Skip to main content

Posts

Showing posts from 2012

தொடரும் கற்பழிப்பு கொலைகள்...தலை குனிந்து கொள் இந்தியாவே!

கடைசியில் அவள் இறந்து போய்விட்டாள். எப்படியாவது பிழைத்து எழுந்து வந்துவிடமாட்டாளா என்ற என்னைப் போன்றவர்களின் ஏக்கம் இன்று அதிகாலையில் தோற்றுப் போய்விட்டது. அவளை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்களை தூக்கிலேற்றி கொன்று விடலாம், தெருவில் நிற்கவைத்து கல்லால் அடித்தே கொல்லலம், உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாய் பொதுவில் நிற்க வைத்து அறுத்து எரியலாம், கூட்டத்துக்குள் நிற்கவைத்து அடித்து கொல்லலாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் செய்வார்கள் செய்யவேண்டும்...!!!!!! ஆனால்... தாமினி போன்ற எங்கள் பெண் பிள்ளைகளை எங்கள் தோளிலும் மார்பிலும் தூக்கி வளர்த்து அம்மா, தாயே பெண்ணே என்று கொஞ்சிய எங்களின் ஈரக்குலைகளில் தலை தூக்கி இருக்கும் பயத்தை எப்படி போக்கும் இந்த தேசம்...? பெண்களை எப்போதும் செக்ஸ் அப்பீலாய் பார்க்கும் காட்டுமிராண்டி மனிதர்களை மொத்தமாய் அழித்தொழுக்க ஏதேனும் யுத்தி உள்ளதா...அதிகாரவர்க்கமே...? பகுத்தறிவுள்ள என் சமூகமே...???? 23 வயதில் பொசுக்கப்பட்ட என் குழந்தையே...! எத்தனை வேதனையோடு நீ மரித்துப் போயிருப்பாய் அம்மா...? உன்னை போன்ற பிள்ளைகள் இந்த தேசம் முழுதும் வயது வித்தியாசம் ப

தேடல்....28.12.2012!

எனது தேடல் முடிந்து போகவில்லை... என்றாலும் தேடும் ஆவல் குறைந்து போனது உண்மைதான். எதையுமே ஆச்சர்யமாய் பார்க்கத் தோன்றாத மனோநிலையும், எவர் எதைப் பேசினாலும் தம்மை விளம்பரப்படுத்திக் கொள்ளுமொரு மனோபாவம் பளீச் என்று ஒரு குரங்கு குட்டியாய் என் முன் துள்ளிக் குதித்து அவர்களை அடையாளப்படுத்தி விடுவதாலும்.. எனக்குள் இருக்கும் குரங்குக் குட்டியை கட்டி மேய்க்கவே நேரம் எனக்கு சரியாய் இருப்பதாலும் தேடல் பற்றி எழுதும் தூரம் அதிகமாகிப் போய்விட்டது.. எனது இருப்பை நான் என்னை சுற்றி இருப்பவர்களுக்கு விளம்பரப்படுத்தியே ஆகவேண்டும் என்ற அடிப்படை எண்ணத்திலிருந்து கிளைத்து எழும் ஓராயிரம் வேசங்கள்தான் மனிதர்களின் செயல்களாகிப் போகிறது.  நான் எதையாவது எழுதுவதை தயவு செய்து என் புலம்பலாய், நான் எனக்குள் பேசும் ஒரு பாவனையாய் ஆக்கிக் கொள் என் மனமே என்ற என் வேண்டுதல் பல நேரங்களில் பலிக்காமலும் சில நேரங்களில் பலித்தும் போயிருக்கிறது. எழுதுவது இங்கே மிகப்பெரிய வித்தையாய் பார்க்கப்படுகிறது. எழுதுபவன் மட்டும் இங்கே தன்னை வேற்றுக்கிரக வாசியாய் நினைத்துக் கொள்வது கிடையாது, வாசிப்பவர்களும் அப்படியே நினைக்கிறார்கள்.

கும்கி....!

விமர்சனம் என்று ஒரு திரைப்படத்தை பார்த்துவிட்டு கருத்து சொல்லும் பொதுப்புத்தியிலிருந்து நான் ஒதுங்கி நடக்கவே விரும்புகிறேன். விமர்சனம் என்பது தனிப்பட்ட பார்வையை பொதுப்பார்வையாக்க முயலும் ஒரு யுத்தி என்பதோடு மட்டுமில்லாமல் சினிமாவை தங்களின்  உச்ச கட்ட தொழில்நுட்ப அறிவினை எல்லாம் பயன்படுத்தி பார்க்கும் களமாகவும் ஒரு சிலர் இங்கே நினைக்கிறார்கள். மேதாவிகள் உலகம் எப்போதும் உலக தரத்தில் இருக்கும் எல்லா விசயங்களையும் ஒப்பிட்டுப் பார்க்க நினைக்கிறது. துரத்தும் வாழ்க்கையின் ஏதோ ஒரு ஓய்வு தருணத்தில் சினிமாவை பார்க்கச் செல்லும் என்னைப் போன்ற சாமானியர்கள் சினிமாவை சினிமாவாக வாய் பிளந்து பார்த்து விட்டு அதை எடுக்க பிரயாசைப் பட்டிருக்கும் அந்த படக்குழுவினரின் உழைப்பை கண்டு வியக்கவும் செய்கிறோம். மிக மோசமாய் அரைத்த மாவையே அரைத்து பார்வையாளனை ஏமாற்றும் ஒரு சில படங்களைக் கண்டு நாம் அதிருப்தியுற்றாலும், தமிழ் சினிமாவில் வாழ்வியலையும் எதார்த்தத்தையும் பேசும் படங்களை சினிமாவோடு ஒன்றிப்போய் ரசிக்கும் நாங்கள்..., எங்களின் சூப்பர் ஹீரோக்கள் நிகழ்த்தும் அதிரடி சாகசஙகளையும் கை தட்டி விசிலடித்

உலகம் அழிந்துதான் போகட்டுமே....!

இந்த உலகம் அழிந்து போகக் கூடாது என்று நீங்கள் எண்ணுவதற்கு நியாயமாய் ஒரே ஒரு காரணம் என்னிடம் சொல்லுங்கள் போதும். டிசம்பர் 21ல் உலகம் அழியாமலேயே போகட்டும். மாயன் காலண்டர் பொய் என்று கூறி நாம் புளகாங்கிதம் பட்டுக் கொண்டு தெருக்கு தெரு, நின்று பேசவும், இணையத்தில் சவுடாலாய் வாயடிக்கவும் கூட செய்யலாம். ஆனால்... எனது கேள்வி எல்லாம் ஏன் இந்த உலகம் அழிந்து போகக் கூடாது என்பதுதான்...? என்னைப் பொறுத்தவரை மாயன் காலண்டர் உயிர் பெற்று ஏதோ ஒரு சக்திக்கு உயிர் வந்து இந்த பூமியை சிதறடித்து மானுட பிண்டங்களைத் பிரபஞ்ச வெளியில் திக்குகள் எட்டும் பிய்த்து எறியட்டும். ஆழ்கடல் சிறு துளியாய் இந்தப் பெருவெளியில் மிதக்க உயிர்களை உறிஞ்சிக் கொண்ட இந்த பிரபஞ்சம் வெடித்து சிரிக்கட்டும். வாழ்க்கையை இயல்பாய் கட்டியமைத்துக் கொண்ட இயற்கையை சின்னாபின்னப் படுத்திக் கொண்டே.... எல்லைகள் வகுத்துக் கொண்டு நிறம், மொழி, மதம், நாடு, சாதி, பிராந்தியம் என்று பிரிந்து நின்று கொண்டு இந்த பிண்டங்கள் பிண்டங்களை அழித்துக் கொள்வதைக் காட்டிலும் எல்லா வகையிலும் சிறந்தது இயற்கையே எல்லாவற்றை

நீர்ப்பறவை....!

தெரிவிச்சு....இல்லை தெரிவிச்சு என்ன செய்யப் போறீங்க..? என்ற ஆதங்க கேள்விக்குப் பின்னால்,  செத்தவன் செத்துப் போய்ட்டான். சுட்டவன் ஏன் சுட்டான்னு கேக்க தெம்பில்லாத கவர்மெண்ட்கிட்ட செத்துப் போய்ட்டான்னு தெரிவிச்சு என்ன ஆயிடப் போவுது..? செத்துப் போன எண்ணிக்கையில ஒண்ணு கூட்டிக்கிட போறீங்க அம்புட்டுதானே என்ற சோகமே  மறைந்து கிடந்தது...., கண்ணீரோடு எஸ்தர் கதாபாத்திரம் கோர்ட்டில் திரணியற்று திரையில் பேசி கொண்டிருக்கையில் எனக்கும் வெடித்து அழத்தான் தோன்றியது. பொழுது போக்கு என்ற நிலைக்கு அப்பாற்பட்ட வாழ்க்கையைப் பதிவு செய்யும் நீர்ப்பறவை போன்ற சினிமாக்கள் போற்றப்படவேண்டியவை என்பதில் யாதொரு மாற்றுக் கருத்துக்களும் இருக்க முடியாது. உப்புக்காற்றின் ஈரத்தையும், மீன் பிடி தொழில் செய்யும் தென் தமிழகத்து வெள்ளந்தியான வாழ்க்கை முறையையும் அப்படியே காமிராவுக்குள் கொண்டு வந்திருக்கும் காமெரா மேனை கட்டிப்பிடித்து அவரின் கைகளுக்கு முத்தமிடத் தோன்றியது எனக்கு. அருளப்ப சாமியாகவே மாறிப்போயிருந்த விஷ்ணுவும், எஸ்தராகவே உருமாறியிருந்த சுனைனாவும் மட்டுமின்றி, படத்தில் எந்த ஒரு கேரக்டரையும் பாத்திரத்தைக்

காக்கை குருவி எங்கள் சாதி...!

காலையில வேலைக்கு வந்துட்டு இருக்கும் போது 94.7 மலையாளச் சேனல்ல பாட்டு கேட்டுட்டு வந்துட்டு இருந்தேன். அப்போ, அப்போ ஒரு பாட்டும் எப்பவுமே ரேடியோ ஜாக்கிகளோடு பேச்சுமா நேரம் போய்ட்டே இருந்தப்ப அந்த லேடி இன்னிக்கு என்ன நாள் தெரியுமான்னு பக்கத்துல இருந்த ஆம்பளைக்கிட்ட கேட்டப்ப....அவர் என்ன நாளுன்னு திருப்பி அவள கேட்டாரு.... அட இன்னிக்கு பாரதி பொறந்த நாளாச்சே தமிழ் கூறும் நல்லுலகம் நினைக்காட்டியும் கூட நம்ம சேரத்து  தமிழ்ப் பிள்ளைகள் நினைவு வச்சு இருக்காங்களேன்னு மேல கேக்க ஆரம்பிச்சேன்...... இன்னிக்கு நடிகர் திலீப்போட பொறந்த நாளுன்னு அறிவிச்ச அந்த பொண்ணு அதோட போயிருந்தா நானும் இப்டி ஏதாச்சும் எழுதாம போயிருந்து இருப்பேன்....கூடவே அவ.. நாளைக்கு என்ன நாளு தெரியுமானு அந்த ஆள கேக்க....திலீப் பொறந்த நாளு தெரியாம முழிச்ச அந்த அண்ணன்....நாளைக்குன்னு சொன்ன உடனே....டான்...டான்..டான்....ன்னு மியூசிக் எல்லாம் வாயிலயே போட்டு....12.12.12.....நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரின்னு சொல்லி, நாளைக்கு சூப்பர்ஸ்டார் பொறந்த நாளு அதை எப்படி நாம மறக்க முடியும்ன்ற ரேஞ்சுக்கு பேசிட்டு குதுகலிச்சு

காலப் பெருவெள்ளம்...!

உறக்கமின்றி தவிக்க விட்ட கடந்த வாரத்தின் ஐந்து நாட்களும் அரக்கத்தனமானவையாய் எனக்கு தோன்றின. கடுமையான உடல்வலி, தொடர்ச்சியான தலைவலியோடு டிசம்பர் ஒண்ணாம் தேதியின் இரவு என்னை துரத்திக் கொண்டிருந்தது. கனவுகளும் கற்பனைகளும் எங்கோ ஓடி ஒளிந்து கொள்ள உடல் முழுதும் வலியைச் சுமந்தபடி படுக்கையில் புரண்டு கொண்டிருந்தேன். மழை எல்லா ஊரிலும் மழையாய் இருப்பதில்லையோ என்ற ஒரு சோகமான கேள்வியை திரும்ப திரும்ப நான் எனக்குள் கேட்டுக் கொண்டிருந்தேன். கடந்த முறை விடுமுறைக்காக ஊருக்கு சென்றிருந்த போது காளையார்கோவிலுக்கும் கொல்லங்குடிக்கும் இடையே ஒரு மாலை வேளை பெரு மழையில் சிக்கிக் கொண்டேன். வண்டியை சாலையோரமாய் நிறுத்திவிட்டு எனக்கும் மழைக்கும் கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாய் அறுந்து போயிருந்த தொடர்பை சமரசம் செய்து சரி செய்து கொள்ளும் வண்ணம்.... நான் மழைக்குள் விழுந்தேன். உடல் தொட்டு, என் உயிர் தொட்டு, ஆன்மாவை நிறைத்த இயற்கையை உடலால் பருகினேன். சாலையோரத்து புளியமரங்களும், சாலையை விட்டு சற்று தொலைவில் கூட்டம், கூட்டமாய் நின்று கொண்டிருந்த பனைமரங்களும் மட்டுமே எனக்கு துணையாய் இருந்தன. அவ்வப்போது ச

சாதி பூதமும் சதிகார அரசியலும்....!

வாழ்க்கையின் போக்கு எல்லாவற்றையும் சட் சட்டென்று மாற்றியமைத்து விடுகிறது. கணத்துக்கு கணம் மாறும் வாழ்வின் நிதர்சனமில்லாத தன்மையை மறந்து விட்டுத்தான் இங்கே மனிதர்கள் சாதிக் கொம்புகளைத் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள். புஜம் தட்டி நான் யார் தெரியுமா..? என்று கொக்கரிக்கிறார்கள். ஆரிய சாதி, ஆதிக்க சாதி, தாழ்த்தப்பட்ட சாதி, என்று இங்கே சாதி பேசும் நாக்குகளை எல்லாம் ஏதோ ஒரு  புழு மண்ணுக்குள்ளிருந்து முண்டியடித்துக் கொண்டு வந்து ஒரு நாள் அரித்து விடப்போகிறது, இல்லை என்றால் கொடும் தீ சட்டென்று பரவி கருக்கி விடப்போகிறது. இந்தப்  பூமி தோன்றி எத்தனையோ கோடி ஆண்டுகள் ஆகி விட்டன. சூரியனிலிருந்து பிய்த்து எறியப்பட்ட நெருப்புத்துண்டுக்குள் இத்தனை சாதிகளும் இருந்திருக்கிறதே என்ற ஆச்சர்யம் மட்டுமல்ல எனக்கு, அதை வைத்து அரசியல் நடத்தவும், வியாபாரம் செய்யவும் இத்தனை மனிதர்களும் இருந்திருக்கிறார்களே என்ற பிரமிப்பும் எழத்தான் செய்கிறது. மூன்று வேளை சோற்றை  உண்டு வாழ்ந்து மரிக்க மானங்கெட்டுப் போய் எத்தனை பிழைப்பு பிழைக்க வேண்டியிருக்கிறது இந்த மனித இனம் என்ற வேதனையும் எழுகிறது. சாதிகள் இல

கவிதையெனப்படுவது யாதெனில்...

நொடிக்கு ஒரு முறை என்னைப் பார்.... கவிதைகளென்ற பெயரில் ஏதேனும் கிறுக்கு.... நிறைய பேசு... அவ்வப்போது மெளனமாயிரு... சண்டையிடு... கோபத்தில் கண்கள் சிவந்து போ... காற்றில் கலையும் கேசம் சரி செய்... நான் கடந்து போகையில் என்னை கவனிக்காதே... தூரமாய் சென்று திரும்பிப் பார்... சொல்லாமல் கொள்ளாமல் தொலைந்து போ... எதிர்பாராமல் எதிரே வா... எப்போதாவது புன்னகை செய்.. உன் தோழிகளோடு உரக்கப் பேசு... சப்தமாய் சிரி.... சோகமாயிரு... சந்தோசமாயிரு... பிடித்த புத்தங்களை நான் பார்க்கும் படி சுமந்து போ... பிடித்த பாடலை முணு முணுப்பாகவாவது பாடு.... மழையில் நனை... குளிரில் நடுங்கு... வெயிலை திட்டு.... வராத பேருந்துக்காய் முகம் சுழி... மணிக்கட்டு கடிகாரத்தை முறைத்துப் பார்... ஓவியமாய் தலை வாரிக் கொள்... கவிதையாய் பூச்சூடிக் கொள்.. ...... ...... ...... ........ எல்லாம் செய்து கொள்... என்னை தூரமாய் நின்று.... உன்னைப் பார்க்க மட்டும் விடு.... தேவா. S

அவள் அப்படித்தான்...1978!

ருத்ரையா போன்ற படைப்பாளிகள் மீது விழாத வெளிச்சங்கள் எல்லாம் வெளிச்சங்களே அல்ல, அவை, அடர் இருட்டு என்றே நாம் கற்பிதம் கொள்ள வேண்டும். 1978களின் வாக்கிலேயே திரைப்படங்கள் பொழுது போக்க மட்டுமல்ல அதையும் கடந்த வாழ்வியல் பார்வைகளைப் பதிவு செய்பவை என்று  உணர்ந்து, அதைப் புரியவைக்க முயன்ற ஒரு மாபெரும் கலைஞன்தான் இந்த ருத்ரைய்யா. எதார்த்தத்தை பதிவு செய்ய முயல்பவர்களை வெகுஜனம் எப்போதுமே புறக்கணித்தான் செய்திருக்கிறது. அது எழுத்துலகாய் இருந்தாலும் சரி, திரையுலகாய் இருந்தாலும் சரி, அரசியல் வாழ்க்கையாய் இருந்தாலும் சரி...! பிரமாண்டங்களைப் பற்றிய கனவினில் எப்போதுமே பரம ஏழையாய் வாழ பழக்கப்பட்டுக் கொண்ட தமிழ் ரசிகர்களுக்கு " அவள் அப்படித்தான் " என்னும் படத்தை புரிந்து கொள்ள காலம் அப்போது வாய்ப்பளித்திருக்கவில்லை. அதனாலேயே அந்தப் படம் பெரும் தோல்வியைத் தழுவி இருக்கக் கூடும். தற்போது தொழில்நுட்ப வசதிகள் பெருகிப் போயிருக்கும் சமகாலத்தில் கூட மாஸ் என்டெர்டெய்னர் என்று சொல்லக்கூடிய பொழுது போக்குச் சித்திரங்களை மட்டுமே ரீமேக் செய்யத் தமிழ் தயாரிப்பு  உலகமும் இயக்குனர் உலகமும் முண்டியடித்துக

தேம்பித் திரியும்.. வார்த்தைகள்...!

இந்தக் கணம் எழுதிச் செல்லும் சுவாரஸ்யமான நினைவுகளின் எல்லா பக்கங்களிலும் உன் பெயரே எழுதப்பட்டிருக்கிறது...! விடிவதற்கு முன்பாகவே எழுந்து விடும் உன் நினைவுகளை ஒரு குழந்தையாய் என் நெஞ்சில் சுமந்து கொண்டுதான் என் தினசரிகளைக் கடக்கிறேன்...! யாரோடும் பேசப் பிடிக்கமால் மீண்டும் மீண்டும் உன் ஞாபகங்களோடு நான் பேசிப் பேசியே கழிந்து கொண்டிருக்கும் என் பொழுதுகள் உன்னால்தான் நிரம்பி வழிகின்றன...! கைகோர்த்து நடக்கும் காதலர்களின் கைவிரல்களாய் நானும் நீயுமே இருப்பதாய் எனக்குள் தோன்றுவதும்... யாரோ யாருக்கோ தலை கோத.... கோதும் தலை எனதாகவும் விரல்கள் உனதாகவுமே கற்பிதங்கள் கொள்கிறேன்..! தாயின் முந்தானை பிடித்து... அலையும் குழந்தையாய்... உன் நினைவுகளை  பற்றிக் கொண்டு திரியும் என் காதலின் மொழியற்ற ... தேம்பல்களை நான் கவிதைகளென்று சொல்வதும்  உன்னால்தானே...?! எப்போதும் சுவாசிப்பது போல உன்னை நேசிக்கும் ஒருவனிடம் என் மீதான உன் காதல் எப்படியானது என்ற உன் கேள்விகான பதிலை எழுதத் தெரியாமல்.... இதோ ஏதேதோ கிறுக்கிக் கொண்டிருக்கிறேன்... எப்படி முடிப்பது என்று

இசையோடு இசையாக...தொகுப்பு 9!

காரணம் இல்லாமலேயே கண்ணீரை வரவழைத்து விடும் இந்தப்பாடல் இப்போது எனக்கு கண்ணீர் வரவைக்கும் காலச்சூழலில் எதையோ நான் தேடுகையில் எதேச்சையாய் என் முன் வந்து விழ....மனதை அழுத்தும் நினைவுகளை எப்படி நான்உள்ளுக்குள் வைத்துக் கொள்வது....? வலியை தாங்கிக் கொண்டு வாழ்வதெப்படி...? பிரிவைச் சுமந்து கொண்டு நகர்வெதப்படி என்று கை பிடித்து விளையாடிய காலங்களில் எனக்கு தெரியாமலேயே போயிற்று என் உயிர் அக்காவிற்கும் எனக்கும் இப்படி ஒரு தூரம் ஒன்று வந்து விழுமென்று.... கல்லூரி வரை கைப்பிடித்து அழைத்து சென்று... திருமணமென்னும் கப்பலில் ஏற்றி விட்டு தனியாய் கரை நின்று கை அசைத்த பிடிபடாத வாழ்க்கை கண்ணீராய் வந்து விழுந்தது. எத்தனை அழுதாலும் பெண் என்பவள் பிறந்த வீட்டுக்கா சொந்தம் அவள் எப்போதும் வாழப் போகும் வீட்டுக்கு நாம் வாரிக் கொடுக்கும் செல்வம் தானே...,  ஒரு வருடம் எனக்கு முன்னதாக பிறந்த அந்த உயிர் வாசம் செய்த பின் தானே கடவுள் எனக்கு கருவறையை பரிசளித்தான். வளர்ந்து இருவேறு வாழ்க்கைச் சூழலுக்குள் வந்து விட்ட பின்பே...அவ்வப்போது பேசிக் கொள்ளும் தொலைபேசி பேச்சுக்களையும் காலம் என்ற கத்த

துப்பாக்கி... A REAL GUN!!!!

துப்பாக்கி படம் நல்லா இருக்கு பாஸ். இளைய தளபதி ரொம்பவே சார்மிங்கா அழகா, கொடுத்திருக்கிற வேலைய கனகச்சிதமா செஞ்சு முடிச்சு இருக்கார். ஒரு பெரிய மாஸ் என்டெர்டெயினர் பாஸ்... துப்பாக்கி படம். வத்திக்குச்சிய கிழிச்சா மாதிரி கோர்வையான காட்சிகளும், செம த்ரில்லா நம்ம கைய பிடிச்சுக் கூட்டிக்கிட்டே ஓடுறமாதிரியான ஸ்கிரீன் ப்ளேன்னு ...எல்லாமெ ஜிவு ஜிவுன்னு அட்டகாசமா இருக்கு... முருகதாஸ் மாதிரி ஆளுங்களுக்குத்தான் மொக்கை கதைகளை எப்படி செதுக்கி எடுத்து அதை சாறாப் புழிஞ்சு,  ஸ்ரிஞ்ல ஏத்தி கிளு கிளு போதை ஊசியா மாத்தி, அதை படம் பாக்குற ஆடியன்ஸ்க்கு எல்லாம் போட்டு விடலாம்ன்ற வித்தை தெரியுது. ஒரு படைப்பாளியா அவரோட திறமைய நாம பாராட்டித்தான் ஆகணும். அதே மாதிரி எவ்வளவுதான் எதிர்ப்பு இருந்தாலும் ரஜினிக்கு அப்புறமா  சின்னக் குழந்தைகள்ள இருந்து வயசானவங்க வரைக்கும் பிடிக்கிற ஒரு சூப்பர் ஹீரோவா விஜய் வளர்ந்து இருக்கார்ன்றதையும் நாம ஒத்துகிடத்தான் வேணும். லாஜிக் இல்லாம நிறையப் பண்றாரேன்னு கிண்டல் பண்ணிட்டு இருக்கவங்களையும் சேர்த்தேதான் விஜய் தன்னோட கிரேட் அட்ராக்சனால கரெக்ட் பண்ணி வச்சு