Pages

Thursday, May 10, 2012

ரகசியத்தின் சுவடுகள்...!




























சாத்தானை படைத்த எரிச்சலில்
மனிதனை படைக்கவே கூடாது
என்ற கடவுளின் ஆசையை உடைத்து விட்டு
மனிதனை படைத்தே விட்டான் சாத்தான்...
கடவுளைக் கொன்று விட்டு;
மனிதனோ மீண்டும் மீண்டும்
சாத்தானை படைத்து விட்டு
அதற்கு கடவுள் என்று பெயரிட்டுக் கொண்டிருக்கிறான்;

ஆமாம்...

கடவுளை மனிதன் படைத்து விடக் கூடாது
என்ற கடவுளின் ஆசை தோற்றுப் போனதில்
சாத்தான் மீண்டும் மீண்டும் ஜெயித்துக் கொண்டிருக்கிறான்
கடவுள் என்ற பெயரோடு.....!


                       ***



அந்தக் கதையை நான் வாசிக்கையில்
கதையின் நாயகியின் பெயர்
அவளுடைய பெயராய் இருந்தை வாசித்து
புத்தகத்தை மடக்கி விட்டு...
அவளை நினைத்துக் கொண்டிருந்ததைப் போலவே
அந்தக் கதையின் நாயகனும்
கதையில் ஒரு புத்தகத்தை வாசித்து விட்டு
அதில் கதாநாயகியின் பெயர் வந்த இடத்தில்
புத்தகத்தை மடக்கி விட்டு
நான் வாசித்த கதையின் நாயகியை நினைத்துக் கொண்டிருந்தான்...
நானும் அந்தக் கதையின் நாயகனும்
கதையில் வரும் நாயகிகளை நினைக்கவே இல்லை....
கதை முடியும் வரை...!


தேவா. சு



4 comments:

வலைஞன் said...

வணக்கம் உறவே
உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
http://www.valaiyakam.com/

ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்க: http://www.valaiyakam.com/page.php?page=votetools
நன்றி

வலையகம்

சே. குமார் said...

முதலாவதைவிட இரண்டாவதை பல முறை படித்தேன்... ரசித்தேன்...
அருமை.

Anonymous said...

Nice...

Shankar M said...

சாத்தான், மனிதன், கடவுள் - மூன்று கதாபாத்திரங்கள் கொண்டு அருமையான பதிவு. வாழ்வில் எதையாவது செய்துவிட்டு எரிச்சல் பட வேண்டாம்....எரிச்சல் நம் படைப்பு.எரிச்சலில் செய்யும் எந்த செயலானாலும், எரிச்சலின் வாரிசுகள் தான் உருவாகிக் கொண்டிருக்கிறது....நல்லதொரு சிந்தனை!