Skip to main content

Posts

Showing posts from November, 2010

ஓ......!

ட்ரெய்லர் VIII குளித்து முடித்து வெளியில் வந்த தீபக்...மறுபடியும் பேசத்தொடங்கியிருந்தான்..அடுக்களையில் பாத்திரங்களின் சப்தம் இன்னும் வேகமாக கேட்கத்தொடங்கியிருந்தது...ஒரு விசும்பலுடன் கூடிய முணு முணுப்பு கேட்டுக் கொண்டிருந்தது...ஆமாம் கீதா தான் அது...! நேற்று இரவு வந்த அந்த சண்டையின் மூலம் எதுவென்று ஆழ்ந்து நோக்கினால் அற்பமானதாகத்தானிருக்கும்...அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட விவதங்கள் கர்ணகொடூரமாக மாறிவிட....அந்த ராத்திரி மிக அடர்த்தியகத்தான் போனது..அவர்களுக்கு, அவர்களின் குட்டிப்பையன் அருண்...பேந்த பேந்த விழித்த படியே உறங்கிப் போயிருந்தான்.... விடிந்து இன்னமும் பேந்தப் பேந்த முழித்துக் கொண்டு பள்ளிக்குத் தயாராகி....ஸ்கூல் பேக் சகிதம் காத்துக் கொண்டிருந்தவனுக்கு கிலி பிடித்துக் கொண்டது. மீண்டும் சண்டை போடுறாங்களே...அவனுக்கு அம்மாவும் பிடிக்கும் அப்பாவும் பிடிக்கும்...இரண்டு பேரின் முகங்களையும் பரிதாபமாக பார்த்துக் கொண்டு அழுகையை தொண்டையில் அடக்கிக் கொண்டு...சோகமாய் அமர்ந்திருந்தான் 8 வயது அருண். " ஏண்டி சொன்னா புரிஞ்சுக்க மாட்டியா படிச்சுட்டோம் வேலை பாக்குறோம்னு திமிரா உனக்கு.. உன்னைய

மாவீரர் நாள்...!

எமக்காக ஆதவன் ஒரு விடியலைப் பரப்புவான்....அப்போது எமக்கான கானங்களும், இசையும், பறவைகளின் சங்கீதமும் ஒலிக்கும்....எமது ஆ நிறைகள் சந்தோசத்தில் தன்னிச்சையாக பால் சொரியும்...! எம் குல பெண்டிரின் முகங்களில் பூரிக்கும் சந்தோசத்தின் வெளிச்சத்தில் வெட்கி கதிரவன் சில கணங்கள் தன் முகம் மறைப்பான்....! தினவெடுத்த எம்மவரின் தோள்கள் பூமாலைகளை தாங்கி நிற்கும்... தமிழ் தேசமெங்கும் சுதந்திர ஈழக்காற்று சுற்றிப் பரவி தென்றலாய் நடனமாடி மலர்களில் இருந்து நறுமணத்தை காற்றில் பரப்பி எமது தமிழ் ஈழம் முழுதும் பரவவிடும்.... எம்மவர் சிந்திய இரத்தத்துளிகளும்....மண்ணில் விதைக்கப்பட்ட மாவீரர்களின் ஆன்மாக்களும் அன்றைய தினத்தில் சர்வ நிச்சயமாய் எமது உணர்வுகளுக்குள் உயிர்த்தெழுந்து...ஆனந்தக் கண்ணீராய்....மண்ணில் வீழ்ந்து அஞ்சலிகளை ஆத்மார்த்தமாக்கும்.... குள்ள நரிகளும் கபட நாய்களும் வெறி பிடித்த மிருகங்களும்...எமது தமிழ்தேசிய கொடியின் பட்டொளி காற்றில் உரசி தெறிக்க வைக்கும் தீப்பொறிகளின் உக்கிரம் தாங்க முடியாமல்....செத்து வீழும் காட்சிகளை எம் மழலையர் கண்டு காரணம் கேட்க எம் குலப் பெண்களும் ஆண்களும் அதன் பின்ணனியில் உள்ள

பசி...!

கலைந்து கிடக்கும்... மணல்வெளியில் பரவிக்கிடக்கும் மனிதர்கள் விட்டுச் சென்ற.... காலடிகளோடும் கதைகளோடும்.. மெளனமாய் ஓய்ந்து கிடக்கிறது நள்ளிரவு மெரீனா...! ஒற்றை உடைமையை... தலைக்கு கொடுத்துவிட்ட திருப்தியில் கடந்து போன நாளின் கஷ்டங்களை காற்றில்... பறக்கவிட்டு....தொடர்கிறது ஒரு தெருவோர பிச்சைக்காரனின் கனவுகள் நிறைந்த தூக்கம்....! சிலையான தலைவர்கள்... அமைதியாக நிற்கிறார்கள்... நெஞ்சு நிமித்தி வந்து அமரப்போகும் காக்கை குருவிகளுக்காக.....! காக்கிச்சட்டைகளின் கைகளில்... அவசரமாய் திணிக்கப்ப்டும் இந்திய ரூபாய்கள் அனுமதிக்கிறது... காமத்தை காசாக்கும் கவர்ச்சியான வாழ்வின் சோகங்களை....! அரவமற்ற நடு நிசியில்..... ஆனந்தமாய் சாலை கடக்கும் தெரு நாய் சுதந்திரத்தின் உச்சத்தில்... வெறித்துப் பார்க்கிறது அவ்வப்போது... சாலை கடக்கும் வாகனங்களை...! நகரம் காக்க நகரும் காவல்துறை வாகனங்கள்... எங்கேயாவது டீ குடிக்கவேண்டும்..... கொட்டாவியோடு வண்டியோட்டும். காவல்காரரின் கண்கள் ஏக்கமாய்... சு ழல விடுகிறது தூக்கத்தை..! எல்லா கடவுளர்களும்.... பூட்டுக்களோடு பாதுகாப்பாய்.. தத்தம் ஆலயங்களில்.... வீடுகளற்ற குடித்தனங்கள்.

எளிது....!

ட்ரெய்லர் VII எங்கேயோ ஆரம்பிக்கிறோம் விசயங்களை, எதன் பொருட்டோ நடத்துகிறோம் விவாதங்களை ஆனால் அதன் அடித்தளம் என்ன என்பதை மறந்து விட்டு ஏதேதோ பேசிக் கொண்டு இருப்போம். இப்படி பல நேரங்களில் ஆகிவிடும். விவாதங்கள் என்பது புதிய விசயங்களை அறிய நாம் நடத்தும் கருத்துக்களின் போர். இங்கே கருத்துக்கள் பரிமாறிக் கொள்வதில் உச்ச பட்ச நாகரீகம் வேண்டும். நாகரீகம் பற்றி விவாதித்துக் கொண்டு எப்படி எல்லாம் மரியாதையாக பேச வேண்டும் என்று கருத்துப் போர் செய்து கொண்டிருந்த இருவர்..கிண்டலும் கேலியுமாய் ஒருவரை ஒருவர் நையாண்டி செய்து... தனிப்பட்ட முறையில் பேசி கேவலமான உபோயோகம் கொள்ள முடியாத வார்த்தைகளை பயன்படுத்தி சண்டையிட்டு சட்டைகளை கிழித்துக் கொண்டு ரத்தக்களறியாய் விவாதத்தை முடிவுக்கு கொண்டு வராமல்...அதை ... வேறு வகைக்கு திருப்பி விட்டுவிட்டனர்.....! மொத்தத்தில்... அடிப்படை நோக்கம் சிதைந்து தானே போய்விட்டது????? பேச்சில், எழுத்தில், கருத்தில், செயலில் கொஞ்சம் இல்லை அதிகமாகவே.. நாகரீகம் தேவைப்படுகிறது. நான் எப்படி வேணா பேசுவேன்...எவ்ளோ அசிங்கமா வேணுமானாலும் பேசுவேன்....என் எதுத்தாப்ல இருக்கவன் எல்லாம்..சும்மா ஜு

நீ.....!

தெருவெல்லாம் இறைந்து கிடக்கிறது உன்னோடு சுற்றித் திரிந்த ஞாபகங்களின் சுவடுகள்...! காதலோடு கை சேர்த்து சிரித்து எழுப்பிய... ஒலிகளின் அதிர்வுகள் கலைத்துப் போடுகின்றன சம கால நினைவுகளை...! காதலா? நட்பா..? என்று தீர்மானிக்க முடியாமல் மத்திமத்தில் கிளைத்த உணர்வுகளின் தெளிவற்ற... பிம்பங்களால் இதோ... நிகழ்ந்தே விட்டது நம் பிரிவு...! உன்னைப் பற்றிய... நினைவுகளோடும் செரிக்க முடியா... ஆசைகளோடும் இறுக்கத்தில்.. மூடிக் கிடக்கிறது தீர்மானித்தல்களில்... தோற்றுப் போன மனது....! ஒரு மழையின் ஸ்பரிசம் போல தீண்டாமல் தீண்டிச் சென்ற உன் இயல்புகளின் விருப்பங்கள் ஒரு தென்றலைப் போல வருடி மறைந்துதான் போனது...! ஒரு கோப்பை தேநீரும்... ஒரு மழை நேரத்து மாலையும் என்னை சுற்றி பரவிக் கிடந்த உன் நினைவுகளும்.... என்னிலிருந்து சிணுங்கலாய் உதிரத் தொடங்கியிருந்த... கவிதைகளும், சொல்லாமல்... சொல்லிக் கொண்டிருந்தன... உன் மீதான என் காதலை...! என் பெயர் சொல்லி... நீ அழைத்த தருணங்களும்... என் முகம் பார்த்து நீ .... மறைத்த வெட்கங்களும்.... காற்றிப் பறந்த உன் கூந்தலை.. ஒதுக்கிவிட்டு..நீ பார்த்த பார்வையும்... குவித்துப் போட்டிருக்கின

திடம்...!

ட்ரெய்லர் VI இப்போ...இப்போ...இப்போ... நிஜமாவே நினைச்சு பாக்குறேன்...!!!!!! உப்பும் உறைப்பும் ஓவரா சாப்பிட்டு சாப்பிட்டு... ரோசமும், கோவமும்...நமக்கு அதிகமா வருதோன்னு....! மிகப்பெரிய மனப்பிறழ்ச்சியும் தவறான கற்பிதங்களையும் காட்டுவதையும்....அதில் ஏதோ அபரிதமான உண்மைகள் இருப்பது போல மனிதர்கள் ஆராவரம் காட்டுவதையும் குறைந்த பட்சம் பார்த்து விட்டு வாயில் வெற்றிலை பாக்கு போட்டு குதப்பிக் கொண்டு எங்கேயோ ஒரு மூலையில் எனக்கேன்ன என்று துப்பிவிட்டு....மேலே வானத்தில் பறக்கும் காகங்களை எத்தனை என்று எண்ணிக் கொண்டு...சாதாரணமாக நகர......கண்டிப்பாய் என்னால் முடியாது. உலகம் மொழியற்று கிடந்த காலத்தில் இயல், இசை, நாடகம் என்று உலகிற்கு நாகரீகம் கற்பித்த ஒரு இனத்தின் கலச்சாரத்தை சாட கவர்ச்சியான மேலை நாட்டு கலாச்சாரம் உதவுகிறது என்பதை மேம்போக்காக பார்க்கும்போது உண்மை இருப்பது போல தோன்றினாலும்....ஒரு குடியின் ஒரு சமூகத்தின் பழக்கவழக்கங்கள்....வாழ்வியல் முறைகள்...ஆங்காங்கே நிகழும் சூழ்நிலைகளின் அடிப்படையில் மனோதத்துவ ரீதியில் வார்க்கப்படுபவை....... உண்ணவும், உடுத்தவும் வாழவும் மிகையாக இ

பெண்...!

ட்ரெய்லர் V சிலிர்த்து போய் நிற்கிறேன்...எப்படி வாழ்வின் சில உணர்வுகளை பகிர்ந்து கொள்வது என்று....காலங்கள் ஓடி கொண்டே இருக்க அதை வயது என்று கணக்கிட்டு உலகம் சொல்ல நம்மைச் சுற்றிய மாற்றங்கள் எல்லாம் தவிர்க்க முடியாததாகிப் போய்விடுகிறது. சட்டென்று கொண்டு வந்து எங்கேயோ நிறுத்தி விட்ட வாழ்க்கையை பின்னோக்கி பார்க்கிறேன். 2004ன் பிப்வரி 5 அது ஒரு அழகான மாலை வேளை...என்னை ஏர்போர்டில் ஊருக்கு அனுப்புவற்காக வந்த நண்பர்களிடம் மகிழ்ச்சியோடு பேசிக் கொண்டும் ...பயணத்திற்கான வாழ்த்துக்களை தொலைபேசி வழியே தொடர்ந்து கேட்டுக் கொண்டும் சார்ஜா ஏர்போர்ட்டை நோக்கிய அந்த பயண மகிழ்ச்சியின் உச்சத்தின் பின்ணனியில் என் திருமணம் மறைந்திருந்தது. பெண்ணுக்குப் பிடிக்கிறதா என்று கேட்டு....மாப்பிள்ளைக்கு பிடிக்கிறாத என்று உறுதி செய்து....பெண்ணோடு மாப்பிள்ளை தொலை பேசியில் பேசித்தான் ஆகவேண்டும் என்று உறவுகள் எல்லாம் நிச்சயதார்த்தத்துக்கு முன்னால் ஒற்றைக் காலில் நிற்க....எனக்குள் ஆச்சர்யம் பரவியது. எப்படி ஒரு காலத்தில் பெண்ணை கல்யாணத்திற்கு முன்னால் சந்திக்கவும் பேசவும் தடைகள் விதித்த எம் சமுதாயமா...????? மாற்றத்தை உள்வாங

களம்.....!

ட்ரெய்லர் IV ஒரு மண்ணில் நான் பிறந்தேன்...சில மக்களுடன் நான் வளர்ந்தேன்...ஏதேதோ புசிக்கக் கொடுத்தார்கள்....எதை எதையோ உடுக்கக் கொடுத்தார்கள்....! சிரிக்கவும் அழவும் முறையற்றுப் போயிருந்த புத்தியில் எங்கே சிரிக்க வேண்டும் எப்போது சிரிக்க வேண்டும் என்றும் சொல்லிக் கொடுத்தார்கள்.... ஒரு இடத்தில் ஒரு உடலை கிடத்தி சுற்றியிருந்து எல்லோரும் அழுவதை பார்த்து எனக்கு சிரிப்பு வந்தது...சப்தமாய் சிரித்தேன்....ஏன் இப்படி என்று...? யாரோ என்னை தனியே அழைத்துக் கொண்டுபோய்...இதன் பெயர் இறப்பு என்று போதித்தார்கள். எனக்கு சிரிப்பு வருகிறது என்று கனைத்து சிரித்து எள்ளி நகையாடிய கணத்தில் என்னைக் காத்திருக்கச் சொன்னார்கள்...காலம் கற்றுக் கொடுக்கும் என்று..... ஏதோ ஒரு நாளில் நான் நேசித்த ஒருவன் உடல் செயலற்று கிடந்தது பார்த்து நான் அசைத்து, அசைத்து முயன்று முயன்று அவன் எழவில்லை என்று அறிந்து சோர்ந்து போய் நின்ற கணத்தில் அவன் எழமாட்டான் என்று யாரோ சொல்லிய போது திமிராய் ஏன்? என்று அவரைப் பார்த்து முறைத்த போது அவர் மெலிதாய் சிரித்து நகர்ந்ததின் காரணம் அறியவில்லை நான்.... ஆனால் என் நேசத்துகுரியவன் இன்னும் எழவில்லை..

போர்...!

ட்ரெய்லர் III இம்மையில் யாம் எதைக் கொண்டு தெளிவது எம் பரம் பொருளே....! சுற்றி சுற்றியிருக்கும் சுற்றலில் விரிந்து பரந்திருக்கும் மாயையின் ஆட்சியில் வெருண்டு மருண்டு ஒடுங்கி ஒழிவதைத் தவிர வழியற்றுப் போயிருக்கும் எமது யாக்கைகளுக்கு ஏதாவது ஒரு ஊன்று கோல் கொடு..... விடுபட்டு விடுபட்டு....விலகி விலகி வாழும் வாழ்வில் பெறும் நிம்மதிகள் சர்வ நிச்சயமாய் நிம்மதியின் சாயலில் இருப்பதாகவே படுகிறது. இங்கே இன்னொரு குருசேத்ர போர் தேவை..... எங்கே....அர்சுனன்...எங்கே.....பரமாத்மா..???? பாரதத்தோடு பணி முடிந்து விட்டது என்று போய்விட்டீர்களா? எங்கே எங்கள் ரசூல்(ஸல்).....எமக்கான போர்களுக்கு நீங்கள் மீண்டும் தேவை என்பதை மறந்து விட்டீர்களா? எங்கே ஜீசஸ்...... சிலுவையை சுமந்து மனித பாவங்களை ஒழிக்க நீங்கள் வாழ்ந்து காட்டியதால் வலிஅறியாது.... நிகழ்கிறது இங்கே....ஓராயிரம் அட்டூழியங்கள்........!!!! எமது தேவை இப்போது ஒரு உடனடி உளவியல் போர்.......!!!!!! பரமாத்மா நீங்கள் வந்து தேரோட்டினாலும் சரி...இல்லை..ரசுலே (ஸல்), நீங்கள் முன்னின்று வழி நடத்தினாலும் சரி அல்லது எங்கள் தேவனே......நீர் வந்து வழி நடத்தினாலும் சரி...இ

மரபு.....!

ட்ரெய்லர் II சுற்றிப் பரவியிருந்த மண்ணின் தாதுக்களுக்குள் நான் கலந்து ஒளிந்திருந்தேன், செடி கொடிகளுக்குள் சத்துப்பொருளாய் மாறி விரவியிருந்தேன், காய், கனிகளுக்குள் தைரியமாய் அடர்ந்து போயிருந்தேன்...வீசும் காற்றில் பிராணனில் பரவிப்போயிருந்தேன்..ஹைட்ரஜனுக்குள் கலந்து போயிருந்தேன்....ஓடும் நீரில் நனைந்து போயிருந்தேன்...... எம்மை சுவாசித்தவரின் நாசிகளுக்குள் பிராணணாயும், உண்டவரின் உடலுக்குள் சக்திப்பொருளாகவும், கண்டவரின் புத்தியில் நினைவுப் படிமமாகவும் படிந்து போயிருந்தேன். உடலுக்குள் எல்லாமாகி சக்தியாய் விரவி......இரத்தத்தில் கலந்து....உடலின் பல்வேறு நிகழ்வுகளுக்கு ஓட்டமாயிருந்தேன்....மேலும் ஒரு ஒரத்தில் இருந்த விந்துப் பையில் ஜீவசத்தாய் கலந்து போயிருந்தேன்...வேறொரு உடலின் கருப்பை உள்ளே சினைமுட்டைகளாய் அடர்ந்து போயிருந்தேன்..... ஒரு இயற்கை சுழற்சியில் இரண்டும் ஒன்றாய் கலந்த கணத்தில் ஒரு திரண்ட உருவாய் வளர்ந்து போயிருந்தேன்...நீரும் காற்றும் எனைச் சுற்றி நிறைந்து போயிருந்தேன்....ஏதோ தினத்தில் ஒரு உருவாய் இந்த பூமியில் விழுந்து போயிருந்தேன்...... எந்த மண்ணில் இருந்து என் பிண்டத்துக்கான சத்து

நியதி....!

ட்ரெய்லர் சமப்பட்டு போய் கிடக்கிறது மனசு.....! இங்கே... அங்கே ஓடி ஓடி...ஆடிப் பாடி....ஒரு குறிப்பிட்ட காலத்திலேயே...சமப்பட்டு........மெளனத்தில் ஒரு மோகனப் புன்னகையோடு....எனக்குள் என்னையே பார்த்து சிரித்துக் கொண்டு...ரசித்துக் கொண்டு ஒரு சுகமான அதிர்வலைகளை உள்ளுக்குள் பரப்பிக் கொண்டு...சமப்பட்டுப் போய்க் கிடக்கிறது. இப்போதெல்லாம் அரிதாகவே வெளியே வந்து எட்டிப்பார்க்கிறது....! ஆணவங்களும், அகங்காரங்களும், சப்தமான பேச்சுக்களும் சிரிப்புகளும் சேர்ந்து ஒரு வித அவஸ்தையைக் கொடுக்க வெளியே வர விருப்பமின்றி மீண்டும் உள்ளேயே போய்....கண்கள் மூடி....அகக்கண்கள் திறந்து அண்டத்துள் கலந்து .....பேச்சற்று மொழியற்று.....விழிகள் மூடியிருக்க.....ஏதோ ஒன்று திறந்து கொள்ள புலனற்ற பார்வை...வந்து பளீச் சென்று வந்து விழுந்து விடுகிறது. ஒரு வித நெரிசல் தொலைத்த சந்தோசம் உடல் முழுதும் வந்து அழுத்த......உள்ளே சென்று உற்று நோக்க....வேசமிட்டு கோசமிட்டு.....கொக்கரிக்கும் மானுடர்களின் அகத்தின் உள்ளே இருக்கும் இருப்புத்தன்மைகள் எல்லாம்....அழுது கொண்டு மூலையில் சிறைப்பட்டு கிடக்கின்றன என்ற உண்மை தெரிகிறது. அவர்களின் ஆன்மா

சிதறல்...!

யாரோ கல்லெறிந்திருக்கிறார்கள் இந்த முறையும்...தப்பாமல் நடனமாடுகிறது குளம்.... தடுமாறி நிற்கிறேன் நான்! *** நிசப்தமான நடு நிசி குளிரில் நடுங்கிக் கொண்டே நடக்கிறேன்....சூடான உன் நினைவுகளோடு....! *** ஒரு மழை ஒரு சாரல் ஒரு காதல் ஒரு கவிதை நீ.....! *** பேருந்துப் பயணம் ஜன்னலோர இருக்கை வழி நெடுக வாழ்க்கை பார்வையாளனாய் நான்....! *** ஒரு சிட்டுக் குருவி ஈரச் சிறகு.. படபடக்கும் உலர்த்தல் சிறகடிக்கும் மனசு...! *** காற்றில் பறக்கும் சருகுகள்.... கலைந்து திரியும் மனிதர்கள்..... நிற்கப் போகும் காற்று! *** கனவுகள் மொய்க்கின்றன நீ சிந்திச் சென்ற புன்னைகையின் மிச்சங்கள் இன்னும் இறைந்து கிடக்கின்றன மூளைக்குள்...! *** தேவா. S

வரம்....!

ஞாபகங்களின் ஆளுமையில் வந்து விழும் நினைவுகளில் நிறைந்திருக்கும் உணர்வுகளில் ஆனந்தக் கனவுகளில் வெட்கி நிற்கிறது உன்னிடம் நான் சொல்ல மறந்த காதல்...! தொலை தூர புள்ளியாய் நகரும் உன் நகர்வில் லயித்து உன்னைப்பற்றிய கனவுகளில் நினைவுகளை செரித்து செரித்து படைத்துக் கொண்டிருக்கிறேன் உனக்கான ஒரு கவிதையை....! எப்போதோ பெய்தாலும் தவறாமல் நெஞ்சு நிறைக்கும் ஒரு வானம் பார்த்த மழையாய் காதலை கொட்டி நிறைக்கிறது ஆசையாய் நீ பரவவிட்டுச் சென்ற... அடர்த்தியான அந்த கடைசிப் பார்வை....! என் மனக்கிளைகளில் அமர்ந்திருக்கும் அத்தனை எண்ணக் குயில்களும் இசைக்கும்..... இசையில் தப்பாமல் ஒளிந்திருக்கிறது உனக்கான ஒரு காதல் ராகம்....! அழுந்த பெய்யாத மழைக்குப் பின்னான மண்ணின் வாசம் போல விரவிக்கிடக்கும் உணர்வுகள் கண் சிமிட்டி சிரிக்கின்றன எனக்குள் இருக்கும் உனக்கான கம்பீரக் காதலைப் பார்த்து...! ஒரு மரமும் அதன் நிழலும் கொஞ்சலோடு பேசிச் சிரித்து எனைக் கேலி செய்த பொழுதில் கையிலிருந்த நோட்டுப் புத்தகத்தில் கிறுக்கத் தொடங்கியிருந்தேன்.... என் காதலின் கன பரிமாணங்களை....! எப்படிப் பார்த்தாலும் ஒரு மனிதனுக்குள் இருக்கும் பச்சையம், அந்

சரி...!

எங்கேயோ சிறகடித்து பறக்கிறது மனது.. இந்த பூமிக்கு மட்டும் நான் சொந்தகாரனில்லை என்று எப்போதும் உள்ளே ஒரு உணர்வு சொல்லிக் கொண்டே இருக்கிறது. சுற்றுப்புற சூழல் ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு வரைமுறை கோட்டினை மனதளவில் கிழித்து மனிதனை மட்டுப்பட்ட ஒரு நிலையில் வைத்திருக்கிறது. சிறகடித்து பறக்கும் நேரங்களில் எல்லா எல்லைகளும் மறைய கட்டடற்ற ஒரு வெளியில் நினைவுகளற்று இலக்குகளும் அற்று பறத்தலில் லயித்து நகரும் போது அந்த சுகம் அலாதியானதுதானே.....! வெற்று வானத்தை ஓராயிரம் எண்ணங்களோடு பார்த்துவிட்டு நகர்ந்து போகாமால் ஒரு பறவையாக உங்களை உடனடியாக பாவியுங்கள்...! பாவித்த பின் சட சட வென்று சிறகடியுங்கள்.. உங்களின் சிறகடிப்பில் அறியாமைத்தூசுகளும், கட்டுப்பாட்டு அழுக்குகளும் பறந்தே போகட்டும்... எவ்விப் பிடியுங்கள் கட்டுக்களற்ற வெளியின் நுனியை..இதோ..மேலே..மேலே மேலே...மேலே... காற்றின் திசை பற்றிய கணக்கு தெரிந்து விட்டதா.. ஹா ஹா..ஹா.. எங்கே செல்லவேண்டும் என்று ஏன் நாம் தீர்மானிக்க வேண்டும்.. காற்றின் நகர்வு தீர்மானிக்கட்டும். என்னது இடம் நோக்கிய நகர்வா....சரி....எது இடம்..ஓ. எனக்கு இடம் எது.... நிஜத்தில் வெட்டவெளி

முரட்டுக் காளை....!

தலைவரை பத்தி எழுத சொல்லிட்டு தம்பி அருண் பாட்டுக்கு போய்ட்டான்....! நாம ஏற்கனவே ரஜினினு சொன்னாலே பத்திகிட்டு எரிவோம்....இதுல பெட்ரோல வேற ஊத்துன எப்டி? ....சும்மா பத்திகிட்டு எரியும்ல..எரிமலை மாதிரி..ஹா...ஹா..ஹா...! தலிவர் படத்த லிஸ்ட் எல்லாம் பண்ண முடியாது.. என்ன பொறுத்த வரைக்கும்....எல்லாமே... நம்பர் 1 தான்...!!! இது எப்டி இருக்கு....ஸ்ட்ரெய்ட்டா மேட்ருக்குள்ள போவமா....இப்டிச் சூடு..... முரட்டுக்காளை (1980) படம் போட்ட கொஞ்ச நேரத்துல நான் பயந்தே போய்ட்டேன்....! ஒரு காளை மாடு முரட்டுத்தனமா நிக்கும் போது.. அத அடக்க சிங்கம் மாதிரி நம்ம சூப்பர் ஸ்டார்.....! என்னோட கவலை எல்லாம் தலிவருக்கு ஒண்ணும் ஆகக்கூடாதுன்னுதான்....அது எப்டி ஆகும் தலைவர் சும்மா பிரிச்சு மேஞ்சு காளைய அடக்குற வரைக்கும் பக்கத்து சீட்ல இருந்த ஆள டேமேஜ் ஆக்கிட்டேன்...ஜு ஜு பி....!எப்பவுமே தலிவர் படம்னா...அப்டிதான்...இஹ் ஹா...ஹா ஹா..! அதுக்கு அப்புறம் வர்ற பாட்டு...நான் சொல்ல தேவயில்ல..உங்க ஹிட் இல்ல எங்க ஹிட் இல்ல.. உலக ஹிட்.... தமிழ் சினிமாவுக்கே பஞ்சர் பாத்த படம்.... ! எங்க ஊர்..(எந்த ஊர்னு கேட்டா ரூட்டு மாறிடும்...ட்ராக்க