எழுதிக் கொண்டே இருக்கையில் வந்து விழும் வார்த்தைகளோடு தொடர்பற்று எங்கிருந்தோ வரும் வீச்ச்சினை வாங்கி வாங்கி இறைத்துக் கொண்டிருக்கும் போது சட்டென்று அவை அழிந்து போயிருக்கிறதா உங்களுக்கு...? முழுப்பக்கம் எழுதி முடித்து விட்டு விசைப்பலகையின் ஏதோ ஒரு சுட்டியை தவறாக தட்ட இணையத்தில் இருந்த எல்லாம் போயே போய் விட்டது. போனால் போனதுதான் அதை திரும்ப எடுக்க முடியாது.....என்ற நிலையில் சிறு கோபமும் இயலாமையும் வரத்தானே செய்கின்றன. திட்டங்கள் மனித மனங்களுக்குச் சொந்தமனவை தன்னிச்சையாக கிளர்ந்தெழும் ஒரு இசையும், கவிதையும், கதையும், ஒரு கருவிக்கான செயல் வடிவங்களும் பிரபஞ்சத்திற்கு சொந்தமானவை. போனால் போனதுதான். அதே போல திரும்ப கிடைக்காமல் போகலாம் இல்லை அதை விட தெளிவான ஒன்றும் கிடைக்கலாம்...... எழுத்து என்பது ஒரு வரப்பிரசாதம் என்று எழுத்துச் சித்தர் பாலகுமாரன் அடிக்கடி கூறுவது உண்டு. பாலாவின் நாவல்களுக்குள் முங்கி முங்கி எழுந்து கொண்டிருந்த காலங்களில் இருந்து இன்று வரை பாலா மீது இருக்கும் ஒரு காதல் என்னுள் இருந்து மறையவே இல்லை. தோழமைகளும், உறவுகளும் பல நாவலாசிரியர்கள், கட்டுரையாளர்கள் என்று அறிமுகம் செய்த...
இவன் ஜெயிக்கப் பிறந்தவன்....