Skip to main content

Posts

Showing posts from April, 2010

சில்லுன்னு ஒரு.....காதல்.....!

அர்த்தம் இல்லாத கவிதைதான் இது.....காதலுக்கு அர்த்தம் தேடினால்.... நமக்கு சிக்குவது எல்லாம்....குழந்தைத்தனமாகத்தான்....இருக்கும்! அப்படித்தான் இந்த கவிதையும்..... காதலியை பார்த்து விட்டு....தன் வீடு நோக்கி திரும்பும் ஒரு கிராமத்து இளைஞன்...அவள் காதலிக்கிறாளா இல்லையா என்று கூட இவனுக்குத் தெரியாது....ஆனால் அவளைப் பற்றிய நினைவுகள் அழுந்தப் பதிந்துவிட்டன இவனது மனதில்....அதனால் தான் சில் வண்டு சப்தம் கூட இவனை கேலி செய்வது போல தோன்றுகிறது..... சாராலாய் அவனைச் சுற்றி ஏற்பட்ட சூழ் நிலையும் அவனது காதலை ஊக்குவிக்கும் வினையூக்கி ஆகிப் போனதுதான் அழகு.....! சூழலுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்... வசதியாய்....பிறகு படியுங்கள் கவிதையை.....அர்த்தங்கள் பிடிபடலாம்.....அழகாக.....! அது ஒரு மழை நேரத்து... மாலை நேரம்-என் ஒற்றையடிப்பாதை.... நடையோடு துணைக்கு வந்த ... நிலாவையும்...தாண்டி... பின் தொடர்ந்தன...உன் நினைவுகள்... வழி நெடுகிலும்.. நடை பயின்று.. ஒயிலாய்...வந்த... ஒரு ஊதக் காற்று... காதோரம் வந்து.... உன் பெயரை...கிசு கிசுத்து விட்டு... ஓடி மறைந்தது.....! தூரத்திலிருந்து... ஒரு நட்சத்திரம்.... உன்னைப் போலவே.

புத்தகம்

ரசனையுடன் நேசிப்பாய் தொடங்கிய அந்த நாள்... சரியாக நினைவிலில்லை.... முழுதாய் என்னை... உள்வாங்கிக் கொண்ட.. அந்த கணத்தில் தான்... என் உயிர் நகரும்... ஓசையினை உணர்ந்தேன்! நான் உன்னை... வாசிக்க....வாசிக்க... என் மூளைகளின் செல்களில்.. கிறக்கமாய்... பரவிய... போதை பரவவிடுகிறது.... ஓராயிரம்...எண்ணங்களை! உன்னுள் ஊடுருவி... என் விழிகள் உறவாடிய பின் தான்...என் இமைகள்... கவிழ்ந்து.....உறக்கம் சூழ்கிறது...! அப்போதும் கூட... என் நெஞ்சினில்..தலை சாய்த்து... நீ உறங்கும் அழகினை ... கலைக்க விரும்பாமல்.. அணைத்துக் கொண்டே..... கடத்தியிருக்கிறேன்.. என் இரவுகளை! விலையில்லா உனக்கு..... விலைகொடுத்து உன்னோடு கூடும்... கணங்களில் ...எல்லாம்... நான் கற்றது எல்லாம் என்னைச் சலனமின்றி மெளனமாக்கும் இன்று வரை...புது புது... வடிவங்கொண்டு... நித்தம் ...எனை... வசிகரித்து... நித்தம் ஒரு பெயரோடு...தொடர்கிறது நம் உறவாடல்... - தேவா. S

எரிமலைகள் வெடிக்கட்டும் பதிவுத் தொடர் II

(நான் இணைத்திருக்கும் இந்த புகைப்படம் பற்றி நான் எதுவும் எழுதவில்லை.....! உங்களின் மனசாட்சிகள் ஒரு கட்டுரை எழுதும் தனித்தனியே...இது பற்றி உங்களுக்குள்) இதுவரை பாகம் I இனி.... ரத்தம் கொதிக்கத்தான் செய்கிறது நண்பர்களே.... நம்மை சுற்றி நிகழும் நிகழ்வுகளை நினைத்துப் பார்த்தாலே! ஒவ்வொரு பதிவிட்ட பிறகும்... நான் சர்வ நிச்சயமாய் வாக்குகளின் எண்ணிக்கையினை நோக்குவதில்லை...ஆனால் எத்தனை பின்னூட்டங்கள் இட்டுள்ளார்கள் என்பதுதான் எனது முழு கவனத்திலிருக்கும்..ஏன் தெரியுமா? கட்டுரையின் போக்கு...சரியா அல்லது தவறா அல்லது கட்டுரையில் இல்லாத வெளிப்படுத்த வேண்டிய கருத்துக்கள் இருக்கின்றனவா என்றுணர சரியான பின்னூட்டங்கள் உதவும்....! ஒரு லட்சம் பேர் என்னுடைய வலைப்பூவினுக்குள் நுழைந்து சென்றிருக்கிறார்கள் என்பதை விட...5 பேர் சிந்திக்க வைக்கும் வகையில் பின்னூட்டமிட்டுள்ளார்கள் என்பது ஆரோக்கியமான விசயம்...! நமது கருத்துக்களை தெளிவாக மக்களின் முன் நமது தமிழ்ச்சமுதாயத்தின் முன் வைக்க வேண்டும்...வலுவான இரண்டு கருத்துக்கள்....ஒரு லட்சம் ஓட்டுக்களுக்கு சமம்....என்பது எனது...பார்வை நோக்கு! உலகத்தில் எந்த மனிதனுக்கு ப

எரிமலைகள் வெடிக்கட்டும்.....!

ஈழம் நமது சிந்தனையில் இருந்து நகர்ந்து போய் விட்டதா தமிழினச் சகோதரர்களே....! தனி நாட்டினை பெற்றெடுப்போம் என்ற சிந்தனையை விட....அந்த மண்ணில் தமிழினத்துக்கு நடந்த அநீதி எல்லாம்...உலகக்தமிழர்களின் உள்ளத்தை விட்டு பெயர்ந்து போய் விட்டதா? தமிழ் நாட்டில் இருக்கும் எம் மக்கள் தினசரி செய்த்தித்தாள் செய்திகளின் பின் செல்லும் ஆட்டு மந்தையாய் மாறி விட்டனரா? எம்மக்களின் இன உணர்வுகளுக்கெல்லாம் அரசியல் சாயங்கள் பூசி ஓட்டுக்காய் கூவி விற்கும் கைப்பாவை ஆகி விட்டனரா? கொதித்தெழுந்திருக்க வேண்டிய ஒரு சமுதாயம்...இன்று எதுவுமே நடவாதது போல...சாமியார்களின் செய்தியிலும்...ஆயிரம் ஊழலோடு நடந்தேறிய விளையாட்டுப் போட்டிகளிலும்... கவனங்கள் திரும்பி விட்ட காரணத்தால்... நடந்து விட்ட அநீதி அழிந்து விடுமா? எழுத்துலக நண்பர்களும் மற்ற கட்சிசார் ஊடகங்கள் போல வசதியாய் எல்லாவற்றையும் மறந்து விட்டு....ஏதேதோ எழுதிக் கொண்டிருக்கிறார்கள். நமது எழுத்தில் இருந்து வெளிவரும் அக்னி உலகைச் சூழ வேண்டாமா?. நம் தாய் தமிழின் வளத்தில் வார்தைகள் வந்து தெறிக்க வேண்டாமா? ஒவ்வொரு தமிழனும் தன் சக தமிழனுக்கு அநீதிகளை எடுத்துக் கூற வேண்டாமா? ஒரு

காதல்....சொல்ல வந்தேன்....!

உன்னைப் பற்றிய... நினைவுகளையும்.. உன் மீதுள்ள...காதலையும்... எத்தனை முறை எழுத்தாக்கினாலும்... அவை குறைப்பிறசவ... குழந்தைகளாய்தான் ஜனிக்கின்றன! கற்பனைக் கெட்டா...காதலுணர்வினை... கவிதைக்குள் கொண்டுவர... பகீரதனாய்...பிராயத்தனம் செய்கிறேன் தினமும்! ஒரு ஓவியனாய் மாறி... ஓராயிரம்...சித்திரங்களில்.. நம் காதலை...கொண்டுவர... முயன்று..முயன்று... கைகள் ஊனமானதுதான் மிச்சம்! இசையாய் உன்னை .... வெளிப்படுத்த..எண்ணி.. ஓராயிரம் சந்தங்கள் இட்டாலும் எல்லம் வெறும் சப்தமாய்.. மட்டுமே...வெளிவருகிறது...! என் மூச்சுக்காற்றை ராகமாக்கி...காதலை... வாசிப்பாய்...மாற்ற நினைத்தால்... காதலை உள்வாங்கிக் கொண்டு வெறும் காற்றை மட்டுமே... துப்புகிறது... புல்லாங்குழல்! எப்படி சொல்வது... எனக்குள் இருக்கும் .. நீ சொல்ல நினைக்கும் காதலை... ஓராயிரம் முறை யோசித்தாலும்... மூளையிடம் கேட்கும்... வெறும் யாசிப்பாய்... நின்று விடுகிறது என் நினைவுகள்! இந்த கணமின்றி... எல்லாக் காலங்களிலும்... நிறைந்திருக்க வேண்டும்.. என் காவிய காதல்... கவலையாய் சிந்தித்து..சிந்தித்து வெளிப்படுத்த முடியாமலேயே... அழிந்து போகுமா என் அற்புதக்காதல்! நிறைவாய

இன்னுமொரு...தாஜ்மஹால்....!

உன் நினைவுகள் கொண்டே..இரவுகள்... உடைக்கப்படுகின்றன... காமம் இல்லா காதலாக.. ஒவ்வொரு கணமும் நாம் கடக்க... நட்பின் பரிமாணங்கள்... சூரியக்கதிர்களாய்... நம்முள் எட்டிப்பாய்கின்றன...! அர்த்தம் பொதிந்த... உன் மெளனங்களொடு..... நட்பாய். ...கரம் கோர்க்கும் கணங்களில்.... காமம் அங்கே... தற்கொலை செய்யும்...! காதல் காதல்...என்று... பெண்ணை... காமத்திற்கு இழுக்கும்... சமுதாயத்தில்....நட்பு ... நட்பு என்று சொல்லி காதலை என்னுள் நிறைப்பாய்! உன் வார்த்தைகள்... என்னை வெல்லும்.... கணங்களில் எல்லாம்... நான் வாழ்க்கையை வென்றிருக்கிறேன்....! உன் தோள் சாயும் தருணங்கள்.... தாய்மையை எனக்குள்... ஊற்றி நிறைக்கும்! ஆணாதிக்க சமுதாயத்தில்... ஒன்று.. பெண் கூடுவதற்கு.... அல்லது....சுமைகளை...கூட்டுவதற்கு... இன்று...திருமண பந்தங்கள்... நம் நட்புக்கு நெருப்பு வைத்தன... சம்பிரதாய கழுகுகள்... பார்வைகளால் கொத்தி தின்றன... மரபு மரபு என்று... உன் திருமணத்திற்குப் பிறகு... பிரிவுகளின் பின்னே .. மெளனமாய்.. ஓடி ஒளிந்தது... நம் நட்பு! ஆளுமை செய்ய... அடையாளம் இட்டுக்கொண்ட உறவுகளுக்கு மத்தியில்... சர்சையாகிப் போனது... ஆண் பெண் நட்பு!

வன்முறை...

கன்று தடுத்து.... காராம் பசுவிடம்.. பால் கறக்கும் பொழுதுகளில்... வரவில்லையா.... உங்களுக்கு மிருகாபிமானம்? *** திறந்த வீட்டினுள்... நுழையும் எதோ...போல... செடியின் அனுமதியின்றி.... மலர்கொய்யும் போது... மனம் சொல்லவில்லையா... இது அத்துமீறல் என்று? *** மனம் திறந்து ... பேசிடும் பேச்சாய்.... வானம் மேகமுடைத்து... பெய்யும் மழை மறுத்து.. கதவடைக்கும் கணங்களில்... தோன்றவில்லையா... உங்களின் சுய நலம்! *** ஒவ்வொரு முறை.... மரம் களையும் போதும்... புரிந்ததில்லையா..... உங்களுக்கு....பூமித்தாயின் கையிலிருக்கு குழந்தையைத்தான்... கொல்கிறீர்களென்று! *** நீங்கள் ... பெளர்ணமியாய்... ரசிக்காத காரணத்தால்.... தினம் தேய்ந்து.. அமாவாசையாய்.. கோபம் காட்டும்... நிலாவை புரிந்து இருக்கீறீர்களா இதுவரையில்....! *** குருடர்களாய்... கவனிப்பதில்லை... நம் அன்றாட அத்துமீறல்களை... என்றுதான் நிறுத்தப்போகிறோம்... வசதியாய் நாம் மறந்திருக்கும்.. இந்த வன்முறைகளை......! பொதுப்புத்தி என்ன கற்பித்திருக்கிறது...வன்முறை என்றால் வெடிகுண்டு வைப்பதும்...உயிர்ச்சேதம் விளைவிப்பதும்...பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பதுதான் வன்முறை என்பது

நாங்கள் இந்தியர்கள்! நீங்கள்....டோன்டு ....?

அன்புள்ள டோன்டு சார்.....! எதுவுமே எழுதாம அப்படியே விட்டு விடலாம் என்று இன்று மதியம் வரை நினைத்தேன்...இருந்தாலும் சக பதிவர் என்ற வரைக்கு ஒரு சிறிய கடிதமாவது எழுதாவிட்டால் எனக்குள் இருக்கும் எனது விழிப்புணர்வு நிலை என்னை சும்மா விடாது.....! பார்வதி அம்மாளை திருப்பி அனுப்பியதற்காக... அரசாங்கத்தின் மீதுதான் நமது கோபம் திரும்ப வேண்டும் அறிவு கெட்ட அரசாங்கம் அந்த மூதாட்டியை உள்ளே விடாததற்கு அதற்கு ஓராயிரம் சுய நல கேவலமான ஏகாத்திபத்திய காரணங்கள் இருந்தது....அது அதிகாரத்தில் இருப்பவர்களை மக்கள் தோலை உரித்து அரியாசனத்தில் இருந்து இறக்கும் வரை அவர்களின் ஏகாத்திபத்திய செயல்பாடுகள் மாறாது. இது ஒரு சமுதாய கோபாமாக மாறி....அரசாங்கக்துக்கு சூடு கொடுக்கும் வையில் இருக்க வேண்டும்... சாதாரணமாய் வாழும் மனிதன் தனது கோபத்தை டீக்கடை வாசலிலோ அல்லது....அலுவலக கேண்டினிலோ....அல்லது ஒரு பேருந்து நிறுத்தத்தில் விவாதித்தோ தனது கோபத்தைப் போக்கிக் கொள்வான்...ஆனால் உங்களைப் போன்றவர்கள் எழுதும் ஆற்றல் கொண்ட மனிதர்கள் ...ஒரு முற்போக்கான விரிந்த பார்வை உங்களுக்கு இருக்க வேண்டாமா? இல்லை என்றால் வன்முறைய

சமத்துவ கனவு!

தொலைந்து போன நாட்களை... நினைத்துதான் சந்தோசப்படுகிறோம்.... மரணித்த மனிதர்களிடம் மட்டுமே ... வருகிறது மனிதாபிமானம்... இன்னும் ஒரு நாள் விடியட்டும்... அதுவும் வெறுமையாய் அடங்கட்டும்.... மதங்களின் போர்வை... சுற்றிய மனிதர்கள்....! சுய நலத்தை போர்வையாக்கிய அரசியல்வாதிகள்... காசுக்காக ஓட்டுப்போட ஒரு கூட்டம்... கெளவரவத்திற்கா ஓட்டுபோடத... ஒரு படித்த கூட்டம்... புறக்கணிப்பதாய் சொல்லி... ஒதுங்கும் ஒரு கூட்டம்.... இப்படித்தான் நடக்கிறது நம் நாட்டுத் தேர்தல் கடைசி வீட்டுத் தாத்தாவின் துருப்பிடித்த சைக்கிள்... அடுத்த மழைக்குள்ளாவது கூரை மாற்ற வேண்டும் என்ற ஆசை.... இரண்டுமே... இந்திய வல்லரசு கனவு போல...! உச்சிவெயில்...குண்டும் குழியுமான என் கிராமத்து தார்ச் சாலை மந்திரி வருக்கைக்காக ஏழை வீட்டு மணபெண்ணாய்... அலங்கரித்துக் கொள்கிறது....! தெருவோர டீக்கடையில்... ஒரு குவளை டீ குடித்து உலக அரசியல் பேசும் ஊர்ப்பெருசுகள்...! பழைய துணிபோட்டு... பக்கெட் வாங்கும் அம்மணிகள்... அம்மணமான குழந்தைகள் துணி இல்லாமல்... குடிசைகளின் ஓரங்களில்! சீமான்களின் மீதமான உணவுகள்... குப்பைத்தொட்டிக்கு போகாமல்... என்று தான் நே

வார்த்தைகளற்ற...வார்த்தைகள்....!

அலுத்துதான்.. போகிறது... வார்த்தைகளின்இரைச்சலை நித்தம்...கேட்டு கேட்டு... சப்தங்கள் இல்லா... என் தனியுலகத்திற்குள்... ஏன் அத்து மீறி.. நுழைகின்றன...? தத்துவங்களும்..விளக்கங்களும்... எத்தனை முறை உச்சரித்தாலும் தவறாய்...கற்பிதங்கள் கொடுக்கும்... வெற்று வார்த்தைகளை.. வைத்துக் கொண்டு... நான் என்னதான் செய்வது? இயற்கை எப்போதும்... மெளனமாய் போதிக்கிறது... ஒராயிரம்...விசயங்களை....! விவரிக்கும் ஆசையில்... நான் மட்டும்... ஏன் சிக்கவேண்டும்... சப்தங்களின்... நெரிசலுக்குள்! எல்லா ஓசையும் நிறுத்தி விட்டு... சப்தங்களை உள் நோக்கி.. திருப்பும் கணங்களில் மட்டும்... கிடைக்கிறது...வெளியே தொலைந்து போன... நிம்மதி! சூட்சுமத்தை எழுத்தாய்...மற்றி... உங்களின் கண்களுக்கு... விருந்தாக்கிய பின்.... சூட்சுமத்தின் சாரமெல்லாம்.... கற்பூரமாய்....கரைந்து போய்..., வெற்றுத்தாளிலிருந்து... ஏதேதோ...எண்ணங்களை... மாற்றிப் பூக்க வைக்கிறது.... வாசிப்பாளனின் மனதில்.....! எப்படி பார்த்தாலும் எழுத்தாக்கும் முயற்சியும்...சொல்லிப் புரிய வைக்கும் முயற்சியும் பயனற்றது. ஓரயிரம் முறை முயன்று...ஒரு கருத்தை புரியவைக்க நினைத்தாலும் அது அ

வாழ்க்கை வாழ்வதற்கே......!

எல்லோருக்குமே...டி.வி. மற்றும் பத்திரிக்கைகளில் வரும் விளம்பரங்கள் ரொம்பவே பிடிக்கும், வயது வித்யாசம் இல்லாமல் அனைவருமே இதில் லயித்து விட காரணம் ....சில நிடங்களே வரும் அல்லது ஒரு புகைப்படமாய் இருந்தாலும் அதில் ஒரு மெல்லிய உயிரோட்டம் இருப்பதுதான் உண்மை. புரூக் பாண்ட்....விளம்பரத்தில்....கடைசிவரை தன் மனைவியை திணறடித்து விட்டு....இறுதியில் ஐ லவ் யூ சொல்வது தான் விளம்பரத்தின் அழகு... ஒரு படைப்பாளியின் மூளை எப்போதுமே..புதிது புதிதாகத்தான் சிந்திக்கிறது...அதாவது பழைமையாய் இருந்தாலும் அதில் ஒரு புதுமையைப் புகுத்தி பார்க்கிறது. கிரியேட்டிவிட்டி என்பது இல்லாத வாழ்க்கை வாழும் மனிதர்கள் பெரும்பாலும் சலித்துக் கொண்டுதான் வாழ்றார்கள்..... தோழி சித்ரா தனது பதிவில் சந்திரமுகி பார்க்க வந்தவர் சந்திரமுகி ஆகிப்போன கதையை சொல்லியிருந்தார்....இப்படித்தான்....எக்குத்தப்பாக வாழ்க்கையை வாழ்ந்து மிகைப்பட்ட பேர்கள் சலித்துப்போயிருக்கிறார்கள். வாழ்வின் எல்லா நிகழ்வுகளுக்கும் அர்த்தம் தேடிக்கொண்டு சிலபேர் அலைந்து கொண்டிருக்கிறார்கள்....கடைசிவரை எதுவும் கிடைக்கமல்..அலுத்து சலித்து உட்கார்ந்து விடுகிறார்கள். ஒரு ப

தமிழா இதை எப்படி மன்னிக்கப் போகிறாய்....?

சிங்கத்தை பெற்ற.... தங்கம் வந்ததா...? கரிகாலனை பெற்ற... கடவுள் வந்ததா....? வல்லரசு இந்தியாவே... தொடை நடுங்கி..... அனுமதி மறுத்தாயோ? பிணி தீர்க்க வந்த... மூதாட்டியிடமே... நடு நடுங்கிய நச்சுப் பாம்புகளே... சிங்கதலைவன் வந்தால்... தூக்கிலிட்டு மரிப்பீரோ? அனுமதி மறுத்து... அவமானப்பட்டது.... காந்திதேசத்தில்... கறை படியச் செய்தது..... எல்லாம்...வீரமென்றா சொல்வீர்கள்! விருந்தோம்பலை...உலகுக்கெல்லாம்... விளக்கிச் சொல்லும்...தமிழ் நாடே...! தமிழனுக்காய்...போராடிய... சிங்க நிகர் தலைவனின்... தாயையா நீ நிராகரித்தாய்....! மருத்துவ உதவி தேடிய...ஒரு உயிரை... மதிக்காமல் திருப்பிவிட்ட... பாவம் உமை சும்மா விட்டிடுமா? ஒட்டு பொறுக்கும்....பிச்சைக்காரர்கள்.... தேர்தல் நேரத்தில்அம் மட்டுமே வருவார்கள்.... தமிழினம் என்ற...திருவோடு ஏந்தி....! என் தமிழனமே....கவனமாயிரு....! காசு கொடுத்து அவன் வாங்கப் போவது.... உன் ஒற்றை ஒட்டு அல்ல....தமிழனின் தன்மானம்.....! என் தாய் தமிழினமே.....தமிழினமே....மீண்டும் ஒரு முறை ஜோராக கைதட்டுங்கள்... மீண்டும் ஒரு கேவலமான காரியத்தை அரங்கேற்றி இருக்கும் இந்திய அரசாங்க கோமாளிகளைப் பார்த்த

இது என்ன மாயமடி?

ஒரு மழைக்கால முன்னிரவின்.. இருண்ட வனமும்.. "சோ" வென்று பெய்த...மழையும்.... நீ இல்லாத வெறுமையை....அதிகமாக்கின....! உன் காதல் பார்வையின்.... கதிர்வீச்சில்... பஸ்பமானது என் இதயம்! உன் உதட்டோர மச்சமும்... நெற்றி விழும் முடியும்... கூரான நாசியும், கவனமாய்... என் கவிதைகளுக்கு ...கருவாகின்றன....! ஓவியமாய் தலைசாய்த்து.... ஒய்யாரமாய் நீ ... பார்க்கும்.. காவியக் காட்சியினை... விவரிக்கத் தெரியாமல்... மெளனக் கடலில்...குதித்து... தற்கொலை செய்து கொள்கின்றன.... வார்த்தைகள்...! உன் விரல்களால்... என் தலை கோதி.... சமாதி நிலைக்குள்...கண நேரம்.... எனைத் தள்ளி.... கல கல சிரிப்பொலியால்.. மீண்டும் எனை மீட்டெடுத்த.. கணங்களை விட்டு...மீளவேயில்லை நான்! கவிதையாய் உன் இமை துடித்த ஒவ்வொரு வினாடியையும்.. நினைத்து நினைத்து... பட படக்கிறது என் இதயம்! எல்லா வார்த்தைகளையும் வாசிக்க தெரிந்த எனக்கு.... உன் பெயரை....மட்டும்.... ஏன் சுவாசிக்கத்தான் முடிகிறது....! என் இமைகளுக்குள் எப்போதும் நீ... அதனால்தான்...பகல் முழுதும்... உன்னைத் தொட்டு விளையாடியும்.... இரவுகளில் அணைத்துகொண்டும்... உறங்குகிறேன்! என் வார்த்தைகள

பொன்னாத்தாவின் ...புலம்பல்!

கழனியில வேல பாக்க கலங்கி நின்னதில்ல... கட்டுக் கதிரு சுமந்தும் .... நடக்க சிரமப்பட்டதில்ல... கையில் இரண்டு இடுப்பில் ஒண்ணு... வயித்தில் ஒண்ணு.... இருந்த போதும் கவலையில்ல... பத்துவீடு...சுத்திவந்து... பத்துபாத்திரம் தேய்ப்பதில.... கூட... குறையுமில்ல... மூலையில கிடந்தாலும்... மூணுவேளை கஞ்சி ஊத்த...கஷ்டமில்ல....! இரவு பகல் பாராம... மிருகமா என்னை வேட்டையாடி... கொன்னாலும்...பரவாயில்லை... மொட்டையா போற...மகன்... குடிச்சு...குடிச்சு.....சீரழிஞ்சு... அவன் குடல கருக்கி...எங்க உசிர.... எடுக்காம இருந்தா சரிதேன்...! கவுர்மெண்டே...கட துறந்து... கருமாதி நடத்துதே....! காந்தி போட்டோவ..... காகிதத்தில் போட்டு வச்சு.... கல்லாவுல சமாதியாக்கி.... கல்லுக்கடை (டாஸ்மாக்) நடத்துதே! கேக்க ஒரு நாதி இல்ல.... என் சுமைய எறக்கி வைக்க யாருமில்ல... எல்லா சாமிய கும்பிட்டும்.... ஒரு சாமிக்கு கூட காதும் இல்ல...! என்னதான் நவீனமயமாக்கல்...புதிய தொழில்களின் முதலீடு....தொழில் நுட்ப வளர்ச்சி, மகளிர் இட ஒதுக்கீடு என்று நாம் பேசி வந்தாலும்....மது அரக்கன் தமிழகத்தின் கிராமப்புற மக்களின் அன்றாட வாழ்க்கையினை பதம் பார்க்கமல் இல்லை.

கிளிகளின் கீதம்....

சாலையோர என்வீடு... வீட்டோர...புங்கை மரம்... மரமிருக்கும் கிளிக்கூட்டம்... ஒவ்வொரு அதிகாலை... விடியலும்...இசைக்கச்சேரிதான் எனக்கு! பிரம்ம முகுர்த்தத்தில் எழுந்து கொள்ளும்... என்பகுதி விழிப்பு நிலையில்.... அவற்றின் குடும்ப பேச்சுக்கள்... விழுந்தும் விழாமல்.... என் காதோராம்....உரசிச் சொல்லும்.! சில நாள்...அவை பேசி சிரிக்கும்... சில நாள் சண்டையிடும்... பல நாள் காதல்கொண்டு... மெதுவாய்.... கிசு கிசுத்து.... மனித அரவத்திற்கு முன்னே.... இரை தேடி....புறம் பறந்து செல்லும்....! என் விடுமுறை நாளின் எல்லா பகல் நேரமும்.... புங்கை மரக் கிளிக் கூட்டத்தோடுதான்... கரைந்து செல்கையில்... கூட இரண்டு குயில் சேர்ந்து.... இந்த கூட்டணிக்கு வலு சேர்க்கும்... இப்பூமியின் இடர்ப்ப்பாடுகள் பற்றிய... கவலையின்றி அவை தினம் பறக்கும்! அதுவும் ஒரு விடியல்தான்... அதிகாலை நேரம்...தான்...ஆனாலும்....சப்தமில்லை.....! ஏன் கடந்த இரவு இன்னும் ... விடியவே இல்லையா...? அனிச்சையாய் எழுந்த கேள்வியில்... அர்த்தம் இருப்பதாய் தோணவில்லை...! பாதி தூக்கத்தில்... கலைந்தது என் கனவு..... கிளி

வாழ்வே மாயம்.... தொடர் பதிவு V I

இந்த தொடரின் மூலம் எந்த ஒரு தனிமனிதரின் வாழ்க்கையை பிரபலமாக்கும் முயற்சியை நான் எடுக்கவில்லை மாறாக தினம் மாறிகொண்டிருக்கும் ஒரு நிலையில்லாத ஒரு வாழ்க்கையினைத்தான் நாம் அனைவரும் திடமாக நம்பி....சில தவறான முடிவுகளை எடுத்து விடுகிறோம்....அந்த நிலையாமையின் நெருப்பை அனைவரின் நெஞ்சுக்குள்ளும் கொண்டு வரும் ஒரு சிறு முயற்சி....! ஒரு பதிவெழுதி நான் சமுதாயத்தின் எண்ண ஓட்டத்தை மாற்றி விடுவேன் என்று சொல்லவில்லை...ஒருவர் அல்லது இருவர் இதை உணர் ந்தாலே...அது கட்டுரையின் வெற்றி..... தொடர்ந்து செல்வோம்....! இதுவரை பாகம் I பாகம்II பாகம் III பாகம் IV பாகம் V இனி.... கட்டைகளுக்கு நடுவே வைக்கப்பட்டது உடல்........மறைக்கப்படாமல் இருந்தது முகம். ஒரு தீக்குச்சி தன்னுள் அக்னியை தேக்கி வைத்து அந்த உடலை பஸ்பமாக்க காத்திருந்தது.....! சடங்குகள் எல்லாம்....கடந்து....அக்னி காதலோடு உடலை அணைத்து.....உருமாற்றிக்கொண்டிருந்தது....! வந்தவர் எல்லாம் திரும்பிப்பார்க்காமல் சென்றுவிட.... ஒரு ஓரமாய் அமர்ந்து இருந்த என்னை யாரும் கவனிக்கவில்லை.......... ஒரு முறை மாமாவோடு டீ குடித்துக்கொண்டிருந்தேன்....சூடான டீ...அவரது கையில் கொஞ்

வாழ்வே மாயம்.... தொடர் பதிவு V

பதிவினை தொடங்கும் போது ஏதோ ஒன்று அல்லது இரண்டு பதிவுகளில் முடிந்து விடும் என்று தான் நினைத்து ஆரம்பித்தேன், ஆனால் 5வது பதிவு வரை வர வேண்டிய அவசியமாகி விட்டது. இன்னும் ஒரு பதிவு வரலாம் அல்லது இத்தோடும் முடியலாம்... பார்க்கலாம்.... சகோதரி சித்ரா அவர்கள் எல்லா பாகங்களையும் வரி விடாமல் வாசித்து வாக்களித்து...கருத்துக்களும் தெரிவித்து இருப்பது நெகிழ்ச்சியாக இருந்தது அவரின்...வாசிக்கும் திறன் மட்டுமல்லாது பதிவர்களை ஊக்குவிக்கும் ஒரு தாயுள்ளமும் இருப்பதை என்னால் உணர முடிந்தது. சாதாரணமாக பின்னூட்டத்தில் வாழ்த்து சொல்லவதை விட.... முதன்மைப் பதிவிலேயே அவருக்கு நன்றி தெரிவிப்பதுதான்....தர்மம்..... நன்றிகள் சகோதரி.....! வாழ்க்கையின் ஓட்டத்தோடு எல்லா நிகழ்வுகளும் சட்டென நடந்து முடிந்து விடுகின்றன.... நினைத்துப் பார்க்கும் போது எல்லாமே கனவாகத்தான் தோன்றுகின்றன.... சரி....மேற்கொண்டு நாம் பயணிக்கலாம். இது வரை பாகம் 1 - http://maruthupaandi.blogspot.com/2010/04/i.html பாகம் 2 - http://maruthupaandi.blogspot.com/2010/04/i-i.html பாகம் 3 - http://maruthupaandi.blogspot.com/2010/04/i-i-i.html பாகம் 4 - htt

இனி ஒரு விதி செய்வோம்

சமீபத்திலொரு தோழி என்னிடம் கேட்டார் நீங்கள் ஏன் மனித வாழ்வின் அவலங்களைப் பற்றி மட்டும் எழுதுகிறீர்கள்...வாழ்வில் எவ்வளவோ நல்ல விசயங்கள் நிகழ்வுகள் இருக்கின்றனவே....ஏன் ஒரு பெஸிமிஸ்ட் (Pessimist) போல எழுதுகிறீர்கள் என்றும் கேட்டார். அவருடைய கேள்வியை மறு பரிசீலனை செய்யாமல் நானும் ஒத்துக்கொண்டேன். அதாவது மனித அவலஙகள் பற்றிதான் எழுதுவது என்ற எந்த ஒரு தீர்மானமும் எடுத்துக் கொண்டு எழுத உற்காருவதில்லை....அதே நேரத்தில் பதிவு எழுதவேண்டுமே என்று கடமைக்காகவும் எழுதுவதில்லை...ஏதாவது ஒரு செய்தி நம்மை பாதித்து பதறவைக்கும் நேரத்தில் நமது ஆதங்கத்தை வெளிப்படுத்தும் ஒரு வடிகால் தான் பதிவுகள்! காயங்களுக்குத்தானே...மருந்து தேவை......கை குலுக்க ஓராயிரம் கைகள் இருந்தாலும்...கவலையை துடைப்பது என்னவோ சில கைகள் தானே....அவர்கள் எல்லாம் நேர் நோக்காளர்கள்தானே(optimist).....? மேலும்..... நல்ல சுகாதாரமான இடத்தை சுற்றி கோடி பேர் இருப்பார்கள் ...சாக்கடையை சுத்தம்செய்வது எல்லாரும் செய்யும் காரியமல்ல....அவலங்கள் பற்றி பேசுவது அதை மிகைப்படுத்துவதற்கு அல்ல....அவலங்களை களைவதற்காகத்தான் .....! சந்தோசங்களை மட்டும் பேசுவதும்

வாழ்வே மாயம்.... தொடர் பதிவு I V

சில நேரங்களில் வாழ்வின் சில பகுதிகள் இறுக்கமாய் நம்முள் பதிந்து....ஒரு புதிய பரிமாணத்தை நமக்கு கொடுக்கும்...புறத்தில் அது ஏதோ பெரிய.. இழப்பைப் போல் இருந்தாலும் அது புதிய விசயங்களின் பிறப்பாய்த்தான் இருக்கும்... இதுவரை... பாகம் 1 - http://maruthupaandi.blogspot.com/2010/04/i.html பாகம் 2 - http://maruthupaandi.blogspot.com/2010/04/i-i.html பாகம் 3 - http://maruthupaandi.blogspot.com/2010/04/i-i-i.html அப்படித்தான் ஆகிப்போனது எனக்கும்...ஒரு இறப்பில் ஓராயிரம் புதிய விசயங்கள் என்னுள் பிறந்தன....சரி....ஊர்தியோடு சேர்ந்து நாமும் ஊர்வோம்............. இனி.... அமரர் ஊர்தியின் உள்ளே இருந்த எனக்கு தலை மெதுவாக சுற்றத் துவங்கியது.. உள்ளே உடலின் அருகே இருந்த...எனக்கு...அசைவற்ற.. சலனமற்ற... மாமாவின் உடலை பார்க்கும் போது...அந்த உடல் உடுத்தி உண்டு.... சிரித்து... அலங்கரித்து...விளையாடி.... வாழ்வின் எல்லா பூரிப்புகளையும் அனுபவித்து...கவலைகளில் கலங்கி..எத்தனை எத்தனை ஆட்டங்கள்....! அவரது திருமணம் நடந்த சமயம் என் நினைவில் வந்தது...அத்தனை சிறப்பாய்....அந் நாள் அ.தி.மு.க அமைச்சர் திருநாவுக்கரசர் தலைமையில் நட

இரவுகளின் தாரகை...

இரவுகளின் தாரகை நான்... மாலை வேளைகளில் தான்... என்....பெண்மைக்கு.... தூரிகையால் அலங்காரங்கள்.... வாசனைகளில் என்னை நிரப்பி... வரும் வாடிக்கையாளனுக்கு... காத்திருப்பேன்....வாசலிலே...! கண் இமைக்கும் நேரத்தில்... காதல்.... கை சொடுக்கும் நேரத்தில்.... காமம்.. .! பணப்பையின் கனத்திற்கு... ஏற்றார் போல கூடிக் குறையும்.. எங்களின் உணர்வுகள்! எச்சமிட்டு பறக்கும்... காகம் போல.... உச்சத்திற்கு....பிறகு... பறக்கும் மனிதர்களுக்கு நடுவே... வயிற்றுக்காக உடல் விற்கும்... அவலங்கள் நாங்கள்! பிரபஞ்ச சுழற்சியின்... சூட்சுமத்தை.....வர்ணமாக்கி... விலைக்கு விற்கும்... தலைமுறை கடந்த வியாபாரிகள் நாங்கள்! உடல் தொட்ட எந்த விரல்களும்... எங்கள் உள்ளம் தொட்டதில்லை...! விரக தாபத்திற்கு...' விளக்கம் தெரியாமல்... விரகத்தை விளக்கில் எறிக்கிறோம்...! எங்களுக்குள்ளும் ...இருக்கிறது... காதலும் காமமும்...காய்ந்துபோன நிலமாய்... தேய்ந்து போன நிலாவாய்....! உழைப்பிருந்தும் உற்பத்தியின்றி.. முடங்கிக் கிடக்கின்றன... எங்களின் கருவறைகள்... தெய்வமில்லா…கோவிலின் ... திருவிழாவாய்....தொடர்கிறது.... எங்களின்...இரவுகள்! ஒரு சீரியச

வாழ்வே மாயம்.... தொடர் பதிவு I I I

ஏதோ... சொந்த கதையை நான் சொல்வதற்காக இந்த பதிவை தொடராக இடவில்லை... அந்த அளவுக்கு பிரபலமானவனுமல்ல...அதானால் மிகைப்பட்டவர்களுக்கு அதீத ஆர்வம் எடுபட வாய்ப்பும் இல்லை....மிக முக்கியமான காரணம் என்னவென்றால்.....இது சமகாலத்தில் நடக்கும் பிரச்சினை அல்ல.. மேலும் முழுக்க முழுக்க....வாழ்வியலும், வாழ்வில் மிகைப்பட்டவர்கள் நினைக்கவே மறுக்கும் ஒரு நிகழ்வு பற்றிய செய்தி....சரி... நாம் மேற்கொண்டு நகர்வோம்..... இதுவரை.. பாகம் 1 - http://maruthupaandi.blogspot.com/2010/04/i.html பாகம் 2 - http://maruthupaandi.blogspot.com/2010/04/i-i.html இனி.... இரவு முழுதும் தூங்கமுடியாமல் ஒராயிரம் கேள்விகள் ஏவுகணையாய் என் மனதை துளைத்தது...இறக்கும் வரை கனவுகள்...ஆசைகள்.....பேச்சுக்கள்....சண்டைகள், காதல், காமம்...பதவி, அந்தஸ்து, பணம்...என்று நான் ... நான் .. நான் என்று வாழும் மனிதர்கள் சட்டென்று ஒரு நாள் போய் சேர்ந்த பின்னால்....இவர்களின் தேடல் எல்லாம் என்னவாகும்....?சடலமாய் ஒரு மனிதரின் உடலை நான் பார்த்தேன்... அந்த மனிதர் என்னிடம் பேசி சிரித்து....எதிர்கால திட்டங்களை கூறி... நன்றாக உடுத்தி...உண்டு..வாழ்ந்தவர்...! இன்று

வாழ்வே மாயம்.... தொடர் பதிவு I I

இது வரை http://maruthupaandi.blogspot.com/2010/04/i.html இனி.... நிறைய உடல்களை பார்த்த பின் ஒரு உடன் ஒரு உடலின் கையில் தழும்பு இருப்பதை கண்டு என்னை அவசரமாய் அழைத்தர்...அந்த தழும்பை பார்த்த உடனேயே.. என் கண்களில் கண்ணீர் அனிச்சையாய் வந்தது.... என் தாயிருந்த...இடத்திலே... நீ இருந்தாய்... இன்று நீ இருக்கும் இடம்.. எது மாமா? என்ன கவலை தீருமுன்னு... நீ மரிச்சே... உடல ஒழிச்ச நீ... உடனே பிறப்பாயோ... மனச அலைய விட்டு... மறு ஜென்மம் எடுப்பாயோ...? என் அம்மாமனே... உனை.. எந்த பிறப்பில்... காண்பேனோ.... இல்லை இனி காணமலேயே போவேனோ...? மாமவின் முகம் தெளிவாய்....முன் தினம் செய்யப்பட்ட சவரம்.. நன்றாகதெரிய.....சாந்தமாய்...எனைப்பார்த்து சிரிப்பது போல தெரிந்தது..... ! என்னிடம் விவரிக்க எந்த ஒரு வார்த்தையோ பயமோ இல்லை....மனம் ஒரு நிலைப்பட்டு தனித்து கிடந்தது....! எந்த ஒரு சலனமும் இல்லாமல்.. தனிமைப்பட்டு கிடந்தது....! ஏதோ ஒரு விசயம் மெலிதாய் புலப்பட்டு ஆத்மா அதை உணர்ந்ததை... மனமும் மூளையும் கிரகிக்க முடியாததால்.. அந்த அனுபவத்தை சொல்ல முடியவில்லை. மாமா இல்லை.....இது மாமாவின் உடல்...சரி....மாமா எங்கே? அல்லது எது