Skip to main content

Posts

Showing posts from June, 2012

குளிர்....!

நடுக்கும் இந்த சமவெளியின் பெருங்குளிரை இன்னும் ரசிக்க வைக்கிறது  நான் போர்த்தியிருக்கும் கம்பளி....! *** முழு நிலவு ததும்பும் குளம், உடலோடு ஒட்டிக் கிடக்கும்  குளிரை வேடிக்கைப் பார்க்கும் வசீகர நட்சத்திரங்கள்...., மரங்களோடு கிசு கிசுப்பாய்  ரகசியம் பேசும் காற்று...! ஓ....கடவுளே... இந்த இரவை விடிய வைத்து விடதே...! *** தொலைந்து போன  ஆட்டுக்குட்டியை முன்னிரவில்  தூரத்தில் தேடிக்கொண்டிருக்கிறான்  மேய்ப்பனொருவன்.... நடுங்கும் குளிரில்...  நான் கம்பளியை இழுத்துப் போர்த்தி புரண்டு படுத்து.. தொடர முயலுகிறேன்... பாதியில் நின்று போன  ஒரு இனிய கனவை...! ***  பனிக்காலம் ஆரம்பித்து விட்டது... இரவுகளில் யாரும் வெளியே வரமாட்டார்கள்... இனிதான்.. நான் நடுங்கிக் கொண்டாவது வெளியே நடக்கவேண்டும்..! *** அதிகாலை...பூசணிப்பூவின் மீது  படர்ந்திருக்கும் பனி புற்களை வெற்றுக் காலோடு  நான் மிதிக்கையில் சிலீரென்று... என் பாதங்களையும் தொடுகிறது... நான் கடந்து போவதா..? இல்லை... அப்படியே நிற்பதா..? தேவா. S

17M பாரிமுனை டு வடபழனி....!

அந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சரிந்து விட்டது. ஓட்டுனரின் கவனக்குறைவுதான் காரணம் என்பதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். விபத்துக்கள் எல்லாம் திட்டம் போட்டு காய்களை நகர்த்தியா நிகழ்கிறது. ஒரு கணத்தில் ஏற்படும் சறுக்கல் அது. இங்கே யாரையும் குற்றம் சொல்ல முடியாது. 17M பேருந்து பாரிமுனையிலிருந்து வடபழனிக்கு நகரும் முன்பு அந்த பேருந்தின் ஓட்டுனர் அந்த பயணத்தின் முடிவில் பணி முடிந்து வீடு திரும்ப திட்டமிட்டு இருக்கலாம். இல்லை அப்போதுதான் வீட்டிலிருந்து வந்த அலை பேசியை எடுத்து பேசி விட்டு பிறகு அழைக்கிறேன் என்று கூறி விட்டு பேருந்தினை நகர்த்தி இருக்கலாம். அவசரமாக பலமுறை வந்த அழைப்பினைக் கண்டு வேறு வழியில்லாமல் அந்த வளைவில் வண்டியை திருப்புகையில் ஒரு அவசரத்தில் அலை பேசியோடு கவனம் சிதறி வண்டியை தடுப்புச் சுவற்றில் மோதி இருக்கலாம்... ஆமாம் அது நிகழ்ந்து விட்டது..சட்டென்று..! சட்டென்று நிகழ்ந்தால் தானே அது விபத்து...! தலைகுப்புற கவிழ்ந்து கிடந்த அந்த பேருந்தினைப் பார்த்த பொழுது மனம் ஸ்தம்பித்து எதுவுமே கருத்து சொல்ல முடியாமல் முற்றிலுமாய் உள்ளுக்குள் முடங்கிக் கொண்டு தேம்பிக் கொண்டிருந்த

ரியாலிட்டி டி.வி ஷோக்களும், மக்களின் அறியாமையும்...!

தொடர்ச்சியாக பல நாட்கள் ஸீ தமிழ்த் தொலைக்காட்சியில் அக்கா நிர்மலா பெரியசாமி நடத்தும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியைப் பாத்து, பாத்து மெய் சிலிர்த்துப் போய் ஒரு கட்டுரை எழுதும் நிலைக்கு வந்தே விட்டேன் என்றால் பாத்துக்கோங்களேன்..! மனித சுவாரஸ்யத்தின் உச்சம் என்ன தெரியுமா?  அடுத்த வூட்டு பிரச்சினைய வேடிக்கைப் பாக்குறது. தான் எக்கேடு கெட்டுப் போனாலும் சரி அடுத்தவன பாத்து நாலு தப்பு கண்டு பிடிச்சு குத்தம் சொல்லாட்டி நம்ம ஆளுகளுக்கு மோட்சமே கிடைக்காது. தெருவுல நடக்குற சண்டைய கைய கட்டிக் கிட்டு வேடிக்கை பாக்குறதுல ஆரம்பிக்கிற இந்த சுவாரஸ்யம், பக்கத்து வீட்டுல பொண்டாட்டி புருசன் சண்டைய ஒட்டுக் கேக்குறதுல ஆரம்பிச்சு, தெருவுல இருக்க எல்லா விசயத்தையும் வெத்தலையோட மடிச்சு வாயில போட்டுக்கிட்டு ஒவ்வொருத்தன் காதா பாத்து துப்புறது வரைக்கும்.....இது ஒரு கலாச்சாரமாவே போயிடுச்சுன்னு சொல்லலாம். ஏற்கெனவே நடிகை லெட்சுமி அம்மாவ வச்சு கிட்டதட்ட சினிமாவையே மிஞ்சுற அளவுக்கு விஜய் டி.வில வந்த நிகழ்ச்சிய இப்போ நிர்மலா அக்காவ வச்சு பட்டி டிங்கரிங் பாத்து பட்டைய கிளப்பிட்டு இருக்கு இந்த ஸீ தமிழ்

என் ஃப்ரண்ட போல யாரு மச்சான்..!

கனவுகளுக்கு தீப்பிடித்துக் கொண்ட மாயாஜால நாட்கள் அவை. வாழ்க்கையின் மொத்த சந்தோசத்தையும் ஒரு இடத்தில் குவித்து வைத்து திளைத்துக் களித்து கிடந்த பூமியின் சொர்க்கம் அது....! வார்த்தைகளுக்குள் ஒட்டு மொத்த உணர்வினையும் கொட்டித் தீர்த்து விட முடியாமல் ஒரு பிச்சைகாரனாய் வானம் பார்த்து வார்த்தைகள் கடந்து ஏதேனும் ஒரு அதிசயத்தை என் மூளைக்குள் பரப்பிப் போடு இறைவா...!  என் கல்லூரி நாட்களென்னும் காவியத்தை படைத்துப் போட ஏதேனும் புதியதொரு யுத்தி கொடு என்று இறைஞ்சி இறைஞ்சி, கனவில் ஓட முடியாத சராசரி மானுடனாய் மீண்டும் வார்த்தைகளுக்குள் ஒளிந்து கொண்டு வரிகளில் என் உயிரினைத் தடவி இங்கே உங்களின் விழிகளுக்காக படைக்கிறேன்...! உயர் நிலைப்பள்ளியிலிருந்து கிட்டதட்ட ஒவ்வொரு ஆணும், பெண்ணும் கூட்டுப்புழுவாயிருந்து சிறகடிக்கும் ஒரு பட்டாம் பூச்சியாய்த்தான் கல்லூரி என்னும் தோட்டத்திற்குள் திசைகளைத் தொலைத்த ஒரு புது உயிராய் மீண்டும் ஜனிக்கிறார்கள். 12 ஆம் வகுப்பு வரை வாழ்க்கை ஏதேதோ பிடிப்புக்களை திணித்து வைத்திருக்க அரும்பு மீசைகளும், புதிதாய் உடுத்திய பாவடை தாவணிகளும் சுடிதார்களுமென கல்லூரிக்குள் வலம் வரும் ஆண

அப்துல் கலாம் ஜனாதிபதி ஆக வேண்டியதில்லை....!

இது அநீதிகளின் அரசாட்சி நடக்கும் நாடாய் போய் விட்டது. மனித நேயத்தை மறந்த மதவாதிகளின் கூட்டம் சேர்ந்திருக்கும் கூடாரமாய் போய் விட்டது. லஞ்சத்திலும் ஊழலிலும் ஊறிப் போய் கிடக்கும் அரசியல்வாதிகளின் குவியலாய் போய் விட்ட ஒரு சந்தையாகி விட்டது. பொருளாதார வளர்ச்சியை அதாள பாதாளத்துக்குத் தள்ளி விட்டு கையடக்க கணிணியில் உலக அரசியலைப் பேசும் மேதவிகளின் பூமியாய் மாறிப்போய் விட்டது...... இப்படியான தேசத்தில் அப்துல் கலாம் போன்ற அறிஞர்கள், மதத்தை கடந்த புனிதர்கள், மனித நேயம் கொண்ட புருசர்கள் ஏன் நாட்டின் முதன்மைக் குடிமகனாக வரவேண்டும்...?   அது இந்த தேசத்துக் கட்டமைப்புக்கு முரணாணது அல்லவா? இந்த தேசத்தை ஆளும் காங்கிரஸ் கட்சி என்னும் ஆதிக்க சக்திக்கும் அந்தக் கட்சியை ஆதரிக்கும் அல்லக் கைகளுக்கும் எதிரானது அல்லவா? பேய்கள் அரசாளும் போது சத்தியம் எப்படி தலைமை ஏற்க முடியும்... அதனால்... பிரணாப் முகர்ஜி என்னும் பெருச்சாளியே இந்த தேசத்தின் அடையாளமாகட்டும்...! அக்னிச் சிறகுகளை உணர்வோடு வாசித்திருக்கும் ஒவ்வொரு தேசத்து குடிமகனுக்கும் அப்துல்கலாம் அன்னியமானவர் அல்ல. வாழ்க்கையின் அடித்தட்டில் இருந்து மேலே

சூடா என்ன சார் இருக்கு....?

ஏதாவது எழுதுவதற்கு முன்னால் இதை, இதை எழுத வேண்டும் என்று மனம் ஒரு கணக்குப் போடும். உலகத்தில் நிகழும் அத்தனை நிகழ்வுகளையும் எழுத்தில் கொண்டு வந்து விடவேண்டும் என்று பேராசைப்படும். உள்ளுக்குள் ஒரு அதீதமான வலி இல்லாமல் என்னால் இங்கே எழுத முடியாது அல்லது எழுத பிடிக்காது என்பதுதான் நிதர்சனம். சமூக கட்டுரைகளை எழுதுவது பெரிய வேலை இல்லை. எல்லா செய்திகளையும் மேய்ந்து கொண்டிருக்கையில் இதை எழுதவேண்டும் என்று ஒரு தளம் கிடைத்து விடும். அறச்சீற்றம் என்பது தன்னிச்சையாக ஒவ்வொரு மனிதருக்குள்ளும் எப்போதும் தோன்றிக் கொண்டேதான் இருக்கும். அது மனித இயல்பு. மனிதன் தனது தேவைகளைப் பொறுத்து ஏதோ ஒரு சூழலை அல்லது இயக்கத்தை மனிதர்களை ஆதரிக்கப் போகும் போது அறச்சீற்றம் என்பது சுயநலமாகிப் போய் விடுகிறது. தனக்கு பிடித்த தலைவரையும், கட்சியையும், மதத்தையும் சாதியையும் எவ்வளவு இழிவாய் இருந்தாலும் ஏதோ ஒரு காரணத்திற்காய் மனிதர்கள் ஆதரித்துப் போவது மிகப்பெரிய சமூக சாபக்கேடு. எனக்கு தெரிந்து சுதந்திரமாக சிந்திக்கும், செயல்படும், கருத்து தெரிவிக்கும் மனிதர்கள் இங்கு குறைவு... மிக மிக குறைவு. பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங

சிறகடிக்கிறேன்...!

எங்கோ அழுது கொண்டிருக்கும் ஒரு தூரத்து புல்லாங்குழலிலிருந்து வழிந்தோடும் இசையின் அதிர்வுகளில் படிந்திருக்கும் கரிக்கும் உப்பு என் கண்ணீரிலிருந்து களவாடப்பட்டிருக்கலாம்! முள்ளுக்குள் சிக்கிக் கொண்ட பட்டாம் பூச்சியாய் சிறகசைக்க அசைக்க ரணப்பட்டுப் போகும் வாழ்க்கையின் கணங்கள் அவ்வப்போது அன்றொருநாள் புத்தியில் ஸ்தாபிக்கப்பட்ட நரகத்தின் நெருக்கடியோடு மூச்சு முட்ட வைக்கிறது; விதிமுறைகளை உடைத்து போட்ட உலகத்தின் உச்ச காதலோடு வலிகளை வாளேந்தும் போராளியாய் நொறுக்கும் உத்வேகத்தில் ஒரு பயங்கர கனவொன்றில் நான் முடவனாயிருந்தேன்..! புள்ளியாய் இருந்த ஒரு நெருப்புத் துளைக்குள் உள் நுழைந்து தலை குப்புற நான் விழுந்து கிடக்கும் வெளிச்சக்காட்டில் முழு வெளிச்சமும் நானாய் பரவி இருக்கையில் எங்கிருந்தோ பறந்து வந்த அவளின் முகமொத்த ஒரு முகமூடி எனை மீட்டெடுத்த நினைவுகளால் முளைத்த சிறகுகள் கொண்டு மீண்டும் சிறகடிக்கிறேன்...தொலைந்து போன என் காதலை(லியை)த் தேடி...! தேவா. S

நானுமில்லை....யாருமில்லை...!

நடப்பதற்காக கீழே இறங்கினேன். வார இறுதியில் என்னோடு நான் இருக்க எடுத்துக்கொள்ளுமொரு தந்திர உபாயம் இது. நடப்பது உடற்பயிற்சிக்காக அல்ல என்பது எனக்குத் தெரியும். வேக வேகமாய் காலையிலும் மாலையிலும் கையை வீசி வீசி வேகமாய் பூங்காக்களில் நடப்பவர்களைப் பார்த்திருக்கிறேன். ஒருவித பரபரப்பும் ஏதோ ஒரு தேவையும் இருப்பதை அவர்களின் முகம் காட்டிக் கொடுக்கும். பெரும்பாலும் நடப்பவர்களிலும் ஓடுபவர்களிலும் இரண்டு சாரார் மிகுந்து இருப்பதை நான் அடிக்கடி கவனித்திருக்கிறேன். திருமணம் ஆகப்போகும் பையன்களின் ஓட்ட சாட்டமும், நாற்பதைக் கடந்து சர்க்கரை, இரத்த அழுத்தம் இன்ன பிற வியாதிகளுக்குப் பயந்தும் அல்லது ஏற்கெனவே வந்து மருத்துவரின் அறிவுரைப்படி நடப்பவர்களின் கூட்டமும் எப்போதும் இருக்கும். வெகு சிலரே உடல் நலம், ஆரோக்கியம் இந்த உந்துதலின் பேரில் தொடர்ச்சியாய் நடப்பவர்களாகவோ ஓடுபவர்களாகவோ இருக்கிறார்கள். நானும் இப்படி ஓடி இருக்கிறேன்...மூச்சு இரைக்க இரைக்க...ஆனால் கல்யாணத்திற்கு பிறகு சக தர்மினியை விட்டு விட்டு துபாய் வந்தவுடன் அடர்த்தியான ஊர் நினைவுகளை மாற்றிக் கொள்ள ஓடி இருக்கிறேன். இரண்டு மூன்று கிலோ மீட்டர

சிதம்பர ரகசியம் - 1

சென்னை இராமகிருஷ்ணா மடத்திலிருந்து வெளியிடப்பட்டிருந்த அந்த குறுந்தகட்டை எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல்தான் காண ஆரம்பித்தேன். இறை தேடலும் இரை தேடலும் எப்போதுமே இரைச்சலாய்த்தான் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதை நாம் ஏதோ ஒரு கணத்தில்தான் உணர்ந்து கொள்கிறோம். அப்படியான ஒரு உணர்வினை எனக்கு அந்த கைலாஷ் புனித யாத்திரை குறுந்தகடு மெலிதாய் உணர்த்தத் தொடங்கியது. பாதி ஓடிக் கொண்டிருந்த அந்த காணொளியை நிறுத்தி விட்டு... எண்ணங்களை பின்னோக்கி பறக்க விட்டேன்...! ஓம் நமசிவாய என்னும் மந்திரமும், கந்தர் சஷ்டி கவசமும், ஓம் சரவணபவ மந்திரமும் சிறு பிராயத்திலிருந்தே என் புறச்சூழலால் எனக்குள் ஊற்றப்பட்டது என்றாலும், ஜீன்கள் முழுதும் பல தலைமுறைகளாக சைவ சமயத்தின் உணர்வுகள் எனக்குள் கடத்தப்பட்டு இன்னது என்று தெரியாமல் சிவன் என்றாலே எனக்குள் ஒரு ஈர்ப்பினை தன்னிச்சையாக ஏற்படுத்தி இருக்கிறது. நிறைய வாசித்தால் ஏற்படும் தாக்கங்களின் வலிகள் நிறைய படைப்புக்களைப் பெற்றுப் போடும். புறச்சூழலின் தாக்கங்களும் இவ்வாறே..., எனினும் எந்த வித புறத் தாக்கங்கள் இல்லாமலும் வாசிப்பனுபவமும் இல்லாமல் என்னை ஈர்த்த ஒரு விடயம் சிவ

நினைவுத் தழும்புகள்...!

இலக்குகள் மாற்றி நாம் பயணிக்கப் போகும் இந்தக் கணத்தில்தான் என் நினைவுகளை நீயும் உன் நினைவுகளை நானும் ஏந்திச் செல்லப் போகிறோம்...! இனி... காற்றின் கடிவாளம் சொடுக்கி என்னிடம் நீயும்... உன்னிடம் நானும் சடுதியில் வந்து போகலாம்; கடந்த காலத்தை... மெளனத்தோடு உரசி உரசி... ஏதேனும் கவிதைகள் கூட‌ செய்து பார்க்கலாம்...! பெரு விருப்பங்களை நெஞ்சுக்குள் பூட்டிக் கொண்டு பிரிந்து போன கணத்தை சுகமாய் ஒரு முறை அழுது பார்க்கலாம்! இன்னுமொருமுறை எங்கேனும் இணைய‌லாம் என்றெண்ணிக் கொண்டே தினசரிகளில் ஒளிந்து கிடக்கும் அந்த கணத்தை தேடித் தேடி லயிப்பிலேயே ரசித்துக் கிடக்கலாம்.. ஆமாம்.... இலக்குகள் மாற்றி நாம் பயணிக்கப் போகும் இந்தக் கணத்தில்தான் என் நினைவுகளை நீயும் உன் நினைவுகளை நானும் ஏந்திச் செல்லப் போகிறோம்...! தேவா.  S