Skip to main content

மறதி...!

















என் மரித்தலுக்குப் பின்னான
உங்களின் வருகையில்
என்னிடமிருந்து உதிரப் போகும்
ஆழ்ந்த மெளனத்தில்...
இதுவரை நான்...
சொன்னது எல்லாம்...
பொருளிழந்து போகும்...!

உறவுகளின் ஒப்பாரிகளுக்கு
மத்தியில் கிடத்தப்பட்டிருக்கும்
நானென்று கருதியதின்...
மீதிருந்து வீசும் தாய்ப்பாலின்
வீச்சத்தில் நினைவுக்கு வருகிறது
இப்பிறப்பின் துவக்கம்...!

கனவுகளாய் எழுதி வைத்த...
எழுத்துக்கள் ஊர்வலமாய்
என்னைச் சுற்றி வந்து..
என்னின் உயிருதெழுதலுக்கான
பேச்சுவார்த்தைகளின் தோல்வியில்
வாசிப்பாளனின் மனதிலேயே..
போய் முடங்குகின்றன மீண்டும்...!

மீண்டும் என் தாயின் கருவறை
தேடிய பயணம் கொடுக்கப் போகும்
மண்ணறையில் நானில்லா நான்
தனித்திருந்து மட்கும் நேரத்தில்
நானாகிய நான் பயணிக்கும்
உருவமில்லா பயணித்தில்...
உமது கண்ணீர்கள் குறுக்கிட்டு
வெளிப்படுத்தும் காதலுக்காய்...
அன்புக்காய் மீண்டுமொருமுறை..
பிறப்பெய்ய எத்தனிக்கும் வினாடியில்
வந்து விழும் வெளிச்சம்..
மரித்தலே சிறத்தல் என்று
சொல்லாமல் சொல்லி.......
பால் வீதிகளுக்குள் பறக்கவைத்த
பரவசத்தில்....மறந்துவிட்டது....
எனக்கு எல்லாமே...!


தேவா. S

Comments

Unknown said…
நானில்லா நான் மட்கும் நேரத்தில் நானாகிய நான் பயணிக்கும் உருவமில்லா பயணம்....அருமை. அருமை.
Unknown said…
மரித்தலுக்குப் பின் இருக்கும் ஒரே வசனம் ...

"பாடிய எப்ப எடுப்பீங்க ..."
dheva said…
கலா நேசன்.. @ நன்றி நண்பரே....!
dheva said…
கே.ஆர்.பி. செந்தில்..@ ஹா.. ஹா... ஹா.. வாஸ்தவம்தான் செந்தில்!
//மீண்டும் என் தாயின் கருவறை
தேடிய பயணம் கொடுக்கப் போகும்//

பிறப்பு இறப்பு சக்கரத்தை அழகாக சொல்லி இருக்கிறீர்கள். கவிதை நல்லா இருக்கு!

அப்புறம் என் ஆன்மீக பதிவை படிச்சீங்களா? இல்லையா? சொல்லவே இல்லையே! தேவா! ஏதும் கோபம் இல்லையே என் மேல?
பிறப்பு... இருப்பு... இறப்பு... மிக அழகாக வந்துள்ளது கவிதை
ஏன் திடீர் என்று இப்படி நல்லா தானே இருந்தீங்க நேத்து ஒரு மணி வரை முழித்து இருந்தால் இப்படி தான் கவிதை வரும்
//பிறப்பெய்ய எத்தனிக்கும் வினாடியில்
வந்து விழும் வெளிச்சம்..///

அருமை.. நல்லா இருக்கு தேவா
கணேஷ் said…
எப்படி அண்ணா இப்படி வார்த்தையை உபோயோகிககின்றிர்கள்??....ரெம்ப நல்லா இருக்கு..
//கனவுகளாய் எழுதி வைத்த...
எழுத்துக்கள் ஊர்வலமாய்
என்னைச் சுற்றி வந்து..
என்னின் உயிருதெழுதலுக்கான
பேச்சுவார்த்தைகளின் தோல்வியில்
வாசிப்பாளனின் மனதிலேயே..
போய் முடங்குகின்றன மீண்டும்...!//

மாப்ஸ் இந்த பத்தி புரியல.... விளக்குங்க....
dheva said…
என்னது நானு யாரா @ பங்காளி உங்க மேல கோபமா? என்ன பங்காள் இப்படி கேக்குறீங்கா. நாம கருத்துக்களை தானே விவாதிச்சுகிட்டு இருக்கோம்.. உங்க போஸ்ட் பார்த்தாச்சு பங்ஸ்... கமெண்ட் பண்றேன்...!
dheva said…
தமிழ் உதயம்..@ நன்றி சார்.... ! உணர்வுகளின் வெளிப்பாடவே பெரும்பாலும் கவிதைகல் இருக்கு அதில் ஆன்மீகம் சார் கருத்துக்களை முடிந்த அளவு புகுத்தி பார்த்தேன். பெரும்பாலும் இறப்புனாலே எல்லோருக்கும் பயம்...ஆனா. ஒரு நாள் இல்லை ஒரு நாள் அதுதானே சர்வ நிச்சயம்...!
dheva said…
செளந்தர்...@ திடிர்னு இப்படி இல்லப்பா..ஒரு ஏழெட்டு ஜென்மமா இப்படித்தான்.. ( இன்னும் நல்லா குழம்புனியா.. ஹா...ஹா...ஹாஅ..)
dheva said…
எல். கே....@ மோட்சம் (ஹா..ஹா..ஹா..)
dheva said…
கணேஷ்...@ அறிவியல் இருக்குப்பா கவிதையில... அதுக்கு பயன் படுத்தியிருக்கும் வார்த்தைகள் ..கீழை நாட்டு தத்துவவியலில் பொறுக்கியது... ஆனல் சொல்லியிருப்பது.. மேலை நாட்டு விஞ்ஞானமன்றி வேறு ஒன்றுமில்லை...!
dheva said…
//கனவுகளாய் எழுதி வைத்த...
எழுத்துக்கள் ஊர்வலமாய்
என்னைச் சுற்றி வந்து..
என்னின் உயிருதெழுதலுக்கான
பேச்சுவார்த்தைகளின் தோல்வியில்
வாசிப்பாளனின் மனதிலேயே..
போய் முடங்குகின்றன மீண்டும்...!//

டெரர்..@ மாப்ஸ்..

இப்போ நான் எழுதியிருக்கிற கட்டுரை கவிதை எல்லாம் உன் மனசுல இருக்கும்தானே...? நாளைக்கு நான் செத்துப் போய்ட்டா என்னைப் பார்த்த உடனே.. உனக்கு நான் எழுதி உனக்கு டச் ஆன வார்த்தைகள் உடனே நினைவுக்கு வருமா? அந்த எழுத்துக்களின் மூலமா என்னை நேசித்த நீ.. மீண்டும் நான் உயிரோட வர மாட்டேனா என்று நினைக்கிற... அப்படி நினைக்கிறதுக்கு என்னோட எழுத்துக்கள் உனக்கு உதவுது... சரியா...

ஆனா அது நடக்குமா நடக்காது.. நீ அப்படி ஆசைப்பட்டு ஆசைப்பட்டு கடைசியில் அப்படி நடக்காமல் மீண்டும் வார்த்தைகள் எல்லாம் உனக்குள்ளே போய் உன் நினைவுகளுக்குள்ளேயே தங்கிடுது.... அதுதான் மாப்ஸ்!


ரொம்ப நன்றி மாப்ஸ். .. சும்மா புரியல புரியலன்னு சொல்றத விட இப்படி கேள்வி கேட்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு மாப்ஸ்!
@தேவா
//ரொம்ப நன்றி மாப்ஸ். .. சும்மா புரியல புரியலன்னு சொல்றத விட இப்படி கேள்வி கேட்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு மாப்ஸ்!//

நன்றி நான் சொல்லனூம் மாப்ஸ்.... :)
வினோ said…
அருமையான கவிதை.. நிறைய யோசிக்கவைத்து...
வாழ்வுக்கும் மரணத்திற்குமிடையே தேர்ந்தெடுக்கும் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கும் மனதில் இருந்து வழியும் வார்த்தைகள் போன்றிருக்கிறது இக்கவிதையின் போக்கு. நல்ல படைப்பு தேவா.
மனமார்ந்த வாழ்த்துக்கள்.
க ரா said…
மரணம் என்ற ஒன்று நிதர்சனம் அதை பற்றி யோசிப்பதே பலருக்கும் பிடிக்காத ஒன்று.. இந்த் கவிதைய படித்து முடிக்கும் போது வார்த்தைகளின்றி ஊமையாகி போனது என் மனசு...
vinthaimanithan said…
ம்ம்ம்... "முன்ன பின்ன செத்தாதான சுடுகாடு தெரியும்?" னு நம்மூருல சொல்லுவாங்க... நீங்க செத்தப்புறம் என்ன நடக்கும்னு எழுதிட்டு இருக்கீங்க... செரி செரி... புத்தர் சொன்னாரே... ஆத்மாவுக்கு அழிவில்லைன்னு! அந்த கான்செப்ட் போல! நல்லாவே இருக்கு!
/எல். கே....@ மோட்சம் (ஹா..ஹா..ஹா..) ///

சரிதான்
///அன்புக்காய் மீண்டுமொருமுறை..
பிறப்பெய்ய எத்தனிக்கும் வினாடியில்
வந்து விழும் வெளிச்சம்..
மரித்தலே சிறத்தல் என்று
சொல்லாமல் சொல்லி.......
பால் வீதிகளுக்குள் பறக்கவைத்த
பரவசத்தில்....மறந்துவிட்டது....
எனக்கு எல்லாமே...!////

ரொம்ப அழகா இருக்கு இந்த வரிகள்..
அன்பிற்காய் மீண்டும் ஒரு முறை பிறக்க நினைக்கும் எண்ணமே.... அருமை....!
Chitra said…
மரணத்தை குறித்து இருக்கும் இந்த கவிதை, பல சிந்தனைகளை கொண்டு வருகிறது. உங்களின் பக்குவ மனதின் முதிர்ச்சியும் தெரிகிறது.
Chitra said…
125th post..... Congrats!

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த