Pages

Monday, September 6, 2010

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா?.....பதிவுத் தொடர் முடிவு!


ரஜினி படம் ரிலீஸ் மாதிரிதான் ரஜினி பற்றிய தொடரும்....ரொம்ப இடைவெளி விட்டு காத்திருக்க வேண்டியிருக்கிறது. அனேகமாய் இந்த பதிவோட இந்த தொடர் முடிவடையும்னு நினைக்கிறேன்...எழுத விசயங்கள் இருக்கின்றன என்பதை விட நமது யாக்கை எந்த தளத்தில் இருக்கிறது என்பதே முக்கியம்... நான்...பற்றில்லாமல் படர விரும்புவதே காரணம்.... சரி வாங்க தொடருக்குள் போவோம்...

இதுவரை

பாகம் I

பாகம் II

பாகம் III

பாகம் IV

பாகம் V


இனி....


சடாரென்று கதவைத் திறந்து வந்து பார்த்தால் கேட்டுக்கு வெளியே அப்பா வந்து கொண்டிருந்தார்.....கதவைத் திறந்து வீட்டுக்குள் பாய்ந்தேன்... டேப் ரெக்கார்டர் அணைக்கப்பட்டு...எல்லோரு கையிலும் கணக்கு நோட்டும் புத்தகமும் இருந்தது. அப்பா உள்ளே நுழையும் போது ஒரு குரூப் ஸ்டடிக்கான எல்லா தகுதியோடும் அந்த சூழல் இருந்தது. ரஜினியும் தளபதியும் உள்ளே போய் ஒளிந்த இடம் தெரியவில்லை.

தளபதி கேசட் வெளியீடு போலத்தான் எந்த ரஜினி படம் வந்தாலும் ஒரு வித பரபரப்பு தொற்றிக் கொள்ளும். தளபதி ரிலீஸ் நேரத்தில் நாங்கள் +1 படித்துக் கொண்டிருந்தோம்.... காலை 9 மணிக்கு பள்ளிக்கு செல்வது போல கிளம்பி யூனிபார்மோடு நாங்கள் போய் நின்றது அண்ணபூர்ணா தியேட்டர் டிக்கட் கவுண்டர்.. நாங்க மட்டும்தான் வந்து இருக்கோம்னு பார்த்தா... இருக்குற பசங்க புல்லா எங்க ஸ்கூல் பசங்க....காக்கி பேண்ட் வெள்ளை சட்டைனு பட்டுக்கோட்டை பாய்ஸ் ஹை ஸ்கூலே அங்கதான் இருக்கு.... என் கூட இருக்குற நண்பர்கள் எல்லாமே.. கமல் ரசிகர்கள்... நான் மட்டும் ரஜினிய ரசிக்கவும்..அவனுக எல்லாம் ரஜினிய ஓட்டவும் நிக்கிறானுக....

அடிச்சி புடிச்சி தியேட்டர்குள்ள போயாச்சு.... திரையில ரஜினின்னு வந்தவுடனே... நான் கத்திய கத்து எடுபடுறதுக்குள்ள தியேட்டரே கிழியுது... பின்னால இருந்து யாரோ... வருங்கால முதல்வர்.. ரஜினின்னு சொல்ல...வாழ்கனு கோசம்... என் பக்கதுல இருந்த தவ்லத்(நண்பன்)என் தொல்லை தாங்காமா சீட்ட மாத்திக்கலாமானு பாக்குறான்.. அவுங்க எல்லாம் கமல் ரசிகராம் டிசெண்டாதான் இருப்பாங்கனு வேற என்னைய எரிச்சல் படுத்துறான்... நான் கோபத்துல அப்டின்னா தியேட்டர விட்டு எழுந்து வெளியே போடான்னு அவன்கிட்ட சொன்னேன்...என்னை அவ்ளோ இன்டீசண்டா என் நண்பர்கள் அதுக்கு முன்னால பாத்து இருக்க மாட்டங்கனு நினைக்கிறேன்.....

பர்ஸ்ட் சீன்.. தலைவர்... ப்ளு கலர் சட்டை....மழைல ஒருத்தன அடிக்கிற சீனு.. அடி வாங்குறவனோட... முதுகு பக்கம் கேமரா இருக்கும் ரஜினி தெரியமாட்டார்.. மெல்ல மெல்ல கேமரா சுழன்று... ரஜினியின் முகம் புல் ஸ்கிரீன் முழுசா.....

சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஸ்டாடடடடடார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....தலைவாஆஆஆஆ...................


தொண்டைதான் கொஞ்சம் கிழிஞ்சு போகட்டுமேன்ற அளவிற்கு... எல்லோரும் கத்த..... தியேட்டர்....அதிருந்தது.....ஜாங்கு ஜக்கு ஜஜக்கு ஜக்கு ஜாங்கு ஜக்கு ஜா
ஓகே....ரஜினியின் ஆட்டம் கண்டு மிரட்சியில் ஆடத்தொடங்கியிருந்த 100 பேரில் நானும் ஒருத்தன்....


" நட்புன்னா...என்னனு தெரியுமா உனக்கு......? நண்பன்னா என்னனு தெரியுமா உனக்கு......சூர்யான்னா என்னனு தெரியுமா உனக்கு.....? " திரையில் ரஜினி கேட்க... வாழ்க்கையில் மறக்க முடியாத டயலாக்காய் மாறிப் போனது....

இதுதான் ரஜினிங்க...

அந்த மூமென்ட்ல சந்தோசமா இருந்தமா.. 100ரூபாய் டிக்கட் கொடுத்து பாக்க போற இல்ல 1000 ரூபாய் டிக்கட் எடுத்து பாக்கப் போற என்னை மாதிரி ரசிகர்கள் ரஜினி கோடிஸ்வரன் ஆகணும்னா நினைச்சுகிட்டு தியேட்டருக்கு போறோம்? இல்லை பாஸ்... நாம சந்தோசமா படம் பாக்கணும்னுதானே போறோம்....

ஆனா ரஜினியோட வாழ்கைக்கும் அவரு சோத்துக்கு நாமதான் உப்பு போட்ட மாதிரி அத்தாரிட்டி எடுத்துகிட்டு பேசுவோம்... தமிழ் மக்கள் உப்பை தின்னவர், நன்றி கெட்டவர்னு எல்லாம் பேசும் மனிதர்களின் சுயநலம்தான் டண் டண்ணா இருக்கும்...ஒரு பெட்டிக்கடை வச்சு பொருள் விக்கிற மனுசன் லாபம் சம்பாரிக்கணும்னு நினைக்கும் போது ரஜினி மாதிரி நடிகர்கள் லாபம் சம்பாரிக்கணும்னு நினைக்கிறதுல என்னதப்பு இருக்குன்னு தெரியல.....


ரஜினிக்கு ஏற்பட்டிருக்க்கும் டிமாண்ட்.....மக்களால் உருவாக்கப்பட்டது....! பாபா ஓடலை..ரஜினியின் நஷ்டத்துக்கு யாரு வருத்தப்பட்டா....? அதைத்தான் சொல்றார் அவர்.. .ஒரு நடிகனை திரையில ரசிங்க...வீட்டுக்கு கூட்டிட்டு வராதீங்க...!அம்மா அப்பாவ கவனியுங்கன்னு சொல்றார் நமக்கு கோவம் வருது.. ! அரசியலுக்கு வந்தா ரசிகர்கள்னு பேர சொல்லிகிட்டு நமக்கு ஏதாச்சும் ஆதாயம் கிடைக்குமான்னு எதிர்பார்த்துதானே அவர அரசியலுக்கு வர சொல்றாங்க.... ?

மீடியா தன்னோட சுய லாபத்துக்குதானே அவரை ஃப்ளாஸ் பண்ணி நீயூஸ் போடுறாங்க? அவர் எத்தனை தடவைதான் சொல்றது.. நான் அரசியலுக்கு வரலை...வரலைன்னு, திரையில பேசுறத நீங்க நம்பாதீங்கன்னு... இதுக்கு மேல ஒரு மனுசன் எப்படிதான் சொல்றது...

இத்தனை கோடி தமிழர்கள் இருந்துகிட்டு பக்கத்து நாட்டுல தமிழன கொன்னழிச்சப்பா ஒண்ணும் செய்யமுடியல! அரசாங்கம்...கை கட்டி மத்திய அரசுக்கு கடிதாசி எழுதிகிட்டு இருந்துச்சு...ஆனா எந்த பிரச்சினையாய் இருந்தாலும் ரஜினி ஒரு கருத்து சொல்லலேன்ன இல்ல சொல்லிட்டா அவர் வேற்று மாநிலக்காரர்னு சொல்லி அல்லோலகல்லோல படுத்த வேண்டியது....

சினிமா நடிகர்கள் சினிமால சிகரெட் குடிக்க கூடாது மது அருந்த கூடாதுன்னு சொல்ற அரசியல் தலைவர்கள் எத்தனை பேரு குடிக்காம இருக்காங்க? எத்தனை பேரு டாஸ்மாக் வாசல்ல உக்காந்து அறப்போராட்டம் நடத்தி இருக்காங்க?

மக்களே...!பத்திரிக்கைகளே...! இன்ன பிற ஊடகங்களே...! இவர்கள்தான் நாட்டை திருத்த வந்த அரசியல்வாதிகள் இவர்களிடம் எதிர்பாருங்கள் தமிழகத்தின் எதிர்காலத்தை... ஏன் ஒரு சினிமா நடிகனிடம் அதுவும் அரசியலுக்கு வரமாட்டேன் என்று சொல்லும் நடிகரிடம் எல்லாம் எதிர் பார்க்கிறீர்கள்...? படம் பிடிக்கவில்லை என்றால் தியேட்டர் விட்டு குப்பைக்கு போகும் நேரத்தில் வாழவைக்கும் தெய்வங்கள் போய் தோற்றுப் போய் பிச்சை எடுக்கும் நடிகரை காப்பாற்றவா போகிறார்கள்....? இல்லையே....

3 மணி நேரம் படம் பார்த்து விட்டு ஒரு நடிகனின் வாழ்க்கையையே குத்தகை எடுத்து அலசும் அநியாயம் இங்குதான் நடக்கிறது, கேட்டா பொது வாழ்க்கைனு வந்துட்டா விமர்சனத்தை தாங்கிதான் ஆகணும்னு அதிக பிரசங்கித்தனமான பேச்சு வேற...

அவர் படத்தை பத்தி விமர்சனம் செய்யுங்க....தவறானா கருத்து சொன்னா கிழி கிழின்னு கிழிங்க..ஆனா...அவர் வீட்டு பெட்ரூம் தலையணை கவர் கலர் சரியில்லைன்ற ரேஞ்சுக்கு போய்.....பர்சனல் விசயங்களை செய்தியா மாற்றுவது.....கேவலாமான செயல் என்ற எண்ணம் கூட இல்லாமல் இருப்பதற்கு பொது புத்தி கற்பித்திருக்கும் சில தவறான கற்பிதங்கள் தானே காராணம்?

அந்த பொது புத்தியும் கற்பிதமும் ரஜினியின் மகள் திருமணம் வரை வந்து விமர்சிக்கிறது.


சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா.................


தன்னுடைய திறமையால் ஸ்டைலால், நடிப்பால், உச்சத்துக்கு வந்தாலும்...அது பற்றிய அகங்காரம் இல்லாமல் இருக்கும் ஒரு மனிதர்.....அவர் வேலைய அவர் பாத்துட்டு இருக்கார்.... டைம் பாஸுக்கு படம் பாத்துட்டு வீட்டுக்கு வந்து நம்ம வேலைய பாக்காமா அவரை குறை சொல்லிட்டு இருக்கோம்...

புடிச்சா படம் நல்லா இருக்கு இல்லேனா மறந்துட்டு அடுத்த வேலைய பார்க்கமா சினிமா தியேட்டரை கட்டி இழுத்து வீட்டுக்கும் ஆபிசுக்கும் கொண்டு வந்தா நம்ம பொழப்ப யாரு பாஸ் பாக்குறது?


(முற்றும்)தேவா. S

35 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

enthiran ticket kidaikkuma?

பதிவுலகில் பாபு said...

சும்மா தீ பறக்குதுங்க பதிவுல.. அருமையா இருக்கு.. இந்தத் தொடரை இப்போதான் படிக்கறேன்..

சூப்பர் ஸ்டார் பத்தி எழுதியிருக்கீங்க.. சூப்பர்.. சூப்பர்..

சௌந்தர் said...

இது முற்றும் அல்ல எந்திரன் பார்த்த அனுபவம் வரும்....இந்த மாதம் விரைவில்

ப.செல்வக்குமார் said...

///+1 படித்துக் கொண்டிருந்தோம்.... காலை 9 மணிக்கு பள்ளிக்கு செல்வது போல கிளம்பி யூனிபார்மோடு நாங்கள் போய் நின்றது அண்ணபூர்ணா தியேட்டர் டிக்கட் கவுண்டர்.. ///

ஓ , நீங்க ஆப்பவே அப்படியா ..?

ப.செல்வக்குமார் said...

///பர்ஸ்ட் சீன்.. தலைவர்... ப்ளு கலர் சட்டை....மழைல ஒருத்தன அடிக்கிற சீனு.. அடி வாங்குறவனோட... முதுகு பக்கம் கேமரா இருக்கும் ரஜினி தெரியமாட்டார்.. மெல்ல மெல்ல கேமரா சுழன்று... ரஜினியின் முகம் புல் ஸ்கிரீன் முழுசா....///

நீங்க +1 ல பாஸ் ஆனீங்களா ..? எனக்கென்னமோ சந்தேகமா இருக்கு ..?

///3 மணி நேரம் படம் பார்த்து விட்டு ஒரு நடிகனின் வாழ்க்கையையே குத்தகை எடுத்து அலசும் அநியாம் இங்குதான் நடக்கிறது,///
இந்த கொடுமை தான் அண்ணா கேவலமாக இருக்கிறது .. அவரும் ஒரு மனிதர்தானே , அவருடைய தனிப்பட்ட வாழ்கையை எதற்க்காக கிளறுகிறார்கள் ..

dheva said...

தம்பி ஃபாதிக், நண்பர் வேலு, தம்பி விந்தை மனிதன், மற்றும் தோழி மஹி கிரேனி.... உங்க கருத்துக்கள் கடந்த போஸ்ட்ல ரொம்ப நேர்மையா இருந்துச்சு...உங்கள் கருத்துகளுக்கு செவி மடுத்திருக்கிறேன்.....மிக்க நன்றிகள்!

dheva said...

செளந்தர்...@ எந்திரன் அனுபவம் வரமாலா.. கண்டிப்பாய் வரும்...!

r.selvakkumar said...

பல நியாயமான கருத்துகளுடன், கோபம் தெறிக்கிறது உங்கள் வரிகளில்!

நாஞ்சில் பிரதாப் said...

//அவுங்க எல்லாம் கமல் ரசிகராம் டிசெண்டாதான் இருப்பாங்கனு வேற என்னைய எரிச்சல் படுத்துறான்..//

உண்மைதானே மாம்சு... நாங்கல்லாம் படு டீசன்ட்டு...:))ரைட் ரைட்...

dheva said...

நாஞ்சில்..@ வந்துட்டன்யா வந்துட்டன்யா.. ...

ஏன் மாப்ஸ் லாஸ்ட்டா சூப்பர் ஸ்டார் பதிவுக்கு வந்து கும்மியடிச்சு வச்சுட்டு போன...இப்பொ மருபடியும்.. மகராசனா இருப்பா... ரொம்ப டீசண்ட்தான்...!

என்னது நானு யாரா? said...

தேவா! இது உங்களுக்கு இன்னொரு முகமா? தெரியவே தெரியாதே எனக்கு!

வித்தியாசமான ரஜினி ரசிகர் முகம் மிகவும் எளிமையா இருக்கிறார். வார்த்தகளும் எளிமை. வாழ்த்துக்கள் தேவா!!!

உங்கள் மீது கோபம் எனக்கு தேவா. என் கடைபக்கம் வந்து எதையும் சரி தப்புன்னு சொல்றதே இல்ல. ஆனா ஓட்டு மட்டும் போடறீங்க. இது என்ன நியாயம்.

பதிவுகளை பற்றிய உங்க விமர்சனங்களை எதிர்பார்கின்றேன். கண்டிபா வந்து விமர்சனம் தரணும்னு கேட்டுகொள்கிறேன் தேவா!

Riyas said...

ஒரு நடிகனை திரையில ரசிங்க...வீட்டுக்கு கூட்டிட்டு வராதீங்க...!அம்மா அப்பாவ கவனியுங்கன்னு சொல்றார் நமக்கு கோவம் வருது..
சரியா சொன்னிங்க.. சினிமா என்பது ஒரு பொழுது போக்கு மட்டும்தான் அதை பார்த்தால் அத்தோடு விட்டுவிடவேண்டியதுதான்.. குறித்த நடிகனை தலையில் தூக்கிவைத்து கொண்டாட எல்லாம் தேவையில்லை.. அவருடைய தொழில் நடிப்பது நாம் விரும்பினால் பார்க்கலாம் இல்லை விட்டுவிடலாம் எந்த நடிகனும் தன் படத்தை பார்க்கும் படி வற்புறுத்துவதில்லையே..

பஹ்ரைன் பாபா said...

அட நீங்க நம்ம ஆளா.. அனல் கக்குதுங்க.. அடிக்கடி வர்றேன்..
//அவுங்க எல்லாம் கமல் ரசிகராம் டிசெண்டாதான் இருப்பாங்கனு வேற என்னைய எரிச்சல் படுத்துறான்..//
அவிங்க இன்னுமா திருந்தல..
" நான் கோபத்துல அப்டின்னா தியேட்டர விட்டு எழுந்து வெளியே போடான்னு அவன்கிட்ட சொன்னேன்...என்னை அவ்ளோ இன்டீசண்டா என் நண்பர்கள் அதுக்கு முன்னால பாத்து இருக்க மாட்டங்கனு நினைக்கிறேன்.....
"
சும்மா நச்சுன்னு இருந்திச்சி..

இம்சைஅரசன் பாபு.. said...

தேவா அண்ணன் நீங்களும் ரஜினி ரசிகன் என்று தெரிந்ததும் ரொம்ப சந்தோசம் . அவருடைய ஸ்டைல் ,உழைப்பின் மூலம் முன்னேறியவர் போன்ற பல கருத்துகளை உடையவன் தான் நான்.இருந்தாலும் சினிமா துறை என்பது அனைவரும் பார்க்கும் ஒன்று.மற்ற நேரங்களில் எல்லாம் அமைதியாக இருந்து விட்டு தன் படம் வியாபாரம் ஆகவேண்டும் என்பதற்காக பத்திரிகைகளில் பரபரப்பாக பெட்டி கொடுகிறது ரஜினியிடம் கூடுதல்.(அரசியலுக்கு வருவேன் வரமேட்டேன் )

sakthi said...

தன்னுடைய திறமையால் ஸ்டைலால், நடிப்பால், உச்சத்துக்கு வந்தாலும்...அது பற்றிய அகங்காரம் இல்லாமல் இருக்கும் ஒரு மனிதர்.....அவர் வேலைய அவர் பாத்துட்டு இருக்கார்.... டைம் பாஸுக்கு படம் பாத்துட்டு வீட்டுக்கு வந்து நம்ம வேலைய பாக்காமா அவரை குறை சொல்லிட்டு இருக்கோம்...

முற்றிலும் உண்மை தேவா

ஜெய்லானி said...

:-)

Chitra said...

தன்னுடைய திறமையால் ஸ்டைலால், நடிப்பால், உச்சத்துக்கு வந்தாலும்...அது பற்றிய அகங்காரம் இல்லாமல் இருக்கும் ஒரு மனிதர்.....அவர் வேலைய அவர் பாத்துட்டு இருக்கார்........

..................தேவா...... சும்மா கலக்கிட்டீங்க!!!

அரசியலில் நாடகத்தையும், மீடியாவில் fantasy ஐயும், ஆன்மீகத்தில் வியாபாரத்தையும், வியாபாரத்தில் சமூக நலனையும், சினிமாவில் இரட்சிப்பையும் தேடும் கூட்டம் உண்டு. :-(

J. Ramki said...

வெல்டன் !

hayyram said...

//3 மணி நேரம் படம் பார்த்து விட்டு ஒரு நடிகனின் வாழ்க்கையையே குத்தகை எடுத்து அலசும் அநியாயம் இங்குதான் நடக்கிறது,// மிகச்சரியான ஞாயமான வரிகள். வாழ்த்துக்கள்.

Balaji saravana said...

ரைட் ரைட் :)

முகிலன் said...

முழு தொடரையும் படிச்சேன். நல்ல பகிர்வு. இறுதியாக நல்லா முடிச்சிருக்கீங்க தேவா. நன்றி.

தமிழ் குமார் said...

உங்களுக்கு ரஜினிய பிடிச்சுருக்கு அவ்ளோதான்.

//ஆனா ரஜினியோட வாழ்கைக்கும் அவரு சோத்துக்கு நாமதான் உப்பு போட்ட மாதிரி அத்தாரிட்டி எடுத்துகிட்டு பேசுவோம்.//

ரஜினி தான் சார் பாடுறாரு,ஒரு பவுன் தங்க காசு கொடுத்தது தமிழ் அல்லவான்னு.

//நான் அரசியலுக்கு வரலை...வரலைன்னு, திரையில பேசுறத நீங்க நம்பாதீங்கன்னு... இதுக்கு மேல ஒரு மனுசன் எப்படிதான் சொல்றது.//

சார் அவர படி சொல்லவே இல்ல...காலத்தின் கையில் அது இருக்கு....பாபா climax ல மக்கள காப்பாத்த வர மாதிரி சீன்,நான் எப்ப வருவன் எப்படி வருவன் இந்த டயலாக் எதுக்கு சார்.நாளைக்கே ஒரு பிரஸ் மீட் போட்டு நான் அரசியலுக்கு எப்பவும் வர மாட்டான்னு சொல்லுவாரா?????

//3 மணி நேரம் படம் பார்த்து விட்டு ஒரு நடிகனின் வாழ்க்கையையே குத்தகை எடுத்து அலசும் அநியாயம் இங்குதான் நடக்கிறது//
அப்படி பேச வைச்சது அவர சினிமால பேசினா வசனம் என்கிறத யாராலும் மறுக்க முடியாது.ஏன் பொது மேடைல அரசியல பேசணும் பாட்சா விழால,ஆண்டவனால கூட தமிழ்நாட்ட காப்பாத்த முடியாதுன்னு சொல்லிட்டு முப்பனார் கலைஞர் கூட்டணி வர காரணமா இருந்தது யாரு சார்.அப்பவே அரசியலுக்கு வர மாட்டான்னு சொல்லிருக்கலாம்ல.

ஜீவபாலன் said...

தேவா மிகவும் அருமையான பகிர்வு...

தமிழ்குமார் அவர்களுக்கு.. பாத்து பேரு சேர்ந்து உங்களுக்கு வாழ்கன்னு கோஷம் போட்டா நீங்களும் ஒரு முடிவுகூட சரியா எடுக்க முடியாது... அனுபவிச்சுப்பாருங்க... நன்றி..

dheva said...

தமிழ் குமார் @

//ரஜினி தான் சார் பாடுறாரு,ஒரு பவுன் தங்க காசு கொடுத்தது தமிழ் அல்லவான்னு.//

அவர் பாடுறாரு சரி நாம கொடுத்தமா? சினிமாவ நிஜமா நினைச்சீங்கன்னா...ஆடு புலி ஆட்டத்துல எல்லா பெண்களையும் சீரழிப்பாரு..அப்போ அது நிஜமா?

//சார் அவர படி சொல்லவே இல்ல...காலத்தின் கையில் அது இருக்கு....பாபா cலிமx ல மக்கள காப்பாத்த வர மாதிரி சீன்,நான் எப்ப வருவன் எப்படி வருவன் இந்த டயலாக் எதுக்கு சார்.நாளைக்கே ஒரு பிரஸ் மீட் போட்டு நான் அரசியலுக்கு எப்பவும் வர மாட்டான்னு சொல்லுவாரா?????//

நீங்க ஏன் சார் அவர் வாய பாத்துட்டே இருக்கீங்க...அரசியலுக்கு வந்த புடிச்சா ஓட்டுப் போடுங்க...புடிக்கலைன்னா போடதீங்க...இவர் வரலேன்னா தமிழ் நாடு சீரழிஞ்சு போயிடுமா என்ன? ஏற்கனவே அப்படித்தானே இருக்கு....

//அப்படி பேச வைச்சது அவர சினிமால பேசினா வசனம் என்கிறத யாராலும் மறுக்க முடியாது.ஏன் பொது மேடைல அரசியல பேசணும் பாட்சா விழால,ஆண்டவனால கூட தமிழ்நாட்ட காப்பாத்த முடியாதுன்னு சொல்லிட்டு முப்பனார் கலைஞர் கூட்டணி வர காரணமா இருந்தது யாரு சார்.அப்பவே அரசியலுக்கு வர மாட்டான்னு சொல்லிருக்கலாம்ல. //

dheva said...

//உங்களுக்கு ரஜினிய பிடிச்சுருக்கு அவ்ளோதான்.//

தமிழ்குமார்...@ உங்களுக்கு பிடிக்கலேன்னா அவர விட்டுத்தள்ள வேண்டியதுதானே பாஸ்.... நீங்கதான் அவரை பிடிச்சு தொங்கிகிட்டு இருக்கீங்க...!

கருத்துக்கு நன்றி!

ARAN said...

kalakkal dheva nach.

Mahi_Granny said...

'டைம் பாஸுக்கு படம் பாத்துட்டு வீட்டுக்கு வந்து நம்ம வேலைய பாக்காமா அவரை குறை சொல்லிட்டு இருக்கோம்.'..சரியாச் சொன்னீங்க தம்பி

சே.குமார் said...

தேவா...... சும்மா கலக்கிட்டீங்க!!!

தமிழ் குமார் said...

உண்மைலேயே அவரு அரசியலுக்கு வரலன்னா ஒரே ஒரு பிரஸ் மீட் போட்டு அத சொல்லிடலாம் தான.நாங்களும் அவரு வாய பாக்குறத நிப்பாடிருவோம்.ரோபோ படத்துலயும் அரசியல் பஞ்ச் இருக்கும்.படம் வந்து ௧௫ நாள் பரபரப்பா இருக்கும்,அப்புறம் இமய மல போயிருவாரு

vinu said...

அந்த பொது புத்தியும் கற்பிதமும் ரஜினியின் மகள் திருமணம் வரை வந்து விமர்சிக்கிறது.

me repeeeettu

அமைதிச்சாரல் said...

நல்லாருக்குது.. அங்கங்கே சூடும் கொடுத்திருக்கீங்க. சூப்பர்ப்பா..

koovai kumaran said...

அண்ணா....எப்பவுமே எனக்கு super star நீங்க தான்....:)), என் தலைவன் ஜெயிக்க பிறந்தவன்...
my dear dheva anna, i love you

koovai kumaran said...

ennoda super star en thalaththai kaaniyaakkukireen

விந்தைமனிதன் said...

ரஜினி வெறும் நடிகராக மட்டுமே இருந்துவிட்டுப்போனால் எந்தப் பிரச்சினையும் இல்லை.... அவர் தன் பிம்பத்தை மக்கள்காவலனாகக் கட்டியமைத்ததுதான் விவாதத்துக்குரியது. அவர் தான் கட்டியமைத்த பிம்பத்திற்கு உண்மையானதாக இருந்திருக்கவேண்டும்.... அப்படி இல்லை.... அண்ணாமலை படத்திலிருந்தே அவர் தனது இமேஜைக் கட்டியமைக்கத் துவங்கினார். அதன்பின் அவர் காட்டிய முகங்கள் எத்தனை எத்தனை? 'மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாத' அளவுக்கு வர்ணிக்கப்பட்ட அம்மையார் 'தைரியலட்சுமி'யாய் அவதாரம் எடுத்த மாயமென்ன? "லேட்டா வந்தாலும்..." போன்ற வசனங்களுக்கு ரசிகர்களாகத்தான் அர்த்தம் கற்பித்துக் கொண்டார்களா? இன்னும் எவ்வளவோ இருக்கின்றது.... பெருங்கட்டுரையாய் நீளும்.

Apart from that, ரஜினியை தத்தமது சுயலாபத்துக்காக ஊதிப்பெருக்கிய, இன்னும் அவரைவைத்து கல்லாக் கட்டிக்கொண்டிருக்கும் மீடியாக்களின் அருவருப்பான முகத்திரையும், இழிந்துபோன அரசியல்வியாதிகளின் முகத்திரயும் நிச்சயம் கிழித்தெறியப்பட வேண்டிய ஒன்று. ஈழம் முதல் ஒகேனக்கல், காவேரி என்று தொடரும் அரசியல்வாதிகளின் துரோக வரலாற்றை விட்டுவிட்டு ரஜினியை மட்டும் டார்கெட் செய்வது அருவருப்பானதே!

விஜய் said...

அண்ணா ஐயோ பதிவு ஆரம்பத்தில இருந்து கடைசி வரைக்கும் கலக்கினது மட்டும் இல்லாம கடைசியா உண்மை நிலைய புரிய வைக்க நீங்க எடுத்துகிட்ட முயற்சி அருமை அண்ணா ..

//இத்தனை கோடி தமிழர்கள் இருந்துகிட்டு பக்கத்து நாட்டுல தமிழன கொன்னழிச்சப்பா ஒண்ணும் செய்யமுடியல! அரசாங்கம்...கை கட்டி மத்திய அரசுக்கு கடிதாசி எழுதிகிட்டு இருந்துச்சு...ஆனா எந்த பிரச்சினையாய் இருந்தாலும் ரஜினி ஒரு கருத்து சொல்லலேன்ன இல்ல சொல்லிட்டா அவர் வேற்று மாநிலக்காரர்னு சொல்லி அல்லோலகல்லோல படுத்த வேண்டியது....//

உண்மை தான் அண்ணா, ரஜினி ஒரு திறமையான தனக்கென ஒரு புது அடையாளத்தை ஏற்படுத்தி ஜெய்த்தவர், பாராட்ட வேண்டிய விஷயம், ரசிக்க வேண்டிய விசயம், அதை உள்கொண்டு வந்து தன்னை தவறாக தானே அடையாளம் செய்துகொண்டு, மற்றவர்களை குற்றம் சொல்வதில் துளியும் நியாயம் இல்லை, அழகாய் சொல்லி இருக்கிறீர்கள்..