வினோ said…
காதலின் அளவா இல்லை அதன் ஆழமா?..
எப்படி பார்த்தாலும் காதல் மட்டுமே உன்னதம்...
Kousalya Raj said…
நேற்று தேடல்.....! இன்று காதல்.....! காதலும் ஒரு தேடல் தானோ...?!

இந்த வரி, அந்த வரி என்று குறிப்பிட்டு சொல்ல இயலாத அளவில் மொத்த கவிதையுமே காதலின் அழகை அப்படியே போட்டு உடைத்திருக்கிறது முகமூடி அணியாமல்... சிறிதும் வேடம் தரிக்காமல்.....இயல்பாய்....அறிவாய்.....ஆத்மார்த்தமாய்.....!! அதிகமாய் ரசித்தேன்....ரசித்துகொண்டிருக்கிறேன்.......!

எதை பற்றி எழுதினாலும் அனைத்தும் சிறப்பாய் எழுத எல்லோராலும் முடியாது....உங்களுக்கு முடிகிறது. வாழ்த்துக்கள்.
@அருண்

//கலக்கல்...

(ஏம்பா இப்படித்தான போடனும்)

//

மச்சி!!! எங்க இருந்தாலும் சீக்கிரமா ஓடு வா. கவிதை விட கமெண்ட்ல வூடு கட்டி விள்ளாடலாம் போல... நிறையா ஆடு மச்சி... :)))))
//உன் மொத்தக் காதலும்
என்னை மூர்ச்சையாக்கிப் போனதில்
உணர்வுகளின் சங்கமித்தில்
இசைக்கும் கீதம்... என் உயிரின்
மூலம் தொட்டு தடவுகிறது....!//

உயிரின் மூலம் தொட்டக்காதல்...உன்னதக் காதல் தான்... :-)

//உன் நினைவுகளை என்னுள் பரவவிட்டு
மழை வாங்கும் நிலமாய்...
மெளனித்துக் கிடக்கிறேன்..!///

அவங்க கூப்பிடுவதுலேயே... மயங்கி போய்... மௌனித்து இருப்பதாய்.. அழகான உணர்வு.. :-))

உங்க கவிதை மொத்தமும் அழகு தான்.. ஏற்ற படமும்... கண்ணே கலைமானே... இசையின் பின்னணியும்.... சூப்பர்ப் :-)
ஹேமா said…
காற்றாகிப் பறக்கும் தேகம்.
பிரமாண்டத்துள் மூழ்கிக்கொண்டிருக்கும் காதல்.
பேதமற்ற உடலுயிர் தழுவிக்கொள்ளும் வாழ்வின் அசாத்திய ஒரு உலகம்.அத்தனையும் உணர்கிறேன் வரிகளுக்குள் !

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த