Skip to main content

சாதியே.....உன்னை வெறுக்கிறேன்....!






















தேடலின்(01.06.2010) நீட்சியாக கடந்த பதிவினை இடும்படி ஆகிவிட்டது ஆனால் அந்த பதிவுக்கு வந்திருக்கும் பின்னூட்டங்களும் அடுத்த கியரை போட்டு எங்கேயோ தூக்கி செல்ல முயன்றது. மீண்டும் மீண்டும் ஒரே களத்தை சுற்றிவர எனக்கு விருப்பமில்லை மேலும் தேடலுக்கான சுவிட்ச் போட்டாயிற்று இனி தமக்கான தீர்வை அவரவரின் அனுபவத்திற்கு ஏற்ப அவரே தீர்மானிக்கட்டும். அறிவே மிகச் செறிந்த ஆசான் வழிகாட்டி....திறந்த மனத்தோடு இருப்பவர்களுக்கு புது புது விசயங்கள் நாளும் கிடைக்கும். சரி.........அடுத்த களத்திற்கு நகர்வோம்....!

கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த நேரம் சித்தி வீட்டில் நடந்த ஒரு விசேசத்திற்கு வந்துவிட்டு பக்கதில் 6 கிலோ மீட்டரில் இருக்கும் அம்மாவின் சொந்த ஊருக்கு செல்ல பேருந்தில் ஏறிய எனக்கு நெரிசலில் மூச்சு முட்டியது. கிராமப்புறங்களில் இயங்கும் டவுன் பஸ் என்று சொல்லக்கூடிய பேருந்துகளில் பயணம் செய்வது கொஞ்சம் எரிச்சல்தான் இருந்தாலும் அதன் அனுபவம் அலாதியானது.

காளையார்கோவில் சந்தைக்கு வந்தவர்கள் எல்லாம் கருவாட்டையும்...மீனையும் பைகளில் வைத்துக் கொண்டு ஏறியதில் பேருந்து முழுதும் நல்ல வாசனை..(பிடிக்காதவங்களுக்குதானே அது நாற்றம்...ஹா ஹா ஹா). அக்னி வெயில் படுத்தியபாட்டில் காற்று ஈரப்பததையெல்லாம் சூரியபகவானுக்கு படைத்து விட்டு....வறட்டு சூட்டோடு இருந்ததால் பேருந்தின் உள்ளே வியர்வைக்கும் பஞ்சமில்லை. வெளியே இருந்து கர்சீப், சாமான்கள் வாங்கி வந்த மஞ்சப்பை, கடகம் (ஒரு டைப் ஆன ஓலைப்பெட்டிங்க...)என்று ஆளாளுக்கு சீட்டில் விசிறியெறிந்து இடம் போட்டு இருந்தார்கள். பேருந்தின் ஜன்னல் வழியே ஒருவர் தன் 5 வயது மகனை உள்ளே நுழைத்துக் கொண்டிருந்தார் இடம் பிடிக்க.....!

பெரிய பெரிய கிருதாக்களும், முறுக்கிவைடப்பட்ட மீசைகளும், கம்யூனிஸ்ட் (சிவப்பு துண்டுங்க...அப்படீன்னா கம்யூனிஸ்ட் தானே....????) பெரிய பெரிய காதுவளர்த்து தண்டட்டை போட்ட ஆச்சிகளும் அப்பத்தாக்களும் நிறைந்த அந்த பெருந்தில் என் கல்லூரிக்கால கண்கள் தேடியது ஏதாவது ஒரு பிகராச்சும் வண்டில இருக்குமான்னு? தேடித்தேடி..யாரும் கிடைக்காமல் நான் நின்ற எரிச்சல் தெரியாமல் கண்டக்டர் வேறு உள்ள போங்க...(மருது பாண்டியர் அரசு பேருந்துங்க...) உள்ளே போங்கன்னு உயிர எடுக்குறாரு மனுசன்...!எங்கயா போறது இதுக்கு மேல உள்ளே...என்று சொல்ல நினைத்து திரும்பிய போது...வடை எடுக்கப் போய் மாட்டி கொண்ட எலிமாதிரி அந்தக் கூட்டத்தில் மாட்டிக் கொண்டு டிக்கெட் கிழித்து கொடுத்துக் கொண்டிருந்தார்....சட்டை நனைந்து போயிருந்தது....அடப்பாவமே....என்று நினைத்துக் கொண்டிருந்த என்னை உலுப்பி திரும்பச் செய்தது ஒரு முரட்டுக் குரல்...

" யோவ் கண்டக்டர்.....காய ஓடை முக்கு வண்டி நிக்கதின்னியாமே ...? என்ன ஏழரைய கூட்றியா....வண்டி நிக்கலேன்னா...உன்ன எறக்கி நிக்கவச்சுறுவோம்டி......என்ன அப்பு சூதானமானே இருக்குறிய..." கலக்கமுடன் திரும்பிப் பார்த்த கண்டக்டர் கேட்டவரின் மீசையை பார்த்து மிரண்டவராய் இன்னிக்கு நிறுத்தறேண்ணே....டெய்லியும் முடியாதுண்ணே...அங்க ஸ்டாப்பிங்க இல்லண்ணே... என்றார்.....அதற்கும் மீசை முறுக்கியவர் ஏதோ சொல்லி அதட்டிக் கொண்டிருந்தார். " டேய் வண்டிய எடுங்கடா...வெயில்ல போட்டு வச்சிக்கிட்டு என்னதேன் செய்வாய்ங்களோ...***** (சொல்லகூடாதா பிரபல கெட்ட வார்தை) வண்டிய எடுங்கடா ....டேய்..." யாரோ ஒருவர் கத்த...பேருந்தில் இருந்த சனமும் ஒருசேர கோரசாக...கத்த...வெளியில் சிகரெட் பிடிச்சுகிட்டு இருந்த ஓட்டுனர் வண்டியில் ஏற...ஒரு வித மகிழ்ச்சி எல்லோருக்குள்ளும் பரவியது....!

பல நேரங்களில் வண்டியின் நடத்துனர்கள் நம்மைபடுத்தினாலும் இது போன்ற கூட்ட நெரிசலில் ஒற்றை ஆளாய் டிக்கெட் போட்டு இன்வாய்ஸ் எழுதி, வழியி ஏறும் செக்கர்களையும் சமாளித்து, வண்டியில் இருக்கும் பயணிகள் ஒரு டிக்கெட் எடுத்துவிட்டோம் என்பதாலேயே பேசும் ரூல்சுகளைக் கேட்டுக் கொண்டு ....தினம் தினம் இவர்கள் படும் பாடு ரொம்ப கொடுமையானது. இப்படிப்பட்ட நடத்துனர்கள் மிகவும் கவனிக்கப்படவேண்டியவர்கள்...மக்களும் இவர்களை தமக்கு ஊழியம் செய்யும் பணியாளர் என்ற மரியாதையுடன் நடத்த வேண்டும். பேருந்து இயக்குபவர்களும்( அரசு மற்றும் தனியார்) இவர்களுக்கு முறையான ஊதியம் கொடுக்க வேண்டும். சரி.....சரி... நாம் பயணிக்க வேண்டிய இலக்கு இதுவல்ல அதனால்........மீண்டும் பேருந்துக்குள் வருவோம்.....

இந்திய ஜனத்தொகையை விளக்கும் அடையாள சின்னமாய்....பலதரப்பட்ட மக்களையும் சுமந்து கொண்டு மெல்ல மெல்ல ஊர்ந்து கடமையை பேருந்து ஆற்றிக் கொண்டு இருந்தது. ஒவ்வொருமுறை ஓட்டுனர் கியர் மாற்றும் போதும் அந்த இடியே வந்து விழுவது போல சத்தம் கேட்டது....! ஒரு சீட்டின் கம்பியை பிடித்துக் கொண்டு வெளியே இருந்து வலுக்கட்டாயமாய் உள்ளே வந்த காற்றை அனுபவித்துக் கொண்டிருந்தேன்....அதில் கருவாட்டு வாசனை வெளியே போனது மட்டும் கொஞ்சம் கவலையாய் இருந்தது.....அப்போது.....

" கும்பிடுறேன்....ஐயா மகனே......." யாரோ தோள் தொட்டுத் என்னைத் திருப்ப....திடுக்கிட்டு திரும்பினேன்.....!


யோவ்.... தலைப்புக்கும் பதிவுக்கும் ஒண்ணுமே சம்பந்தமில்ல.....என்று யாரோ என்னை திட்டுவது கேக்குது....இதன் தொடர்ச்சியான அடுத்த பதிவில...சம்பந்தப்படுத்திடுவோம்ங்க....)


(என்ன பண்ணச் சொல்றீங்க....வழக்க்கப் போல அடுத்த பதிவில் முடிச்சுடுறேங்கோ.........till the time please stay with me......)


தேவா. S

Comments

யோவ்.... தலைப்புக்கும் பதிவுக்கும் ஒண்ணுமே சம்பந்தமில்ல.....என்று யாரோ என்னை திட்டுவது கேக்குது....இதன் தொடர்ச்சியான அடுத்த பதிவில...சம்பந்தப்படுத்திடுவோம்ங்க....)


நான் சொல்லாம் நினைத்தேன் நிங்களே சொல்லிடிங்க
விஜய் said…
அண்ணா திடீர்னு பிரேக்க போட்டு பேருந்து நிப்பாட்டுன மாதிரி நிப்பாட்டி புடீங்கலே அண்ணா ..........
சொல்லுறதுக்கு ஒன்னுமில்ல நெக்ஸ்ட் பதிவுல மீட் பண்ணுறேன்.
publica titta vendaamam
\\கும்பிடுறேன்....ஐயா மகனே......\\

தலைப்பிற்கு சம்பந்தம் வந்துட்டுது :)))
சாதி பற்றி படிக்க வந்தா.. இப்படி
சதி பண்ணிட்டீங்களே..!
அறிவுலக ஆசான்,பகுத்தறிவு பகலவன் தந்தைபெரியாரின் புகைப்படத்தை வெளியீட்டமைக்கு நன்றி.தமிழ் சமுதாயத்திற்கு இவர் ஆற்றிய பங்கு அதிகம். மூடநம்பிக்கைகளையும்,கடவுள்களையும் ஒழித்து மனிதன் மனிதனாக வாழ வழி செய்தவர். பெண்ணடிமை தனத்தை அறவே ஒழித்தவர். ஆண்களுக்கு நிகராக பெண்களும் அனைத்து துறையிலும் வர வேண்டும் என்று ஆசைபட்டவர். அந்த ஆசையும் நிறைவேறிக்கொண்டிருக்கிறது.கடவுளை மற என்று சொன்ன பெரியார் மனிதனை நினை என்று சொன்னார். காரணம் பக்தி இல்லை என்றால் ஒன்றும் பிரச்சனையும் இல்லை.ஆனால் ஒழுக்கம் இல்லை என்றால் எல்லாம் பாழாகிவிடும் என்று எச்சரிக்கை செய்தவர். இப்படி தந்தைபெரியார் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்...
நண்பர் தேவா அவர்களே. உங்கள் மன தைரியத்தை நான் பாராட்டுகிறேன்.எத்தனையே தமிழர்கள் இணையத்தில் எழுதி வருகிறார்கள். ஆனால் சில பேர்தான் தைரியமாக பெரியாரை ஆதரிக்கிறார்கள். அவரின் உழைப்பு இல்லை என்றால் இவர்கள் இன்று பேனா பிடித்து எழுதமுடியாமா என்பதுதான் என் கேள்வி? அப்பன் பாட்டன் செய்த தொழிலைதான் அவன் மகனும் செய்ய ஆணையிட்டு அகமகிழ்தான் பார்ப்பான்.ஆனால் நம்மை அடிமைபடுத்தி வைத்தவர்களையும் அவரிகளின் சூழ்ச்சிகளையும் எதிர்த்து போராட்டம் செய்து அதில் வெற்றியும் கண்டவர் தான் தந்தைபெரியார். உங்களை போன்ற பகுத்தறிவாதிகளால் மட்டுமே அவரை பற்றி உணர முடிகிறது... அவரை பற்றி அடுத்த கட்டுரையில் என்ன சொல்ல போறீங்க என்பதை நானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் மற்ற தோழர்களுடன்.

தமிழா இன உணர்வுகொள்.
நல்லா வைக்கிறீங்க சஸ்பென்ஸ்.
இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியல . திடீர்ன்னு தொடரும் போடறதை சொன்னேன் :-))
சிலுக்கபட்டி டவுன் பஸ்சுல ஏறுனீங்களா பாஸ்??
சொல்ல மறந்துட்டேன். உங்களை வலைச்சரம் பக்கத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறேன்.

http://blogintamil.blogspot.com/2010/06/palsuvai.html
மதார் said…
நான்கு மாதங்கள் முன்பு , இதே காளையார் கோவில் தோழி கல்யாணம் போக ஒரு பேருந்து டிரைவர் கிட்ட மதுரையில் பஸ் எப்போ கிளம்பும் என்று கேட்டு காலையிலேயே கெட்ட வார்த்தையில் அர்ச்சனை வாங்கினேன் .அந்த பஸ்ல ஏதோ வயர் கட் ஆனதுக்கு நான் என்னங்க பண்ணுவேன் ?
டிவி சீரியல் மாதிரி தொடரும் போடுறீங்களே...! இது ஓவர் மீதி கமண்டு அடுத்த பதிவில் தொடரும் ....வாழ்த்துக்கள்
ஹேமா said…
தேவா...சரி சரி தொடரட்டும்.
அனு said…
என்னங்க இப்படி அடிக்கடி சஸ்பென்ஸ்ல கொண்டு வந்து நிறுத்திடுறீங்க..

சந்தைக்கு போகனும்.. ஆத்தா வையும்.. சீக்கிரம் மீதி கதய சொல்லுங்க..
dheva said…
சவுந்தர் @ நீங்க கேப்பிங்கன்னுதான் தெரியுமே அப்பு...!

விஜய் @ நாளைக்கே வண்டிய எடுத்திடலாம்...!

ஜீவன் பென்னி @ அடுத்த பதிவுக்கு சீறுவீங்களோ? பயமா இருக்கே...!

கார்த்திக் @ யாரையும் திட்டப் போறது கிடையாது கார்த்திக்....ஹா ஹா...ஹா!

நிகழ்காலத்தில் @ கரெக்டா கேட்ச் பண்ணீட்டீங்க....பாஸ்!

அமைதி அப்பா @ அடுத்த பகுதியில... நீங்க சந்தோசப்படுற மாதிரி செய்துடுவோம்...!

வீரா @ மிக்க நன்றி


ஜெயந்தி...@ நன்றி சகோதரி!


ஜெய்லானி....@ எல்லாம் ஒரு த்ரில்லுக்குத்தான் பாஸ்!

ரோஸ்விக் @ வலைச்சரத்தில் என்னையும் சேர்த்ததற்கு நன்றிகள் நண்பரே....! சிலுக்கப்பட்டி இல்லேங்க...மறவமங்கலம்....! நீங்க என்ன பருத்திகண்மாயா? சொல்லுங்க.....பாஸ்.. இப்போ நீங்கதான் சஸ்பென்ஸ் வைக்கிறீங்க....!

சரவணன் @ பழிக்குப் பழி வாங்குறீங்க....ஹா..ஹா...ஹா... நன்றி நண்பரே!

மதார் @ நன்றி... நண்பரே...!

ப்ரியமுடன் வசந்த் @ தொடர்ச்சியான வருகைக்கு நன்றி நண்பரே...!

ஹேமா ....@ எப்ப பாத்தாலும் இப்படியா பண்றதுன்னு கடுப்பா இருக்கீங்க போல...! நன்றி!

அனு @ ஆத்தா வையுமா....ஆத்தி ஏந்த ஊரு ஆளு நீங்க.....? ஆத்தாகிட்ட் சொல்லுங்க.. அப்பு டவுனுக்கு போயிருக்காக...வந்து மிச்சத்த சொல்லுரேனு சொல்லியிருக்கான்னு...! நன்றி அனு!
movithan said…
சரலாமான எழுத்து நடை.
சுவாரசியம் குன்றாத வரிகள்.
வாழ்த்துக்கள்.
Unknown said…
anna nanum kalayar kovilthan
Jayadev Das said…
Thiru விடுத‌லைவீரா avargale, kile ulla videokkalaip paarungal. inraikku ulla, munnaal vazhnthu maraintha pagutharivuvaathigal yentha alavukku avargal kolkaiyil uruthiyaaga irunthaarkal/irukkiraarkal enru theriyum.
[yella 35 videovum paarkkavum, romba interesting]

http://www.youtube.com/watch?v=Y5cYO4H2GOk&feature=watch_response

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த