Skip to main content

Posts

Showing posts from April, 2012

ஈழப் போராட்டமும் தமிழகத்தின் பிழைப்பு அரசியலும்....!

ஏனோ தெரியவில்லை இறைவன் ஒருவன் தனித்து இருந்திருக்க வேண்டுமென்றும், ஒரு மனிதனைப் போல அவ்வப்போது மனிதர்கள் முன் வந்து வந்து போயிருக்க வேண்டுமென்றும் ஒரு பெரு விருப்பம் எனக்கு இப்போது ஏற்பட்டிருக்கிறது. ஆமாம்....!!! அப்போதுதானே அவன் சட்டையைப் பிடித்து என்னால் கேள்வி கேட்க முடியும்...? என்ன திட்டத்தில் இப்படி அபத்தங்களை மனிதர்களாக்கிப் போட்டு வைத்திருக்கிறாய்? அசிங்கங்ளை புரிதல்கள் என்று அவர்களை கடை விரிக்கச் சொல்லியிருக்கிறாய்? அறிவென்ற போர்வை போர்த்திக் கொண்டு உணர்வுகளை பொசுக்கக் சொல்லியிருக்கிறாய்...? காசு என்னும் அடிப்படையைப் படைத்து மனிதநேயத்தை தடம் புரட்ட சொல்லியிருக்கிறாய்.. என்று... நான் ஒரு சராசரி இளைஞன். சமூகக் கோபங்களை உள்ளுக்குள் தேக்கி வைத்துக் கொள்ளத் தெரியாத ஒரு பைத்தியக்காரன். அநீதிகளின் முகங்களுக்கு முன் கை நீட்டி கேள்வி கேட்க விரும்பும் ஒரு கலகக்காரன். நான் பிறந்து வளர்ந்த ஒரு மண்ணிற்கு கூப்பிடு தூரத்திலிருக்கும் என் இரத்த உறவுகள், மனிதர்களாய் ஜீவிக்க போராடிப் போராடி செத்து மடிந்த சோகத்தைக் கண்டு வெடித்து அழுதவன்.......அந்த அழுகையின் சப்தத்தை சக மானுடர

ஆன்மாவின்....பயணம்! இறுதி பாகம்..!

PREVIEW சராசரியான நிகழ்வுகளில் மிக திருப்தியான ஒருவன்....எல்லாவற்றையும் விட்டு விலகி இருக்க ஆசைப்பட்டு... ஒரு பத்து நாட்கள் வீட்டை விட்டு வெளியேற திட்டமிட்டு கடிதம் எழுதிவைத்து விட்டு வெளியேறுகிறான். அதற்கப்புறமான அவனின் மனோநிலை.. உலகம் பற்றிய பார்வை....இவனைப்பற்றிய உலகத்தின் பார்வை...இப்படியாக நகரும்....கதை.....இந்த ஒன்பதாவது பாகத்திலும் தொடர்கிறது... திருப்புமுனைகளோடு கூடிய கதை எதிர்பார்த்து படிக்க விரும்புவர்கள்....எனது பதிவுகளை தவிர்த்து விடல் நலம். ஏனென்றால் என் பதிவுகள் முழுக்க முழுக்க என்டர்டெயின்மென்டை நிச்சயமாய் கொடுக்காது. உங்களின் நேரம் அனுமதிக்கும் பொழுது இதற்கு முன் உள்ள பாகங்களையும் படித்துக் கொள்ளுங்கள்....! இதுவரை... பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV பாகம் V பாகம் VI பாகம் VII பாகம் VIII இனி... அப்போது... எண்ணங்களற்று இருந்தேன், உடலற்று இருந்தேன், உயிர் என்ற ஒன்றை உணர்வாய் கொண்டிருந்தேன். நான் என்ற எண்ணமற்று விரவி, பரவிய எல்லாமாய் ஒட்டு மொத்த நகர்வாய் மிகப்பெரிய இயக்கமாய் ஏதோ ஒரு உத்வேகத்தில் இன்னதென்று சொல்ல முடியா, கேட்க ஆளில்லா வேகத்தில் என்னுள் நானே பல்கி

நானே நானாய்.....!

நிலவின் அழகில் தடுமாறி தளும்பி கிறங்கிக் கிடந்த ஒரு குளக்கரை இராத்திரியின் நிசப்த நிமிடங்களுக்குள் நான் ஊறிக் கிடந்தேன்...! மொழிகளின்றி இரைச்சலாய் பேசிக் கொண்டிருந்த தூரத்து மலைகளை ஒற்றிக் எடுத்துக் கொண்டிருந்த வாடைக் காற்றின் ஓரத்தில் ஒட்டிக் கொண்டு பறந்த ஒற்றைக் குயிலின் சப்தம் என் காதுகளை தடவிச் செல்கையில் கிறங்கிக் கிடந்த என் விழிகளை அடைத்து மூடி எங்கோ ஒரு கனவு வெளிக்கு இழுத்துச் செல்ல காத்திருந்த இமைகளை மெல்ல பிரித்தெடுது மீண்டும் மூழ்குகிறேன்... அந்த மோன நிலைக்குள்...! கேட்கவும் சொல்லவும் யாருமற்று... தேவைகள் எல்லாம் தொலைந்து போன பிரபஞ்சத்தின் சொர்க்க இராத்திரியின் நிமிடங்களில் மானுடனாய் ஜனித்ததின் அர்த்தங்களை எல்லாம் கை குவித்து நீர்பருகும் தாகக்காரனாய் விழி குவித்து காட்சிகளாய் பருகிக் கொண்டிருந்தேன்.. மெளனத்தின் உச்சத்திற்கு துணை தேவையில்லை... சரித்திரத்தின் பக்கங்களுக்குத்தான் நிகழ்வுகளின் அழுத்தங்களும் மனிதர்களின் நகர்வுகளும் அவசியமாகின்றன... கருக் கூடி ஜனிக்கையில் உரு மறைந்து மரிக்கையில் அற்றுப் போகும் வாழ்க்கையில் இடையில் துளிர்

ஆன்மாவின்.... பயணம்! பதிவுத் தொடர் பாகம் VIII

PREVIEW சராசரியான நிகழ்வுகளில் மிக திருப்தியான ஒருவன்....எல்லாவற்றையும் விட்டு விலகி இருக்க ஆசைப்பட்டு... ஒரு பத்து நாட்கள் வீட்டை விட்டு வெளியேற திட்டமிட்டு கடிதம் எழுதிவைத்து விட்டு வெளியேறுகிறான். அதற்கப்புறமான அவனின் மனோநிலை.. உலகம் பற்றிய பார்வை....இவனைப்பற்றிய உலகத்தின் பார்வை...இப்படியாக நகரும்....கதை.....இந்த எட்டாவது பாகத்திலும் தொடர்கிறது... திருப்புமுனைகளோடு கூடிய கதை எதிர்ப்பார்த்து படிக்க விரும்புவர்கள்....எனது பதிவுகளை தவிர்த்து விடல் நலம். ஏனென்றால் என் பதிவுகள் முழுக்க முழுக்க என்டர்டெயின்மென்டை நிச்சயமாய் கொடுக்காது. உங்களின் நேரம் அனுமதிக்கும் பொழுது இதற்கு முன் உள்ள பாகங்களையும் படித்துக் கொள்ளுங்கள்....! இதுவரை... பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV பாகம் V பாகம் VI பாகம் VII இனி... தொடுத்த கேள்விக்கு பதில் தேடி எங்கும் புறப்பட்டுச் செல்லா மனம்  அந்தப் பெரியவரின் பாதங்களில் ஒரு நாய்க்குட்டியாய் பணிந்து கிடந்தது. அது பூம்பாறைக் காடு என்று அவராலேயேதான் அறிய முடிந்தது. தேடியதைக் கண்டாயா....? என்ற கேள்விக்கு கண்டேன் என்ற பதிலும், காணவில்லை என்ற பதிலும் எனக

அட்ச்சேன்..மூஞ்சி பேந்துடும்....!

மருவாத இல்லாம பேசுன மூஞ்சப் பேத்துடுவேன்...இன்னாடா...இன்னா நெனச்சுகினு கீற...! காத்தால எனிச்சு கடலுக்கு போனா நைட்டு வெளக்கு வக்கிற டைமுக்கு வந்து ஒரு வா சோறு துன்ன முடியல... ங்கோத்தா பொழுதேனிக்கும் பஞ்சாயத்து... குந்திகினுகிறது கூர வூடு இத்துல ஓன் எடத்துல கொம்ப வெக்க கூடாது வலையபோடக் கூடாது.... இன்னாத்துக்கு பேஜாரு பண்ணிகினு கீற.. எலே பன்னீரு.. வாணாம் போயிரு..அப்பால காது மேல நாலு போட்டேன்...காது பிஞ்சுடும்....ச்ச்சீ போ... இன்னாட பெரிய மயிரா நீ.. இவுரு பெரிய கலிட்டரு...இவுரு சோறு துன்ன சொல்ல நாங்க ஒண்ணியும் சொல்லக் கூடாது. சொம்மா சீனு போட்டுகினு கீற... இன்னாதுக்குடா ஏன் வூட்டு வாசல்ல வந்து பொருள போடுறீங்கோ.....இருக்கறது தம்மாத்துண்டு இடம்.. என்னமோ சேப்பாக்கம் ஸ்டேடியத்துல குந்திக்கினு குடியிருக்கற மாறி....தெரு வாசல் புல்லா அம்புட்டு பொருளையும் போட்டு வைக்கிறா... நாங்க எல்லாம் துன்ன வேணாம், கழுவ வேணாம்.. ஏன் வூட்டு வாசல்ல ங்கோத்தா இனிமே ஏதாச்சும் பொருளு கெடந்துச்சு.. தூக்கி கடல்ல கடாசிடுவேன்....ஹ..க் ஆம்...மைக்கேலு மயிருன்னெல்லாம் பாக்கமாடேன்...ஆமா ஏய்... பேமானி....இப்

அலுத்துதான் போகிறது...!

அலுத்துதான் போகிறது அன்றாட சராசரிகளோடு நித்தம் மல்லுக்கட்டும் டைம் டேபிள் வாழ்க்கை! என்றேனும் ஒரு நாள் கூடு விட்டு கூடு பாய்ந்து அந்தக் குயிலுக்குள் ஊடுருவ வேண்டும் யாருமற்ற வனமொன்றில் அலுக்கும் வரை கூவி, கூவி காற்றின் ஸ்பரிசங்களோடு காதல் செய்ய வேண்டும்! ஒரு மரத்தின் இலையாய் மாறி... ஆடி, அசைந்து நடனமாடி பழுத்து, சருகாகி காற்றில் பறந்து மண்ணில் விழுந்து மெளனமாய் மட்கியே... போக வேண்டும்...! ஒரு மழைக்குப் பின்னான வானவில்லாய் கண நேரம் ஜொலித்து விட்டு வானத்தின் பெருவெளியில் கரைந்தே போகவேண்டும் காற்றில் பறக்கும் ஒரு பஞ்சாய் மாறி இடம் சென்று; வலம் திரும்பி; மேலெழும்பி; கீழ் தவழ்ந்து அங்கும் இங்கும்... அலைந்து, அலைந்து உதிர்ந்து போகவேண்டு! அடர் கானகத்தின் வெறுமையினை சுமக்கும் பேரமைதியாய் படுத்துக் கொண்டு காட்டு மலர்களோடு சல்லாபிக்க வேண்டும்..! இப்படியாய்... எல்லாமாகும் ஏக்கத்தில் லயித்து, லயித்து வார்த்தைகளை கோர்த்தெடுத்து வடிக்கும் கவிதை முடித்த நிறைவோடு.. மரித்துப் போகவும் வேண்டும்..! ஆமாம்... அழுத்துதான் போகிறது அன்றாட சரா

ஆன்மாவின்.... பயணம்! பதிவுத் தொடர் பாகம் VI I

PREVIEW சராசரியான நிகழ்வுகளில் மிக திருப்தியான ஒருவன்....எல்லாவற்றையும் விட்டு விலகி இருக்க ஆசைப்பட்டு... ஒரு பத்து நாட்கள் வீட்டை விட்டு வெளியேற திட்டமிட்டு கடிதம் எழுதிவைத்து விட்டு வெளியேறுகிறான். அதற்கப்புறமான அவனின் மனோநிலை.. உலகம் பற்றிய பார்வை....இவனைப்பற்றிய உலகத்தின் பார்வை...இப்படியாக நகரும்....கதை.....இந்த ஏழாவது பாகத்திலும் தொடர்கிறது... திருப்புமுனைகளோடு கூடிய கதை எதிர்ப்பார்த்து படிக்க விரும்புவர்கள்....எனது பதிவுகளை தவிர்த்து விடல் நலம். ஏனென்றால் என் பதிவுகள் முழுக்க முழுக்க என்டர்டெயின்மென்டை நிச்சயமாய் கொடுக்காது. உங்களின் நேரம் அனுமதிக்கும் பொழுது இதற்கு முன் உள்ள பாகங்களையும் படித்துக் கொள்ளுங்கள்....! இதுவரை... பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV பாகம் V பாகம் VI இனி... மெல்ல மெல்ல ஆழமான சுவாசத்தோடு ஓ...........ம் நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை யாரோ உச்சரிப்பது தெளிவாய் கேட்ட உடன்.. உடலுக்குள் மின்சாரம் பாய ஆரம்பித்தது. கிட்டத் தட்ட நடு வானுக்கு நிலவு வந்திருந்த நேரம்.... சுற்றிலும் காற்று மெலிதாய் வீசிக் கொண்டிருந்த போதிலும் மரங்கள் எல்லாம் மெளனமா