Pages

Monday, March 14, 2011

தவம்....!

உன்னை தேடும் வேளைகளில்...
வழி நெடுகிலும் பரவவிட்ட
என் இதயத்தின் சப்தமெல்லாம்
மெளனமாய் உன் பெயர் உச்சரிக்கும்
பொழுதுகளிலாவது நினைக்க
மாட்டாயா என்னை?

சராசரியான உன் பார்வை...
காதலாய் எனக்குள் பரிணமித்து
உற்பத்தி செய்த எழுத்துக்களை
சேர்த்துப் பார்க்கும்...பொழுதுகளில்...
வந்து விழும் வரி வடிவத்தில்...
நடைபயிலும் உன் நளினத்தில்
எப்போதும் வார்த்தைகள்...
பிடிப்பட்டதில்லை எனக்கு!

எழுதிய கவிதைகளெல்லாம்
நிராகரிக்கப்படும் பொழுதுகளில்...
மூர்ச்சையான என் காதலும்..
மூர்க்கமான உன் நினைவுகளும்
ஒன்று கூடி என்னை...
கொல்லும் பொழுதுகளிலாவது...
என் நினைவுகளை பரப்புமா உன் மூளை?

உன் விழிகளுக்குள்...
தடுக்கி விழுந்த நானும்....
உனக்காக காத்திருக்கும்
என் கவிதைகளும், காத்திருப்புகளில்...
கழித்துக் கொண்டிருக்கும்..
நாட்களின் விமோசனங்களை...
உன் விழி திறந்து விடுவிக்கும்...
காலம்தான் எப்போது?

ஒரு காதலைச் சொல்ல...
எத்தனை ஜென்மங்களாய்
உன்னைத் தொடருவது...
ஒவ்வொரு முறையும் ...
நிழலாய் என்னருகில் இருக்கிறாய்...
அனலாய் என்னை தகிக்கிறாய்..
மெளனமாய்...என்னைக் கலைக்கிறாய்...!

பொறுமையான பின் தொடர்தலாய்...
மரித்துப் போகின்றன என் நாட்கள்...!
ஒரு முறை என் கண்களைப் பார்...
அதில் ஜென்மாந்திர களைப்பு இருக்கும்...
உனக்கான உயிர் பரவி..
என்னுருவில் அலைகிறது உன் ஆத்மா....
வெளிச்சமும் இருளும்...காற்றும் மழையும்
கணித்துவிட்டன நான் யாரென்று...
கலைந்து அலைந்து கொண்டிருக்கும்
உன் கேசமும் கண்டு பிடித்துவிட்டது
உனக்கானவன் நானென்று....!

ஆனால்....கணிக்கமுடியா..உனக்காக...
இன்னும் எத்தனை ஜென்மமோ....?
இன்னும் எத்தனை அலைதலோ....?

ஒரு ஏக்கத்தோட இருக்குற மாதிரி கவிதை இருந்ததாலேயே எழுதி ரொம்ப நாள் வச்சிட்டேன் என் தொகுப்பிலேயே.... ! ஏன்னா.. மைண்ட் செட் கவிதைக்கு எதிராதான் எப்பவும் இருக்கு மாறக நான் எப்பவுமே இப்டி ஒரு ஃபீல் பண்ணி எல்லாம் கவிதை எழுதினது இல்ல..!

சரி....எப்டியோ தோணிச்சு எழுதிட்டோம்... ட்ரீட் த கவிதை அஸ் கவிதைன்னு சொல்லிட்டு.....போஸ்ட் பண்றேன்.. சோ.. முதல் முறையா என் உணர்வுக்கும் கவிதைக்கும் நோ அட்டாச்மெண்ட் அப்டீன்றத வாசகர்களுக்கு சொல்லிக்கிறது எனக்கு சரின்னு பட்டதால இந்த பாராவ எழுத வேண்டியதாப் போச்சு...!


தேவா. S


16 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தங்கள் கவிதை அருமை..
வாழ்த்துக்கள்..

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

NACH.......! SUPER.

CONGRATS DEV

எஸ்.கே said...

படமும் கவிதையும் அழகு!

VELU.G said...

நல்ல கவிதை தேவா


//ஆனால்....கணிக்கமுடியா..உனக்காக...
இன்னும் எத்தனை ஜென்மமோ....?
இன்னும் எத்தனை அலைதலோ....?
//

இதைப் படிக்கும் போது எதிலோ படித்த ஒரு கவிதையின் முதலிரண்டு வரிகள் ஞாபகம் வருகின்றன.

"எத்தனையோ யுகம் ஏகின
இன்னமும் என்னை ஏமாற்றித்திரிகின்றாய்
எத்தனை நாளுன்னை சுற்றினேன்
கதிரவா காதற்பிச்சையின்னும் ஈந்திலாய்....
............."

கதிரவனைச்சுற்றும் பூமிப்பெண்ணின் காதலுக்கு செவிமடுக்காமல் யுகங்களாய் அலையவிடும் கதிரவனே என ஆரம்பிக்கும் கவிதை

Radha N said...

==உன் விழிகளுக்குள்...
தடுக்கி விழுந்த நானும்....==


எத்தனை முறை விழுந்தாலும்
மீண்டும் மீண்டும் எழுந்து......
தடுக்கி விழுவேனடி....

Radha N said...

==.....பொறுமையான பின் தொடர்தலாய்...
மரித்துப் போகின்றன என் நாட்கள்...!
ஒரு முறை என் கண்களைப் பார்...
அதில் ஜென்மாந்திர களைப்பு இருக்கும்...
உனக்கான உயிர் பரவி......==


ஒற்றை பார்வையது,
பட்டு விட்டு போனதால் தான்
என் இதயம்
காற்றில் கரைந்த கற்பூரமானதடி.....

Radha N said...

நண்பரே தங்களுடைய கவிதைகள் அருமை அருமை அருமை.... வாழ்த்துக்கள்

Harini Resh said...

//உன் விழிகளுக்குள்...
தடுக்கி விழுந்த நானும்....
உனக்காக காத்திருக்கும்
என் கவிதைகளும், காத்திருப்புகளில்...
கழித்துக் கொண்டிருக்கும்..
நாட்களின் விமோசனங்களை...
உன் விழி திறந்து விடுவிக்கும்...
காலம்தான் எப்போது?//

அதுதான் யாருக்கும் தெரியுதில்ல அண்ணா.:(
அருமையா இருக்குது உங்க கவிதை

'பரிவை' சே.குமார் said...

கவிதை அருமை...

ஜெகதீஸ்வரன்.இரா said...

//உன் விழிகளுக்குள்...
தடுக்கி விழுந்த நானும்....
உனக்காக காத்திருக்கும்
என் கவிதைகளும், காத்திருப்புகளில்//

மிகவும் அருமை.

ஹேமா said...

ஏக்கமும் காதலும் கலந்து தவிக்கிறது கவிதை !

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//ஒரு காதலைச் சொல்ல...
எத்தனை ஜென்மங்களாய்
உன்னைத் தொடருவது...
ஒவ்வொரு முறையும் ...
நிழலாய் என்னருகில் இருக்கிறாய்...
அனலாய் என்னை தகிக்கிறாய்..
மெளனமாய்...என்னைக் கலைக்கிறாய்...!///

...ஹ்ம்ம்ம்.. வார்த்தையில் சொல்ல முடியாத அளவு ரசிக்கக் கூடிய கவிதை வரிகள்...!

...உங்கள் தவத்திற்கு சீக்கிரம் வரம் கிடைக்க வாழ்த்துக்கள்..!

(பின் குறிப்புல சொன்னத நம்பிட்டேன்) :-))

India Top 10 Classified said...

www.classiindia.com Top India Classified website . Post One Time & get Life time Traffic.

New Classified Website Launch in India - Tamil nadu

No Need Registration . One time post your Articles Get Life time
Traffic. i.e No expired your ads life long it will in our website.
Don't Miss the opportunity.
Visit Here -------> www.classiindia.com

Anonymous said...

கவிதை நன்றாகவே உள்ளது நண்பரே! வாழ்த்துக்கள்!

ஜீவன்பென்னி said...

''
ஆனால்....கணிக்கமுடியா..உனக்காக...
இன்னும் எத்தனை ஜென்மமோ....?
இன்னும் எத்தனை அலைதலோ....?

கணித்துவிட்டால் காதல் முடிந்துவிடுமா என்ன!!! கணிக்காமல் விட்டால்தானே ஜென்மம் ஜென்மமாக அலையமுடியும்..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

கவிதை அருமை...