சிவன் என்ற உடனேயே சிறுவயதிலிருந்து அறிமுகம் செய்யப்பட்ட ஜடாமுடியும், தலையில் கங்கையும், நெற்றிக்கண்ணும், கருணையைச் சுரக்கும் விழிகளும், விடத்தை கண்டத்தில் கொண்டு, கழுத்தில் பாம்போடு புலித்தோலை உடுத்திக் கொண்டு கையில் டமருகத்தோடு சாம்பல் பூசிய மேனியோடான ஒரு தோற்றமும் ஒருவித கிறக்கத்தைக் கொடுத்து விட.. யார் இந்த சிவன் ? ஏன் இப்படி இருக்கிறார் ? எல்லா கடவுளர்களும் தங்கத்தாலும், வைரத்தாலும் அலங்கரித்துக் கொண்டு பகட்டாய் இருக்கும் போது என் சிவன் மட்டும் ஏன் சுடுகாட்டில் இருக்க வேண்டும்..? ஞானத்தின் கடவுளாய் ஏன் சிவனைச் சித்தரிக்கிறார்கள்...? என்றெல்லாம் யோசித்து இருக்கிறேன். இப்படியாய் யோசித்ததே சிவனை என் முன்னால் ஒரு சூப்பர் பவராய் எனக்குள் நிறுவி விட... ஆக்கவும், அழிக்கவும் தெரிந்த எல்லாம் வல்ல சக்தியாய்ப் பார்த்து, பணிந்து சிவன் யார் என்ற கேள்விக்கு விடையைத் தேடினேன். எப்போதும் என் தேடலுக்கான பதில் மனதை மட்டும் நிறைவு செய்து விடக்கூடாது.... அது எப்போதும் என் அறிவினையும் பூர்த்தி செய்ய வேண்டும். என் எதிரே கடவுளே வந்தாலும்... படக்கென்ற...
இவன் ஜெயிக்கப் பிறந்தவன்....