
உணர்வுகளை காதலாக்கி
என்னின் ஒவ்வொரு
நிமிடத்துக்குள்ளும் பதித்து விட்டு
உன்னை தொலைத்துக் கொள்கிறாய்... நீ!
என் உதடுகளுக்குள்
சிக்கிக் கொண்டு தவிக்கும்
வார்த்தைகளை உன்னிடம்
நேரே சொல்லும் திரணியற்று
கவிதைகளில் கடை விரிக்கிறேன் நான்!
சப்தங்களில் தொலையும் காதல்
மெளனத்தில் வாழும்
என்று என்றோ நீ சொன்னது
இன்று எப்போதும் எனக்குள்
சப்தமாய் ஒலித்துக் கொண்டிருக்கிறது!
ஒரு மொட்டை மாடி
நிலவை தனியே நான் ரசித்த பொழுதில்
ஆழமாய் வந்து உரசி நின்ற
உன் நினைவுகளை விட்டுக் கூட
நான் தள்ளிதான் நின்றேன்!
காணப்படாமலேயே இருக்கும்
ஒரு அழகிய கனவாய்
என் நினைவுகளில் சிக்கிக் கிடக்கும்
ஒரு அழகிய காதலை
வார்த்தைகளுக்குள் கொண்டு வரும்
என் முயற்சிகள் எப்போதும்
தோல்வியைத் தான் தழுவுகின்றன!
ஆழமாய் உன் விழிகள் பார்த்து
மெளனத்தால் கதைகள் பகின்று
மனதால் கரங்கள் பற்றி
தூர நிற்கும் இடைவெளிகளிலேயே
எப்போதும் சிறகடிக்கும்
உன் மீதான உற்சாக காதலை
சொன்னால்தான் என்ன....?
சொல்லா விட்டால் தான் என்ன?
தேவா. S
Comments
மெளனத்தில் வாழும்
என்று என்றோ நீ சொன்னது
இன்று எப்போதும் எனக்குள்
சப்தமாய் ஒலித்துக் கொண்டிருக்கிறது!
...very nice. :-)
படிப்பவர்களை உற்சாகம் கொள்ள செய்வதின் பின்னணியில் ஒளிந்து கொண்டிருக்கிறது காதல் என்னும் அற்புதம்...!
கவிதைக்குள் சிக்கிக்கொண்ட மனதை மெல்ல வருடுகிறது சைந்தவியின் குரல் !!
மெளனத்தில் வாழும்//