
PREVIEW
சராசரியான நிகழ்வுகளில் மிக திருப்தியான ஒருவன்....எல்லாவற்றையும் விட்டு விலகி இருக்க ஆசைப்பட்டு... ஒரு பத்து நாட்கள் வீட்டை விட்டு வெளியேற திட்டமிட்டு கடிதம் எழுதிவைத்து விட்டு வெளியேறுகிறான். அதற்கப்புறமான அவனின் மனோநிலை.. உலகம் பற்றிய பார்வை....இவனைப்பற்றிய உலகத்தின் பார்வை...இப்படியாக நகரும்....கதை.....இந்த நான்காவது பாகத்திலும் தொடர்கிறது...
திருப்புமுனைகளோடு கூடிய கதை எதிர்ப்பார்த்து படிக்க விரும்புவர்கள்....எனது பதிவுகளை தவிர்த்து விடல் நலம். ஏனென்றால் என் பதிவுகள் முழுக்க முழுக்க என்டர்டெயின்மென்டை நிச்சயமாய் கொடுக்காது.
உங்களின் நேரம் அனுமதிக்கும் பொழுது இதற்கு முன் உள்ள பாகங்களையும் படித்துக் கொள்ளுங்கள்....!
பாகம் I
பாகம் II
பாகம் III
இனி...
நன்றாக விடிந்தே விட்டது.. உச்சிப் பொழுதை நெருங்கிக் கொண்டிருந்தது அந்த பகல்..! என் வீடு என்னை மும்முரமாய் தேடும் என்பதை அறிந்தே இருக்கிறேன். ஆனால் என் மனைவியிடம் அந்த கடிதம் சிக்கிய நொடியில் இருந்து ஒரு புரிதல் நிச்சயமாய் அவளிடம் இருக்கும், அவள் பதட்டப்படமாட்டாள். என்னை சரியான அளவில் அவள் புரிந்து வைத்திருப்பது ஒரு வரப்பிரசாதம்தான்...
வாழ்வின் மிகப்பெரிய திருப்புமுனையாக ஒவ்வொருவருக்கும் திருமணம் அமைந்து விடுகிறது. கணவனைப் பொறுத்து மனைவியும் மனைவியை பற்றி கணவனும் ஒரு உச்ச பட்ச அன்போடு புரிதல் ஏற்பட்டு விட்டால் அது நேர்மறையான மாற்றமாகி விடுகிறது. என் மனைவியும் அப்படித்தான்...எப்போதும் என் செயல்களை விட செயல்களின் ஆழங்களில் ஒளிந்திருக்கும் அதன் பின்னணிகளை எப்போதும் உணர்ந்தவளாய்த் தானிருக்கிறாள்....
பெரும்பாலும் ஒரு ஆணின் சுதந்திர செயல்பாடுகள் பெண்ணாலேயே தீர்மானிக்கப் படுகின்றன. நமது சமுதாயத்தில் பெண் ஆணிடம் கட்டுப்பட்டு இருப்பது போல தோன்றினாலும் அது ஒரு மாயத்தோற்றமே...! இறுதியில் பெண்ணே ஆள்கிறாள். தொழிலும், கல்வியிலும், ஆன்மீகத்திலும் இன்ன பிற விசயங்களிலும் ஜெயிக்க பெண்ணின் அனுசரனை ஒரு ஆணுக்கு சரியான விகிதத்தில் கிடைக்க வேண்டும்.
மிகப்பெரிய வெற்றியாளர்களின் ஆளுமைக்கும், கம்பீரத்துக்கும் காரணமாய் பெண் அமைந்து போயிருப்பது சில வரலாறுகளை எடுத்து புரட்டிப் பார்த்தால் நமது அறிவுக்குத் தெரிய வரும்.
எனது ஆன்மீகத் தேடலும் என் மனைவியின் ஒத்துழைப்போடுதான் என்று நான் சொல்லத் தேவையில்லை. ஆமாம் அவ்வப்போது சந்திக்கும் நண்பர்களும் வாசிக்கும் ஏடுகளும் நம்மை புரட்டிப் போடும்போது.........24 மணி நேரமும் உடனிருக்கும் வாழ்க்கைத் துணையின் செயல்பாடுகள் நம்மை பாதிக்காதா என்ன?
பூர்த்தியான முழுமையான தாம்பத்தியம் அங்கே நிறைவுகளை எட்டி விட்டு அதற்கு அடுத்த கதவான ஆன்மீகத்தின் வாயிலை சொல்லாமல் கொள்ளாமல் தட்டித் திறந்தே விடுகிறது. வாழ்வின் முழுமை, பெற்றுப் போடும் பிள்ளைதான் ஆன்மீகம்.....ஆமாம்.. எல்லாவற்றிலும் பூர்த்தியான மனம்...அடுத்து என்ன என்று உற்று நோக்கும் போது கிடைக்கும் ஒரே விடை...ஆன்மீகம்தான்.....
என்னை மொத்தமாய் கலைத்துப் போட்டது பேருந்து இறுதியாய் நிறுத்தப்பட்டிருந்த அந்த பேருந்து நிலையம். திண்டுக்கல் பேருந்து நிலையம் எப்போதும் பரபரப்புக்கு சொந்தமானதுதான். சுற்றிலும் கிராமங்கள் நிறைந்து சுற்றியிருக்கும் மூன்று மாவட்டத்து மனிதர்களும் வந்து செல்லும் ஒரு இடம். ஆன்மீக தலமான பழனிக்கும், சபரி மலைக்கும் வட மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் தொட்டுச் செல்லும் ஒரு ஊர்....
வெள்ளந்தியான மனிதர்களை ஊர் முழுதும் இயற்கை பரவவிட்டு இருக்கும்....! அந்த பேருந்து நிலையம் எட்டிப் பிடித்த நான்... இலக்குகள் அற்று பயணிக்கத் தொடங்கியவன் என்பது என்னோடு ஆரம்பித்தில் இருந்து பயணித்த உங்களுக்குத் தெரியும்....
பேருந்திலிருந்து இறங்கிய என்னை உள்ளுக்குள் புரட்டிப் போட்டது பசி. வாழ்வின் மூலாதாரம்... உடலாய் இருக்கும் வரையில் ஏற்படும் அடிப்படை உணர்வு.....! எதுவேண்டுமானாலும் ஒருவன் பேசலாம், செய்யலாம், சாதிக்கலாம்..ஆனால் அது எல்லாமே பசியாற்றிய பின்புதான்..... ! வயிறுதான் முதலில் அது நிரம்பிய பின் தான் காசும், பணமும், தேடலும், ஆன்மிகமும், கடவுளும்....
லெளகீகப் பிரதானம் என்னை சொடக்கு போட்டு அழைத்தது... பக்கத்திருந்த சிறிய டீக்கடைக்குள் நுழைந்தேன்....." என்ன வேணும் அண்ணே....? சும்மா இங்கன இருங்க...." என்று இலையை போட்ட படி அந்தக் கடையின் பணியாளி கேட்டவுடன் தான் தெரிந்தது அங்கே உணவும் பரிமாறப்படும் என்று, கேட்டவர் பதிலுக்கு கூட காத்திராமல் கூட்டையும் பொறியலையும் இலையில் வைத்தவுடன்..
பசியின் உச்சத்தில் கையை கழுவ வேண்டும் என்ற படிப்பனையை சுத்தமாக மறந்து போய்.. கூட்டினை எடுத்து ருசிக்கத் தொடங்கினேன்.... சாதமும், பருப்பு சாம்பாரும்....முருங்கைக் காயோடு சேர்த்து பிசைந்து.... கொஞ்சம் கூட்டினை சோற்றுக்குள் பதுக்கி.. கொஞ்சம் ஊறுகாயையும் அதோடு சேர்த்து... வாய்க்குள் வைத்தேனோ.இல்லையோ..அனிச்சையாய் மென்றேன்... தொண்டை வழியே அந்த ஒரு கவளத்தை விழுங்கிய பொழுதில் ஏற்பட்டதே ஒரு திருப்தி அதன் பெயர்தான் கடவுளா?
வயிற்றில் விழுந்த பருக்கைகள் உள்ளே சுரந்த அமிலத்தில் ஆழ்ந்து குடலுக்குள் பரவி....இதோ வந்து விட்டேன் நான் இங்கே என்ன பிரச்சினை என்று கேள்வி கேட்ட நொடியில் ஒரு தம்ளர் நீரும் சேர்ந்து உள்ளே போக....
பருக்கைகள் வேகமாய் செரிக்கபட்டு அதன் சக்தி இரத்ததுக்குள் பாய்ந்து... உடலெங்கும் பரவி சில சுரப்பிகள் உடனடியாய் சோர்விலிருந்து விழித்துக் கொண்டு மூளைக்கு அவசர தகவல் அனுப்ப மூளை.. எல்லாவற்றையும் கண நேரத்தில் வாங்கிக் கொண்டு...உடலை ஒரு உசார் நிலைக்கு கொண்டு வந்தது.
மனம் வேறு ஏதேனும் சுவையாக வாங்கிச் சுவைக்கலாமா? என்று அடிப்படை தேவைக்கு மேலே ஒரு ஆசையை படரவிட்டு அதை செயலாக்க முயன்ற நொடியில் அந்த எண்ணத்தை உற்று நோக்க.. .சிதறி ஓடி ஒளிந்தது....ஆன்மா எல்லாவற்றையும் கிரகித்து அனுபவித்த படி சலனமின்றி பார்த்துக் கொண்டிருந்தது....
உண்டு முடித்த பின்பு எல்லாம் சரிதான் என்றபடி அந்த நிறைவை வெளிக்காட்ட சிறிதாய் ஒரு ஏப்பம்...என்ற ஒன்ரு வெளிப்பட..அந்த நிறைவில்...உணவளித்த அந்த பணியாளிக்கு மன குவித்து நன்றிகள் சொன்னேன். மனம் கேட்டது...எதற்கு நன்றி என்று? அவர் பணம் பெற்றூதானே உணவளிக்கிறார் என்று....
மனமே மீண்டும் ஆழத்தில் ஓடி அதற்கான பதில் கொணர்ந்தது. தொழில்தான்..ஆனால் உணவளிக்கும் தொழில் ஆத்மார்த்தமானது....என்னதான் பணம் பெற்றாலும் அதனால் நாம் பெறும் நிறைவு வெறும் பணத்தால் மட்டும் கிடைக்காது. அதனால்தான் இந்த தொழில் செய்பவகள் ஒரு உயரிய சிந்தனையோடு பரோபகாரத்துடன் இயன்றவரை தரமாக, நேர்மையாக உணவினை வழங்கள் வேண்டும். அதில் கலப்படமோ, தந்திரமோ செய்பவர்கள் விரைவில் அதால பாதாளத்தில் விழுந்து விடுவது தவிர்க்க முடியாதது. பசி பிரபஞ்ச நியதி...அதை தீர்ப்பதில் ஒரு நேர்மை வேண்டும்....
பணம் கொடுத்து விட்டு வெளியில் வந்தேன்....காற்றில் என் நான்கு முழ வேட்டி பட படத்தது....சரி...எங்கே செல்வது அடுத்து? கேள்விக்கு பதிலை கைக்கொள்ளாமல் தொடங்கிய பயணம்தானே....எந்த பேருந்து முதலில் வருகிறதோ.............அதில் ஏறலாம் என்ற தீர்மானித்த நொடியில்..
அதோ ஒரு பேருந்து வருகிறது........ம்ம்ம்ம்ம் அருகே வந்த பேருந்தில் ஏறும் முன் கவனித்தேன்....அந்த பேருந்து கொடைக்கானல் செல்கிறது என்று...
(பயணம் தொடரும்...)
தேவா. S
Comments
பயனம் நல்லா தான் இருக்கு. ஆனா இப்படி நாலு மாசம் இடைவெளி எல்லாம் ரொம்ப ஓவரு. :)
//நமது சமுதாயத்தில் பெண் ஆணிடம் கட்டுப்பட்டு இருப்பது போல தோன்றினாலும் அது ஒரு மாயத்தோற்றமே...! இறுதியில் பெண்ணே ஆள்கிறாள். //
அரைவேக்கடுகளுக்கு புரியாத அருமையான தத்துவம். ஜெயிக்கின்ற எல்லா யுத்ததுக்கும் பின்னால் சத்தம் இல்லாமல் ஒரு காதல் இருக்கும் (நீ முன்னாடி ஒரு கவிதைல சொன்ன வரிகள் தான்)
//கணவனைப் பொறுத்து மனைவியும் மனைவியை பற்றி கணவனும் ஒரு உச்ச பட்ச அன்போடு புரிதல் ஏற்பட்டு விட்டால் அது நேர்மறையான மாற்றமாகி விடுகிறது//
நிச்சயாமாக ......இந்த புரிதல் இல்லாமல் பல பேர் இன்று பல பேர் கஷ்ட படுகின்றனர் .....
சில சமயம் நான் நினைபதுண்டு "ஆவதும் பெண்ணாலே ....அழிவதும் பெண்ணாலே " இந்த கூற்று முற்றிலும் உண்மை என்றே எண்ணுகிறேன் .
அது ஆண் என்றாலும் சரி பெண் என்றாலும் சரி ...நட்பு வலு பெற வேண்டும் என்றால் புரிதல் வேண்டும் .......
எல்லா ஆண்களின் வெற்றியின் பின்னல் ஒரு பெண் இருக்கிறாள் என்பது ஏற்று கொள்ள முடியாது ..ஒரு சிலருக்கு இருக்காலம் ..
என்னை பொறுத்த வரை மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
மொத்தத்தில் பெண்கள் தான் எல்லா ஆண்களையும் வெற்றி அடையா செய்கிறார்கள் என்று இல்லை ....
அன்னை இறந்த பின்பும் வெற்றி அடைந்த பல ஆண்களை நாம் பார்க்கிறோம் .......உதாரணமாக அப்துல் கலாம் அண்ட் வாஜ்பாய் ..இன்னும் பலர் பெண்ணின் துணை இன்றி வெற்றி பெற்றுள்ளார்கள் ....
ஆன்மீகத்திலும் இருக்கிறார்கள் என்று எண்ணுகிறேன் ...
ஆயிரம் கேள்விகளை உள்ளடக்கும் இந்த வரிகள் என்னுள்ளில் பல கேள்விகளை கேட்கிறது அண்ணா
//எல்லா ஆண்களின் வெற்றியின் பின்னல் ஒரு பெண் இருக்கிறாள் என்பது ஏற்று கொள்ள முடியாது ..//
பாபு சார் நீங்க இன்னைக்கு உங்க ஊர்ல ஒரு தொழிலதிபர். உங்க வெற்றிக்கு பின்னாடி யாரு இருக்கா? ஓடி ஓடி உழைக்கறிங்களே யாருக்கு?
//ஒரு சிலருக்கு இருக்காலம் ..//
ஒரு சிலருக்கு வேணும்னா இல்லாம இருக்கலாம்.
//அன்னை இறந்த பின்பும் வெற்றி அடைந்த பல ஆண்களை நாம் பார்க்கிறோம் .......//
வெற்றிக்கு காரணமான பெண் அன்னையா தான் இருக்கனுமா?
//உதாரணமாக அப்துல் கலாம் அண்ட் வாஜ்பாய் ..//
இவங்க இரண்டு பேருக்கும் மனைவி இல்லை. ஆன கேள் பிரண்ட்ஸ் இல்லை உங்களாள சொல்ல முடியுமா? :))
bus or train?
இந்த வரிகள்தான் அண்ணா எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு , அதாவது ஒரு மனிதன் பிறந்து அவன மனிதனாக முழுமை அடைந்த பின்பு ஆண்மீங்கம் என்று செல்லும் போது நிச்சயமாகா சரியாக செல்ல முடியும் என்றே நினைக்கிறேன் .
ஆனா நீங்க முதல்ல சொன்னது மாதிரி எல்லாம் இல்லை , இதில் திருப்பம் இல்லையென்றாலும் படிப்பதற்கு நல்லா இருக்கு. என்னோட மொக்கை கதைகளைக் காட்டிலும் ரொம்ப இயல்பாகவும் அதே சமயம் உண்மையாகவும் இருக்கு.
என்னோட அடுத்த பதிவு ஆன்மா! (தேவா ஸ்டைல் ) அப்படின்னு சொன்னேன் , ஆனா அதுக்குள்ள திங்கள் கிழமை வந்ததால ஹி ஹி அடுத்த பதிவு செல்வா கதைகள்தான் .. ஹி ஹி
பல அர்த்தங்களை உள்ளடக்கிய யதார்த்தமான பதில்...! நான் வாழ்வில் நிறைவாய் இருக்கிறேன் யார் சொல்கிறார்கள்...?! எதிலும் போதும் என்ற திருப்தி இல்லாமல் இருப்பவர்கள் தான் அதிகம்...
வழி நீளும் பயணத்தில் உங்களுடன் எங்களையும் மறைமுகமாக அழைத்து செல்வதை என்னால் உணரமுடிகிறது...
அதிக இடைவெளி இன்றி தொடர்ந்து எழுத வேண்டுகிறேன்...
வாங்க வாங்க எங்க ஊர் பக்கம் அப்படியே எங்க வீட்டுக்கு வந்துட்டு போங்க
கடவுள் என்பதை பலர் உணர்தல் என்கிறார்கள் உண்மையில் அதை பிரபஞ்ச உறசல்ன்னு சொல்லலாம்
ஒவ்வொரு நிகல்விலும் மட்டுப்பட்ட நிலையில் அது நடந்துக்கிட்டு தான் இருக்கு புலன்களினால் உணரப்படும்
திருப்தி மட்டுப்பட்ட நிலை இது பிரபஞ்ச விதி. ஓர் ஆயிரம் பூக்கள் பூக்கும் மரங்களிலும்,கடல் அலைகளிலும் அதை பார்க்கும்
கண்களிலும் பிரபஞ்ச உரசல்தான் நடக்கிறது, பெண்ணை ஆண் பார்க்கும்போதும் ஆணை பெண் பார்க்கும்போதும்
கிளர்ச்சியை தூண்டுவது ஹார்மோன் என்று அறிவியல் சொல்கிறது ஆனால் பிரபஞ்ச நியதி காதல்,இணைப்பு விடை தெரியாத
பயணம். ஒரு ரூபாய் உண்டியல்ல போட்டு ஒரு தேங்காய உடைத்து விட்டு சாமி என்மக்களை நீதான் காப்பத்தனும் கண்மூடி நெஞ்சு நிறைய கடவுள நினைக்கிரானே அது பிரபஞ்சஉறசல்.அங்க எந்த தியான நிலையும் குருவும் மட்டுப்பட்ட நிலைதான் அதற்க்கு இணை எதுவும் இல்லை என்று என்னுடைய தாளமையான கருத்து. எதிர்மறையாக ஒரு நிகழ்வு இயற்க்கை பேரிடர் ஒருவித சமன் என்று நண்பர் தேவாதான் சொல்வார் எல்லாம் தெரிந்தும் தெரியாததை போல் நம்மை கேள்வி கேட்க வைப்பார்.
நாத்திகனாக இருந்த என்னை அதிர்வுன்னு சொல்லி அதிர வைத்தவர் தேவா ----சிஷ்யன்
//
முற்றிலும் உண்மையான கருத்து.. வாழ்த்துக்கள்
எப்படி உங்களால் இந்த அளவு சிந்திக்க முடிகிறது ?
ஒரு ஆண் எழுதும் எழுத்தில் பெண்மை பெருமை படுத்தபடுவது ஆச்சர்யம்.
பெண்மையின் ஒத்துழைப்போடு தான் என் ஆன்மீக தேடலும் என்று வெளிப்படையாக ஒத்துக்கொள்ளும் உங்கள் பண்பிற்கு வணங்குகிறேன்.
நீங்கள் நீங்கள் தான்.
ரசிகை