திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவிலாக இருக்கட்டும், அல்லது பிள்ளையார் பட்டி கோவிலாகட்டும் அல்லது காரைக்குடி கொப்புடையம்மன் கோவிலாகட்டும், இல்லை கீழச்சேவல் பட்டி சிவன் கோவிலாகட்டும் கல்லூரி விடுமுறையில் கண்டிப்பாக விடியற்காலையில் அங்கே சென்று விடுவேன். கோவிலுக்கு செல்லவேண்டும் என்ற ஈர்ப்பு எப்போதும் எனக்குள் இருந்திருக்கிறது சிறுவயது முதலாகவே, அதுவும் தனியாக கோவிலுக்குச் செல்வதில் எப்போதும் ஒரு லயிப்பும் சந்தோசமும் எனக்கு கிடைத்திருக்கிறது. கோவிலின் பிரகாரத்துக்குள் செல்வதற்கு முன்னாலேயே கொடி மரத்தை வணங்கிவிட்டு வாசல் தாண்டி உள்ளே செல்லும் போது உள்ளே இருந்து வீசும் பழைமையின் வாசமும் பிரமாண்டமான தூண்களுக்கு நடுவே பரவிக்கிடக்கும் இருளும், மனிதர்கள் உரக்க உரக்க பேசுவது கருங்கல் பாறைகளில் பட்டு எதிரொலித்து ஒரு மனக்கிலேசத்தை கொடுப்பதும் தவிர்க்க இயலாதது. பெரும்பாலும் புராதனமான கோவில்களுக்குள் செல்லும் போது அங்கே காலங்கள் கடந்து வந்து சென்று கொண்டிருக்கும் மனிதர்களின் மன அதிர்களையும் சேர்ந்தே அனுபவித்திருக்கிறேன். கோவில் என்பது ஆழ்மனதினுள் நன்றாகவே பதிந்து போயிருப்பதனாலோ என்னவோ அங்கே ஒரு அதீ...
இவன் ஜெயிக்கப் பிறந்தவன்....