Pages

Saturday, July 21, 2012

அவளுக்காக ஒரு கவிதை....




















இந்த கவிதையை
அவள் வாசித்து விடக்கூடாது
என்று யோசித்தபடியேதான்
எழுதத் தொடங்கியிருக்கிறேன்....!
நீங்களும் இதை வாசித்து விட்டு
அவளிடம் சொல்லாமலிருக்க வேண்டுமே
என்ற கவலையோடும்,
அவளைப் பற்றிய குறிப்புக்கள் எங்கேனும்
எதேச்சையாக எட்டிப்பார்த்து விடுமோ
என்ற பயத்தோடும் ஒவ்வொரு எழுத்தையும்
ஒரு காட்டு யானையை கட்டி இழுத்து வரும்
பிரயாசயையுடன்  கவனமாய்
அடுக்கிக் கொண்டிருக்கிறேன்,
எது எப்படி ஆனாலும்....
இந்தக் கவிதையை வாசிக்கும் யாரும்
அவளிடம்  மறந்தும் கூட சொல்லி விடாதீர்கள்...
நான் அவளுக்காக கவிதை ஒன்றை
எழுதி இருக்கிறேன் என்று....


தேவா. S


6 comments:

cheena (சீனா) said...

அய்யோ - சத்தியமா சொல்ல மாட்டென் தேவா - நீங்களே நேர்ல பாத்து சொல்லிடுங்க - சரியா - நட்புடன் சீனா

விமலன் said...

நல்ல கவிதை.இது மாதிரியான ஒரு அந்தியந்த மனோநிலை
எல்லோரிடத்திலும்
இருக்கிறதுதான்.
அதை தைரியமாக ஒப்புக்கொள்கிற பாங்கௌ பலரிடம் இல்லையென்பதே நிஜம்/நல்ல கவிதை வாழ்த்துக்கள்.

s suresh said...

சிறந்த கவிதை! வாழ்த்துக்கள்!

கிருஷ்ணா said...

அதெல்லாம் சரி...கவிதை எங்கே? :)

கிருஷ்ணா said...

அவளுக்காக நான் கவிதை எழுதியதில்லை

எனக்கு கவிதை எழுத தெரியாது என்பதல்ல..

அவளே கவிதை என்று உணர்ந்து இருந்ததனால்!

சுபத்ரா said...

நான் சொல்லிட்டேனே :) :) :)