Pages

Tuesday, March 22, 2011

நின்னையே ரதியென்று....!


தண்ணீர் குடத்தோடு
நீ தலைகுனிந்துதான்
நடக்கிறாய்....
இடுப்பில் இருக்கும்..
குடத்துக்கு என்னவாம் கிண்டல்
என்னை பார்த்து...?
தளும்பி தளும்பி சிரிக்கிறது!

***

இல்லை என்றேன்....
இருக்கிறது என்றாய்!
இருக்கிறது என்றேன்
இல்லை என்றாய்...!
இருந்தும் இல்லாமல்
இருக்கும் காதலை
எப்படித்தான் கண்டு பிடிப்பதாம்....
செல்லமாய் நீ சிணுங்கினாய்..
கம்பீரமாய் வெளிப்பட்டு
சிரித்தது ஒரு ஒய்யாரக்காதல்!

***

ஒரு மரம் துளிர்க்கும் தருணம்;
சாரலாய் முகத்தில் மழைத்துளிகள்
தவழும் பொழுதுகள்;
ஒரு ஊதக்காற்று உடல் ஊடுருவி
உள்ளம் கலைத்து செல்லும்
அந்த அற்புதகணம்;
ஒரு கவிதை எழுதி முடித்து
நிறைவாய் சாய்ந்து நெஞ்சு
நிறையும் நிமிடம்;
யாருமே இல்லாமல் அவளோடு
இருக்கும் மெளனம்;
இன்ன பிற எல்லாம் சேர்ந்ததுதான்
காதலா?

***

கனவுகளில் வடித்த
ஒரு ஓவியத்தை
எப்படி உனக்கு பரிசளிப்பேன்?
என் கவிதைகளில் ஒளிந்திருக்கும்
உயிரை எப்படி நான் அசையவைப்பேன்?
சொல்லாமல் தவிக்கும்
என் காதலின் அவஸ்தைகள் எல்லாம்
ஒரு மழையில் நடுங்கும் குருவியாய்
நடுங்கிக் கொண்டிருப்பதை
எப்படி உனக்கு உணரவைப்பேன்...?
எங்கேயோ இருக்கும் உன்னை
துரத்தி துரத்தி சுற்றி கொண்டிருக்கும்
என் நினைவுகளின் ஸ்பரிசங்கள்
எல்லாம் வார்தைகளற்று ஏக்கமாய்
உன்னை உற்று நோக்கும் நொடியில்
சொல்லித்தான் விடமாட்டாயா
ஒற்றை வார்த்தையில் உன் காதலை...?

***

மனதால் வானத்தின் மேகங்களை
எல்லாம் கலைத்துப் போட்டு
தீட்டி வைக்கிறேன் ஓராயிரம்
ஓவியங்களை தூரிகைகளின்றி...,
எங்கிருந்தேனும் கண்டுவிட மாட்டாயா?
கலைந்து கிடக்கும் வானத்து ஒவியத்தில்
ஒளிந்து கிடக்கும் என் மனதை?


தேவா. S

16 comments:

இராமசாமி said...

வாரியார்னு பேரு.. எழுதறது முழக்க.. இம்ம்.. கலி முத்தி போச்சுன்னா :)

dheva said...

கண்ணன் @ அடே....தம்பி நான் என்ன கிருபானந்த வாரியர்னா வச்சு இருக்கேன் பேரு.......அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் கலக்கிட்ட போ....!

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//தம்பி நான் என்ன கிருபானந்த வாரியர்னா வச்சு இருக்கேன் பேரு.......அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் //

......ROFL... முடியல... :-))

நா நெனச்சு வேற பாத்துட்டேன். ஹா ஹா ஹா.. :-))

சும்மா இருக்க மாட்டீங்களாங்க நீங்க..!

நிலாமதி said...

உன்னை உற்று நோக்கும் நொடியில்
சொல்லித்தான் விடமாட்டாயா
ஒற்றை வார்த்தையில் உன் காதலை...?........


...உணர்வுகள் வரிசையாய் கோர்க்க் பட்ட ......அழகான் கவிதை .
கெஞ்சும் காதல் ஏங்கும் இதயம். பாராட்டுக்கள்.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//எங்கிருந்தேனும் கண்டுவிட மாட்டாயா?
கலைந்து கிடக்கும் வானத்து ஒவியத்தில்
ஒளிந்து கிடக்கும் என் மனதை?
///

...வார்த்தைகளின் அணிவகுப்பில் அசத்திட்டீங்க...!

...ஒளிந்து கிடக்கும் உங்கள் உன்னதக் காதல், கலையாமல் அவளிடம் சென்றிருக்கும்...! :)

தமிழ்வாசி - பிரகாஷ் said...

///மனதால் வானத்தின் மேகங்களை
எல்லாம் கலைத்துப் போட்டு
தீட்டி வைக்கிறேன் ஓராயிரம்
ஓவியங்களை தூரிகைகளின்றி...,///

நல்ல அருமையான வரிகள்... மனதின் எண்ணங்கள் ஓவியங்களாக...

எனது வலைபூவில் இன்று: தனபாலு...கோபாலு.... அரட்டை மூணு!

வினோ said...

/ இன்ன பிற எல்லாம் சேர்ந்ததுதான்
காதலா? /

ஆமாம் கண்டிப்பா.. எல்லாம் சேர்த்ததுதான்

ஹேமா said...

இன்ன பிற சேர்ந்துதான் காதல்.எப்படிக் காதலை எழுதினாலும் அழகுதான்.ஆனால் குடம் தளும்பிச் சிரிப்பது மிகவும் ரசனை !

Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...

அருமையான வரிகள!

தமிழ்க் காதலன். said...

அன்பு தேவா, சிந்திய குடத்து நீரில் சிந்துகிறது என் சிந்தனைகள். அள்ள முடியா வெள்ளத்தை கைகளில் கட்டவிழ்த்து கவிதையாய் உலவ விட்டிருக்கிறீர். மிக இரசித்தேன்.. தேன்.

தொடருங்கள். வாழ்த்துகள்.

சே.குமார் said...

உணர்வுகளால் கோர்க்கப்பட்ட அழகான கவிதை.

சௌந்தர் said...

தண்ணீர் குடத்தோடு
நீ தலைகுனிந்துதான்
நடக்கிறாய்....
இடுப்பில் இருக்கும்..
குடத்துக்கு என்னவாம் கிண்டல்
என்னை பார்த்து...?
தளும்பி தளும்பி சிரிக்கிறது!///

அது சிரிக்கிறதுக்கு அர்த்தம் வேறங்கோ...

சௌந்தர் said...

இல்லை என்றேன்....
இருக்கிறது என்றாய்!
இருக்கிறது என்றேன்
இல்லை என்றாய்...!
இருந்தும் இல்லாமல்
இருக்கும் காதலை///

ஓஹ sj சூர்யா சொல்வாரே இருக்கு இல்லை அதுவா..????

சௌந்தர் said...

மனதால் வானத்தின் மேகங்களை
எல்லாம் கலைத்துப் போட்டு
தீட்டி வைக்கிறேன் ஓராயிரம்
ஓவியங்களை தூரிகைகளின்றி...,
எங்கிருந்தேனும் கண்டுவிட மாட்டாயா?
கலைந்து கிடக்கும் வானத்து ஒவியத்தில்
ஒளிந்து கிடக்கும் என் மனதை?////

எந்த மனம்....??? ஓஹ அந்த மனத்தை தானே சொல்றீங்க...????

Anonymous said...

நா நெனச்சு வேற பாத்துட்டேன். ஹா ஹா ஹா.. :-))

சும்மா இருக்க மாட்டீங்களாங்க நீங்க..!//

nanum ... he he he he

Anonymous said...

பேசும் போதும் மிரட்டுறது
காதல் கவிதை எழுத்தும் போது இப்பிடி
ஐயோ ஐயோ