ஒரு மழை அடித்துப் பெய்து முடித்த பின் பளீச் சென்று கழுவி விட்ட தார்ச் சாலைகள் போலவும், கரும் மேகங்கள் கலைந்த வானம் போலவும் இருக்கிறது மனது. கடந்த மூன்று மாதங்களாக இந்த ஒரு மனோநிலைக்கு நான் வரமுடியாமல் போனதற்கு காரணம் புறச்சூழல், உணவு மற்றும் ஒரு அலட்சியம். எப்போது எல்லாம் அகங்காரம் அற்றுப் போய் நான் நிற்கிறேனோ அப்போது எல்லாம் இப்படி ஒரு நிலை எய்துவதும் பல நாட்கள் இப்படியே நீடிப்பதும், எப்போது மாறியது என்று தெரியாமல் ஒரு வித இறுக்கம் உள்ளே பரவிப் போவதும், ஐந்து கால் (அது என்ன ஐந்து கால்? மனதுக்கு ஆயிரம் கால் கூட இருக்கும்) பாய்ச்சலில் மனம் புறம் நோக்கி ஓடுவதும் நடந்தேறிப் போகிறது. மனித மூளை வற்றாத ஜீவ நதி, சரியான விகிதத்தில் ஆக்ஸிஜன் செல்லும் போது சரியான நினைவலைகளை அது கிளறி விடுகிறது. சரியான அளவில் ஆக்ஸிஜன் செல்ல சரியான அளவில் சுவாசிக்க வேண்டும். சரியான அளவில் சுவாசிக்க புறச்சூழலின் தாக்கம் சரியாக இருக்க வேண்டும். மனம் சம நிலையில் இருக்க வேண்டும். எல்லோரும் சுவாசித்துக் கொண்டுதான் இருப்போம் ஆனால் சுவாசிக்கும் வேகம் சீராயிருக்காது. அகங்காரம் உள்ள மனம் கொண்டவர்களின் உடலில் எப்போதும் உ...
இவன் ஜெயிக்கப் பிறந்தவன்....