திடீரென்று படத்தின் பெயர் மனதில் தோன்றியதாகவும், உடனே இயக்குனர் சுந்தர். சியைக் கூப்பிட்டு நாம ஒரு படம் பண்றோம் படத்தோட பேர் அருணாச்சலம் என்று சொல்லி முடித்த கையோடு இசையைமைப்பாளர் தேவாவையும் அழைத்து இந்த விசயத்தைக் கூறினாராம் சூப்பர் ஸ்டார். கதை எதுவுமே முடிவாகவில்லையாம் அப்போது, அதனால்தான் படத்தில் வந்த பஞ்ச் டயலாக்கை கூட "ஆண்டவன் சொல்றான் இந்த அருணாச்சலம் செய்றான் " என்று கூட வைத்தார்களாம். அதாவது எதுவுமே மனிதர்கள் முடிவு பண்ணாமல் கடவுள் முடிவு பண்ணியதாம். நிஜத்தில் இந்த உள்ளுக்குள் தோன்றும் விசயங்களை ஆண்டவன் தான் தீர்மானிக்கிறாரா? என்ற ஒரு கேள்வி எனக்குள் வெகுநாளாய் இருந்து கொண்டிருப்பதற்கு காரணம் இதே போன்று எழுத்துச் சித்தர் பாலகுமாரனும் கூறுவதுதான். அவரும் கூட நான் எழுதுவது எல்லாம் எனக்குள் ஸ்பூரித்தது என்று அடிக்கடி சொல்வார். கடவுள் என்னை வழிநடத்துகிறார், எல்லாம் கடவுள் கிருபை, நான் ஆன்மீகத் தேடலில் இருக்கிறேன் என்று சொல்லிக் கொள்வதில் ஏதோ ஒரு கிறக்கம் நிறைந்த சுகம் இருப்பதாகவே எனக்குப் படுகிறது. இந்தக் கட்டுரை நாத்திகம் பேசி ஆத்திகத்தை அமுக்கவோ அல்லது ஆத்திக...
இவன் ஜெயிக்கப் பிறந்தவன்....