ஒன்றை எழுதி தீர்ப்பதற்குள் பிராணன் போய் விட்டுதான் மீண்டும் வருகிறது. மூளையின் நரம்புகளுக்கு இடையில் சாக்கு தைக்கும் கோணி ஊசியை வைத்து இந்த பக்கம் குத்தி அந்தப் பக்கம் இழுப்பது போன்ற ஒரு வித தையல் வேலைதான் எழுத்து. முழு மூச்சாக மனம் குவித்து எதையாவது எழுத வேண்டும் என்று கணிணியில் அமர்ந்த அந்த நொடிக்குப் பின்னரே முடிச்சுக்கள் மெல்ல மெல்ல அவிழ்ந்து கொள்கிறது. எழுதுதலை ஒரு பெண்ணோடு சல்லாபித்துக் கூடுவதற்கு சமம் என்று கூறலாமா இல்லையா என்று எனக்குத் தெரியாது ஆனால் நான் அப்படித்தான் கூறுவேன். உச்சத்தில் துடி, துடித்து தன்னை மறக்கும் பொழுது அது சில மணித் துளிகள்தான் என்றாலும் அதற்கு ஈடான ஒரு அனுபத்தை ஒரு கட்டுரையோ அல்லது கதையோ எழுதி முடிக்கும் வரை நான் அனுபவிக்கிறேன். மிகச் சிறந்த ஆக்கங்களை தருவிக்கும் ஒருவனுக்குத்தான் இப்படியான உணர்வு வரும் என்று சொல்வதற்கில்லை. உள்ளுக்குள் இருக்கும் வலியை இறக்கி வைக்கும் எவனொருவனுக்கும் இது சுகம்தான்...! ஆமாம் கூடலின் உச்சத்தை ஒத்த சுகம். உள்ளுக்குள் படிந்து கிடக்கும் கறைகளையும், சமுதாயத்தால் ஏற்பட்ட வடுக்களையும், குற்றம் என்று அறிந்தே செய்த செயல்களுக...
இவன் ஜெயிக்கப் பிறந்தவன்....