வழக்கம் போல மற்றும் ஒரு நாள் தான் இது.......ஆனால் வருடத்தின் கடைசியாகிப் போனதால் வரும் அடுத்த வருடத்தை வரவேற்க தயாராய் இருக்கிறோம் எல்லோரும்..... புது வருசம், பழைய வருசம், நாள், கிழமை எல்லாமே மனிதன் உருவாக்கிக் கொண்டது. பூமி சூரியனை ஒரு சுற்று சுற்றிவர 365 நாட்கள் ஆகிறது. ஒவ்வொரு சுற்றும் ஒரு வருடம். பூமி எப்போது சூரியனில் இருந்து தெறித்து விழுந்ததோ அன்றிலிருந்து வருடம் கணக்கிடப்பட்டிருக்காது அல்லவா...? நமது கணக்கீடுகளுக்கு முன்னும் பின்னும் வாழ்க்கை நடந்து கொண்டுதானிருக்கிறது. ' போன வருசம் .. செமடா மச்சி..வர்ற வருசம் அப்டியே இருக்கணும் ' ' போன வருசம் செம கடுப்புடா மாமா வர்ற வருசமாச்சும் ஒழுங்கா இருக்கணும் ' மாறி மாறி பேச்சுகள் கேட்டுக் கொண்டிருக்கின்றன. வருடங்களையும் நாட்களையும் தாண்டி மனிதனை கட்டுப்படுத்தும் செயல்கள் இரண்டு.... ஒன்று.....அவனின் மனம் எந்த திசையில் வேலை செய்து செயல்கள் செய்கிறதோ அதன்படியும்,மற்றொன்று அவன் சார்ந்துள்ள சூழல் என்ன மாதிரி அனுபவங்களை அவனுக்கு கொடுக்கிறது என்பதை பொறுத்து பெரும்பாலும் ஒரு மனிதனின் வாழ்க்கை அமைந்து போகிறது. நல்ல வருடமாய் அமைவது...
இவன் ஜெயிக்கப் பிறந்தவன்....