காதல்...! "கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டி விட்டால், மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்". என்று சொன்ன கவிஞனையும், தலைமையின்பம் இது என்று சொன்ன மீசைக்காரனையும் துணைக்கு அழைத்துக் கொண்டு...இந்த ஹார்மோன் கலகத்தை கொஞ்சம் பிரித்து மேயலாம் என்று நினைத்தவுடன்....சட்டென்று ஒரு தொடர் இப்போதுதானே முடிச்சோம்....சரி தைரியமா அடுத்த தொடரை தொடங்கலாம் என்று தீர்மானித்ததின் விளைவு...கலகத்துக்குள் உங்களையும் அழைத்துச் செல்கிறேன்.... " " " ஏதேனும் ஒரு கோவிலுக்குச் செல்லவேண்டும் என்று தீர்மானித்த ஒரு விடுமுறை நாளில் என் அறையை விட்டு வெளியேறி...என்னுடைய ஸ்பிளண்டரை போரூர் மதானந்தபுரம் கீரீன் அப்பார்மென்ட்ஸிலிருந்து நான் சீற விட்டபோது காலை 11 மணி. எந்த கோவிலுக்குப்போவது என்று தெரியாமல் குழப்பத்தில் விக்னேஸ் அண்ணனை செல் போனுக்குள் கொண்டு வந்தேன். " அண்ணே கோவிலுக்கு போலாம்னு கிளம்பிட்டிருக்கேன்...".......என்னது நீயா? எதுக்குப் போற! என்று கேள்விக்குறிக்குப் பதிலாக ஆச்சர்யகுறி போட்ட விக்னேஷ் அண்ணன் தான் வாழ்க்கையில் எனக்குத் திருப்புமுனையாய் இருந்து சத்தியத்தையும் உண்...
இவன் ஜெயிக்கப் பிறந்தவன்....