Pages

Friday, January 21, 2011

காற்றினிலே.....!
மொத்தமாய் தேக்கி வைத்திருக்கிறேன்..
உன்னிடம் சொல்லாமல் என்னுள்
அலைந்து கொண்டிருக்கும் காதலை..
இப்போதோ எப்போதோ...சொல்லியேவிடுவேன்
என்ற தீர்மானங்களை எல்லாம்
தின்று செரித்துவிட்டு நகரும்...
நிமிடங்களின் நகர்தலோடு கூட்டு சேர்ந்து
துடிப்பினை அதிகரிக்கிறது என் இதயம்...!

ஒரு வேளை நீ வரலாம்...
என் காதலை கூட நான் சொல்லலாம்...
அதை நீ மறுக்கவும் கூட செய்யலாம்...
கொடுத்தலும் பெறுதலும் தாண்டிய
உணர்வுக்ளின் சங்கமத்தில்...
நிறைந்திருக்கும் நிரந்தர....
காதலை யார்தான் அறிவார்?

***

மறுத்தலுக்கும் சேர்த்தலுக்கும்...
மத்திமத்தில் கிளைத்த உணர்வுகளின்...
வெளிப்பாடாய் ஜனித்திருக்கிறது...
எனக்குள் ஒரு காதல்!
காமம் கடந்த பொழுதுகளில்...
விழித்தெழுந்த காதலின் சுவடுகள்...
தப்பாமல் பதித்திருக்கின்றன..
தன்னின் தடங்களை என் இதயம் முழுதும்!

இன்றோ... என்றோ...
மரிக்கப் போகும் வாழ்வில்மறக்க முடியாத காதலை....
எங்கே கொண்டு செல்லும்...என் ஞாபகங்கள்?

***

ஆச்சர்யமாய் கேட்டாய்
உனக்கு கவிதை எழுத தெரியுமா? என்று
நான் சாதரணமாய் கேட்டேன்..
கவிதையே உனக்கு ஆச்சர்யப்படத் தெரியுமா? என்று...

***

எப்படி வேண்டுமானலும்
என்னை அழை...
ஆனால் காதலை
காதல் என்றுதானே சொல்வாய்?

***

நீயாவது சிரித்து விட்டுப் போ
என் தோட்டத்தில்
பூக்கள்தான் பூக்கவில்லை...!

***


எப்போதாவது
நீ திரும்பிப் பார்ப்பாய் என்றுதான்
எப்போதும்
உன்னையே பார்த்துக் கொண்டிருக்கிறேன்!

***
சப்தமில்லாமல்
என் கவிதையை
கேட்டுவிட்டு ..
நீ புன்னைகைத்தாய்.....
கவிதை காகித்தில்
தோல்வியில் கதறியழுதது!

***

ஒரு கடற்கரை மாலை....
கடல் அலைகள்...
முன்னும் பின்னும்...
புரண்டு கொண்டிருந்தன....
எனக்குள்ளும் உன் நினைவுகள்...!


தேவா. S

17 comments:

இராமசாமி said...

kavithaikala padikave vendam.. photos pothum.. kavithai epadi irkunu therinchiruchu ....

you are rocking br...

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

காதலில் உங்களை கரைத்த...
கச்சிதமான வரிகள்... :)

மனதை மயக்கும்
மந்திரக் கவிதை...!!

.......ரசித்தேன்.. :-))

இம்சைஅரசன் பாபு.. said...

அண்ணா உங்களுக்கு ஏன் இந்த கொலை வெறி ..தூங்க போற நேரத்துல .....அந்த போட்டோல இருக்குற பிகுர் சூப்பர் ...யாரு அது திர்ஷாவா அல்லது அமலாபால் ல ....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இராமசாமி said...

kavithaikala padikave vendam.. photos pothum.. kavithai epadi irkunu therinchiruchu ....

you are rocking br...//

எலேய் எங்க இதுக்கு அர்த்தம் சொல்லு பாப்போம்?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இம்சைஅரசன் பாபு.. said...

அண்ணா உங்களுக்கு ஏன் இந்த கொலை வெறி ..தூங்க போற நேரத்துல .....அந்த போட்டோல இருக்குற பிகுர் சூப்பர் ...யாரு அது திர்ஷாவா அல்லது அமலாபால் ல ....///

உனக்கு பால் ஊத்த வேண்டிய வயசுல அமலா பாலா?

இம்சைஅரசன் பாபு.. said...

//அந்த போட்டோல இருக்குற பிகுர் சூப்பர் ...யாரு அது திர்ஷாவா அல்லது அமலாபால் ல ....///

உனக்கு பால் ஊத்த வேண்டிய வயசுல அமலா பாலா//
நான் இன்னும் பால் குடிக்கிற சின்ன பையன்னு சொல்லுறயா டா .....அது சரி நான் ஒரு பால் வடியும் முகம் கொண்ட பாலகன் தானே ....

சௌந்தர் said...

நாங்களும் கொஞ்சம் எழுதுவோம் உங்க அளவுக்கு இருக்காது....

காகிதம்
உன் மேல் காதல் கொண்டேன்
இன்று வரை என்
காதலை சொல்ல
எழுதி வருகிறேன் ...
உன் மேல்...
என்று தான் படிப்பாயோ..!

TERROR-PANDIYAN(VAS) said...

@தேவா

//எப்போதாவது
நீ திரும்பிப் பார்ப்பாய் என்றுதான்
எப்போதும்
உன்னையே பார்த்துக் கொண்டிருக்கிறேன்!//

ரசித்தேன்...


(டாய் ரமேஷ்.. நான் திருந்திடேன். இனி கவிதைதான் படிப்பேன் கவிதை தான் எழுதுவேன். நான் உன் ப்ளாக் வர்னும் சொன்னா நீயும் கவிதை எழுது... )

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

TERROR-PANDIYAN(VAS) said...

@தேவா

//எப்போதாவது
நீ திரும்பிப் பார்ப்பாய் என்றுதான்
எப்போதும்
உன்னையே பார்த்துக் கொண்டிருக்கிறேன்!//

ரசித்தேன்...


(டாய் ரமேஷ்.. நான் திருந்திடேன். இனி கவிதைதான் படிப்பேன் கவிதை தான் எழுதுவேன். நான் உன் ப்ளாக் வர்னும் சொன்னா நீயும் கவிதை எழுது... )
///

கவிதை - போதுமா மச்சி. போகி அன்னிக்கே இவனை கொளுத்துங்கடான்னு சொன்னேன். எவனாவது கேட்டானா?

வெங்கட் said...

// ஆச்சர்யமாய் கேட்டாய்
உனக்கு கவிதை எழுத தெரியுமா? என்று
நான் சாதரணமாய் கேட்டேன்..
கவிதையே உனக்கு ஆச்சர்யப்படத்
தெரியுமா? என்று... //

கவித.. கவித..!!
ரொம்ப அருமை..!!

கலாநேசன் said...

ஆச்சர்யப்படும் காதல் அருமை...

சுபத்ரா said...

//கொடுத்தலும் பெறுதலும் தாண்டிய
உணர்வுகளின் சங்கமத்தில்...
நிறைந்திருக்கும் நிரந்தர....
காதலை யார்தான் அறிவார்?//

ரைட்டு.. :))

//ஆச்சர்யமாய் கேட்டாய்
உனக்கு கவிதை எழுத தெரியுமா? என்று
நான் சாதரணமாய் கேட்டேன்..
கவிதையே உனக்கு ஆச்சர்யப்படத் தெரியுமா? என்று...//

ஆச்சர்யப்பட வைக்கும் கவிதை! செம! செம!!

கலக்குங்க தேவா சார்..

சுபத்ரா said...

படங்கள் அருமை!

அமைதிச்சாரல் said...

ரொம்ப ரசிச்ச கவிதை..

ப்ரியமானவள் said...

//மறுத்தலுக்கும் சேர்த்தலுக்கும்...
மத்திமத்தில் கிளைத்த உணர்வுகளின்...
வெளிப்பாடாய் ஜனித்திருக்கிறது...
எனக்குள் ஒரு காதல்!//

ரொம்பநாளா உங்க பிளாக் படிச்சுட்டு இருக்கேன் அண்ணா இப்போதான் கமெண்ட் போடறேன் ரொம்பநல்லா எழுதுறீங்க...

Kousalya said...

காதலை மெல்லிய இழையாய் இழைத்து பரவ விட்டு இருக்கிறீர்கள்...ஒவ்வொரு வரிகளிலும் மௌனமாய் உங்கள் அன்பு, காதல் பேசி இருக்கிறது...எனக்கு இங்கே காதலை தவிர வேறு ஒன்றும் தெரியவில்லை.

கவிநா... said...

இதயமாய்
உணர்வுகளாய்
சுவடுகளாய்
ஞாபகங்களாய்
ஆச்சரியமாய்
பூக்களாய்
நினைவுகளாய்
கவிதைகளாய்

இங்கு தவழ்ந்து வந்து சிரிக்கிறது காதல் காதலாகவே.....!!!
மிகவும் அழகாக, மென்மையாக இருக்கிறது சகோ, உங்கள் வலைப்பூ.. நன்று...