
கற்றை முடியை கையால்...
கலைத்து சற்றே நிமிர்கையில்...
கண்ணாடிக்குள்ளிருந்து கண்ணடித்து
வெளுப்பாய் பார்த்து சிரித்தன
சில வெள்ளை முடிகள்!
கறுப்பு ராஜ்யத்துக்குள்...
காலம் அனுப்பி வைத்த...
பளீச்சிடும் படை வீரர்களாய்
தம்மை மறைத்து மெலிதாய் சிரித்து
சூட்சுமமாய் வாள் சுழற்றி
சொல்லாமல் சொல்லின...
காலத்தின் கணக்கினை.....!
எதிர் வீட்டு சம்பசிவம் தாத்தா....
என் அப்பா, என் மாமா என்று...
வாங்கிய வெளுமையினை
சாயங்களால் ஏமாற்றி
கருப்பாய் வெளுப்பை
அவ்வப்போது தோற்கடித்திருந்தாலும்
முழுதும் வெளுத்த தலையுடன்
எப்போதும் நடக்கும் பக்கத்து வீட்டு
பரமசிவம் தாத்தாதான்
என் ஆதர்சன ஹீரோ!
சொடக்கு போட்டு....
காலம் அழைத்து கொடுக்கும்
பரிசினை மறைத்து வைக்கும்
மடைமையில் எப்படி விடியும்
மீண்டும் இளமை?
என் நரைத்த தலையை
முழுதாய் காணும் ஏக்கத்தில்
மீண்டும் மீண்டும்
கனவுகளில் பறக்கிறேன்...
கேசத்தினை....கலைத்து கலைத்து...
கணக்குகள் கூட்டி காதலாய்...
காத்திருக்கிறேன் கருப்பினை
கடக்கும் என் வெள்ளை நாட்களுக்காக!
மிச்சமும் எப்போது வெளுக்குமென்ற
என் கனவுகளின் பின்னால்...
காலம் கடக்கும் ஆசையொன்றுளதை
யார்தான் அறிவார்?
தேவா. S
Comments
முழுதாய் காணும் ஏக்கத்தில்
மீண்டும் மீண்டும்
கனவுகளில் பறக்கிறேன்...
கேசத்தினை....கலைத்து கலைத்து...
கணக்குகள் கூட்டி காதலாய்...
காத்திருக்கிறேன் கருப்பினை
கடக்கும் என் வெள்ளை நாட்களுக்காக!
.....ரொம்பவும் வித்தியாசமான ஆசை.... எனக்குத் தெரிந்து இதுவரை, இளமையிலேயே முதுமை லுக் வர ஆசைப்பட்டது அவ்வையார் மட்டும் தான். :-)))))
காலம் அழைத்து கொடுக்கும்
பரிசினை மறைத்து வைக்கும்
மடைமையில் எப்படி விடியும்
மீண்டும் இளமை?//
நல்லா கேக்குறாய்ங்கய்யா கேள்வி
படித்து முடித்ததும் பாட்டையாவின் ஞாபகம் ..!
அது நிச்சயம் !
சில வயதானவர்கள்தான் வாழ்வின் முன்னோடிகள் !
சட்டம் ஒழுங்கின் பெயரில் கைகள் கட்டப்பட்டுள்ளோம். உண்ணா விரதம் இருக்க அனுமதியில்லை.சென்னை வேங்கட நாராயண சாலையில் உள்ள தக்கர் பாபா பள்ளி வளாகத்தில் (நந்தனம் சிக்னல் அருகில்)தினமும் ஒன்று கூடுகிறோம். முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள். காலையிலிருந்து மாலை வரை நடக்கிறது. தயவு செய்து கலந்து கொள்ளுங்கள்.
இன்று மாலை 5 மணி அளவில் கோவையில் வா.வு.சி பூங்காவில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடத்த உள்ளார்கள். உங்கள் கோவை நண்பர்களிடம் தயவு கூர்ந்து தெரிய படுத்துங்கள்.
சுப்புரத்னம் பிச்சை -முன்னாள் ராணுவ வீரன்