Skip to main content

Posts

Showing posts from February, 2012

இசையோடு இசையாக..தொகுப்பு 4 !

அயற்சியான நாட்கள், அழுத்தம் கொடுக்கும் நினைவுகள், புத்தியைப் பிழியும் சூழல்கள், மனிதர்களோடான சந்தோசங்கள், கோபங்கள், துக்கங்கள், சிரிப்புகள், அழுகைகள், எரிச்சல்கள், எதிர்பார்ப்புகள், அலைக்கழிப்புகள், ஆர்வங்கள், பரபரப்புகள், குற்ற உணர்ச்சிகள், தற்பெருமைகள், தாழ்வு மனப்பான்மைகள், சாந்தங்கள், அமைதிகள், கனத்த மனோநிலைகள், ப்ரியங்கள், நட்புகள், காதல்கள்.... விரிந்து கொண்டே இருக்கும் ஒவ்வொரு நாளும் உப்பு மூட்டை சுமப்பது போல சுமந்து செல்கிறது. சுமையாய் நம்மைத் தூக்கிச் செல்கிறதே இந்த வாழ்க்கை என்று கருணை பொங்கும் போதே... நடு முதுகெலும்பு முறியும் படி படாரென்று கீழே " பொத் " என்று சுடும் வெயிலில் போட்டு விட்டு கை கொட்டி அதுவே சிரிக்கவும் செய்கிறது. வெறும் காலோடு சூட்டில் ஓடி வருபவனை ஒற்றை மரத்தின் நிழல் எப்படி வாரியணைத்து நிழலுக்குள் தஞ்சம் கொடுத்து குளுமையான காற்றைக் கொடுக்கிறதோ அப்படியான அதிர்வுகள் மிகுந்த சில மணி நேரங்களை விரித்துப் போடும் இந்த இரவை எப்படிக் காதலிப்பது என்று சொல்லத் தெரியாமல் வார்த்தைளைத் தட்டச்சு செய்து நான் விளையாடிக் கொண்டிருக்கிறேன். வாழ்க்கை அழகானது. சிலரு

விடுமுறை நாளொன்றில்.....!

காலையில் கண்கள் விழித்த போதே மூளையைப் பற்றிக் கொண்ட ஒரு பரபரப்பை அட.. இன்று ஞாயிற்றுக் கிழமை விடுமுறை என்று உடனே அணைத்துப் போட்டேன். வழக்கமாய் காலையில் அரக்கனைப்போல எழுப்பி விடும் அலாரத்தை சமாதானமாய் பார்த்தேன் மணி 7 ஆக இன்னும் ஐந்து நிமிடம் என்று சாதுவாய் சொன்னது. படுக்கையில் புரண்டேன்....உடலெல்லாம் கடுமையான ஒரு வலி இருந்தது. மெல்ல கைகால்களை நீட்டி சோம்பல் முறித்து உடலை வளைத்து கோணி ஏதேதோ செய்து கொண்டிருந்தேன் ஆனால் சுத்தமாக படுக்கையில் இருந்து எழ மனதே இல்லை. பெட்சீட்டை எடுத்து காலில் இருந்து இழுத்து தலைவரை முக்காடு போல போர்த்தி காதுகளை இறுக்க அடைத்து ஜனவரி மாதக் குளிர் கண்ணாடி ஜன்னலைத் தாண்டி உள்ளே வந்தாலும் எனக்குள் செல்ல முடியாதவாறு தடையிட்டேன்... உறக்கம் முழுதாய் வரவில்லை இருந்தாலும் கண்களை மூடிக் கொண்டு அப்படியே வெறுமனே படுத்திருப்பது சுகமாய் இருந்தது. தனியாக இருப்பது ஒரு மாதிரி கஷ்டம்தான் என்றாலும் அது ஒரு மாதிரி வலியோடு கூடிய சுகம்தான். சுகம் என்பதை விளங்கிக் கொள்ள மனம் ஒத்துக் கொள்ளாது. ஏனேன்றால் மனதுக்கு தனியே இருப்பது எப்போதும் பிடிக்காது. அது கூட்டத்திற்கு நடுவே நின்று

அரசியல் என்னும் ஆயுதம்....! ஒரு கனவுப் பார்வை..!

வித்துக்கள் எல்லாம் வெற்று வித்துக்களாய் எந்த வித திட்டமிடலும் இன்றி இந்த தேசத்தில் விதைக்கப்படுவதாலேயே...வாழ்வியல் தேவைகளை அவை எதிர் கொள்ளும் போது அதை நேருக்கு நேராய் சந்திக்கும் திராணிகளற்று மடங்கி மட்கிப் போகின்றன. கல்வி என்னும் கட்டாய வழிமுறையை மானுடரின் வாழ்க்கையில் உண்டாக்கி வைத்திருப்பதின் நோக்கம் இன்று சிதைந்து போய் கிடக்கிறது. கல்வியின் நோக்கம் மருவிப் போய் இன்று பொருள் ஈட்டும் ஒற்றை நோக்கை மட்டுமே எமது பிள்ளைகளிடம் புத்திகளில் புகுத்திக் கொண்டிருக்கிறது.  பொருள் ஈட்டும் தொழில்நுட்ப, அறிவியல், பொருளாதார, நிர்வாக தொடர்பான பாடங்களை பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பயிலும் எமது பிள்ளைகள், கல்லூரியை விட்டு வெளியே வரும் பொழுது ஒவ்வொரு துறையிலும் மிகப்பெரிய விற்பன்னராய்த்தான் வருகின்றனர்....தொழில்நுட்பத்திலும் விஞ்ஞானத்திலும் தேர்ந்தவர்களாக, கணிணி அறிவுடன், அறிவியல் பார்வைகளுடன் நுனி நாக்கு ஆங்கிலத்துடன்....எல்லாவகையிலும் பொருளாதார பலத்தை கூட்டவே தங்களது நகர்வுகளை அமைத்தும் கொள்கிறார்கள்.... ஆனால்.... அரசியல் கல்வி என்னும் மிகப்பெரிய விடயத்தை எம் பிள்ளைகள் தமது வாழ்க்கையின் எந்த ந

விடியட்டும் ஒரு அரசியல் புரட்சி........!

இணையத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் அரசியல் கட்சிகளின் பரப்புரைகளை கவனமாய் உள்வாங்கிக் கொண்டு தெளிவுகளை உணர்ந்து கொண்டு தெளிவின்மைகளை அறுத்தெறிந்து வெளியே வரவேண்டிய மிகப்பெரிய சவால் இன்றைய அதுவும் இணையத்தை வலம் வரும் தமிழ் இளைஞர் கூட்டத்திற்கு இருக்கிறது என்ற ஒரு வேண்டுகோளினை சிவப்புக் கோடிட்டுக் காட்டி விட்டு கட்டுரையைத் தொடர்கிறேன்....! சம காலத்தில் அரசியலை காழ்ப்புணர்ச்சிகளின் களமாய் ஆக்கி வைத்திருக்கும் இன்றைய மக்கள் தலைவர்களைக் கண்டு என் தேசத்து இளைஞன் அரசியல் என்றாலே சாக்கடை என்றும், அரசியல் களம் என்பது பொய்யும், புரட்டும், தனிமனித தாக்குதல்களும் கொண்ட மரியாதையற்ற ஆதிக்க சக்திகளின் இடம் என்று நினைத்து ஒதுங்கி ஒதுங்கிப் போனதன் விளைவாய் எதைச் சம்பாதித்திருக்கிறோம் தெரியுமா....? மிரட்டும் தாதாக்களின் அடாவடிகளையும், பொருளைக் கொண்டு மனிதர்களை மிரட்டி அல்லது மூளைச்சலவைகள் செய்து வாக்குகள் பறிக்கும் பெருங்கூட்டத்தையும் நம்மைச் சுற்றி மிகுந்து போக வைத்திருக்கிறோம். உண்மையான தமிழர் நலம் காண இன்று களத்திலிருக்கும் எத்தனை கட்சிகள் முனைகின்றன...? அப்படியாய் முனைகிறோம் அல்லது செய்தோம்

சரணாகதி....!

சில நேரங்களில் வாழ்க்கையின் போக்கு நமக்கு பிடிபடுவதில்லை.  திட்டமிட்டு செய்தேன் என்று சொல்வது எல்லாம் வாழ்க்கையின் போக்கோடு பொருந்தி நடக்கும் ஒரு சில செயல்களைத்தான் மற்றபடி ஒரு ஆற்றில் மிதக்கும் மரக்கட்டையைப் போலத்தான் வாழ்க்கையின் நகர்வு இருக்கிறது. வாழ்க்கையிடம் சரணாகதி அடைந்து விடுதல் தான் மிகப்பெரிய புரிதல். இடமாக திரும்பி நகரவேண்டிய இடத்தில் இடதிலும், வலதாக திரும்ப வேண்டிய இடத்தில் வலதிலும் நகரவேண்டியது இயக்கத்தின் அலைதலைப் பொறுத்ததுதானே அன்றி..நம்மால் ஆனது என்று சொல்லுமிடம் மிகப்பெரிய பைத்தியக்கார மனதின் போலியான வேசம். சரணாகதி என்பது என்பதின் தூய தமிழாக நான் நினைப்பது ஒப்புக்கொடுத்தல். இந்த ஒப்புக் கொடுத்தல் என்னுமிடம் வேசம் போடும் இடம் அல்ல, மாய வார்த்தைகளைக் காட்டி வசீகரிக்கும் வித்தையல்ல, காரியம் ஆகவேண்டி காலைப் பிடிக்கும் யுத்தியும் அல்ல....ஒப்புக் கொடுத்தல் என்பது மிகப்பெரிய புரிதல். தான் எதைச் சார்ந்திருக்கிறோமோ அல்லது எவரிடம் நம்மைக் முழுதுமாய் அர்ப்பணிக்கிறோமோ அந்த செயலிலோ அல்லது மனிதரிடமோ நாம் வைக்கும் நம்பிக்கை. நம்பிக்கை இல்லாமல் சந்தேகத்தோடேயே வாழும் வாழ்க்கை ஒரு

உடையாரின் அதிர்வலைகள்...12.02.2012

கொஞ்சம் நாளாகிதான் விட்டது உடையார் பற்றி எழுத ஆனால் வாசிக்காமல் இருக்கவில்லை தொடச்சியாக ஒரு நகரப் பேருந்து செல்லும் வேகத்தோடு ஒரு நாளைக்கு இரண்டு பக்கங்கள் வாசிப்பதும், பின் அந்த வாசிப்பில் லயித்துக் கிடப்பதும் என்று மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டுதான் இருக்கிறேன். ஒரு பரபரப்போடு தொடங்கிய முதல் பாகத்தில் ராஜ ராஜ சோழனின் அதிரடியான ஆளுமை என்னவென்று புரிந்தது ஆனால் போகப் போக  ஒரு மனிதனின் மகா வெற்றிக்கு எத்தனை நல்ல மனிதர்களின் கூட்டு மற்றும் எதிரிகளின் சூழ்ச்சிகள் தேவை என்று தெளிவாக உணர முடிந்தது. வெற்றிகளைக் குவித்து மிகப்பெரிய புகழுடன் இருக்கும் ஒரு பேரரசனுக்கு ஒரு கோயில் அதுவும் பிரமாண்டமாய் செய்ய வேண்டும் என்று தோன்றிய இடத்தை உற்று கவனிக்கையில்தான் வாழ்க்கையின் மிக முக்கியமான ஒரு விடயத்தை புரிந்து கொள்ள முடிந்தது அதாவது  திருப்தியின் அளவு பொருளோ, புகழோ, அல்லது போகமோ அல்ல...திருப்தியின் உச்சம் என்பது தன்னை உணர்தல் என்று.... தன்னைச் சுற்றிலும் பல தொழில்களை செய்யும் மக்களைத் கொண்டிருந்த இராஜ இராஜசோழன் என்னும் சக்கரவர்த்தி அத்தனை பேரையும் கையாளும் விதத்தை எழுத்துச் சித்தர் வெளிப்படுத்திய

பகிர முடியாத வார்த்தைகள்....!

இயல்புகளை விவரிக்க முயலும் வார்த்தைகள் தோல்விகளையே எப்போதும் தழுவுகின்றன. கற்பனைக்கு நிறைய பொய் தேவைப்படுகிறது. நிஜமோ நேருக்கு நேராய் நம்மை எப்போதும் எதிர்கொள்கிறது. சிறகடிக்கும் மனம் இளைப்பாறுவது என்னவோ எதார்த்தத்தில் தான்... என் கவிதை சாலைகளிலின் விளிம்புகளில்தான் அவள் எப்போதும் எனக்காக காத்திருப்பாள் நிஜமென்னும் உணர்வுகளை ஏந்திப் பிடித்தபடி. வர்ணிக்க கூடியது எல்லாம் விவரிக்க முடிந்தது. விவரிக்க முடியாதது வார்த்தைகளுக்குள் எப்போதும் வந்து விழுவதில்லை. காதலை விவரிக்கலாம்...கடவுளை...? பூமியை விவரிக்கலாம் அதன் மூலத்தை மொழி பெயர்க்கலாம்.. ஆனால் பிரபஞ்சத்தை அதன் ஆழத்தை எப்படி மொழியாக்கம் செய்வது..? விரல் விட்டு எண்ணக் கூடியது எல்லாம் கடந்த பிரமாண்டத்தை உணர்தலே மிகப்பெரிய விடயம். அதை உணர்ந்தவன் அதில் லயித்துக் கிடப்பான் ஒரு நிரம்பி வழியும் பாத்திரத்தைப் போல..., அவனில் இருந்து தெறித்து விழுவது  யாவுமே நிரம்பி பின் வழிவதுதான்.  எப்போது உள் நிறைந்து கிடப்பவது, எப்போதும் வெளியில் வர முடியாதது.  காந்தத்தின் அதிர்வுகளாய் உடலுக்குள் மையம் கொண்டிருப்பதை எப்போதும் காட்சிப்படுத்துவதிலும் கவிதைப

கற்பூரக் கனவுகள்...!

வெறிச்சோடிக் கிடக்கும் ஒரு ஆள் அரவமற்ற சாலையாய் கிடக்கிறது மனது. காலத்தின் நகர்வுகள் திணிக்கும் மனோநிலைகள் மறுக்க முடியாதவை. இயல்புகளைக் ஆக்கிரமித்துக் கொள்ளும் சூழல்களை எல்லாம் மெளனமாய் வேடிக்கைப் பார்க்கிறது உள்ளுக்குள் எப்போதும் விழித்துக் கிடக்கும் ஒரு நெருப்பு. எப்போதும் பராக்குப் பார்த்துக் கொண்டு ஏதோ ஒன்று எழுதக் கிடைக்கும் அல்லது எழுதவேண்டும் என்ற மனோநிலைக்கு ஒரு மிகப்பெரிய முற்றுப் புள்ளி வைத்ததோடு மனிதர்களோடு இயங்கி மனித மனோநிலைகள் சாராமல்,  நிர்ப்பந்தங்கள் அகன்ற ஒரு வெளியில் வந்து விழுந்து கிடக்கிறேன் என்பது ஒரு விதமான சந்துஷ்டியைக் கொடுக்கிறது. சமூகம் எப்போதும் எதிராளியை அவனின் போக்கிலேயே ரசித்தது  கிடையாது. அது எப்போதும் தனது தேவையை முன்னிறுத்தியே தனது தொடர்புகளை விஸ்தரித்துப் பார்க்கிறது. ஒவ்வொருவரும் தன்னை மையப்படுத்தி வாழும் வாழ்க்கையில், மனமற்று மனதின் மையப்புள்ளியை உடைத்துவிட்டு பரந்து வாழும் ஒரு நிலை உண்மையில் வரம்தான் என்றாலும் இந்த சமூகத்தோடு சேர்ந்து நகரும் போது அது சாபமாகிவிடுகிறது. ஆசைகள் எல்லாம் தன்னின் திருப்தியை நோக்கியதாய் இருக்க வேண்டும் என்று எவரும் ந

அந்திமத்தின் விடியல்...!

இன்னும் சற்று நேரத்தில் நான் மரணித்து விடக் கூடும். தளர்ந்து போன கால்கள் துவண்டு கிடந்தன, இடுப்பில் சுத்தமாய் திடமில்லை. கைகளில் சக்தியில்லை. பிராணனை மூளைக்குள் செலுத்தி, திசுக்களில் பரப்பி பிராணனின் பொலிவினை எப்போதும் என் விழிகள் பளபளப்பாய் காட்டியிருக்கின்றன....ஆனால் இதோ என் விழிகளிலும் ஜீவனில்லை இப்போது... கடந்த ஒரு மாதமாய் விடிகிறது.....இருள்கிறது....விடிகிறது இருள்கிறது அவ்வளவே. நினைவுச் செல்களில் நான் சேர்த்து வைத்திருக்கும் கடந்த கால நினைவுகள் எல்லாம் மீண்டும் ஒரு முறை ஒரு புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டுவதைப் போல புரட்டிப்பார்த்துக் கொண்டிருக்கின்றன. ஏதேதோ செய்தேன்...யார் யாரிடமோ சினேகம் கொண்டிருந்தேன். அப்போதெல்லாம் என்னைச் சுற்றி நிறைய மனிதர்கள் இருந்தார்கள். ஒரு சினிமாப்படத்தின் காட்சிகளாய் எல்லாம் நடந்தன....நகர்ந்தன. முதன் முறையாய் மெல்ல அடியெடுத்து வைத்து நான் நடை பழகிய என் குழந்தைப் பருவத்தில் நடப்பதும், ஓடுவதுமே எனக்கு மிக அதிகமான சந்தோசமாய் இருந்தது. காலம் நகர, நகர சந்தோசம் என்பது வேறு வேறாக எனக்கு கற்பிக்கப்பட....வளர்ந்தேன் வாழ்ந்தேன்....! இதோ என் அ